Friday, December 17, 2010

தவ்ஹீத்'யிசமா..? தாதாயிசமா?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

'பிளாக்மெயில்' எனப்படும் மிரட்டல்கள் பல வகைப்படும். யாரையேனும் கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுதல், தனது உடல்வலிமையை காட்டி மிரட்டுதல், ஆயதங்களை  காட்டி மிரட்டுதல், ஒருவரின் பலவீனத்தை படம்பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் மிரட்டுதல் இவ்வாறான மிரட்டல்கள் உலகில் அயோக்கியர்களால் செய்யப்பட்டு வருவதை காண்கிறோம்.

ஆனால் தவ்ஹீத் என்ற பெயரில் தாதாயிசம் செய்த 'கொள்கை குன்றுகள்' கதை உங்களுக்கு தெரியுமா?

இலங்கையை சேர்ந்தவர் மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன். மிகச்சிறந்த இளம் மார்க்க அறிஞர். தவ்ஹீத் கொள்கையின் பால் மக்களை அழைக்கும் பிரபல பேச்சாளர். ஜமாலியிடம் அண்ணனே விவாதத்தில் சமாளித்துதான் கரையேறவேண்டியுள்ள  நிலையில், அந்த ஜமாலியை, 'இறந்தவர்களுக்கு கத்தமுல் குர்'ஆன் ஓதலாமா? என்ற தலைப்பில் விவாதத்தில் எதிர்கொண்டு,'உயிரோடு உள்ளவர்களுக்கும் கத்தமுல் குர்'ஆன் ஓதலாம் என்று ஜமாலியே உளறிக்கொட்டி ஓட்டம் எடுக்கும் அளவுக்கு விவாதத்தில் வெற்றி கண்டவர். இவையெல்லாவற்றிற்கும் மேலாக பீஜேயை மானசீகமாக மிகவும் மதிப்பவர்.

அப்படிப்பட்ட மவ்லவி முஜாஹித் செய்த தவறு என்ன தெரியுமா? அண்ணனின் சில மசாயில்களுக்கு எதிரான கருத்தை  மக்கள் முன் வைத்ததுதான். விடுவாரா அண்ணன்.? சுழற்றினார் சாட்டையை அண்ணனின் இலங்கை பிரிவான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை  நோக்கி! முஜாஹிதுக்கு மூக்கணாங்கயிறு போடுகிறீர்களா இல்லையா என்று!

எஸ்.எல்.டி.ஜே. முஜாஹிதிற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுத, அதற்கு பதிலளித்த முஜாஹித் மவ்லவியின்  கடிதம் அண்ணனுக்கு  அனுப்பப்பட்டு, அதில் திருப்தியுறாத அண்ணன் ஒரு கட்டத்தில் எஸ்.எல்.டி.ஜெயை ஓரங்கட்டிவிட்டு,  தனது இந்திய தூதர்களை[?] அனுப்பி டி .என்.டி.ஜே. இலங்கை கிளை என்று கடை திறந்தார். எல்.எல்.டி.ஜெயை புறக்கணித்து புதிதாக திறந்த கடை சோபிக்காததால், மீண்டும் புதுக்கதையை மூடிவிட்டு, மீண்டும் எஸ்.எல்.டி.ஜெயை தனது ஆக்டோபஸ் கரத்தால் அரவணைத்துக் கொண்டார் என்பது தனிக்கதை.

எஸ்.எல்.டி.ஜெயின் அழைப்பாளராக இருந்த முஜாஹித் தனித்து விடப்பட்டார். அவருக்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்கள் அண்ணன் ஆதரவோடு  அணிவகுத்தது.

  • முஜாஹித்  இவர் ஒரு ஷைத்தான் இவரை சந்திக்க எனக்கு விருப்பமில்லை
  • -உலக பித்னாவில் இவர் முதலானவர்
  • -அந்த மாதிரி நடிப்பார்
  • -இந்தியாவிற்கு வந்து பித்னா பண்னும் வேலையைத்தான் பார்த்தார்.
  • முஜாஹிதிற்கு நிகரான கேவலமான ஒருவர் இந்த உம்மத்திலேயே கிடையாது
இவ்வாறாக அணிவகுத்தன அண்ணின் விமர்சனங்கள். அதோடு அவருக்கு எதிராக சூழ்ச்சி வலையும் பின்னப்பட்டது.
 
அண்ணனின் இலங்கைகிளையை சேர்ந்த ஒருவர் முஜாஹித் அவர்களை தொடர்பு  கொண்டு பெண் குரலில் மயக்கும் வகையில் பேச, ஷைத்தானின் தூண்டுதலுக்கு இலக்கான   முஜாஹித் அவர்களும், சூழ்ச்சி  அறியாமல் பெண் என நினைத்து மோசமாக பதில் அளித்து பேச, முஜாஹித் அவர்களிடம் பேசியதை பதிவு செய்து, அதைக்காட்டி  இனிமேல் நீங்கள்   தாஃவா செய்யக்கூடாது என்று முஜாஹிதிடம் 'பிளாக்மெயில்' ஒப்பந்தம் செய்கிறது அண்ணனின் வழிநடக்கும் இலங்கை  கிளை.  
 
இதற்கு பெயர் என்ன  சகோதர்களே! 'பிளாக்மெயில்' இல்லையா? ஒரு பெண் பாத்ரூமில் குளிப்பதை மொபைலில் படம் எடுத்து வைத்துக் கொண்டு அப்பெண்ணை பாலியலுக்கு அழைத்ததாக அண்ணன் ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட கதை மேலப்பாளையத்தில் நடந்ததே! அதைப்போல, மவ்லவி முஜாஹிதை பெண் குரலில் பேசி மயக்கி, பதிவு செய்து வைத்துக்கொண்டு, அவரை அழைப்புப் பணி  செய்யக்கூடாது  என்று மிரட்டி ஒப்பந்தம் எடுப்பது தவ்ஹீத்யிசமா ? அல்லது தாதாயிசமா..? சிந்திக்கவேண்டுகிறோம்.
 
மேலும் மவ்லவி முஜாஹித் தானாக ஒரு பெண்ணிற்கு போன் செய்து அப்படி பேசவில்லை. மாறாக திட்டமிட்டு அவரது தாஃவாவை முடக்கும் நோக்கில் செயல்படுவதுதான் தவ்ஹீத்யிசமா? இதுதான் நேர்வழியில் செல்கிறோம் என்றும், சொர்க்கத்துக்குரிய ஒரே ஜமாஅத் என்றும் பீற்றிக்கொள்ளும் அண்ணன் ஜமாஅத்தின் அழைப்புப்  பனியா?
 
சரி! இது இலங்கையில் நடந்தது. இதில் பொய் அண்ணனை ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அண்ணனுக்கு இதில் சமந்தம் உள்ளது. எப்படி  எனில், மவ்லவி முஜாஹித் அவர்களிடம் பெண் குரலில் பேசி பதிவு செய்யப்பட்ட சீடியும், முஜாஹிதிடம் எடுக்கப்பட்ட மிரட்டல் ஒப்பந்தமும் அண்ணனுக்கு, இலங்கை  கிளை மூலம் அனுப்பப்படுகிறது. ஒரு தவ்ஹீத்  அறிஞரான, நாடறிந்த நாவலரான அண்ணன் அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?
 
''முஜாஹித் தானாக அந்த தவறை செய்யவில்லை; அவரை அந்த தவறை செய்யுமாறு நீங்கள் தூண்டியுள்ளீர்கள். அதோடு அதை பதிவு செய்து அதை வைத்து அவர் தாஃவா செய்யக்ககூடாது என்று மிரட்டுவது தவறு. அதுமட்டுமன்றி செய்வதையும் செய்துவிட்டு வெட்கமில்லாமல் அந்த சீடியை எனக்கு வேறு அனுப்பியுள்ளீர்களா? உடனே உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு நான்  பரிந்துரைக்கிறேன் என்று அண்ணன் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.
 
'தானா வந்து மாட்றாங்கய்யா' என்று அந்த சீடியை பார்த்து[கேட்டு] ரசிக்கிறார். அதை பாதுகாத்தும் வைத்துக் கொள்கிறார். [இது முஜாஹிதீன் வாக்குமூலம் மூலமாக அறியமுடிகிறது] பின்பு சுமார்  ஆறு மாதம்  கழித்து அழைப்புப்பணியை தொடங்கிய மவ்லவி  முஜாஹித், பீஜேயுடன் முரண்பட்ட மசாயில்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு தயார் என்று பேச, 'பீஜேயுடன் விவாதத்திற்கு தயார் என்று முஜாஹித் பேசுகிறார் என்று அண்ணனிடம் அவரது ரசிகர் பற்றவைக்க பொங்கி எழுந்த பீஜே தனது இணையதளத்தில்,
 
இப்போது அவர் மிக மிக அசிங்கமான செயலில் ஈடுபட்டு இனிமேல் தஃவா செய்யக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் குறித்த குறுந்தகடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடைப்பதற்கே விவாத அழைப்பு” என்று எழுதி தன்னை தற்காத்துக்கொண்டு முஜாஹித் மானத்தை ஏலம் விட்டார்.
 
இதன் மூலம் முஸ்லிம்களின்  சிந்தனைக்கு, குறிப்பாக அண்ணனை கண்மூடி பின்பற்றும் சகோதர்களின் சிந்தனைக்கும்;
 
  • ஒருவர் தானாக ஒரு தவறை செய்தாலே, அந்த தவறை அவனுக்கு சுட்டிக்காட்டி அழைப்புப்பணி செய்யவேண்டும் என்ற கொள்கையுடவர்கள்[?]  முஜாஹிதை தவறு செய்ய தூண்டியது சரியா?
  • தானாக தவறு  செய்தால் அவன் மட்டுமே பொறுப்பாளி; ஆனால் ஒருவன் தவறு செய்ய தூண்டுதலாக இருந்தால், தூண்டியவனும் மார்க்க அடிப்படையில் குற்றவாளி  இல்லையா?
  • ஒருவனை தவறு செய்ய தூண்டியதோடு; அவனது பலவீனத்தை பதிவு செய்துவைத்துக் கொண்டு மிரட்டுவது தவ்ஹீத்யிசமா? தாதாயிசமா?
  • ஒருவன் தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால், அவனை அல்லாஹ்வே மன்னிக்கத் தயாராக உள்ள  நிலையில், தவறை உணர்ந்து தவ்பா செய்துவிட்ட பின்னும், தவறு செய்ய தூண்டியவர்கள் அதை  மக்கள் முன் வைத்து ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவது தவ்ஹீத்யிசமா? தாதாயிசமா?
  • ஒருவன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக அழைப்புப்பணியை முடக்குவது தவ்ஹீத்யிசமா? தாதாயிசமா?
  • முஜாஹிதை தவறு செய்ய தூண்டியதோடு, அந்த தவறால் அவர் அழைப்புப்பணி  செய்யும் தகுதியை இழந்துவிட்டார் என்றால், அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் தவறுக்கு அப்பாற்பட்ட மலக்குகளா?
  • ஒருவன் ஏதேனும் ஒரு தவறை தானாகவோ; அல்லது தூண்டப்பட்டோ செய்துவிட்டால் அவனை அழைப்புப்பணியிலிருந்து  தடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டதா? அல்லது அவன் தூதரால் வழங்கப்பட்டதா?
சிந்தியுங்கள் மக்களே! தனக்கு எதிராக யார் வாய் திறந்தாலும் அவனை ஓய்த்துவிட்டே மறுவேலை பார்ப்பேன் என்று ஒவ்வொருவரின் மனத்தோடு விளையாடும்  அண்ணனைப் புரிந்து கொள்ளுங்கள். அவரது அநீதிக்கு எதிராக களமிறங்குங்கள். அல்லாஹ்விற்கே தவிர எவருக்கும் அஞ்சாதீர்கள். அல்லாஹ் தாதாயிசத்தையும், ஷைத்தானியத்தையும்  வேரறுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.  இன்ஷாஅல்லாஹ்.

--
12/17/2010 07:17:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment