Wednesday, May 18, 2011

கடையநல்லுர் கசமுசா







கலைஞர் டி.வி. சண்முக சுந்தரத்தை வணங்கிய பீ.ஜே.

தமிழக தேர்தல் முடிவு; மண்ணைக் கவ்விய இரண்டு அண்ணன்கள்

மிழக தேர்தல் முடிவு; மண்ணைக் கவ்விய இரண்டு அண்ணன்கள்



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் இரண்டு அண்ணன்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். அவர்களில் முதலாமவர் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த மு.க. அழகிரி. இவர், ''இந்த தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது' என்று ஆணவத்தோடு பேசினார். ஆனால் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் அட்டகாசமாக ஆட்சியில் அமர்ந்துள்ளது அதிமுக. ஆனால் ஐயோ பாவம்! இவரது ஆளுகையின் கீழ் அடங்கிக் கிடந்த மதுரை மாவட்டத்தில் இவரது கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றியை  ஈட்டித்தரமுடியாமல் இவரது கட்சி கானாமல் போனது போல் அஞ்சா நெஞ்சனான[?] இவரும் காணாமல் போய் விட்டார். காரணம் ஆணவத்திற்கு கிடைத்த அடி.
அடுத்து அழகிரிக்கு சற்றும் குறையாமல், இன்னும் சொல்லப்போனால் அழகிரியையும் தாண்டி ஆணவம் பேசினார் அண்ணன் பீ.ஜே., 'தேர்தல் நேரத்தில் எதை மறப்பாரோ மாட்டாரோ மமகவை மண்ணைக் கவ்வ வைப்பேன் என்ற சுலோகத்தை மறக்கமாட்டார் இந்த ஆணவக்காரர். அதிலும் இந்த தேர்தலில், 'திமுகவிற்கு ஏதே போனா போகுதுன்னு ஆதரவு தானே தவிர களமிறங்கி மாநில நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று கூறியவர், வடிவேலுவையும் மிஞ்சி அந்தர் பல்டியடித்து கலைஞரின் கொள்ளை[கொள்கை] பரப்பு செயலாளராக மேடையில் மைக்கை பி[க]டித்தார். மறக்காமல் ஒவ்வொரு மேடையிலும் 'மமகவை ஏன் ஆதரிக்க கூடாது? என்ற தலைப்பை வைத்து தனது வஞ்சத்தை எல்லாம் வாந்தியெடுத்து முஸ்லிம்களே! மமகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூவினார். ஆனால்  இவரின் ஆணவத்திற்கு அல்லாஹ் தந்த மரண அடி மமக இரண்டு இடங்களில் மகத்தான வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தடம் பதிக்கிறது.
மமகவின் வெற்றி மமதையாளரை மயக்கமுற செய்து விட்டது போலும். தேர்தல் தோல்வி குறித்து பேசிய இவர் வாய்க்கு வந்தபடி உளறுகிறார் பாவம். தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டார். எனவே கருணாநிதிக்கு வாக்களியுங்கள் என்று வாய்கிழிய கத்தியவர் இன்று 'யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் தெருவில் நின்று கத்திதான் நம் தேவைகளை பெறமுடியும்' என்கிறார். அப்படியானால் தெருவில் நின்று போராடி பெறவேண்டியது தானே? பிறகு எதற்கு தேர்தல் ஆதரவு? எதற்கு பிரசாரம்? முஸ்லிமை தோற்கடித்தேனும் கருணாநிதியின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஊர் ஊராக கத்தியது ஏன்? அண்ணன் விளக்குவாரா?
இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்லவேண்டியுள்ளது. ததஜ யாரை ஆதரிக்கிறதோ அவர்களுக்குத்தான் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் விழும் என்று கீறல் விழுந்த ரிக்கார்டாய் புலம்பிய அண்ணன், இவர் சுட்டு விரல் காட்டிய திமுக அணிக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களித்தார்கள் என்று புள்ளி விபரத்தோடு நிரூபிக்கத் தயாரா? ஒட்டு மொத்தம் கூட வேண்டாம் ஒரு 75  சதவிகித முஸ்லிம்கள் வாக்களித்தார்கள் என்று காட்டத் தயாரா? அட! தீவுத்திடலில் குழுமிய 15  லட்சம்[?] முஸ்லிம்களாவது திமுக அணிக்கு வாக்களித்தார்கள் என்று நிரூபிக்கத் தயாரா?
இனியாவது ஆணவம் தொலைத்து அல்லாஹ்வுக்கு அஞ்சி, நல்லடியாராக மாற அண்ணன் முயற்சிக்கட்டும். அதை விடுத்து தனது சிஷ்ய கோடிகளை ஏவி விட்டு கள்ள பிளாக்கில் கண்டபடி அர்ச்சிக்க  செய்வாரானால், அவரிடம் 
அரைகுறையாக மிஞ்சி இருக்கும்  நன்மைகளையும்  இழந்து நிற்பார் என்று அன்புடன் கூறிக் கொள்கிறோம்.
-அப்துல் முஹைமீன்.

Tuesday, May 17, 2011

சாதிக்குமா மனித நேய மக்கள் கட்சி?

சா திக்குமா மனித நேய மக்கள் கட்சி?


ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையாலும், கூட்டணி கட்சி பலத்தாலும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களை கைப்பற்றியுள்ளது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் தோற்றுவிக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம்பெற்ற தாய்ச்சபையான முஸ்லிம் லீக் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு ஆளுங்கட்சியின் மீதான மக்களின் கோப அலையில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக இம்முறை தமிழக சட்ட மன்றத்திற்குள் முதன் முதலாக அடியெத்து வைத்துள்ளது மனித நேய மக்கள் கட்சி.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட துடிப்பான இளைஞர் தமீமுன் அன்சாரி தோல்வியைத் தழுவியது வருத்தத்தை தந்தாலும், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும். வெற்றித் தந்த மமதையில் வெறும் அறிக்கைகளை விட்டு காலந்தள்ளாமல் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், சேவைகள் புரியவும் ம.ம.க தயாராகவேண்டும்.
சமுதாயத்திற்கான பல்வேறு சேவைப்பணிகளில் ம.ம.கவின் தாய்க்கழகமான த.மு.மு.க ஈடுபட்டிருந்தாலும் அக்கட்சியின் மீது கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ம.ம.கவின் எம்.எல்.ஏக்கள் அனைத்து முஸ்லிம் சமுதாயத்தின்  பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். கடந்த காலத்தில் வக்ப் வாரிய தலைவர் பதவியை பெற்ற த.மு.மு.க பொதுச்செயலாளரின் நடவடிக்கைகள் பலரையும் முகஞ்சுழிக்க வைத்தன என்பதை மறுக்கவியலாது.
ஊழல், ரவுடியிசம், போலீஸ் அராஜகம் ஆகிய காரணங்களால் தி.மு.கவுடன் உறவை அறுத்தெறிந்ததாக ம.ம.க காரணம் கூறியிருந்தது. அதே காரணங்கள் செல்வி ஜெயலலிதாவின் முந்தைய கால ஆட்சியிலும் இடம் பெற்றிருந்ததை ம.ம.கவினர் மறந்திருக்கமாட்டார்கள். மீண்டும் அதே போல ஜெ.வின் ஆட்சியில் தலை தூக்குமானால் எதிர்த்து குரல் எழுப்பவும், கூட்டணியை விட்டு வெளியேறவும் ம.ம.க தயங்கக்கூடாது.
செல்வி.ஜெயலலிதாவின் பாசிசத்துடனான தொடர்பு முஸ்லிம்களின் உள்ளங்களில் மாறாத வடுவாகவே பதிந்துள்ளது. வருங்காலங்களில் அவரின் செயல்பாடுகள் பாசிசத்துக்கு ஆதரவாக இருக்குமானால் ம.ம.கவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு அக்கட்சி தெளிவுப்படுத்த வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும், தவறுகளை சுட்டிக்காட்டும்போது திருத்தக்கூடிய பண்பையும் ம.ம.க வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவேன் என செல்வி.ஜெயலலிதா வாய் வழி வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். மேலும் இட ஒதுக்கீட்டில் குறைபாடுகளை போக்கி பலன் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார் ( இதனை அவர் தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). ஆகவே இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு ம.ம.க சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு நிர்பந்தம் கொடுக்கக்கூடாது என்ற பாலிசியெல்லாம் பேசி துதி பாடுவதை விட்டுவிட்டு சமுதாயத்திற்காக உள்ளார்ந்த நேர்மையுடன் உழைத்திடவும், குரல்கொடுக்கவும் ம.ம.க தயாராக வேண்டும். வக்ப் வாரிய சொத்துக்களை மீட்டல், மதுபானத்தை முற்றிலும் தடைச்செய்தல் (ஏற்கனவே ம.ம.க மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளது), பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கோவை சிறைக்கைதிகள் விடுதலை,முஸ்லிம்களுக்கு தொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து முன்வைக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை கழைந்துவிட்டு அனைத்து சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். சட்டமன்றத்தில் அதுவும் இம்முறை முஸ்லிம் சமுதாயத்தின் பிரதி என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். மாறாக ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நாங்கள் தாம் எப்பொழுதும் பிரதிநிதி என்ற பெருமை ம.ம.கவுக்கு வந்து விடக்கூடாது. வெற்றி என்பது இறைவனால் வழங்கப்படுவதாகும். ஆகவே பதவியும், வெற்றியும் நிரந்தரமல்ல என்பதை நினைவில் வைத்து ம.ம.க செயல்படும் என எதிர்பார்க்கிறோம்

ஜனாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும்

னாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும்



சென்னை மெளண்ட் ரோடு மக்கா மஸ்ஜிதில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் உஸாமா பின் லாடினுக்காக காயிப் ஜனாஸா (மறைவான மரணத்தொழுகை) நடத்தப்பட்டது. இந்நிகழ்வை பரப்பரப்பிற்காக காத்திருக்கும் சில பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.

இச்செய்தி வெளியானதும், ஏற்கனவே சொந்தப்புத்தியை இழந்து மந்தப்புத்தியில் வாழ்க்கையை ஓட்டும் ஹிந்து முன்னணி என்ற பாசிச அமைப்பின் தலைவர் ராமகோபால அய்யருக்கு தேசபக்தி(?) எக்குதப்பாக எகிறவே காரசாரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அய்யரின் அரைவேக்காட்டு அறிக்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசுவது நமது நோக்கமல்ல. ஆனால், இச்சம்பவத்தை குறித்து வரும் நாட்களில் சில புலனாய்வு(?) பத்திரிகைகள் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடலாம். முஸ்லிம்களின் தேசப்பக்தியை சோதிக்க இச்சம்பவத்தை பாசிஸ்டுகள் ஒரு அளவுகோலாக மாற்றலாம். ஆகவே இதனை குறித்த உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உஸாமா அல்லது அவரது அல்காயிதா இயக்கத்தினால் இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை, அல்காயிதாவின் செயல்பாடும் இந்தியாவில் இல்லை என ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிபட தெரிவித்துவிட்டார். உஸாமா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புஸ் சின்னமாகவே உலக முழுவதும் கருதப்படுகிறார். ஆகவே உஸாமாவை ஆதரித்து பேசுவதாலோ அல்லது அவருக்காக பிரார்த்தனை புரிவதாலோ இந்தியாவின் இறையாண்மைக்கு எவ்வித இழுக்கும் ஏற்படாது.

ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சேகுவாராவையும், பிடல் காஸ்ட்ரோவையும் ஆதரித்து பேசுவதை எவரும் தேசவிரோத செயலாக கருதுவதில்லை. சேகுவாராவின் படத்தை பொறித்த டீ சர்ட்டுகளை அணிவதையும் எவரும் குற்ற செயலாக கருதுவதில்லை. இந்நிலையில் உஸாமாவை ஆதரித்து பேசுவதும், எழுதுவதும் எவ்வகையில் தவறாகும்? உஸாமாவை குறித்து வெளியாகும் செய்திகளில் பெரும்பாலானவை புனையப்பட்டவையாகும். செய்திகளின் உறைவிடமாக அமெரிக்கா திகழும் பொழுது அதன் உண்மை நிலைக்குறித்து சந்தேகமே மிஞ்சுகிறது!

உஸாமா பின் லாடின் உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கினார் என்ற எண்ணமே தவறாகும். அவர் தக்க காரணங்களால் அமெரிக்காவிற்கும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கும் மட்டுமே அச்சுறுத்தலாக விளங்கினார். இந்தியா தனது பாரம்பரிய அணிசேராக் கொள்கையை கைகழுகி விட்டு அமெரிக்காவின் ஆதிக்கக் கொள்கைகளுடன் சமரசம் செய்த போதும் உஸாமா இந்தியாவிடம் பகைமை பாராட்டவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எதிரானக் கொள்கைகளை தத்தெடுத்து உருவாக்கப்பட்ட, ராமகோபால அய்யர் உள்ளிட்ட கயவர்களை உற்பத்தி செய்த ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளும் இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

ஆகவே உஸாமாவைக் குறித்து பேசுவது இந்தியாவிற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது. அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றி பேசுவதும், அதன் கொள்கைகளை பரப்புவதும் தான் இந்தியாவிற்கு மிகப்பெரும் இழுக்கை தேடித்தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!



கருணாநிதிக்கு தேவையான படிப்பினை!!

ருணாநிதிக்கு தேவையான படிப்பினை!!


kanimoleபல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம். மதினாவை தலைநகராக கொண்ட சாம்ராஜ்யத்தை முஹம்மது நபி அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். ஒரு திருட்டு சம்பவம் நடைபெறுகிறது, குற்றவாளியும் கைது செய்யப்படுகிறார். குற்றத்தை செய்தவர் பாத்திமா என்ற பெண்மணி. அதுவும் மக்சூமியா என்ற குலத்தை சார்ந்தவர். அந்த மக்களின் அளவுகோளின்படி உயர்ந்த குலத்தை சார்ந்தவர். நீதியை நிலைநாட்டும் சட்டங்களின் படி திருட்டிற்கு தண்டனையாக கை வெட்டப்பட வேண்டும்.
இப்பெண் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை நிறைவேற்ற ஆயத்தங்கள் செய்யப்பட்டன. உயர் குலம் அல்லவா? பதைத்தனர் அக்குலத்தை சார்ந்தவர்கள். தங்கள் குல பெண்ணிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் மொத்த குலத்திற்கும் அல்லவா இழுக்கு? என்ன செய்வது? முஹம்மது நபியிடம் சென்று தண்டனையை குறைக்க வேண்டுகோள் வைக்க வேண்டும். ஆனால் நீதியே வாழ்க்கையாக வாழும் அவரிடம் சென்று பேசுவதற்கும் பயம்.
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். முஹம்மது நபிக்கு மிகவும் நெருக்கமான நபர் மூலம் சிபாரிசை அனுப்பலாம் என்பது தான் அந்த முடிவு. தகுந்த நபரை கண்டுபிடித்தனர். முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்த அவர்களின் வளர்ப்பு மகன் ஸைத் பின் ஹாரிஸாவின் மகனான உஸாமா பின் ஸைத் தான் அந்த நபர். இந்த உஸாமா சிறுவாரக இருந்த போது அவரது மூக்கின் சளியை துடைப்பதற்கு நபியும் அவரது மனைவியும் போட்டி போட்டு கொள்வார்களாம். அந்த அளவிற்கு முஹம்மது நபியின் பாசத்திற்கு உரியவர்.
உஸாமாவிடம் செய்தியை சொன்ன போது அவரும் அதனை ஏற்று கொண்டு முஹம்மது நபியிடம் சென்றார். இளைஞரான உஸாமா சிபாரிசை முன் வைத்தவுடன் முஹம்மது நபியின் கண்கள் கோபத்தால் சிவந்தன. ‘அல்லாஹ்வின் சட்டங்களை மாற்றுவதற்கா என்னிடம் சிபாரிசு செய்ய வந்துள்ளீர்கள்?’ என்று கடிந்து கொண்டவர்கள், உஸாமாவிற்கும் கூடியிருந்த மற்றவர்களுக்கும் தெளிவான ஒரு செய்தியை கொடுத்தார்கள். ‘உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதற்கு காரணம் இதுதான். அவர்களில் பலஹீனமானவர்கள் தவறிழைத்தால் தண்டனையை நிறைவேற்றுவார்கள். பலமிக்கவர்கள் தவறிழைத்தால் அவர்களை விட்டுவிடுவார்கள்’.
இத்துடன் நிறுத்தவில்லை நபியவர்கள். மிகவும் தெளிவாக கூறினார்கள், ‘என்னுடைய மகள் பாத்திமா தவறிழைத்தாலும் அவர் மீதும் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்’. எத்தனை பொருள் நிறைந்த தீர்க்கமான வார்த்தைகள். அன்று கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்ல நம்மையும் தான் சிலிர்க்க செய்கிறது இந்த சம்பவம். நீதி அனைவருக்கும் சமம் என்ற கோட்பாடு தான் நாட்டில் அமைதியை நிலை நாட்டியது. ஆட்சியாளர் மீது குடிமக்களுக்கு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அதிகரித்தது.
இஸ்லாமிய வரலாற்றில் பரவி கிடக்கும் ஆயிரமாயிரம் சம்பங்களில் இதுவும் ஒன்று. முஹம்மது நபி மட்டுமல்ல, அவர்கள் வழி வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் நீதியை நிலைநாட்டினார்கள் என்பதற்கு வரலாறு சான்று.
தற்போது நடைபெற்று வரும் 2ஜி விசாரணையை பார்க்கும் போது இந்த சம்பவம் தான் நினைவிற்கு வருகிறது. தன்னுடைய மகள் கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருக்கிறது என்பதை அறிந்தவுடன் அவசர அவசரமாக கட்சியின் உயர் மட்ட குழுவை கூட்டுகிறார் கருணாநிதி. அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக மகள் டெல்லிக்கு சென்றால் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அனுப்பி வைக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் வழக்கறிஞரை நியமித்து ஜாமீனுக்காக போராடுகிறார். ‘குற்றம் சாட்டப்பட்டதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது’ என்று வியாக்கியானம் பேசுகிறார்.
நெஞ்சுக்கு நீதி’ எழுதும் கலைஞர் அவர்களே ஒரு முறை உங்கள் மனசாட்சியிடம் கேட்டு பாருங்கள். ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் சிறையில் இருக்கும் அப்பாவிகள் குறித்து என்றைக்காவது இந்த பொன்மொழியை உதிர்த்தீர்களா? மகள் என்றவுடன் பாசம் முன்னுக்கு வருகிறதோ? நீதியில் பாசத்திற்கு இடமில்லை என்பதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
மலைக்கும் மடுவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தான் இந்த இரண்டு ஆட்சிகள் இடையே நம்மால் பார்க்க முடிகிறது. முந்தைய ஆட்சியை அருமையான கொள்கையான இஸ்லாமும் அந்த கொள்கைக்காகவே வாழ்ந்த மக்களும் வழி நடத்தி சென்றார்கள். தற்போதோ சுயநலம், பதவி ஆசை, சம்பாதிக்கும் ஆசை இவைதான் இருக்கிறது. இவர்களிடமிருந்து ஆட்சியையும் எதிர்பார்க்க முடியாது, நீதியையும் எதிர்பார்க்க முடியாது. இதனால் தானோ என்னவோ காந்தியடிகள் கூறினார்..’இந்த நாட்டிற்கு உமரின் ஆட்சி வேண்டுமென்று’!
ஏர்வை ரியாஸ்
 

நடந்து முடிந்த சட்டமன்றங்களில் நுழையும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

கடந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் மூலம் 130 முஸ்லிமகள் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, புது புரட்சியினை ஏற்படுத்தியுள்ள மேற்கு வங்காளத்தில் அதிக பட்சமாக 59 முஸ்லிம் உறுப்பினர்களும், கேரளாவில் 36 பேரும், அஸ்ஸாமில் 28 பேரும் தமிழ்நாட்டில் 6 பேரும், பாண்டிச்சேரியில் 1 நபரும் சட்டமன்றத்திற்குள் நுழைக்கின்றனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 14 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில் 6 வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். அவர்கள் முறையே

1) பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் - மமக (இராமநாதபுரம்)

2) அஸ்லம் பாட்ஷா - மமக (ஆம்பூர்)

3) மைதீன்கான் - திமுக (பாளையம் கோட்டை)

4) அப்துர் ரஹீம் - அதிமுக (ஆவடி)

5) முஹம்மது ஜான் - அதிமுக (ராணிப்பேட்டை)

6) மர்யம் பிச்சை - அதிமுக (திருச்சி)



நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது!

ரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணித்து!

நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தையும் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுக அழைத்திருந்தது. ஆனால், அதில் முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் S.M.பாக்கர் மற்றும் முனீர் ஆகியோர் இந்த நிகழச்சியினை புறக்கணித்தனர்.

ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிரான ஆட்சிக்காகதான் அதிமுகவை தேர்தலுக்காக ஆதரித்தது இதஜ. அதற்காக கொள்கையை ஒருபோதும் சமரசம் செய்யாது என்பதை நிரூபித்துள்ளது. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.
அவ்வாறே முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ள அதிமுகவின் தோழமை கட்சியான மமகவும் இந்த பதவியேற்வு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-இப்னு லத்தீஃபா.
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.[அல்-குர்'ஆன்; 5 ;2 ]





Wednesday, May 4, 2011

அவதூறு-

அஸ்ஸலாமு அலைக்கும்!!!
அவதூறு ஜமாத்தின் புதிய அவதூறு!
ஆபாச செய்திகளை மட்டும்  உண்மையாக வெளியிடும்,தளத்தின்  அவதூறு செய்தி "இந்திய  தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில செயலாளர் 
செங்கிஸ்கான் தனது பதவியை ராஜினாமா 
 செய்தார் என போலியான கடிதங்களை ,உண்மையான செய்தி போல
பரப்பி வருகின்றது.
உண்மை நிலவரம்:
சகோதரர்  செங்கிஸ்கான் உம்ரா சென்றுள்ளார்.இறைவன் நாடினால்
தாயகம் திரும்பியதும்  போலிகளின்  பொய்களுக்கு 
பதிலளிப்பார்.
 சாட்டை சுழலும்......................................................
                                                                                                 அபூ நபீலா........
 

Sunday, May 1, 2011

இனிதே நிறைவுற்ற திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் கோடை கால பயிற்சி முகாம்.

கோடை கால பயிற்சி முகாம்.


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கி, நமக்குப் பின் நமக்காக துவா செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக உருவாக்க.இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு என கடந்த பத்து நாட்களாக நடை பெற்ற கோடை கால பயிற்சி இன்று 1.5.11 இனிதே நிறைவுற்றது! மாணவர்களுக்கு திருவல்லிக்கேணி மர்கசிலும் மாணவிகளுக்கு சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதறசாவிலும் நடை பெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் கற்றுக் கொண்ட தொழுகை ,துவா சிறு சூராக்கள், அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் போன்றவற்றில் இருந்து தேர்வு வைக்கப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது! பரிசுகளை மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பயிற்சி ஆலிமாக்கள் வழங்கினார்.

c sc 3.JPG
39K View Scan and download





chepak summer camp.JPG
32K View Scan and download


chepak summer camp-2.JPG
30K View Scan and download


csc-6.JPG
40K View Scan and download

csc-7.JPG
32K View Scan and download


csc - 4.JPG
37K View Scan and download

Photo0176.jpg
532K View Scan and download


Photo0177.jpg
630K View Scan and download

Photo0178.jpg
616K View Scan and download


Photo0179.jpg
607K View Scan and download

Photo0180.jpg
544K View Scan and download


Photo0181.jpg
616K View Scan and download

Photo0182.jpg
629K View Scan and download


Photo0183.jpg
592K View Scan and download

Photo0184.jpg
650K View Scan and download


Photo0185.jpg
631K View Scan and download

Photo0186.jpg
602K View Scan and download


Photo0187.jpg
548K View Scan and download


Photo0188.jpg
5

இன்னும் கெட்டுப்போவோம் எவ்வளவு பந்தயம்?

-உளறும் கிறுக்கர்கள்


மக்கள் ரிபோர்ட் செய்தியைப் பற்றி தனிநபர் ஜமாத்தினர் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதி இருந்ததற்கு -நாம் பதில் சொல்லும் விதமாக அவர்களது அபகரிக்கப்பட்ட உணர்வற்ற உணர்வு பேப்பரில் வெளியாகி இருந்த தவறை நாகரிகமாகவே இப்படி சுட்டிக்காட்டி இருந்தோம்.

"மார்ச் -25-31-2011 தேதி இட்ட இதழில் பக்கம் 7 இல் , 'முஸ்லிம் கட்சிகளா? முஸ்லிம் எதிர்ப்புக் கட்சிகளா?' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் கட்டுரையில்..."சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் துறைமுகம் தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி ஆகியவை மத்திய சென்னை சட்டமன்ற தொகுதிக்குள் வருகின்றன "என குறிப்பிட்டு தாங்கள் அரசியல் சூனியங்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
சேப்பாக்கம் &திருவல்லிக்கேணி என்பது ஒரு தொகுதிதான் எனறோ,தொகுதி மறு சீரமைப்பின் மூலம் அது மாற்றியமைக்கப்படிருக்கிறது என்றோ அறியாத இவர்கள் அரசியல் கட்டுரைகள் எழுதும் அவலம் உணர்வு பத்திரிகையில் மட்டும் தான் நடக்கும்.
அதே போல ,ஏப்ரல் 1-7-2011 தேதியிட்ட அதே இதழில்,11 ஆம் பக்கத்தில் ""சரத்குமாரின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள்"என எழுதி இருக்கிறார்கள்.அரசியல் கட்சிகளின் பெயரை கூட ஒழுங்காக தெரிந்து வைத்துக்கொள்ளாமல் ஏடா கூடமாக எழுதும் இவர்கள் மக்கள் ரிபோர்ட்டை பற்றி குறை கூற வெட்கப்படவேண்டும்."


நமது விமர்சனத்துக்கு பதில் என்ற பெயரில் அறிவு கெட்டுப்போய் ,கேனத்தனமாக உளறியுள்ளதோடு ,நம் மீது வெறி நாய் போல பாய்ந்துமிருக்கிறார்கள்...
நமது மேற்கண்ட விமர்சனத்துக்கு அவர்களின் பதில் பின்வருமாறு...

அதாவது இந்த செய்தி துவங்கும் போது ஹைதர் அலி அவர்கள் மமகட்சி சார்பில் போட்டியிட்ட போது வாங்கிய வாக்குகள் குறித்து பேசுகிறது. அவர் போட்டியிட்ட போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகள் ஒன்றாக இருந்தன என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. வாக்குகள் அதே அளவில் தானே இருந்தன? இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து சேப்பாக்கம் 1 லட்சம் முஸ்லீம்கள், திருவல்லிக்கேணி ஒரு லட்சம் முஸ்லீம்கள் என எழுதப்பட்டுள்ளது. இதிலே என்ன தவறு? இரண்டு தொகுதிகளையும் இணைத்ததால் மொத்த ஓட்டுகள் 2 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டதா?


அறிவுக்கும் இந்த பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சேப்பாக்கம்,திருவல்லிக்கேணி இரண்டும் ஒரு தொகுதிதான் என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை என்பது தான் நமது விமர்சனம்.இந்த தவறை ஒப்புக்கொண்டிருந்தால் அவர்களை நேர்மையானவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால்."தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டு விட்டன.வாக்குகள் அதே அளவில் தானே உள்ளன? மொத்த வாக்குகள் 2 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டதா?" என்று சம்மந்தமில்லாமல்-நமது கேள்வியை கூட புரிந்து கொள்ளாமல் கேவலப்பட்டிருக்கிறார்கள்!
நாம் வாக்கு எண்ணிக்கையை பற்றியா கேள்வி எழுப்பினோம்? நாம் கேட்டது ஒன்று இவர்கள் பதிலளிப்பது வேறொன்று என்றால் இதை -"அண்ணன் பொய் ஜே.சண்முக சுந்தரத்திற்கு வணக்கம் சொன்னது சரியா என்றால்....அண்ணன் பொய்.ஜே ஆற்காடு டீச்சரோடு அல்பா லாட்ஜுக்கு போனது என்ன தவறு? என்று பதில் சொல்வது போல் உள்ளது என்று நாம் சொன்னால் அதில் தவறிருக்க முடியுமா?

சகோ.ஹைதர் அலி போட்டி இட்ட போது, வாங்கிய வாக்கு குறித்து அந்த செய்தி பேசுகிறது என்று வேறு முட்டுக்கொடுக்கப் பார்க்கிறார்கள்.ஹைதர் அலி போட்டி இட்டது ஹைதர் காலத்தில் என்று கூட இருக்காட்டும்...இபோழுது அதைப்பற்றி எழுதினாலும்...நடப்பு நிலவரத்தை அல்லவா எழுத வேண்டும்!.அந்த அடிப்படையில், செபக்கம்&திருவல்லிக்கேணி தொகுதியில் 2 லட்சம் முஸ்லிம்கள் என்றல்லவா எழுத வேண்டும்.ஆக,செய்து விட்ட தவறை நிலை நிறுத்த முயற்சி செய்து..முகத்தில் கரியை பூசிக்கொண்டது தான் மிச்சம்.

இன்னொரு விஷயம்..."சரத்குமாரின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 2 இடங்கள்" என்று அவர்கள் உளறியதையும் நாம் எடுத்துக்காட்டினோம்.அதை ஒப்புக்கொள்ளாமல் ஜகா வாங்கியுள்ளனர்.ஆக நாங்கள் தவறே செய்தாலும் அதற்கும் எதையாவது செய்து முட்டுக்கொடுப்போம் என்கிறார்கள்.இவர்கள் செய்யும் தவறை (உதாரணம்:வணக்கம் சொன்ன விஷயம்) ஒப்புக்கொண்டாலே பாதி தக்லீதிலிருந்து மீண்டு விடுவார்கள்.ஆனால் அதை செய்யத்தான் அவர்கள் தயாரில்லையே!இன்னும் கெட்டுப்போவோம் எவ்வளவு பந்தயம் என்று கேட்கும் நிலையில் தானே இருக்கிறார்கள்.!இப்படியும் கிறுக்குகள்.?

அரை டவுசர் போட்டு தொழக் கூடாது என குரான் ஹதிஸ் அடிப்படையில் கூற முடியுமா? அண்ணன் ஜமாத்தின் அபத்தமான சவால்?


அரை டவுசர் போட்டு தொழக் கூடாது என
குரான் ஹதிஸ் அடிப்படையில் கூற முடியுமா?
அண்ணன் ஜமாத்தின் அபத்தமான சவால்?

பெரிதாக்கி படிக்க படத்தை கிளிக் செய்யவும்!

டவுசர் நாயகன் அன்றும்- இன்றும்!

டவுசர் போ
ட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன குரா
ன் ஹதிஸ் ஆதாரம் என்று கேட்பவர்கள் நாளை ஜட்
டி போட்டு தொழலாம்! என கூறவும் தயங்க மாட்டார்கள்! இவர்களை ந
ம்பி பள்ளிக்கு சென்று பின்

நின்று தொழும் பெண்கள் நிலைதான் பரிதாபம்! இன்றைக்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் அண்ணனின் பக்தர்களுக்கு அன்று அந்நஜாத் ப
த்திரிகையில் 1987 ஜூன் மாத இதழில் 28.27.28.,29,30,3132,33,34 பக்கங்களில் அவர் ஆண்களின் உடை பற்றி எழுதிய கட்டுரையை தருகிறோம்!

அன்று

அபூமுஹம்மத்(PJ)
ஆண்களின் ஆடைகள்
மனிதன் இயல்பிலேயே தனது மர்ம உறுப்புகளை மறைத்து வாழ்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதனால் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மதங்களுக்கு அப்பாற்பட்ட நாத்திகர்களும் ஆடைகள் அணிந்து தங்கள் உடலின் பாகங்களை மறைத்து கொள்வதை நாம் காண்கிறோம். இது மனித இயல்பு என்பதை திருக்குர்ஆனும் நமக்கு எடுத்தோதுகின்றது,
ஆதம்(அலை) அவர்களும், அவர்களின் மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் தங்கள் உடல் உறுப்புக்கள் வெளியில் தெரியும்போது அவசர அவசரமாக, சுவனத்தில் இலைகளால் தங்கள் உடலின் முக்கிய பகுதிகளை மறைத்துக் கொள்ளத் துவங்கியதை திருக்குர்ஆனின் 7 :22 வசனம கூறுகிறது.
கணவன், மனைவி மட்டுமே இருந்த சந்தர்பத்தில் கூட தங்கள் உறுப்புக்களைப் பார்ப்பதற்கு வேறு மனிதர்கள் எவரும் இல்லை என்ற சந்தர்ப்பத்தில் கூட இறைவனிடமிருந்து உத்தரவு ஏதும் வராமலே தாங்களாகவே தங்கள் மறைவான பகுதிகளை அவர்கள் மறைத்துக் கொள்ளத் துவங்கினார்கள் என்பதிலிருந்து , ” இது மனிதனின் இயல்பு” என்று உணரலாம்.
மனிதன் எந்த அளவுக்குத் தன் உடலை மறைக்க வேண்டியது அவசியம்? எந்த வகையான ஆடைகளால் மறைக்க வேண்டும்? எந்த வகைத் துணிகளால் மறைக்க வேண்டும்? என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்லாம் விதிக்காத பல நிபந்தனைகளை தங்கள் இஷ்டத்திற்கு விதித்துக் கொண்டு, இஸ்லாத்திற்கு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்.
“ஆண்களின் ஆடைகள்” எப்படி அமைய வேண்டும்? பெண்களின் ஆடைகள் எப்படி அமைய வேண்டும்? எப்படி அமையக் கூடாது என்பதைக் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் நாம் காண்போம். முதலில் ஆண்களுக்கான ஆடைகளை நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
ஆண்களின் ஆடைகள்
ஆண்களுக்கு இஸ்லாம் ஆடை விஷயத்தில் சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தடைகளைத்தவிர வேறு எவ்விதமாக வேண்டுமானாலும் ஆடை அணிந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. எனவே எந்தவிதமான ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தை முதலில் காண்போம்.
பட்டாடைகள்
ஆண்களுக்கு பட்டாடைகள் அணிவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். கலப்பாக அணியவோ, தனிப்பட்டாகவோ எவ்விதத்திலும் ஆண்கள் பட்டாடைகளைப் பயன்படுத்த நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.
“பட்டாடைகளை அணியாதீர்கள்! ஏனெனில் இவ்வுலகில் பட்டாடை அணிபவன் மறுமையில் அதை அணிய முடியாது” ஏன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
“யாருக்கு மறுமையில் நற்பாக்கியம் இல்லையோ அவன் தான் பட்டாடை அணிவான்” என்று நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பட்டாடை அணிந்ததாக வந்துள்ள சில ஹதீதுகளின் அடிப்படையில் சிலர் பட்டாடை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இது ஏற்க இயலாத வாதமாகும். நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களில் சிலரும் பட்டாடை அணிந்துள்ளது உண்மைதான். ஆனால் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தான் இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அது தடுக்கப்பட்டு விட்டது என்பதற்கு ஹதீஸ்களின் ஆதாரங்கள் உள்ளன. எனவே தடுக்கப்படுவதற்கு முன் அவர்கள் அணிந்திருந்ததாகவே கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். தொழுது முடித்தபின் வெறுப்புடன் கடுமையாகக் கழற்றினார்கள்.
“இது இறை அச்சமுடையோருக்கு கூடாத ஒன்றாகும்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆழிர்(ரழி) நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தடை செய்வதற்குமுன் அவர்களே அணிந்திருக்கிறார்கள் என்பதையும், அதன் பின்னர்தான் தடுக்கப்பட்டது என்பதையும் தெளிவாக உணரலாம்.
நபி(ஸல்) அவர்கள் பட்டாடை அணிந்து தொழுதார்கள். பின் கழற்றி வைத்துவிட்டு “ஜிப்ரில்(அலை) அவர்கள் பட்டாடை அணிவதை விட்டும் எனக்குத் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல் : முஸ்லிம்
ஜிப்ரில்(அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தடுப்பதற்கு முன், அதை அணிவதற்கு அனுமதி இருந்துள்ளதை இதன் மூலம் அறியலாம். இந்த ஹதீஸ்களில் ஆண், பெண் என்று பேதப்படுத்தாமல் பொதுவாகவே தடை உள்ளது. ஆனாலும், இந்தத் தடை ஆண்களுக்கு மட்டுமே என்று தெளிவு படுத்தக் கூடிய ஹதீஸ்களை நாம் காண்போம்.
“தங்கமும், பட்டும் என் சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனமதிக்கப்பட்டுள்ளன” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல்கள் : அஹ்மத், நஸயீ, திர்மிதீ, அபூதாவூத், ஹாகிம், தப்ரானி
நபி(ஸல்) அவர்கள் தன் வலது கரத்தில் ‘பட்டை’யும் இடது கரத்தில் தங்கத்தையும் எடுத்துக் கொண்டு “இவ்விரண்டும் என் உம்மத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டள்ளன” என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ(ரழி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்
குறைந்த அளவு அனுமதி உண்டு
“இரண்டு விரல்கள் அளவுக்கோ, மூன்று விரல்கள் அளவுக்கோ, நான்கு விரல்கள் அளவுக்கோ தவிர (அதைவிட அதிகமாக) ‘பட்டு’ அணிவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்”.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவுத்
இந்த அளவுக்கு மட்டும் ஆண்கள் ‘பட்டு’ பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
சிறங்கு உள்ளவர்கள்
சிரங்கு உள்ளவர்கள் மற்ற ஆடைகள் அணிவதால் உறுத்தல் ஏற்பட்டு மேலும் புண்ணாக்கி விடலாம் என்பதால் அவர்கள் ‘பட்டு’ அணியலாம். ‘பட்டு” உடலை உறுத்தாது என்பதே காரணம்.
“அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு, ஜுபைர் இருவருக்கும் சிரங்கு இருந்த காரணத்தால் ‘பட்டு’அணிய நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
பட்டு விரிப்புகள்
உட்காருவதற்கோ, படுத்துக் கொள்வதற்கோ ‘பட்டு’ விரிப்புக்கள் பயன்படுத்தக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் “தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் குடிப்பதையும் , அவற்றில் உண்ணுவதையும் , ‘பட்டு’ அணிவதையும், அதன் மீது அமர்வதையும் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹுதைபா(ரழி) நூல் : புகாரி
‘பட்டு’ தவிர எந்தத் துணிகளையும் ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறுகிறார்கள். வேறு எந்த வகைத் துணியையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.
கரண்டைக்குக் கீழே இறங்கக் கூடாது!
ஆண்கள் அணிகின்ற ஆடைகள் நபி(ஸல்) அவர்கள் வரையறுத்துக் காட்டிய அளவைவிட கீழே இறக்கக் கூடாது! “பெருமையின் காரணமாக எவன் தனது ஆடைகளை கீழிறங்கும்படி இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், முஅத்தா, திர்மிதீ, நஸயீ
“முதல் ஹதீஸ் பொதுவாக ஆடையைக் கீழறங்கும்படி அணியக் கூடாது” என்பதை விளக்குகின்றது. “இரண்டாவது ஹதீஸ் கீழ் ஆடைகள் கரண்டைக் காலைவிட இறங்கக் கூடாது” என்று அளவை நிர்ணயம் செய்கின்றது. அவ்வாறு இறங்குவதைக் கண்டித்து இன்னும் பல நபிமொழிகள் உள்ளன.
“எவர் தனது ஆடையைப் பெருமையின் காரணமாக இழுத்தும் செல்கிறாரோ அவரைக் கியாமத் நாளில் அல்லாஹ் பார்க்கமாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது கைலியின் ஒரு பகுதி கீழே இறங்கி விடுகின்றதே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) “நீர் பெருமையின் காரணமாக அவ்வாறு செய்பவர் அல்ல” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி.
முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால்…?
நபி(ஸல்) அவர்கள் உட்பட ஸஹாபாக்களும், மற்றும் அரபியரும் முழங்காலைக் கட்டிக் கொண்டு சர்வசாதாரணமாக அமர்ந்திருப்பார்கள். (இவ்வாறு அமர்வதை நம் தழிழகத்து முஸ்லிம் பெண்கள் ‘தரித்திரம்’ என்று தடுப்பர். அவர்களின் மார்க்க அறிவு அந்த அளவு இருக்கின்றது)
மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடை எதுவும் உள்ளே அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள், முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு அமர்வதால் போர்வை விரியும் போது மர்மஸ்தானம் வெளியே தெரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மேலும் உள்ளே மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடைகள் அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள் கைகளையும் போர்வைக்குள் மறைத்துக் கொண்டு அணியக் கூடாது. காரணம் அவசரத் தேவைகளுக்காக கைகளை தீடிரென வெளியே எடுக்க நேர்ந்தால் போர்வை விலகி மர்மஸ்தானங்களை வெளியே தெரிய நேரிடும்.
“தன்னுடைய மர்மஸ்தானத்தின் மீது எந்த ஆடையுமின்றி எவரும் முழங்காலைகளைக் கட்டிக்கொண்டு அமர வேண்டாம்! (கைகள் உள்ளிருக்கும்படி) முற்றாகப் போர்த்திக் கொள்ளவும் வேண்டாம்” என் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
மறைக்கப்பட வேண்டியவை
“ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்” என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.
“உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது
தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.
குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் “அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா
“மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்
இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.
இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
“அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் “உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!” என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)
நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா
இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும். ஒரு சில அறிஞர்கள் “இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது” என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.
1) “கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்”
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
2) “நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்”
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.
3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்” என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்
(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)
இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் “தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை” என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.
தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது ‘கைபர்’ போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.
இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.
நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.
நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். “நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்” என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.
ஆண்களின் ஆடைகள் பற்றி மேலும் பல விதிகளை இனி காண்போம். (தொடரும்)
அந்நஜாத்: ஜுன், 1987 – ஷவ்வால், 1407

அன்றைக்கு தொளுகையல்லாத நேரத்திலேயே தொடை தெரியக்கூடாது என வரிந்து காட்டி விளக்கம கொடுக்கும் அண்ணன் இன்று தொடை தெரிய தொழுவதை தடுக்க முடியுமா எனக் கேட்பது தான் மார்கத்தில் விளையாடும் மாமனிதர் என்பதற்கு சான்று ! இவரை கண் மூடித்தனமாக பின் பற்றும் சகோதரர்கள் பின் வரும் குரான் ஹதீஸை விளங்கி, பி .ஜே .வை அல்லாஹ்வாக்காமல் தக்லீது எனும் வழிகேட்டில் இருந்து விலகி நேர் வழி பெறவேண்டும் .

'யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வை விட்டு விட்டு தங்கள் பாதிரிமார்களையும் , மத குருமார்களையும் கடவுளாக்கி கொண்டார்கள் " எனும் இறைவசனம் இறங்கிய போது கிறிஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்த சஹாபாக்கள் நாங்கள் அவ்வாறு செய்யவில்லையே யா ரசுலல்லாஹ் ! என்று சொன்ன போது உங்கள் மத குருமார்கள் ஒன்றை ஹராம் என்ற போது அதை விலக்கி ஹலால் என்ற போது அதை ஆகுமாக்கிக் கொண்டீர்கள் இல்லையா ? அதைத்தான் அல்லாஹ் "கடவுள் ஆக்கிக் கொண்டீர்கள்'' என குறிப்பிடுகிறான் . என நபி ஸல் கூறினார்கள் . [ஆதாரம் - புஹாரி ]