Friday, December 10, 2010

ஜின் -கண்ணுக்கு தெரியாத படைப்பினம்?


ஜின்
'நாம் வாழும் பூமியில் நமது பார்வைக்கு புலப்படாத ஒரு உயிரினம் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது'. ராயல் விஞ்ஞான கழகம் விஞ்ஞானம் கண்டுபிடிப்பு என்ற செய்தி பிரபல நாளிதழான தினத்தந்தியில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியானது.

அறிவியல் உலகம் ஒத்துக்கொண்ட அந்தஉயிரினம் தான் ஜின் என்பது.
சகோதர மதத்தவர்களால் தேவு என்றும், ஆவி என்றும், பிசாசு என்றும், பூதம் என்றும் அழைக்கப்படும் அந்த உயிரினத்திற்கு, இந்தப் பெயர்களை விட ஜின் என்ற பெயரே மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால் ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைந்திருக்கும் உருவம் என்று பொருளாகும்.

தவறான நம்பிக்கைகள்

ஆவி உலகம் என்றும், சாத்தானின் மகிமை என்றும், அவர்களை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளே தவிர வேறில்லை.

முஸ்லிம்களில் சிலர் கூட ஜின்னை கட்டுப்படுத்தி வேலை வாங்குகிறோம். ஜின்களைக் கொண்டு காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவோம் என்றெல்லாம் கூறுவதுண்டு. (இதுபற்றி முடிவில் பார்ப்போம்)

நெருப்பினால் படைக்கப்பட இடம்
சுட்ட மண் பாண்டங்களைப் போல (தட்டினால்) சப்தம் உண்டாகும், களி மண்ணில் இருந்து (அல்லாஹ்வாகிய) அவன் மனிதனைப் படைத்தான். அதற்கு முன்னரே (சூடான) நெருப்புக் கொழுந்தில் இருந்து ஜின்களைப் படைத்தான்.
(அல்குர்ஆன் 55:15-16, 15:26,27)

மனிதன் மண்ணால் படைக்கப்பட் டான், ஜின் வர்க்கம் நெருப்பினால் படைக்கப்பட்டது. வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள். (நபிமொழி: முஸ்னத் அஹ்மத்)

நல்லோர், தீயோர்
(ஜின்களாகிய) நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் இருக்கின்றனர். நாம் பல்வேறு வழி(முறை)களை உடையவர்களாக இருந்தோம் (என்று ஜின்கள் கூறியது)
(-அல்குர்ஆன் 72:11)

முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதார்
நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர், நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர். எவர் முஸ்லிம்களாக (வழிபட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடியவர்கள்.
(-அல்குர்ஆன் 72:14)

ஆண், பெண்
பூமி முளைப்பிக்கும் (புல், பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும், இன்னும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி, ஜோடியாக படைத்த இறைவன் தூய்மையானவன்.
(-அலகுர்ஆன் 36:36)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கழிவறைக்குச் செல்லும்போது ""அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக மினல் குபுஸி வல் கபா இஸி'' என்று ஓதுங்கள். (இறைவாக! ஆண், பெண் ஜின்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)-ஆதாரம்: புகாரி

உணவு வகைகள்
ஒரு சமயம் (இயற்கை தேவையை பூர்த்தி செய்ய) நபி (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ""யார் அது'' என்றார்கள். நான் உடனே அபூஹுரைரா என்றேன். (சிறுநீர் கழித்த பின்) சுத்தம் செல்வதற்கு கற்களைப் பயன்படுத்தும், விட்டைகளையும், எலும்புகளையும் எடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் கொஞ்சம் கற்களை எடுத்து எனது ஆடை முனையில் கட்டி வைத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் தமது தேவையை முடித்த பிறகு அவர்களிடம் சென்று ""எலும்புகளையும் விட்டைகளையும், உபயோகப்படுத்துவிதல் என்ன தவறு என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (எலும்பும், விட்டைகளும்) அவை (ஜின்)களின் உணவாகும். உண்மையிலேயே நசீபீன் (எனும் ஊரில்) இருந்து ஜின்களின் பிரதிநிதிகள் என்னிடம் வந்தன. அவை நல்ல ஜின்கள் ஆகும். எங்களுக்குரிய ஆகாரம் என்ன? என்று என்னிடம் கேட்டன. நான் அல்லாஹ்விடம் கேட்டேன். எலும்புகளிலும், விட்டைகளிலும், அவைகள் தங்களது ஆகாரத்தை தேடிக் கொள்ளட்டும் என்று கூறப்பட்டது.-நபிமொழி: புகாரி

எலும்பும், எருவும் உங்களுடைய சகோதர இனமான ஜின்களுக்கு ஆகாரமாக உள்ளன. எனவே அவ்விரண்டால் சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்யாதீர்கள். -நபிமொழி: முஸ்லிம்

நாம் ஜின்களை பார்க்க முடியாது, ஜின்கள் நம்மைப் பார்ப்பார்கள்
நிச்சயமக (ஜின் இனத்தை சார்ந்த இப்லீஸôகிய) அவனும், அவனது சமூகத்தாரும் (மனிதர்களாகிய) உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களை பார்க்க முடியாது.
(-அல்குர்ஆன் 7:27)

படைத்த நோக்கம்
நாம், ஜின்களையும் - மனிதர்களையும், எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவே தவிர, வேறு எதற்காகவும் படைக்கவில்லை.(-அல்குர்ஆன் 51:56)

ஜின்களின் வசிப்பிடம்
ஒட்டகத் தொழுவத்தில் தொழ வேண்டாம். அது ஷைத்தான் குடியிருக்கும் இடம் ஆகும்.
(-நபிமொழி: அபூதாவூத்)
கழிவறைக்குள் நுழையும் ஆண், பெண் ஜின்களை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுங்கள்.
(-நபிமொழி: புகாரி)
மண்ணறைகளிலும், கழிவறைகளிலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது.
(-நபிமொழி:திர்மிதி, அபூதாவூது)
(ஜின்கள் பாலைவனங்களிலும், திறந்த வெளியிலும், கழிவறைகளிலும், குளியலறைகளிலும், குப்பை கொட்டும் இடங்களிலும், சாக்கடைகளிலும், கல்லறைகளிலும், மண்ணறைகளிலும், குகைகளிலும் வசிக்கும் என்று நபிமொழிகள் உள்ளன.)

சொர்க்கம், நரகம், மறுமை
நாம் ஜின்களில் இருந்தும், மனிதர்க ளில் இருந்தும், அநேகமானவர்களை, நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்.(-அல்குர்ஆன் 7:179)
நிச்சமயாக ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாரைவயும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்.
(-அல்குர்ஆன் 11:119)

தூதுத்துவம்
மறுமை நாளில் இறைவன் ஜின்களையும், மனிதர்களையும் நோக்கி கேட்பான். ஜின்கள் மற்றும் மனித கூட்டத்தார்களே! உங்களுக்கு என் வசனங்களை ஓதிக் காட்டவும், இந்த நாளின் சந்திப்பைப் பற்றி, உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உங்களில் இருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா? என்று கேட்பான்.(-அல்குர்ஆன் 6:130)

ஜின்களுக்கும் நபிகளாரே தூதர்
நிச்சயமாக, ஜின்களில் சில (திருக்குர்ஆனை) செவிமடுத்தன. (பிறகு தம் இனத்தாரிடம் சென்று) நிச்சயமாக நாங்கள் மிக ஆச்சரியமான குர்ஆனை செயியேற்றோம் என்றன. (-அல்குர்ஆன் 72:1)
(ஜின்கள்) கூறினார்கள். எங்களது சமூகத்தினரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸôவுக்குப் பிறகு இறக்கப்பட்டுள்ளது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பக்கமும் வழிகாட்டுகிறது. (-அல்குர்ஆன் 46:30)
நசீபீனில் இருந்து சில ஜின்கள் வந்து, தங்களுக்குரிய ஆதாரம் என்ன? என்று கேட்டனர். அல்லாஹ்விடம் நான் கேட்டேன். எலும்புகளில் இருந்தும் விட்டைகளில் இருந்தும் (உணவை) தேடிக் கொள்ளட்டும் என்று கூறப்பட்டது.(-நபிமொழி: புகாரி)

ஜின்களின் தன்மை
(மாலையும், இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை, வீட்டிற்குள் தடுத்து வையுங்கள். ஏனெனில் அது ஷைத்தான் வெளியே வரும் நேரம் ஆகும். (-நபிமொழி: முஸ்லிம்)
கழுதை, பெண், கருப்பு நாய் போன்றவை நாம் தொழும்போது குறுக்கே சென்றால், தொழுகை முறிந்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதை செவியேற்ற போது அபூதர் (ரலி) அவர்கள், யாரஸýலுல்லாஹ்! கருப்பு நாய்க்கும் சிவப்பு, பழுப்பு நிற நாய்களுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார்கள். கருப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(-நபிமொழி: முஸ்லிம்)
(ஷைத்தானாகிய) அவன் பூனை வடிவில் எனக்கு முன் காட்சி தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஃபத்ஹுல் பாரி)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மதீனாவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஜின் கூட்டம் இருக்கிறது. எவராவது (உங்கள் வீடுகளில்) ஏதாவது பாம்பைக் கண்டால் ""இங்கிருந்து சென்று விடு என்று மூன்று முறை கூறுங்கள்%% அதன் பிறகும் அவைகளில் எதையாவது கண்டால் கொன்றுவிடுங்கள். ஏனெனில் அது ஷைத்தான் ஆகும்.(-நபிமொழி: முஸ்லிம்)

ஃபித்ரா ஜகாத்தை சேகரித்து பாதுகாக்கும் பொறுப்பை அபுஹுரைரா (ரலி)யிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்து இருந்தார்கள். ஷைத்தான் அதனை ஒவ்வொரு இரவும் திருடிச் செல்வான். அப்பொழுது அபூஹுரைரா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, ""நேற்று இரவு நீ கட்டிப்போட்ட கைதி எங்கே?%% என்று கேட்டார்கள். அவன், மன்னிப்பு கேட்டான். விட்டுவிட்டேன் என்று அபூஹுரைரா (ரலி) கூறினர். உம்மிடம் அவன் பொய் சொல்லி உள்ளான். நிச்சயமாக அவன் திரும்பவும் வருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவ்வாறே மூன்றாவது நாளும் வந்தான். அவனை அபூஹுரைரா (ரலி) கட்டிப் போட்ட போது, என்னை விட்டு விடும். உனக்கு பயனுள்ள ஒரு விஷயத்தை போதித்து தருகிறேன் என்று கூறி (ஆயத்துல் குர்ஷியை கற்றுத் தந்தான்).இச்சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுரைரா (ரலி) கூறியபோது, உம்மிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறியவன் ஷைத்தான். அவன் பெரிய பொய்யனாக இருந்தும் கூட, இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்லி விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழி: புகாரி)

(மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து, ஜின்கள் - மனிதன், நாய், பூனை, பாம்பு போன்ற உருவில் காட்சி தரும் என்பது தெரிகிறது.)

ஜின்களின் பலம் மற்றும் ஆற்றல்
மனித, ஜின் கூட்டமே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல சக்தி பெறுவீர்களாயின் செல்லுங்கள்.ஆனால் (வல்லமையும், நம்) அதிகாரமும் இல்லாமல் செல்ல முடியாது. (-அல்குர்ஆன் 55:33)

நிச்சயமாக (ஜின்களாகிய) நாங்கள் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டு இருப்பதைக் கண்டோம். (முன்னர் வானில் பேசப்படுவதை) செவிமடுப்பதற்காக (வானில் உள்ள சில) இடங்களில், நாங்கள் அமர்ந்து இருப்போம். ஆனால் இப்போதோ, எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான். (-அல்குர்ஆன் 72:9,10)

(விண்கலங்களை (ராக்கெட்டை) உருவாக்கி, அதில் அமர்ந்து வான் எல்லையைத் தாண்டி செல்லும் சக்தியை, 20ம் நூற்றாண்டில் கடைசியில் தான் மனிதன் பெற்றுள்ளான். ஜின்களோ, முதல் வானம் வரைக்கும் இயற்கையாக பறந்து செல்லும் ஆற்றல் உள்ளவையாக உள்ளன.)

(சுலைமான் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம்)
என் இறைவனே! என்னை மன்னித்து அருள்வாயாக! எனக்குப் பிறகு எவருமே அடைய முடியாத, ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையாகத் தருவாயாக! நிச்சமாயாக நீயே மிகப் பெரும் கொடையாளியாக உள்ளாய் என்று (பிரார்த்தித்துக்) கூறினார். எனவே நாம் அவருக்கு, காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவரது விரப்பப்படி அவர் நாடிய இடங்களுக்கு எல்லாம், அவரை இலகுவாக (சுமந்து) சென்று கொண்டிருந்தது. மேலும் ஷைத்தான்களில் உள்ள கட்டடம் கட்டுவோர், முத்துக் குளிப்போர் ஆகிய யாவரையும், சங்கிலியால் விலங்கிடப்பட்ட வேறு பலரையும் (அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்) அல்குர்ஆன் 38:35,39

தன் இறைவனின் அனுமதிப்படி, அவருக்கு முன் (இருந்து) உழைக்கக் கூடிய ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்). அவை சுலைமான் விரும்பிய மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், நகர்த்த முடியாத பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன.அல்குர்ஆன் 34:12,13

சுலைமான் கேட்டார்: அவையோரே! (பக்கத்து நாட்டுக்காரர்களாகிய) அவர்கள் எனக்கு கீழ்ப்படிந்தவர்களாக என்னிடம் வருவதற்கு முன் (அரசியாகிய) அவளுடைய சிம்மாசனத்தை, உங்களில் யார் என்னிடம் கொண்டு வர முடியும்? (ஸýலைமான் (அலை) அவர்களை நோக்கி) ஜின்களில் (பலம் பொருந்திய) இஃப்ரீத் கூறியது. நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் கொண்டு வந்து விடுவேன். நிச்சயமாக அதற்கு சக்தி உடையவனாகவும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் நான் இருக்கிறேன் என்றது. -அல்குர்ஆன் 27: 38,39

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானத்தில் அல்லாஹ் ஒரு கட்டளையை பிறப்பிக்கும்போது, அந்த கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக மலக்குகள், தங்கள் இறக்கைகளை ஒன்றோடென்று அடித்துக் கொள்வார்கள். அந்தக் கட்டளை, மழுமழுப்பான கல்லில் விழும், சங்கிலியைப் போல மலக்குகளிடம் வந்து சேரும். (அப்போது அவர்கள் பயந்து நடுங்குவார்கள். அவர்களின் இதயத்திலிருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவரிடம்) உங்கள் இறைவன் என்ன கட்டளை இட்டான்? என்று கேட்பார்கள். அவன் இட வேண்டிய, உண்மையான கட்டளையைத்தான் இட்டான். அவனே மிக மேலானவனும், பெரியவனும் ஆவான் என்று மற்றவர்கள் பதில் கூறுவார்கள்.
இந்தக் கட்டளையை ஒட்டுக் கேட்கும் ஷைத்தான், வரிசையாக கீழே காத்திருக்கும் ஷைத்தான்களிடம் கூறுவான். அந்த ஷைத்தான் தனக்கு கீழே உள்ள ஷைத்தானிடம் கூறுவான். இப்படியாக அது ஜோசிக்காரனிடமும், சூன்யக்காரனிடமும் வந்து சேரும். இவ்வாறு ஒட்டு கேட்கும்போது, அந்த ஷைத்தான் எரி நட்சத்திரங்களால் விரட்டப்படுவான்.
சில நேரங்களில் அந்த நட்சத்திரம் அவன் மீது பட்டுவிடும். சில நேரங்களில் அவன் விஷயத்தை தனக்கு கீழ் உள்ள ஷைத்தானிடம் கூறி விடுவான். இறுதியாக அது குறி காரனிடமும், ஜோசிக்காரனிடமும் வந்து சேர்ந்துவிடும். உடனே ஜோஸ்யக்காரன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து, தன்னிடம் ஜோஸ்யம் கேட்க வருபவர்களிடம் கூறுவான்.
நபிமொழி: புகாரி - முஸ்லிம்

- ஜின்கள் வானத்திற்குப் பறந்து செல்லும் ஆற்றல் உள்ளவை.
- ஜின்கள் வானவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்கும் ஆற்றல் உள்ளவை
- ஜின்கள் கட்டடம் கட்டும், கடலில் மூழ்கி முத்துக் குளிக்கும்
- ஜின்கள் மிஹ்ராபுகள், சிற்பங்கள், பெரிய பாத்திரங்களை செய்து தரும்.

இவை எல்லாம் ஜின்களைப் பற்றி குர்ஆன் மற்றும் நபிமொழி மூலம் நாம் அறிந்து கொள்பவை ஆகும்.

ஜின்களை வசப்படுத்த முடியுமா?
குர்ஆன், ஹதீûஸ பின்பற்றக் கூடியவர்கள் மத்தியிலேயே ஜின்களை வசப்படுத்த முடியும் என்று ஒரு சாராரும், வசப்படுத்த முடியாது என்று மற்றொரு சாராரும் நம்பிக்கை கொண்டு உள்ளனர். சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று தங்களை கூறிக் கொள்பவர்களும், ஜின்களை வசப்படுத்த முடியும் என்றும், வசப்படுத்தி வேலை வாங்க முடியும் என்றும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறுபவர்கள் இரண்டு நபிமொழிகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அதில் ஒரு ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெறுகிறது.
அபூ அஸ்ஸôயிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருசமயம், நான் அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) வீட்டிற்குச் சென்றேன். அப்போது, அவர் தொழுது கொண்டு இருந்தார். அவர் தொழுது முடியும் வரை நான் உட்கார்ந்து இருந்தேன். ஏதோ ஒன்று ஊர்ந்து செல்லும் சப்தத்தை செவியேற்று, அது என்னவென்று பார்க்கத் திரும்பினேன். ஆச்சர்யம் அது ஒரு பாம்பாக இருந்தது. நான் பாய்ந்து சென்று அதனைக் கொல்ல முயலும்போது, அமைதியாக இருக்கும்படி அபூ சயீத் (ரலி) சைகை மூலம் கூறினார். நானும் அவ்வாறே இருந்து விட்டேன். அப்போது அந்தப் பாம்பு சென்றுவிட்டது. அப்போது என்னிடம் அபூசயிதுல் குத்ரீ (ரலி) கூறினார்.
'அகழ் யுத்தத்தின்போது, அல்லாஹ்வின் தூதரோடு நாங்கள் முகாமிட்டு இருந்தோம். எங்களோடு புதிதாக திருமணம் ஆன இளைஞர் தங்கி இருந்தார். அந்த வாலிபர் தன்னுடைய மனைவியோடு இரவு தங்க அனுமதி கேட்டார். அனுமதி தந்த நபி (ஸல்) அவர்கள், உம்முடைய ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். குரைதா இனத்தவர்களுக்காக அல்ல (இந்த எச்சரிக்கை) என்றார்கள். அந்த இளைஞர் தமது ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார். வீட்டு வாசலில் தமது மனைவி நிற்பதைக் கண்ட அவர் (கோபத்தில்) அவளை ஈட்டியால் குத்தி தள்ள முயன்றார். அவள் உடனே கூறினாள்: உம்முடைய ஈட்டியை பின்னுக்கு எடும். நான் இப்படி வெளியில் வந்து நிற்கக் காரணம் என்ன என்பதை நீரே வீட்டினுள் சென்று பாரும் என்றாள்.
அந்த இளைஞர் உள்ளே சென்று பார்த்தபோது, நீளமான பாம்பு ஒன்று சுருண்ட நிலையில், அவரது படுக்கையில் கிடந்தது. அவர் தன் ஈட்டியால் அதனைக் குத்தினார். பிறகு அதை வெளியே கொண்டு வந்து முற்றத்தில் போட்டார். அந்தப் பாம்பு அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டது. முதலில் இறந்தது பாம்பா? அல்லது அந்த இளைஞரா? என்பது தெரியவில்லை (இருவரும் இறந்துவிட்டனர்). நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நடந்ததைக் கூறி, அவருக்காக பிரார்த்தனை செய்யும்படி கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஜின்கள் இந்த மதீனாவில் உள்ளன. நீங்கள் ஏதாவது பாம்பைக் கண்டால், இங்கிருந்து வெளியேறும் என்று மூன்று முறை சொல்லுங்கள். பிறகும் அவைகளைக் கண்டால் கொல்லுங்கள். ஏனெனில் உண்மையில் அவை ஷைத்தான்களே என்றார்கள்.
நூல்: முஸ்லிம்

இரண்டாவது ஹதீஸ்: நாம் ஏற்கனவே குறிப்பிட்ட அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ், பித்ரா ஜகாத்தை திருட வந்த ஷைத்தானை தூணில் கட்டிப் போட்டதும் அவன் "ஆயத்துல் குர்ஸி%யை கற்றுக் கொடுத்து தப்பிய நிகழ்ச்சி.

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி, ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள். அதாவது நாம் சுட்டிக் காட்டிய முதல் ஹதீஸில் பாம்பு வடிவில் இருந்த ஜின்னைக் கட்டுப்படுத்தி இளைஞர் கொன்றதாகவும், இரண்டாவது ஹதீஸில், அபூ ஹுரைரா (ரலி) ஜின்னை தூணில் கட்டி வைத்ததாகவும் கூறி, இப்போது நாமும் ஜின்களை வசப்படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும், ஜின்னை கட்டுப்படுத்துவது என்ற கருத்து இல்லவே இல்லை. முதல் ஹதீஸில் இருந்து ஜின்கள் பாம்பு வடிவத்திலும் வரும் என்ற கருத்தை எடுக்கலாம்.

இரண்டாவது ஹதீஸில் இருந்து மனித வடிவிலும் வரும் என்ற கருத்தை எடுக்கலாம்.
இதைத் தவிர வேறு என்ன ஆதாரம் இதில் உள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் கட்டுப்படுத்தியதாகவோ, வேலை வாங்கியதாகவோ இல்லை. அது மட்டும் அல்லாமல் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதற்கு நேரடியாக ஹதீஸ்கள் உள்ளன.

அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நிற்கும்போது, அவர்கள் சில வார்த்தைகள் கூறுவதை செவியேற்போம். ""நான் உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். உன்னை நானும் சபிக்கிறேன். அல்லாஹ்வும் சபிக்கிறான் என்று மூன்று முறை கூறினார்கள். பின்பு எதையோ பிடிப்பது போல, தமது கையைக் கொண்டு சென்றார்கள். தொழுகையை முடித்த பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். (நீங்கள் இப்போது கூறிய) அவைகளை, இதற்கு முன்பு நீங்கள் கூறியதும் இல்லை. இன்னும் உங்கள் கையை தூரமாகக் கொண்டு சென்றீர்களே (ஏன்) என்றோம். அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ், நெருப்புக் கட்டையைக் கொண்டு எனது முகத்தில் சுட முயற்சி செய்தான். உன்னிடம் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று மூன்று தடவை கூறினேன். ஆனால் அவன் திரும்பிச் செல்லவில்லை. அவனை நான் பிடித்துக் கொண்டேன். எனது சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள், அப்படி ஒரு துஆ செய்யாமலிருந்தால், அவனை கட்டி வைத்து மதீனா சிறுவர்களுக்கு விளையாடக் கொடுத்திருப்பேன் என்று கூறிவிட்டு, கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்: (சுலைமான் இறைவனை நோக்கி) இறைவா என்னை மன்னிப்பாயாக! எனக்குப் பின் யாருக்குமே வழங்காத ஆட்சி அதிகாரத்தை எனக்கு அன்பளிப்பாக வழங்குவாயாக. நிச்சயமாக நீயே மிகப் பெரிய கொடையாளி ஆவாய்.அல்குர்ஆன் 38:35, நபிமொழி: புகாரி, முஸ்லிம்

சுலைமான் நபி பிரார்த்தனை செய்தார்கள். நான் விட்டுவிட்டேன் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்றால் என்ன பொருள். ஜின்களை கட்டுப்படுத்தி வேலை வாங்குவதை சுலைமான் நபிக்கு அல்லாஹ் வழங்கி விட்டான். அவருக்குப் பிறகு யாருக்கும் தரமாட்டான் என்றுதானே பொருள். சுலைமான் நபிக்குப் பிறகு வேறு எவருக்கும் ஜின்களை கட்டுப்படுத்தி வேலை வாங்கும் ஆற்றல் தரப்படாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.
அது மட்டும் அல்ல...
ஜின்களை வசப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள், தங்களிடம் உள்ள ஜின்களைக் கொண்டு, கட்டடம் கட்டி உள்ளார்களா? சிற்பங்கள் செய்துள்ளார்களா? தூரத்தில் உள்ள பொருளை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி ஜின்னை அனுப்பி உள்ளார்களா? குறைந்தபட்சம் கடலில் மூழ்கி முத்து எடுத்து வரச் சொல்லி காட்டி உள்ளார்களா? ஜின்களில் ஆற்றல் என்றும் ஜின்கள் செய்த காரியங்கள் என்றும் பல விஷயங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றில் எது ஒன்றையும், ஜின்களை வசப்படுத்தி வைத்துள்ளோம் என்று கூறுபவர்களால் செய்துகாட்ட இயலவில்லை.மாறாக, காணாமல் போன பொருளைக் கண்டுபிடித்து தருவோம். பின்னால் நடக்கப் போவதை முன்னாலே கூறிவிடும் என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
(சுலைமானாகிய) அவர் மீது நாம் மரணத்தை விதித்தபோது, அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்துவிட்ட, நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறு எதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (சுலைமானாகிய) அவர் கீழே விழவே ""தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்து இருந்தால் (கடின உழைப்பாகிய) இந்த கஷ்டமான வேதனையில் இருந்திருக்க மாட்டோமே%% என்று ஜின்களுக்கு தெளிவாகத் தெரிந்தது.-அல்குர்ஆன் 38:14

மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் விளக்கம் இதுவே...
சுலைமான் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை புனர் நிர்மாணம் செய்கிறார்கள். ஜின்கள் அவருக்கு கட்டுப்பட்டு வேலை செய்து கொண்டு இருக்கின்றன. வாசல்படியில் தடியின் மீது சாய்திருந்த நிலையில் அவருக்கு அல்லாஹ் மரணத்தை விதித்து விட்டான். தடி மீது சாய்ந்திருந்த அவர் உயிரோடு இருந்து கண்காணிப்பதாக நினைத்துக் கொண்டு ஜின்கள் வேலை செய்து கொண்டு இருந்தன. அவர் சாய்ந்து நின்றிருந்த தடியை கரையான் அரித்து, தடி நொறுங்கியதும் சுலைமான் நபி கீழே சாய்ந்து விடுகிறார்கள். அப்போது ஜின்கள், மறைவான விஷயங்கள் தெரிந்திருந்தால், சுலைமான் நபி இறந்தது தெரிந்து இருக்குமே. தெரியாததால்தானே இறந்த பிறகும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டன.
இந்த குர்ஆன் வசனத்தை மீண்டும் படியுங்கள் ""ஜின்கள் தமக்கு மறைவான விஷயங்கள் தெரியாது%% என்று கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என்ற நிலையில், காணாமல் போன பொருளை ஜின்களைக் கொண்டு எப்படி கண்டுபிடிக்க இயலும். ஜின்களைக் கொண்டு பின்னால் நடப்பதை எப்படி முன்னாடியே எவ்வாறு கூற இயலும்.

ஜின்களை வசப்படுத்தவும் முடியாது, ஜின்களைக் கொண்டு மறைவான விஷயங்களை கூறவும் முடியாது என்றே குர்ஆனும் ஹதீஸýம் கூறுகின்றன. அதுமட்டும் அல்ல... ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாக கூறுபவர்கள், குர்ஆனில் ""ஜின்கள்%% என்று ஒரு ஸþரா உள்ளது. அதனை தஹஜ்ஜத் தொழுகை தொழுதுவிட்டு, 40 நாட்கள் தொடர்ச்சியாக ஓதினால் ஜின்களை வசப்படுத்தி வேலை வாங்கலாம் என்று கூறுகிறார்கள். ஜின் என்ற அத்யாயத்தை ஓதினால் ஜின்கள் வசப்படும் என்று குர்ஆனில் உள்ளதா? அல்லது நபிகளாரின் பொன் மொழிகளில் உள்ளதா? இல்லை. இல்லவே இல்லை.

அறிவீனம்
ஜின் என்ற அத்யாயத்தை ஓதினால், ஜின் வசப்படும் என்று கூறுபவர்கள் - மாடு என்ற அத்தியாயத்தை ஓதி மாட்டை வசப்படுத்திக் காட்டுவார்களா? சூரியன், சந்திரன், சிலந்தி, எறும்பு, தேனீ, மனிதன் என்றெல்லாம் அத்தியாயங்கள் உள்ளதே? அவற்றை ஓதி வசப்படுத்திக் காட்டுவார்களா? ஒருபோதும் காட்ட மாட்டார்கள்.

ஜின்களை வசப்படுத்தி வேலை வாங்குகிறோம் என்று சொல்பவர்கள், ஜின்கள் செய்யக் கூடிய காரியங்களை செய்து காட்டட்டும். பார்க்கலாம். ஒருக்காலும் செய்து காட்ட மாட்டார்கள். செய்யவும் முடியாது. ஏனெனில் அல்லாஹ் தனது தூதர் சுலைமான் முபிக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டான். அவருக்குப் பிறகு யாருக்கும் தரமாட்டான். ஆகையால் ஜின்களை வசப்படுத்த எவராலும் முடியாது.
- அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

நன்றி- தவ்ஹீத் மாத இதழ்
அப்துல் ஹமித் -9444822331

1 comments:

சலாமு அலைகும்
மிகவும் அருமையான விளக்கம் நறி

Post a Comment