Friday, December 24, 2010

என்னாது பள்ளிவாசலில் பொதுக்கூட்டமா?; நல்லத்தான் சுத்துராய்ங்க ரீலு!
















ஒரு நிகழ்ச்சி அது நடத்தப்படும் இடத்திற்கேற்ப உள்ளரங்கு நிகழ்ச்சி- தெருமுனை கூட்டம்- பொதுக்கூட்டம்-மாநாடு இப்படி அழைக்கப்படும். அதிலும் குறிப்பாக பொதுக்கூட்டம் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளோம். நமது நாட்டில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது போன்று அரபகங்களில் குறிப்பாக குவைத்தில் நினைத்தவரெல்லாம் நடத்திட முடியாது. குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரே ஒவ்வொரு பகுதியிலும் 'டென்ட்' [கூடாரம்]அடித்து அந்த டெண்டிற்குள் தான்  தனது பிரச்சாரத்தை  செய்யமுடியும். இந்நிலையில்,

தற்போது அண்ணன் ஜமாஅத்தின் பிரச்சார ஏடாக இருக்கும் உணர்வில் ஒரு செய்தி;''குவைத்தில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்'' என்ற தலைப்பில், ரவ்தா டி.என்.டி.ஜே கிளை சார்பாக கடந்த 17 -12 -2010  வெள்ளிக்கிழமை  மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி ரவ்தா கத்தா 5 ல் நடைபெற்றது என்றும் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டனர் என்றும் அந்த செய்தி கூறியது.

நமக்கு ஆச்சர்யம்! என்னப்பா இது! மண்ணின் மைந்தர்களே பொதுக்கூட்டம் போட்டு பேசமுடியாத நாட்டில் அண்ணன் ஜமாஅத் பொதுக்கூட்டமா? என்று. சரி! 'போட்டோவ பாப்பமே'ன்னு பார்த்தா அப்பத்தான் தெரியுது இது ''தீவுத்திடல் பார்முலா'ன்னு.
என்ன புரியலையா? ஐம்பதாயிரம் பேர் கொள்ளளவு கொண்ட தீவுத்திடலில் பதினைந்து லட்சம் பேரை[?] அமரவைத்துக் காட்டிய கதை  போன்று,

மேற்படி நிகழ்ச்சி பள்ளிவாசலில் நடந்துள்ளது. அதற்கு அவர்கள்  பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள போட்டோவே சான்றாக உள்ளது. ஆனாலும் அது மாபெரும் பொதுக்கூட்டம் என்று செய்தி போடுகிறார்கள் என்றால், பள்ளிவாசலில் நடந்ததை பொதுக்கூட்டம்  என்று உலகத்திலேயே சொன்னவர்கள் இவர்களாகத்தான் இருக்கும். என்ன  செய்ய..? என்னத்த சொன்னாலும் தலையாட்டுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும்போது கடுகையும் பெரு மலையாக காட்டலாம். கட்டெறும்பையும்  கருஞ்சிறுத்தையாகவும் காட்டலாம். ஆனாலும் இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் குவைத் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சியால்  அவர்கள்  தூக்கம் கெடுவதுதான் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பதுதான் உண்மை.

புகழ்  அனைத்தும் அல்லாஹ்வுக்கே! 

-முகவை அப்பாஸ் 

0 comments:

Post a Comment