Friday, December 17, 2010

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது 20% ஆக குறைந்தது!


                                                                       unicefs.jpg

சென்னையில்தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மணி நேரத்தில், தாய்ப்பால் தர வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் உணர வேண்டும் என, யுனிசெப் அமைப்பின் உணவியல் நிபுணர் மீனாட்சி மெஹார் பேசினார்.
இது குறித்து மீனாட்சி மெஹார் பேசியபோது தாய்ப்பாலில் 70 சதவீதம் நீர் உள்ளதால், பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறு, கிருமிதொற்று உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். கடந்த ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கைபடி, தமிழகத்தில் முதல் ஆறு மாதம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் தருவோர் எண்ணிக்கை, 2006ம் ஆண்டை ஒப்பிடும்போது, 39 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு 1.5 வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவற்றின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில், குழந்தைகளுக்கு தரப்படும் தாய்ப்பாலில், "கொலோஸ்ட்ரம்' எனும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய வேதிப்பொருள் உள்ளது. இதை தருவதால், குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமான அளவு குறைக்கலாம். தற்போது 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இவ்வழிமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்களும், செவிலியர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். என்று மீனாட்சி மெஹார் கூறினார்.
தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவர் சல்மா பேசும்போது, குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை தடுக்கவும், இயற்கை கருத்தடை முறைக்கும், தாய்ப்பால் தருவது அவசியம். மேலைநாடுகளில் இதன் அவசியம் உணரப்படும் நிலையில், நம் நாட்டில் இதன் முக்கியத்துவம் குறைந்து வருவது வருந்தத்தக்கது  என்றார்.

தாய்ப்பால் பற்றி  குர்ஆனின் : சிறப்புகுரனிகுர்ஆனின் முன்னறிவிப்புகள்ன் முன்னறிவிப்புகள்சிறப்பும்சிறப் 
குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். AL-QURAN;2:233.

-- 
Thanks&Regards

 M.NOORULAMEEN                              
 cell;9787332923                                                

0 comments:

Post a Comment