Friday, December 3, 2010

பஞ்ச் பட்டிக்காட்டான்[10] just 4 jokes



























இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து; தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்''
பஞ்ச் பட்டிக்காட்டான்; பீகாருல தனிச்சு போட்டியிட்டு எத்தனை சீட்டு ஜெயிச்சீங்க? வேற எந்த தைரியத்துல இப்பிடி 'தனிச்சு'ன்னு சொல்றீங்கன்னு தெரியலையே?
செய்தி;கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழில் தயாரிக்கப்பட உள்ள பக்தி திரைப்படத்தில் நடிக்கிறார்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு முதலமைச்சரா இருந்துகிட்டு, ஒரு சினிமாவுக்கு கதை-வசனம் எழுதாம, மகன் அல்லது பேரன் மூலமா படம் தயாரிக்காம; கலை உலக பாராட்டு விழா என்ற பெயரில் குத்தாட்டங்களை கண்டுகழிக்காம; வெறும் ஆட்சிய மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா எப்பிடி. இப்பவாவது சினிமாவுல சங்கமிச்சு முதல்வருக்கு உரிய தகுதிய அடையணும்னு[!] தோனுச்சே!
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு கோர்ட் கண்டனம்; பிரதமரின் ஆலோசனையை ஒதுக்கியது முறையான செயலாகப் படவில்லை. ஒதுக்கியது என்பதைவிட அவமதிப்பு என்பதுதான் சரியாக இருக்கும். பிரதமர் தெரிவித்த யோசனைக்கு மரியாதை தரப்படவில்லை. நாட்டின் உயரிய பதவி வகிக்கும், பிரதமருக்கே இந்த நிலை என்றால், இதன் மூலம் அரசு இயந்திரத்திற்கு எவ்வளவு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; என் பேச்சை யாருமே கேக்குறதில்லைன்னு கோர்ட் இப்பிடி பகிரங்கமா போட்டு உடைச்சுருச்சே என்று பிரதமர் மன்மோகன் சிங் எங்கோ புலம்புற சத்தம் கேட்குறமாதிரி இருக்கு.
செய்தி; ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; தமிழ் நாட்டுல 'சூரியக் குடும்பம்'தான் எல்லா துறையையும் ஆக்கிரமிச்சு உரிமை கொண்டாடுறதா ஒரு பேச்சு; ஆனா இந்தம்மா அந்த சூரியனுக்கே உரிமை கொண்டாடுதே! இது எதிர்கட்சியின் சதி என்று முதல்வர் சொன்னாலும் சொல்லலாம்.
ஜனதா கட்சி தலைவர் சு.சாமி; சட்டமன்றத்தேர்தலில் தனித்துப் போட்டியா? கூட்டணியா என்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு.
பஞ்ச் பட்டிகாட்டான்; கற்பனை உலகத்துல வாழறதா கேள்விப்பட்டிருக்கோம். இல்லாத நிர்வாகத்த இருக்கிறமாதிரி நெனச்சு அதை நீங்க நிதர்சனமா காட்டிட்டீங்க சாமி.
இல.கணேசன்; தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடித்துவிடுமோ என்ற பயம் திமுகவுக்கு உள்ளது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா கணேசன் அய்யா! போறபோக்க பாத்தா அமெரிக்காவுல கூட பாஜக ஆட்சியப் பிடிக்கும்னு சொல்வீங்க போல.

-முகவை அப்பாஸ்

0 comments:

Post a Comment