Monday, December 6, 2010

தடைகளை தகர்த்து தஞ்சையில் டிசம்பர் ஆறு போராட்டம்!





தடைகளை தகர்த்து தஞ்சையில் டிசம்பர் ஆறு போராட்டம் நடைபெற்றது ! இ.த.ஜ. பெயரை திருட்டு தனமாக தன் குடும்பபெயரில் பதிவு செய்து குழப்பம் ஏற்படுத்தி வரும் பி.ஜே.வின் அவரது அபகரிப்பு ஜமாஅதினரும் , ஆர்.எஸ்.எஸ்..சங் பரிவாரங்கள் கூட செய்திராத வேலையை செய்தனர்.


தமிழகம் முழுதும் நம்முடைய டிசம்பர் ஆறு போராட்டங்களை தடுக்க காவல் துறையினரிடம் ,அனைத்து இடங்களிலும் , கடைசி நேரத்தில் உயர்நீதி மன்ற உத்தரவை காட்டி , நம்முடைய போராட்டங்களை தடுக்குமாறு எழுத்து பூர்வ புகார் அளித்து தங்களை யார் என அடையாளப்படுத்தி கொண்டனர். .

ஆனால் பெரும்பாலான இடங்களில் காவல் துறையினர் இவர்களது புகாரை மதிக்கவில்லை என்ற போதும், திருச்சி, தஞ்சை போன்ற சில இடங்களில் அனுமதி மறுத்தனர். தடையை மீறி நடத்துவோம் வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள்.' என நம் சகோதரர்கள் உறுதியோடு நின்றதையடுத்து, 'பாபர் மஸ்ஜித் போராட்டத்தை தடுக்க உங்கள் மீதே புகார் அளிக்க தயங்காத இவர்கள் நாளை எங்கள் மீது உயர் நீதிமன்ற வழக்கு தொடர அஞ்ச மாட்டார்கள். ஆகையால் கொடியையோ , பெயரையோ பயன்படுத்த வேண்டாம் ! என கூறி கெடுபிடி செய்தனர்.

'அல்லாஹ்வுக்காக போராட்டம் நடத்த எங்களுக்கு கொடியோ ,பெயரோ தேவை இல்லை'
என சூதுமதியாளரின் சூழ்ச்சியை முறியடித்து அல்லாஹ்வின் அருளால் சிறப்பான முறையில் போராட்டம் நடை பெற்றது! ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் திரளான அளவில் பங்கேற்று அநீதிக்கு எதிரான கோஷங்களை முழங்கினர்.மாவட்ட தலைவர் சாஜித் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநில செயலாளர் அபு ஆசியா கண்டன உரை நிகழ்த்த , மாவட்ட செயலர் முபீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

0 comments:

Post a Comment