Tuesday, December 14, 2010

கோவை மாவட்ட செயற்குழு.

கோவை மாவட்ட செயற்குழு.

கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் உக்கடம் பகுதி ஜி.எம் நகரில் சென்ற (12.12.2010) ஞாயிறன்று மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைப் பெற்றது.

மாவட்டச் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொருளாளர் அபூபக்கர் (எ) தொண்டியப்பா, மாநிலச் செயலாளர் கோவை ஜஅஃபர், மாநிலப் பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மிக உற்சாகத்துடன் காலை 10 மணிக்கு துவங்கிய பொதுக்குழுவில் மாவட்டச் செயல்பாடுகளை எவ்வாறு முடுக்கி விடுவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்ன? என ஆலோசனை செய்யப்பட்டது.

மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் கடந்த மாத செயல்பாடுகளை விவரித்தார். முன்னதாக அப்துல் காதர் மன்பஈ, பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ன என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அழகிய உரை ஒன்றை நடத்தினர்.

கோவை மாநகர், கவுண்டம் பாளையம், குனிசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய மண்டலங்களில் இருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தொண்டியப்பா, தற்பொழுது அமைப்பின் பெயர் சம்பந்தமான வழக்குகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கோவை ஜஅஃபர், எதிர்காலத்தில் மாவட்ட செயல்பாடுகளை எப்படி செயல்படுத்துவது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக நபிவழிப்படி ஜி.எம் நகர் கிளை பொறுப்பாளர் அப்துல் மனாஃப் அவர்களுக்கு தொண்டியப்பா தலைமையில் திருமணம் நடத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளர் உமர் ஃபாரூக், மாவட்டத் துணைத் தலைவர் நாசர் உள்ளிட்ட சகோதரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாட்டினைச் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment