Friday, December 17, 2010

பாபர்மஸ்ஜித்; மீண்டும்-மீண்டும் குட்டுப்படும் 'தக்லீதுகள்'



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பாபர் மஸ்ஜிதுக்காக, பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிச.6 அன்றோ, அல்லது பாபர் மஸ்ஜித் இடம் தொடர்பான அலகாபாத்  தீர்ப்பு வெளியான உடனோ போராடாத அண்ணன் ஜமாஅத், பாபர் மஸ்ஜிதுக்கு சம்மந்தம் இல்லாத ஜனவரி இறுதியில்[அடுத்த வருஷம் தேர்தல் நெருங்கும் நேரம்] போராட்டம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் கூட, பாபர் மஸ்ஜிதை  இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை  எடு என்ற கோரிக்கை அண்ணன் ஜமாஅத்தால் வைக்கப்படவில்லை. அதற்கு பயாஸ்கோப்பில் காரணம் சொன்ன அண்ணன்,

''ஒவ்வொரு ஆண்டும் டிச 6 போராட்டத்தின் போது என்ன கோரிக்கை வைத்தோம்? பாபர் மஸ்ஜித் குறித்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும்.
பள்ளியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்.

என்ற இரண்டு கோரிக்கை வைத்தோம். ஆனால் இந்த ஆண்டு பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வந்த பின்பு 'கிரவுண்டு' மாறிவிட்டது. அதாவது தீர்ப்பை கேட்டோம். அதை தந்துவிட்டார்கள். எனவே அந்த கோரிக்கையை இப்போது வைக்கமுடியாது. அடுத்து பள்ளிவாசலை குற்றவாளிகளை தண்டிக்க சொல்லமுடியுமா என்றால் முடியாது. ஏனெனில், அந்த இடத்தில் பள்ளிவாசல் என்று ஒன்று இருக்கவில்லை. அதை யாரும் இடிக்கவில்லை. அது அன்றும் கோயிலாகத்தான் இருந்தது; இன்றும் கோயிலாகத்தான் இருக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறிவிட்டார்கள். எனவே நீதிபதிகளின் தீர்ப்பின் படி இல்லாத  பள்ளிவாசலை இடித்தவர்களை  தண்டிக்கவேண்டும் என்றும் கூறமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. என்றார்.

இதையொட்டி நாம்,
பாபர் மஸ்ஜித் என்ற ஒன்று இருக்கவில்லையா? புதுக் கதை விடும் பீஜே! 
 என்ற தலைப்பில்  ஒரு ஆக்கம் வரைந்து அண்ணனை நோக்கி சில கேள்விகளை வைத்தோம். அந்த ஆக்கத்தை படிக்க; http://amaibbukal.blogspot.com/2010/12/blog-post_08.html

அதில் நாம், அண்ணன் கூறுவது போன்று எந்த நீதிபதியும் அவ்வாறு  தீர்ப்பில் கூறவில்லை என்று நீதிபதிகளின் தீர்ப்பிலிருந்தே நாம் மேற்கோள் காட்டினோம். மேலும் அந்த இடத்தில் பள்ளிவாசல் இருந்தது இரு தொல்லியல்துறை கூறுவதையும் மேற்கோள் காட்டினோம். இதற்கு பொய்களை சொல்வதற்கு என்ற கொள்கையுடன் தலைப்பிலேயே பொய்யை கொண்டுள்ள பிளாக்கில், 'இலங்கையான்' என்ற பெயரில் ஒளிந்து வந்தவர்,

இதோ! நீதிபதி அண்ணன் கூறிய பிரகாரம் தீர்ப்பில் கூறியுள்ளார்  என்று காட்டிஇருக்கவேண்டும். அதோடு நாம்  கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கவேண்டும். இப்படி உருப்படியான பதிலை சொல்லாமல் நாம், அண்ணனின் எந்த வீடியோ லிங்கை பார்த்துவிட்டு கிழி கிழி என்று கிழித்தோமா  அதே வீடியோ லிங்கையே நமக்கு   பதிலாக தந்து 'இலங்கையான்' என்ற பெயரில் ஒளிந்துள்ளவர், தான் பீஜெயிடம் அடகு வைத்த மூளையை இன்னும் மீட்கவில்லை  என்று காட்டியுள்ளார்.

'இலங்கையான்' என்ற  பெயரில் ஒளிந்துள்ளவர் உண்மையில் மூளையுள்ளவராக இருந்தால் நாம் கேட்ட கீழ்கண்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும். இல்லையேல் கள்ளத்தோணி ஏறியாவது இலங்கை நோக்கி ஓடட்டும்.

நாம் வைத்த கேள்விகள்;

அண்ணனின்  வாதப்படியே நீதிபதிகள்  கூறினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியாயின், 

  • பாபர்  மஸ்ஜித் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று அண்ணனும் ஒத்துக் கொள்கிறாரா? அதனால்தான் இடத்த குற்றவாளிகள் மீதான நடவடிக்கை கோரிக்கையை புறம் தள்ளினாரா?
  • பாபர் மஸ்ஜித் அங்கு இருக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும் அண்ணன் அந்த இடத்திற்கு மட்டும் உரிமை கொண்டாடுவது எந்த அடிப்படையில்?
  • பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும்  அண்ணன், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு தனியாக நடந்து வருவது குறித்து என்ன சொல்கிறார்?
  • பாபர் மஸ்ஜிதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கூற்றின் படி, அத்வானி கும்பல் மீதான வழக்கு தள்ளுபடியாகாமல் இன்னும் கோர்ட்டில் நிற்பது எப்படி?
  • அலகாபாத் தீர்ப்பு மசூதி இடிப்பை நியாயப்படுத்தி விடாது என்று அண்ணன் ஓடிப்போய் பார்த்த சோனியாவும், அவரது அமைச்சர் சிதம்பரமும் சொன்னது குறித்து அண்ணனின் நிலை என்ன?
  • மசூதி இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று நீதிபதியின் கூற்றை வழிமொழியும் அண்ணன், இத்தனை ஆண்டு காலம் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு போராடியது தவறு என்று ஒத்துக்கொள்வாரா?
  • லிப்ரஹான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளை கைது செய் என்று இனிமேல் அண்ணன் முழங்க மாட்டாரா?
  • லிபரான் அறிக்கையை குப்பைக் கூடைக்கு அனுப்பி, குற்றவாளிகள் விடுதலைக்கும்  அண்ணன் குரல் கொடுப்பாரா?
  • இல்லை மசூதி இருந்தது; அதை அத்வானி கும்பல் இடித்தது என்பது அண்ணனின் நிலைப்பாடு என்றால், அத்வானி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படாதது ஏன்? மேலும், பாபர்  மஸ்ஜித் தீர்ப்புக்கு பின், குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோர முடியாத நிலை உள்ளது என்று பல்டியடித்து பின்வாங்கியது ஏன்?
  • அண்ணனின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, அண்ணன் வீட்டை ஒருவன் இடிக்க, அண்ணன் நீதிமன்றம் போக, நீதிபதி அந்த இடத்தில் எந்த வீடும் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று தீர்ப்பளித்தால் அண்ணன் அதற்கு பின் தனது வீட்டை இடித்த குற்றவாளியை கண்டுகொள்ள மாட்டாரா?
மேற்கண்டவைக்கு அவர் வியாக்கியானம் இன்றி நேரடியாக பதிலளிக்கவேண்டும்.

--
12/17/2010 04:28:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
__._,_.___
 

0 comments:

Post a Comment