Wednesday, December 8, 2010

இராமாநாதபுரத்தில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்டம்!

இராமாநாதபுரத்தில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்டம்!

சமுதாயப் பணிகளை வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்லும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் நேற்று (06-12-2010) கொட்டும் மழைக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நடைபெற்றது.


நேற்று மாலை 4 மணியளவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட நிர்வாகிகள் ஹாஜா, நாசர், ரைஸுதீன் உட்பட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பாபரி மஸ்ஜித் மீட்பு கோஷங்களை முழுங்கினர்.

கண்டன சிறப்புரையை மாநிலப் பொருளாளர் அபூபக்கர் ஸாஹிப் (எ) தொண்டியப்பா அவர்கள், ஆற்றினார்.

அவர் தனது உரையில், பாபரி மஸ்ஜித்தின் நிலத்தை மீட்கும் வரை ஓயமாட்டோம். அதன் ஒரு இன்ச் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார். பாபரி பள்ளி மீட்கும் வரை போராட்டம் தொடரும், முடிந்தால் அயோத்தி செல்லவும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல், தனது உரையில் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை வன்மையாக கண்டித்தார். ஏகத்துவத்தை நிலை நாட்டும் ஆலயமான பள்ளிவாசல்களை இடித்த கயவர்களை கண்டிக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு மாற்று மத சகோதரர் முன் வந்தாலும் ஆதரிக்க வேண்டிய நாம், இன்று நம் சமுதாயத்தின் துரோகியால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற விடாமல் தடுக்கப்படுகிறது என்றும், தன் சுயநலத்திற்காக S.P.பட்டிணம் பள்ளியினை மூடிய சதிக்காரர்கள் நம் அமைப்பின் பெயரை திருடுவதோடு, நம் இறையில்லம் மீட்க எடுக்கும் நடவடிக்கைக்கு முற்றுகை இடுவது சரியா என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

அதனையடுத்து, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் கமால் நாசர், தீர்மானங்களை வாசித்தார். இறுதியாக மாவட்டப் பொருளாளர் ஹாஜா நன்றியுரை வழங்கினார்.

சித்தீக் உள்ளிட்ட சகோதரர்கள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்

0 comments:

Post a Comment