Saturday, December 18, 2010

டிரஸ்ட் விசயத்தில் பி.ஜே.வின் இரட்டை வேடம்! - இப்னு அப்துல் காதர்,


ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியப்பட்ட தமுமுகவுக்கு பிஜெ அமைப்பாளராக இருந்து மக்களை ஏமாற்றினாரா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நேற்று என் மெயிலுக்கு சகோதரர் கீழை ஜமீல் அவர்கள் TMB குழுமம் மூலம் அனுப்பிய செய்தி கண்டேன். அதில் அவர் கேட்ட நியாயமான கேள்விக்கு இதுவரை TNTJகாரர்கள் பதில் தராமல் ஏதோ ஏதோ சொல்கிறார்கள்.
சகோதரர் பாக்கர் அவர்கள் மக்களை ஏமாற்றத்தான் அவரும், அவரது சகாக்காளும் தொடங்கிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதிவு செய்து விட்டார் என கூப்பாடு போடும் பிஜெயும், அவரது சொல் கேட்டு ஆடும் ததஜ சகோதரர்களும் சகோதரர் கீழை ஜமீல் அவர்கள் கேட்டுள்ள இந்த கேள்விக்கு பதில் அளிக்கட்டும்.
பிஜெயை அமைப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமுமுகவும் இப்போதும் ட்ரஸ்ட் ஆக்ட்டில்தான் இருக்கிறது. அதிலிருந்து பிரியும் வரை அது குறித்து வாய் திறக்காதவர்கள். அதே பாணியை பின்பற்றி இதஜ ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியும் செய்தப் பொழுது மட்டும் கள்ளத்தனமா? மறுமையை முன்னிறுத்தி சகோதரர் அவர்கள் சிந்தித்தால் சரி.
ஏன் இப்போதும் தமுமுக ட்ரஸ்ட் ஆக்ட்டில்தான் செயல்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன். அவர்களும், கடந்த 16 வருடமாக பலவிதமான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை, மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். சகோதரர் பிஜெயின் பங்களிப்பில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு, தஞ்சை மாநாடு என எத்தனையோ மாநாடுகள் நடைபெற்றதேஅப்போது வாய் திறக்காத பிஜெ அவர்கள் இப்போது திறப்பது பட்டவர்தனமாக சந்தர்ப்பவாதம் இல்லையா?
தனக்கு பிடித்தால் அது அரசு ஏட்டில் பதியாவிட்டாலும் தவறு இல்லை. தனக்கு பிடிக்கவில்லை என்றால் ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியப்படுள்ளது என்பதா? இது பிஜெ அவர்களின் இரட்டை முகத்தை காட்டுகிறது. 
அல்லாஹ்வையும் ரசூலுலையும் ஈமான் கொண்டவர்கள், இது விசயமாக அவரை கடுமையாக கண்டிக்க வேண்டும்.இல்லாவிட்டால் நாளைய மறுமையில் நிச்சயமாக அல்லாஹ்விடம் பிஜெ மட்டும் அல்ல, பிஜெயின் இந்த அநியாயத்திற்கு யாரெல்லாம் துணைப் போனார்களோ அவர்களும் பதில் சொல்ல வேண்டும்.
-இப்னு அப்துல் காதர், சென்னை-1.
.

0 comments:

Post a Comment