Friday, December 24, 2010

அபகரிப்பும்- மோசடியும்! மார்க்க அடிப்படையில் சரியா?




மனிதகுலத்திற்கு நேர்வழி  காட்டவந்த  வேதமாம் திருக்குர்'ஆனிலிருந்தும் , அந்த திருக்குர்'ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி[ஸல்] அவர்களின் பொன்மொழியிலிருந்தும் அடுத்தவர் பொருளை அபகரித்தல் மற்றும் அடுத்தவருக்கு மோசடி செய்தல் பற்றிய சில எச்சரிக்கைகள்  'சிந்தனையாளர்களின்' சிந்தனைக்கு;
 
அடுத்தவர் பொருளை அபகரிக்க அதிகாரிகளிடம் நெருங்காதீர்;
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.[2:188 ]
 
தனது பண வலிமையைக் காட்டியோ, அதிகாரத்தைக் காட்டியோ  அடுத்தவர்கள் பொருளை அடையலகாது என்று மேற்கண்ட வசனம் கட்டளையிடுகிறது. ஆனால் அநியாயமாக அநியாயக்கார பீஜே,  பாக்கரின் இதஜ வை அபகரித்ததோடு அதை தக்க வைப்பதற்காக, அழைப்புப்பணிக்காக அரபகங்களில் இருந்து அன்றாடம்காய்ச்சிகள் அரும்பாடுபட்டு அனுப்பிய காசை வழக்கில் கரைக்கிறார். அதோடு நம்மையும் கோர்ட்டுக்கு செலவழிக்கும்  நிர்பந்தத்திற்கு தள்ளுகிறார் என்றால் இவர்தான் தவ்ஹீத்வாதியா? சிந்திக்கவேண்டுகிறோம்.  
 
அனாதைகளின் பொருளாக இருந்தாலும் 'ஆட்டயப் போடலாகாது;
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்;. நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.[4 ;2 ]
 
அனாதைகள் உடமைகள்தானே; பலவீனர்களின் உடமைகள்தானே என்று பறித்துக்கொள்ளலாகாது என்று பறைசாற்றுகிறது மேற்கண்ட வசனம். ஆனால் இந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக, ஏற்கனவே தான் நடத்திவரும் தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்துடன் இதஜவையும் அபகரித்து ஆட்டயப்போட நினைப்பவர்தான் தவ்ஹீத்வாதியா? சிந்திக்கவேண்டுகிறோம்.
 
விட்டுக் கொடுத்தாலே தவிர அடுத்தவர் பொருளை எடுக்கலாகாது;
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.[4 ;29 ]
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.[4 ;30 ]
பொருந்திக் கொண்டு சம்மந்தப்பட்டவர் விட்டுக்கொடுக்கும் உடமைகள் நீங்கலாக, மற்றவர்களின் உடமைகளை உண்ணலாகாது என்று உச்சத்தலையில் அடித்து உணர்த்துகிறது மேற்கண்டவசனம். அத்துடன் அல்லாஹ்வின் வரம்பை மீறி அடுத்தவர் பொருளை ஆட்டையப் போடுபவரை நரகநெருப்பில் நுழைவிப்போம் என்றும் எச்சரிக்கிறது இறைவேதம்.
 மோசடி செய்பவர்களுக்கு உதவுபவர்களையும் சேர்த்து எச்சரிக்கும் வசனங்கள்;
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.  (4:105)
(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.  (4:106)
ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.  (4:107)
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.  (4:108)
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?  (4:109)

அடுத்தவர் பொருள் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சிய முன்னோர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

(பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், 'என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை" என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், 'நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)" என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், 'உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், 'எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்" என்று கூறினார். மற்றொருவர், 'எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது" என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், 'அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள்.  அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார்.[புகாரி எண்; 3472 ]
இந்த பொன்மொழியில், நிலத்தை வாங்கியவர் நினைக்கிறார். வெறும்  நிலத்தை மட்டுமே வாங்கினோம். அதற்குள்ளே உள்ளே இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின்  மீது நமக்கு உரிமையில்லை என்று எண்ணி அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக அந்த பொருளை நிலத்தை வாங்கியவரிடம் திருப்பித் தர முனைகிறார். நிலத்தை விற்றவரோ நிலத்தை அதிலிருப்பவற்றுடன்  சேர்த்துதான் விற்றேன். அதிலுள்ளவை உமக்குத்தான் சொந்தம் என்று கூறி பொருளை வாங்க மறுக்கிறார். இந்த இரு நல்லடியார்கள் வாழ்வின் மூலம் அடுத்தவர் பொருள் விஷயத்தில் எந்த அளவுக்கு இறையச்சம்  தேவை என்பதற்கு சிந்திக்கும் மக்களுக்கு படிப்பினை உள்ளது. நிலத்திற்கு அடியில் உள்ள பொருள் விஷயத்தில் அஞ்சிய சமுதாயத்தின் வழிவந்தவர் என்று கூறிக்கொள்ளும் பீஜே, நிலத்திற்கு மேலே இரண்டாண்டுகளாக பாத்தியதை செய்துவரும் பாக்கரின் அமைப்பை ஆக்கிரமிப்பதுதான் தவ்ஹீதா? சிந்திக்க வேண்டுகிறோம்.
குறிப்புமேலே குறிப்பிட்டுள்ள குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் பொருள் சம்மந்தப்பட்டவை. நான் அபகரித்தது பாக்கரின் அமைப்பைத்தான்; அமைப்பு என்பது பொருள் அல்ல.  எனவே முகவை மண்ணாங்கட்டி[!?] எடுத்து வைத்த வாதம் சரியல்ல என்று அண்ணன் வியாக்கியானம் தரலாம். அண்ணனின் வியாக்கியானத்திற்கு 'அல்லாஹு அக்பர்' போட தயாராக இருங்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

0 comments:

Post a Comment