Tuesday, December 14, 2010

கலைஞர் குடும்பத்தின் 2G திருட்டும்! பொய்.ஜே. குடும்பத்தின் INTJ திருட்டும்!


செம்மொழி மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு எஸ்.எம்.எஸ். வலம் வந்தது!
அதை தற்போது spectrum ஊழலுக்கும் பொருந்துவதால் மீண்டும் மறு பதிவு செய்கிறோம் !

வாழ்க ஜனநாயகம்
தந்தை - முதல்வர்
இளைய மகன் - துணை முதல்வர்
மூத்த மகன் - மத்திய மந்திரி
மகள் - நாடாளுமன்ற உறுப்பினர்
மருமகன்- மத்திய மந்திரி
பேரன் - மத்திய மந்திரி
இந்தியன் - இளிச்சவாயன்

2G ஊழலால் நாட்டுக்கு இழப்பு
176000 கோடி, நாடாளுமன்றம்
23 நாள் முடங்கியதில் இழப்பு
அரசின் பணம் 146 கோடி விரயம்
அதை பார்த்த நமக்கு தோன்றியது.

வாழ்க ஏகத்துவம்
தந்தைக்கு - எடிட்டிங்
மகனுக்கு - ரிக்கார்டிங்
1. மைத்துனருக்கு - பிரிண்டிங்
2. மைத்துனருக்கு - பப்ளிசிங்
தம்பிக்கு - சம்பளம் + ஏஜென்ஸி.
TNTJ தொண்டன் - இளிச்சவாயன்

தற்போது தொண்டர்களை நம்பாமல்
ஒட்டு மொத்த குடும்பத்தின் பெயரில்
இந்திய தவ்ஹீத் ஜமாத்தை பதிவு செய்து
அதன் பெயரில் ஜமாஅத் சொத்துக்களை
தன் குடும்ப சொத்தாக்கி, கோர்ட்டில்
லட்சக்கணக்கில் மக்கள் பணம் விரயம் !

நாடு முழுவதும் இன்றைக்கு கருணாநிதியின் குடும்ப அரசியலும் , அந்த குடும்ப அரசியலின் காரணமாக கொள்ளை போன நம் நாட்டின் மிகப் பெரிய வளமான , ஸ்பெக்ட்ரம் ஊழலும் பேசப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் , கருணாநிதிக்கு சற்றும் குறைந்தவரில்லை அண்ணன் என்பதை இந்த ஒப்பீட்டின் மூலம் அறியலாம் !

தங்கள் குடும்பத்தினரை அரசிலோ, நிர்வாகங்களிலோ திணிப்பதை அதன் மூலம் பலன் பெறுவதை நல்லமனிதர்கள் யாரும் விரும்பமாட்டார்கள் ! நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு ஒரு அடிமையை உதவியாக கேட்ட பாத்திமா (ரலி) அவர்களுக்கு அடிமையை வழங்காமல் தஸ்பீஹ் கற்றுத்தந்த ஹதீஸிலும், பைத்துல் மாலுக்கு சொந்தமான பேரிச்சம்பழத்தை வாயில் போட்ட பேரனை சிறுவர் என்றும் பார்க்காமல். வாய்க்குள் கைவிட்டு துப்பச் சொன்ன ஹதீஸையும், தந்தைக்கு சொந்தமான நிலத்தை, தனக்கு பாத்திமா (ரலி) கேட்ட போது கலிபா அபுபக்கர் (ரலி) மறுத்த சம்பவத்தையும், ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உமர் (ரலி) தன் மகனை தள்ளிவைத்த சம்பவத்தையும் நமக்கு சொன்னவர்கள் மற்றும் நாங்கள் தான் நபி வழியில் நடக்கிறோம் என்று சொல்பவர்களின் குடும்ப கொள்ளையை பார்த்து இன்று ஊர் சிரிக்கிறது. தற்போது இந்திய தவ்ஹீத் ஜமாத்தை தன் குடும்பத்தார் பெயரில் பதிவு செய்ததை பார்த்து உலகமே சிரிக்கிறது!

உணர்வு பத்திரிக்கையில் சம்பளமும் பெற்றுக் கொண்டு அதை பிரிண்ட் செய்யும் ஏஜென்ஸியும் யாருக்கு தெரியுமா ? ஜூம்மா கூட தொழாத தம்பிக்கு ! சாதாரண அரசு அலுவலர் கூட அரசின் திட்டங்களின் குத்தகை பணி எடுக்க கூடாது என்பது நடத்தை விதி ! இதைக் கூட பின்பற்றாத இவர்கள் ஏகத்துவாதிகளாம். உணர்வின் நஷ்டத்தை ஜமாஅத் ஏற்று கொள்ளுமாம்! லாபத்தை குடும்பம் கொள்ளை அடிக்குமாம்.

மைத்துனர்கள் குறைந்த அளவு கொட்டேஷன் கொடுத்தார்களாம் எப்போது அறிவிப்பு செய்து ஏலம் விட்டீர்கள் ! தங்களின் தொலை காட்சி நிகழ்சிகளில் வரும் மூன் பப்ளிகேஷன் விளம்பரத்திற்கும் காலண்டர் மற்றும் குடும்ப நிறுவனங்களின் விளம்பரத்திற்கு என்றைக்காவது காசு கொடுத்ததுண்டா ?
5 வருட கணக்கை காட்டத் தயாரா என நாம் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை ! சாதாரண கிளை நிகழ்ச்சி விளம்பரதிற்கேல்லாம் காசை கறாராக கேட்டு வாங்கும் நிர்வாகம் , ஜமாத்தின் பணத்தில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் உணர்வு போன்ற பத்திரிக்கைகளிலும் குடும்ப வியாபார நிறுவனங்களான, சன், மூன் விளம்பரத்திற்கு பணம் வசூலிக்காதது ஏன் ? பொய் .ஜே.வின் மைத்துனர்கள் ஜமாஅத் பெயரில் காலேண்டர் போட்டு சம்பாதித்ததும் , அதை தவறு என போது செயலாளர் ஒத்துக்கொண்டதும் உண்மை இல்லையா? ஆனால் குடும்ப வியாபாரம் இன்றும் கொடி கட்டி பறந்து கொண்டுதான் இருக்கிறது! எல்லாவற்றையும் ஏகத்துவத்திற்காக ஏற்றுக் கொண்ட ஒரு தக்லீது கூட்டம் இருக்கும் வரை குடும்ப வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும்.

0 comments:

Post a Comment