Sunday, December 19, 2010

அமெரிக்கவால் பரிசளிக்கப்படும் அவமானங்களும்; அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் இந்தியாவும்!


ஹர்தீப்  பூரி                                                        மீரா சங்கர்                     
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
உலக பயங்கரவாதி அமெரிக்காவின் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால்
தொடர்ந்து இழிவை சந்தித்து வருகிறது இந்தியா. இதற்கு  எதிராக இதுவரையில்
உருப்படியான எந்த நடவடிக்கையையும் இந்தியா எடுத்ததாக தெரியவில்லை. எனவே
தான் இந்தியாவுக்கு எதிரான இந்த இழிநிலை தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்தியாவை
பொருத்தமட்டில் அமெரிக்காவை தனது நேச நாடாகவே கருதுகிறது.அமெரிக்காவோ
தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு  நாடாகவே இந்தியாவை கருதுகிறது. அதை அவ்வபொழுது நிரூபித்தும் வருகிறது.
 
ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, விமான நிலையங்களில் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அந்த சோதனையை வேதனையாக்குவது அமெரிக்காவின் பணியாகும். அமெரிக்கவின் இத்தகைய சோதனைக்கு இலக்கானார் முன்னாள்  இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம்  அவர்கள். அப்போதே இந்திய அரசு கொதித்தெழுந்து அமெரிக்காவை கண்டித்திருந்தால் தொடர் அவமானங்கள்  தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அதிகபட்சமாக நமது நாடு மேற்கொள்ளும் நடவடிகை என்பது, இந்தியாவில் உள்ள அமெரிக்கா துணைத்தூதரக அதிகாரியை அழைத்து கண்டிப்பது மட்டுமே! அப்துல்கலாம் அவர்களை செய்தது போன்ற சோதனையை, அமெரிக்கா  முன்னாள் ஜனாதிபதி  பில்கிளிண்டனோ அல்லது புஷ்ஷோ வரும்போது நாம் செய்திருந்தால் அமெரிக்கா வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருக்காதா?
 
அடுத்து முன்னாள் அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், நடிகர் ஷாரூக்கான், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இதுபோன்ற இழிவுக்கு அமெரிக்கவால் உட்படுத்தப்பட்டனர். அவர்களாவது பிரமுகர்கள்தான். ஆனால் அமெரிக்காவாழ் அங்கீகரிக்கப்பட்ட இந்திய தூதராக அதிகாரிகளையே சோதனைக்கு உட்படுத்துவது ஆதிக்கத்தின் உச்சகட்டம் என்றால் மிகையில்லை. பொதுவாக தூதராக  அதிகாரிகளுக்கு விமான நிலையங்களில் தனி வரிசை ஏற்படுத்தி சோதிப்பதுதான்  உலக நடைமுறை.
 
ஆனால் அமெரிக்காவோ, சட்டம் எல்லாம் அடுத்தவருக்குத்தான்; தனக்கில்லை என்ற ரீதியில் செயல்படுவதை அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கும், ஐநாவுக்கான இந்தியப் பிரதிநிக்கும் இழைக்கப்பட்ட அவமானங்கள் உலகுக்கு உணர்த்தும் வகையில் உள்ளன.
 
டிசம்பர் 4ம் தேதி அமெரிக்காவின் “மிஸ்ஸிப்பியின் ஜாக்சன் எவர்ட்ஸ்”
சர்வதேச விமான நிலையத்தில்,பால்டிமோர் செல்வதற்காக விமானத்தில் ஏற
காத்திருந்தார் மீரா சங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலையில் அவர்
சென்றிருந்தார்.
பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் அவர் காத்திருந்தபோது திடீரென வந்த
பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து தான்
இந்தியத் தூதர் என்று மீரா சங்கர் கூறியுள்ளார். ஆனால் அதை அதிகாரிகள்
காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவரை தனி அறைக்குக்குக் கூட்டிச்
சென்றனர். அங்கு பெண் அதிகாரிகள் உடல் முழுவதையும் கைகளால் சோதனை செய்து
மீரா சங்கரை இழிவு படுத்தினர்.
கோபமடைந்த மீரா சங்கர் தான் ஒரு இந்திய தூதர் தான் என்பதை மீண்டும் கூறி
அதற்க்கான ஆவணங்களையல்லாம் அந்த அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார் .ஆனாலும்
சேலை கட்டி வந்ததால் சோதனை செய்தே ஆகவேண்டும் என்று கூறி சோதனை செய்து
உள்ளனர்.

புதிதாக அமெரிக்காவால் இழிவு படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ந்து
உள்ளவர்,ஐ.,நா.,வுக்கான இந்தியாவின் பிரதிநிதி  ஹர்தீப் பூரி ஆவார். இவர் இரண்டு
வாரங்களுக்கு முன், அமெரிக்காவுக்குச் சென்ற போது, ஹூஸ்டன் விமான
நிலையத்தில் அவரது தலைப்பாகையான டர்பனை கழற்ற வேண்டும் என்று அமெரிக்க
விமான நிலைய அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். இதற்க்கு அவர் பலத்த
எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஹர்தீப் பூரியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும்  அவருடைய தலைபாகை
கழற்றி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கும் மேலாக காக்கவைத்து
அவமதித்து உள்ளனர். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம், தன் கவலையை
அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளது. இதோடு நிறுத்திகொள்ளாமல், இதையும் உரிய
முறையில் இந்தியா எதிர்கொள்ளவில்லையன்றால் இந்த இழிவுகள் நீடிக்கும்
என்பதில் ஐயம் இல்லை.
 
அதே நேரத்தில் அமெரிக்காவின் இந்த அவமானங்களை  கண்டிக்கிறோம் என்ற பெயரில் தினமணி முஸ்லிம்களை லேசாக சீண்டியுள்ளது.
''நமக்குத் தெரிந்து இதுவரை எந்த வளைகுடா நாட்டு  ஷேக்குகளின் மனைவியரையும்  அவர்களது பர்தாவை அவிழ்த்து அமெரிக்க  அதிகாரிகள் சோதனையிட்டதாகவோ, சோதனையிட நினைத்ததாகவோ  கூட நினைவில்லை. அப்படி  ஏதாவது அதிகாரி முனைந்திருந்தால், அடுத்த நொடியே பென்டகனும், வெள்ளை மாளிகையும், காப்பிடல்  ஹில்சும் அலறித் துடித்திருக்கும்'' என்று தினமணி விஷம் கக்குகிறது.
 
இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமெரிக்காவால் அவமானப் படுத்தப்பட்டால் அதற்காக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்கவேண்டும். கொடுக்கிறோம். ஆனால் அதற்காக, ''இந்திய பிரதிநிதியின் சேலையை அவிழ்க்கச்சொன்ன அமெரிக்காவே! அரபு ஷேக்குகளின் மனைவியரின் பர்தாவை அவிழ்க்காதது  ஏன்? 
என கூப்பாடு போடுவது, தினமணியின்  மனதில் மறைந்திருக்கும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடன்றி வேறில்லை. மேலும் பர்தாவை அவிழ்த்திருந்தால் பென்டகன் பதறியிருக்கும் என்பது உண்மைதான். ஏனெனில் அரபு ஷேக்குகள் வாய்மூடி இருந்தாலும், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கொந்தளிப்போம். எனவே தினமணி சந்தடி சாக்கில் தனது 'சரக்கை' நுழைக்கவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிக்கொள்கிறோம்.
 
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்



0 comments:

Post a Comment