Sunday, December 5, 2010

பாபர் மஸ்ஜித் போராட்டத்தை தடுக்க புகார்!. பி.ஜே.பியை விட கேடு கெட்ட பி.ஜே. கும்பல்

மார்க்க வரம்புகளை மீறி தன் மனோ இச்சைப்படி தன்னுடைய குடும்பத்தாரை கொண்டு பொய்யான ஆவணங்கள் மூலம் பதிவு செய்த பொய்.ஜே இன்றைக்குதரம் தாழ்ந்து தாவாவை தடுக்கின்ற வேலையில் காயல் பட்டினத்தில் தெரு முனை கூட்டத்தை தடுக்க ,வீடு வீடாய் ;நாளை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எந்த போது கூட்டமும் இல்லை' என நோட்டீஸ் விநியோகித்து கடைசியில் காவல் துறையில் இனிமேல் இப்படி நடக்க மாட்டோம் என எழுதிக்கொடுத்து வந்தனர்.

தற்போது டிசம்பர் ஆறு போராட்டம் தேவையில்லை என ஒதுங்கிக்கொண்டது மட்டுமின்றி , இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் போராட்டத்தை தடுக்கும் விதமாக உயர் நீதிமன்றம் சென்று பல லட்சத்தை செலவழித்து இன்றைக்கு ' இவர்கள் ஒரு டிரஸ்ட் போராட்டமெல்லாம் நடத்தகூடாது! எங்களின் பெயரை வைத்துக்கொண்டு எங்கள் பெயரை கெடுக்கும் விதமாக போராட்டம் நடத்துகிறார்கள் என நம் நீதி மன்ற முற்றுகை போராட்ட நோட்டீஸ் களை எல்லாம் காட்டி, சங் பரிவாரங்களை விட மோசமாக டிசம்பர் ஆறு போராட்டத்தை தடுக்க, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளை முடக்க தடையாணை பெற்று வந்திருக்கிறார்.

தடையாணை யை நாம் உயர் நீதி மன்றத்தில் மனு செய்திருக்கும் நிலையில் வரும் டிசம்பர் ஏழு வழக்கு விசராணைக்கு வரவிருக்கின்ற நிலையில், இன்னும் அதன் நகல் இவர்களின் கைக்கு கிடைக்காத நிலையில் , அவசரம் அவசரமாக , நம்முடைய போராட்டங்கள் நடை பெரும் இடங்களில் எல்லாம் காவிக்கும்பலை விட மோசமாக காவல் துறைக்கு சென்று போராட்டத்தை தடுக்குமாறு பகார் அளித்திருக்கிறார்கள். ஆர். .எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் கூட நம்முடைய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இவர்களின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது! இவர்களின் இந்த நடவடிக்கையை பார்த்து காவல் துறை காறித் துப்புகிறது!

ஆனால் அவரது எண்ணம் ஈடேறாது! முஸ்லிம்களின் உரிமையை மீட்க, அலஹபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டிக்க திராணியற்று , தீர்ப்பை விமரசித்தால் நீதி மன்ற அவமதிப்பு வந்து விடுமோ என இந்திய முஸ்லிம்கள் நின்ற வேளையில் , உயர் நீதிமன்ற முற்றுகை என உரிமை மீட்க களமிறங்கும் போது இயக்கம் தடை செய்யப்படலாம் ! நீங்கள் கைது செய்யப்படலாம் என்ற போதே அல்லாஹ்வின் பள்ளியை மீட்க, அநீதியை தட்டி கேட்க, எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என அஞ்சாமல் களமிறங்கியவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயல் வீரர்கள் ! உங்களின் தடையாணை அவர்களை எதுவும் செய்ய முடியாது!

குறிப்பு: அன்பான சகோதரர்களே நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டாம் ! இவ்விசயத்தில் நம்மில் அநியாயம் செய்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் ! என பிரார்த்தியுங்கள் !

அது போதும்!

தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் சிறந்தவன்


Reply
Reply to all
Forward

0 comments:

Post a Comment