Sunday, December 12, 2010

இல்லாத பள்ளிக்கு ! எதற்கு போராட்டம் !?

இல்லாத பள்ளிக்கு ! எதற்கு போராட்டம்?

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
வரலாறு படைத்தோரின் வரலாற்று சிறப்பு மிக்க 450 ஆண்டு கால இறை இல்லத்தை
பயங்கரவாத காவி கும்பலால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பொதுவாகவே குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் மறைமுகமாகத்தான் அதை
புரிவார்கள்.ஆனால் அனைவரையும் பார்க்கவிட்டு குற்றம் புரிந்த கொடுமை நம்
நாட்டில் மட்டும் தான் அரங்கேற்றப்பட்டது.ஒரு நாடும் அதை சார்ந்த மக்கள்
மட்டும் பார்க்கவில்லை உலகமே பார்த்தது.அதுவும் குற்ற காரியத்தை
தடுக்கும் காவல் துறையே தனது கண்காணிப்பிலும் ,பொறுப்பிலும் நடத்தியது
தான் பெருங்கொடுமை.நாட்டின் மதச்சார்பின்மையை கடைபிடிக்கவேண்டிய
அரசாங்கமே மதவாதம் கொண்டு தலைமை பொறுப்பை ஏற்று அந்த காரியத்தை
செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை. அரசாங்கம் முதல் அடிமட்டம் வரை
காவிதுறையாக மாறிப்போனது.

வலுவான கோரிக்கை :
இஸ்லாமியர்களுக்கு எதிராக சூழ்ச்சிசெய்து இப்படி இடிக்கப்பட்ட பள்ளியை,
விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லாமல் இடித்தவர்கள் மீதும் இறக்கம்
காட்டாமலும் நீண்டகாலமாக போராடிவந்தது இந்த சமுதாயம்.அரசாங்கத்தின்
நெருக்கடிகளின் மத்தியிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்,இறை
இல்லம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.என்ற கோரிக்கையை வலுவாக
வைக்கப்பட்டது.

ஆயத்தமானது அலகாபாத் நீதிமன்றம் :
முஸ்லிம்களின் தொடர் போராட்டங்களின் வாயிலாக நிலுவையில் இருந்த வழக்கை
இறுதிகட்டமாக விசாரித்து தீர்ப்பு வழங்க ஆயத்தமானது அலகாபாத் உயர்
நீதிமன்றம். நீண்ட காலபிரச்சனைக்கு தீர்வு கிடைக்க இருக்கிறது, வரலாற்று
ரீதியாகவும் ,அறிவியல் ரீதியாகவும் ,ஆன்மீக ரீதியாகவும்,ஆதாரங்கள் வலுவாக
இருக்கிறது.நிச்சயம் எங்களுக்கு தான் சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்பி
இருந்தனர் இஸ்லாமியர்கள்.நம்பியதற்க்காக நம்பிக்கையின் [ராமர் அங்கு தான்
பிறந்தார்] அடிப்படையில் தீர்ப்பு அளித்து காவித்துறைக்கு திருப்தி
படுத்தியது நீதித் துறை.

சமுதாய இயக்கம் ஒன்று :
நீதித்துறை கைவிட்டால் என்ன ? அது வழங்கிய தவறான தீர்ப்பையே வலுவான முறையில் கண்டித்து களம் கண்டிட ,குற்றவாளிகளை தண்டிக்க குரல் கொடுத்திட, நியாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திட சமுதாய [?] இயக்கம் ஒன்று நம்மிடத்திலே இருக்கிறது என்று நம்பி,தீர்ப்புக்கு எதிராக “அந்த அமைப்பின்” அடுத்த கட்ட கடுமையான நடவடிக்கை என்ன? என்று உன்னித்து ,உற்று நோக்கிக்கொண்டு இருந்தனர் மக்கள்ஆர்வமாக .

இந்தியாவிலேயே முதன் முதலாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்:
இந்நிலையில் தான் தவறாக தீர்ப்பை வழங்கி முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடிய
அலகாபாத் உயர்நீதி மன்றத்தை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்தியாவிலேயே முதன் முதலாக நீதிமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்தது.நீதிமன்ற தீர்ப்பை நாம் எப்படி விமர்சிப்பது ? என்று எண்ணி தீர்ப்பை சிலர் வரவேற்று கொண்டு இருந்த நேரத்தில் ,இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் முற்றுகை போராட்ட அறிவிப்பு அவர்களை அதிர்ச்ச்சியில்
ஆழ்த்தியது.ஆனாலும் தடைகளை தாண்டி போராட்ட களத்தை கண்டு நீதிக்கு குரல் கொடுத்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

வளர்ந்து விட்ட இயக்கத்தின் போராட்ட களம் :
அநீதியான தீர்ப்பை கண்டித்து புதிதாக வளர்ந்த இந்த இயக்கமே இந்த அளவுக்கு [இந்திய அளவில் ] தடைகளையும் துச்சமெனகருதி போராட்ட களம் கண்டு தனி முத்திரை பதித்து விட்டதே !வளர்ந்து வரும் இயக்கமே இப்படி என்றால் வளர்ந்து [?]விட்ட இயக்கமான "அந்த இயக்கத்தின்" போராட்ட களம் எப்படி இருக்கும்.அப்பப்பா ....சொல்லவேண்டியதே! இல்லை! .என்று மக்கள் கனவு கண்டு இருந்த வேலையில் தான் ,"அந்த இயக்கம்" மண்ணடியில் பொதுகூட்டத்திர்க்கு ஏற்பாடு செய்தது .மக்களும் கூடினர்.தலைப்பு என்னவோ! பாபர் மசூதி குறித்து தான் ! ஆனால் பேசப்பட்டது என்னாவோ !எதிரமைப்பு குறித்து தான்.ஆர்வத்தோடு
கூடிய மக்கள் முகம் சுளித்தாலும் ,அடுத்தடுத்து நமது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்த்தனர். வழக்கமான வசைபாடுகள் எல்லாம் முடிந்த பிறகு, பாபர் மசூதி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் "மேல்முறையீடு" செய்யப்பட உள்ளது , எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நாம் அறிவிப்போம் .என்று சொல்லி மக்களின்
ஆர்வத்திற்கு ஆப்பு வைத்தனர்.

வைக்கப்பட்ட ஆப்புடன் :
வைக்கப்பட்ட ஆப்புடன் திரும்பிய மக்கள் இவர்களின் இந்த கேவலமான நிலையை
விமர்சனம் செய்தனர்.மக்களின் கேளிக்கைக்கும் கிண்டலுக்கும் ஆளான இவர்கள்
மீண்டும் தன்னை சுதாரித்துக்கொண்டு ஜனவரி 4 -ல் மதுரை மற்றும் சென்னையில்
அலகபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
பாணியில் நீதிமன்ற முற்றுகை போராட்டம் என்று அறிவிப்பு செய்தனர்.இதற்காக
அப்பாவி மக்கள் பணத்தில் சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டன.ஆனாலும்
தங்களிடம் ஏற்ப்பட்ட தடுமாற்றத்தின் விளைவாக போராட்ட தேதிகளை தங்கள்
இஷ்டத்திற்கு மாற்றி இறுதியாக ஜனவரி 27-ல் ஆர்ப்பாட்டம் என்று முடிவு
செய்தனர்.சூட்டோடு சூடு செய்ய வேண்டிய இந்த காரியத்தை இவ்வளவு நாட்கள்
ஆரப்போட்டது மக்களின் கோபத்தை தூண்டினாலும் ,இவர்களின் தேதி மாற்ற
தடுமாற்றங்கள் இன்னும் கோபத்தை தான் அதிகமாக்கிஉள்ளது.தேதி மாற்றமும்
,நாள்கடத்தளும் அரசியல் ஆதாயம் அடையத்தான் என்பதை அப்பாவி மக்களுக்கு
இப்பொழுது தான் புரிய ஆரம்பித்துள்ளது.

தலைவரின் கேமரா தரிசனம் :
இதற்கிடையில் தடுமாற்ற அமைப்பின் ரியல் தலைவர் கேமரா முன் தரிசனம்
செய்து,"தீர்ப்பை கேட்டோம் தந்துவிட்டார்கள்.எனவே அந்த கோரிக்கையை
இப்போது வைக்கமுடியாது.குற்றவாளியை தண்டிக்க சொல்லவும் முடியாது.காரணம்
அங்கு பள்ளிவாசலே இல்லை!யாரும் அதை இடிக்கவும் இல்லை என்று நீதிபதிகள்
சொல்லிவிட்டனர்.என்று நீதிபதிகள் சொல்லாத கருத்து ஒன்று சொல்லி,ஏற்க்கனவே
இவர்களின் செயல்பாடுகளால் கோபமடைந்து உள்ள மக்களை கொந்தளிக்க
வைத்துள்ளார்.கோபத்தால் கொந்தளித்து போன மக்கள் இல்லாத பள்ளிக்கு எதற்கு
போராட்டம்?என்று கேள்விகேட்க்க தொடங்கியுள்ளனர்.அது மாத்திரமில்லாமல்
வரும் தேர்தலுக்கு தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதோ!என்று என்னவும்
தொடங்கிவிட்டனர்.சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு மக்கள் விழிப்படைந்தால்
போதும்.
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment