Wednesday, December 1, 2010

தஃவா செய்வதற்கு பிஜெயை விட 100 மடங்கு மேலானவர் அப்துல் ஹமீது!


வ அலைக்கும் வஸ்ஸலாம்

சகோதரர் நளீம் இஸ்ஹாக்,

ஒரு தலைப்பட்சமான எண்ணங்களுடன் கருத்துக்களை பரிமாறும் உங்களுக்கு அல்லாஹ் நேர்வழியினை காட்டட்டும் என துஆச் செய்கின்றோம்.

“அவன்” “இவன்” “கிரிமினல்” என வாய்க்கு வந்த வார்த்தைகளை கொண்டு ஸஹாபாக்களை ஏசும் பிஜெ, அந்த ஆளு, இந்த ஆளு என கண்ணியமிக்க நபி முஸா (அலை) அவர்களை பேசும் பிஜெ.

இன்றைய சம கால இஸ்லாமிய அறிஞர்களை பட்டப் பெயர்களை சொல்லி கடுமையாக விமர்சிக்கும் பிஜெ. தஃவா செய்வதற்கு தகுதியானவராக கருதும் பொழுது, வேண்டும் என்றே ஒரு மனிதனை உசுப்பேற்றி அவர் கோபத்தை கிளிரி, அதனால் அறியாமல் பேசிவிட்ட விஷயங்களை மறைக்க வேண்டும் என்ற சாதாரண இஸ்லாமிய சிந்தனை கூட இல்லாமல் அதை தனது நெட்டில் போட்டு கேவலப்படுத்தும் பிஜெயை விட, என்ன உசுப்பேற்றப்பட்டாலும் கோபப்பட்டு இருக்க கூடாது என, தான் அறியாமல் செய்த பிழைக்கு உடனே பாதிக்கப்பட்ட சகோதரரிடம் மன்னிப்பு கேட்ட அப்துல் ஹமீது தஃவா செய்வதற்கு 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் பிஜெயை விட மேலானவர்.

இவர் பாக்கரை போல் உள்ளவர் என சொல்லி இருக்கிறீர்கள். அதனால் என்ன தவறு? எத்தனை மணிக்கு படுத்தாலும் சுபுஹ் தொழுகையை கூட பள்ளியில்தான் தொழுவேன் என செயல்படுத்தும் பாக்கரை போல் இவர் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆலிம்கள் மட்டும்தான் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆணவத்துடன் செயல்படுவோர் மத்தியில் தனக்கு தெரிந்து மார்க்கத்தை பிறருக்கும் எடுத்துச் சொல்லும் பாக்கர் போல் இருப்பதில் என்ன தவறு?

ஆதமுடைய மக்கள் தவறு செய்பவர்களே, அதில் யார் தான் செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறாரோ, அவரே சிறந்தவர் என்ற முறையில் தான் செய்த தவறை எவ்வித முகத்தாட்சணமும் இன்றி மன்னிப்பு கேட்ட சகோதரர் அப்துல் ஹமீது, தன்னுடைய இயக்கத் தலைவராக ஏற்று இருக்கும் பாக்கர் போல் உள்ளவர் என்பதில் அப்துல் ஹமீதுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியே.

இறையச்சமிக்க சகோதரர் பாக்கரை எங்களுக்கு தலைவராக தந்தமைக்கு இறைவனுக்கு நன்றயினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆ, ஊ என்றால் சீட்டிங், சீட்டிங் (ஏமாற்றுதல்) என கூக்குரல் இடும் சகோதரர் நளீம் இஸ்ஹாக் அவர்களே! ஒரு நபர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக நீதியிலிருந்து விலகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 4135)

உண்மைக்கு புறம்பான வார்த்தைகளை எங்கள் மீது அள்ளி வீசி நாளைய நிலையில் நஷ்டவாளிகாக தாங்கள் மாறிவிடாதீர்கள் என மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 :135)


0 comments:

Post a Comment