Sunday, February 27, 2011

'ஹாமித்பக்ரியும்; பீஜேயின் முரண்பாடுகளும்! [பாகம்;1]


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அடுத்தவர் அந்தரங்கத்தை அலசுவதையே அழைப்புப் பணியாக கொண்டிருக்கும் அண்ணன் ஜமாத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில், பிரபல மார்க்க அறிஞரான மவ்லவி. ஹாமித் பக்ரி மன்பஈ அவர்கள், தர்காவில் கையேந்துவது போன்ற இரு படங்களை வெளியிட்டு, 'எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே என்று வருத்தப்படுபவர்கள் நேர்வழி பெற இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! 
என்று சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தார்கள்.

இதையடுத்து நாம், ''ஹாமித் பக்ரிக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அண்ணன் ஜமாஅத்! என்ற தலைப்பில் கட்டுரை வரைந்தோம். பார்க்க;http://amaibbukal.blogspot.com/2010/10/blog-post_11.htmlதற்கு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிலளிக்க தொடங்கிய அண்ணன், ஆறு தொடர்களோடு 'முற்றும்' என்று போடாமலேயே மூர்ச்சையாகிவிட்டார். நாமும் காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனதே  தவிர, அவர் அந்த தொடரை முழுமைப் படுத்துவதாக தெரியவில்லை. எனவே நாம் ஏற்கனவே அறிவித்தபடி, மவ்லவி ஹாமித்பக்ரி அவர்கள் விஷயத்தில் அண்ணனின் முரண்பாடுகளை பட்டியலிடுகிறோம். 

முதலாவதாக, அவர் எழுதிய தொடரின் தலைப்பிலேயே தனது கயமைத்தனத்தை  வெளிப்படுத்துகிறார். 'ஹாமித்பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்' என்று தலைப்பிடுகிறார். இவர் உண்மையாளர் என்றால், 'ஹாமித்பக்ரியை கைவிட்டது ஏன்? என்று பொதுவாக அல்லவா தலைப்பிட்டிருக்க வேண்டும்? அதை விடுத்து மேற்கண்ட தலைப்பை வைப்பதன் மூலம் இதைப் படிப்பவர்களுக்கு தமுமுகதான் கைவிட்டது போன்ற தோற்றத்தை முதலில் பதிவு செய்துவிட்டு பின்னர் தனது வழக்கமான புராணத்தை தொடங்குகிறார் பீஜே. 

முதல் தொடரில், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், கைது செய்யப்படுகையில் மேலாண்மைக்குழு தலைவராக இருந்தவரும், தமுமுகவின் தலைமைக் கழக  பேச்சாளருமான மவ்லவி ஹாமித்பக்ரி உள்ளிட்ட சிலரின் கைது பற்றி எழுதுகிறார் பீஜே. ஹாமித்பக்ரி கைது செய்யப் பட்டபோதும் அவரது வீடு, ஆயிஷா சித்தீக்கா பெண்கள் மதரஸா, அவரது தாவா செண்டர் ஆகியவை  சோதனை என்ற பெயரில் போலீசார் அல்லோலகல்லோல படுத்தியபோதும்  தாமும், அன்றைய தமுமுக நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். மேலும், பேர்ணாம்பட்டு கிளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தபோது  அதை வேண்டாம் என்று தடுத்ததையும் ஒத்துக் கொள்கிறார். 

இவ்வாறு பீஜேயும், தமுமுகவும் ஹாமித்பக்ரி அவர்கள் கைது செய்யப்பட்டபோது ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் அமைதி காத்ததற்கு  காரணம் அவரது தீவிரவாத தொடர்பு பற்றிய ஆதாரங்கள்  தம்மிடம் இருந்ததே என்று பின்னால் எழுதுகிறார் பீஜே. அவர் கூறும் தீவிரவாத தொடர்ப்பு குறித்த ஆதாரங்களை பின்னர் அலசுவோம். ஆனால், பீஜே கூறியது போன்று ஹாமித்பக்ரிக்கு தீவிரவாத தொடர்பு இருந்தது உண்மை. அதனால் கைது செய்யப்பட்டார் என்றே வைத்துக் கொள்வோம். 

ஒரு மாபெரும் இயக்கமான தமுமுகவின் மாநிலப் பேச்சாளர்-ஒரு தவ்ஹீத் அமைப்பின் மேலாண்மைக் குழு உறுப்பினர், தீவிரவாத திட்டங்களை ரகசியமாக செய்கிறார் என்று தெரிந்தும் அவரை காவல்துறை கைது செய்யும்வரையும், ஏன் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட தமுமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும், அதஜவின் மேலாண்மைக்குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி அறிவிப்பு செய்யாதது ஏன் என்பதற்கு பீஜெயிடம் எந்த பதிலுமில்லை. 

ஆனால், ஹாமித்பக்ரி அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் உணர்வில் வெளியான முக்கிய அறிவிப்பு என்ற செய்தியையும்,
பெண்கள்   மதரசாக்களுக்கும் பீஜெயுக்கும் எந்த தொடர்புமில்லை என்ற செய்தியையும் காட்டி பார்த்தீர்களா! நானும், தமுமுகவும் அன்றைக்கே மறைமுகமாக ஹாமித்பக்ரிக்கு உதவ மாட்டோம் என்று சொல்லிவிட்டோம் என்று காட்ட முனைகிறார். அரசு நடவடிக்கை விஷயத்தில் ஹாமித் பக்ரிக்கு உதவமாட்டோம்   என்ற தமுமுகவின்  மறைமுகமான அறிவிப்பும், பெண்கள் மதரசா குறித்த பீஜேயின் நிலைப்பாடும் ஹாமித்பக்ரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக ஆகுமா? இப்படித்தான் ஒரு தீவிரவாத  ஆலோசனையில் பங்கெடுத்தவர் என்று பீஜெயால் காட்டப்படும் ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்கும் லட்சணமா? ஹாமித்பக்ரியின் நடவடிக்கையை கடைசிவரை அனுமதித்துவிட்டு அல்லது கண்டும் காணாமல் இருந்துவிட்டு, அவர் கைது செய்யப்பட்டவுடன்  அவருக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று கழற்றி விடுவது  போல் அல்லவா உள்ளது இந்த இரு அறிக்கைகள்? இல்லையேல்  ஹாமித்பக்ரியை பகிரங்கமாக நீக்கி,  அதை பகிரங்கமாக அறிவிக்க தயங்கியது ஏன்? என்பதற்கு பீஜே பதிலளிக்க வேண்டும். 
  -சாட்டை தொடர்ந்து சுழலும் இன்ஷா அல்லாஹ்.


--
2/26/2011 07:27:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

க(றை)ர சேவையில் பிரகாஷ்ராஜ்!

முஸ்லிம்கள் என்றால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதத்தை போதிப்பவர்கள் என்றெல்லாம் யூத, கிறித்துவ ஆதிக்கத்தின் கீழ் அடிமையாகி கிடக்கும் பெரும்பான்மை மீடியாக்களால் பரப்பபட்டு, பொது மக்களையும் தாண்டி நாமெல்லாம் அப்படித்தானோ என்று முஸ்லிம்களாகிய நாமே நமது மனதை மாற்றி கொண்ட வேளையிலே...

இந்த உலக மக்களுக்கு எல்லாம் முன்மாதிரியாகமுஸ்லிம்கள் மட்டுமே இந்த உலகத்தில் மிகப்பெரும் ஜனநாயக வாதிகள்,
முஸ்லிம்களால் மட்டும் தான் இந்த உலகத்திலே ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும் என்பதை ஊடகங்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு எகிப்து, மற்றும் இதர நாடுகளில் நடக்கின்ற, நடந்து முடிந்த ஆயுதம் ஏந்தா புரட்சியை பார்த்து உலகம் வியந்து நிற்க்கும் வேளையிலே...


பயணம் எனும் படத்தின் மூலம் விமான கடத்தலில் முஸ்லிம் 
முஸ்லிம் இளைஞர்கள் கடத்தி, இந்திய நாட்டிற்கு எதிராக சதிதிட்டம் தீட்டுவதையும், அந்த சதியை மேற்படி தேசபக்தி? சக்திகள் முறியடிப்பதாக முடிகிறது அந்த பிலிம்.

பெண்களை வைத்து தொழில் நடத்தி வரும் பிரகாஷ்ராஜ் தற்போது காலம்போன கடைசியில் இது போன்ற படங்களை தயாரித்து தன் பங்கிற்கு க(றை)ரசேவையை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

விஜய் டிவியில் இந்த சாதனை படத்திற்கு பெரிய பில்டப்   
பில்டப் பேட்டி எடுத்து பெரிய சாதனை என பாராட்டியதன் மூலம் விஜய்டிவியும் தன் பங்கிற்கு க(றை)ரசேவையை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் "இந்த பூமியிலே நீங்கள் சுற்றிப் பாருங்கள் அநியாயகாரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்று" இவர்களின் முடிவையும் நாம் பார்ப்போம்

அன்பு சகோதரன்
திருச்சி.ரிஸ்வான்

Saturday, February 26, 2011

ஒருவாரம் ஓடிப்போச்சு; ஒழுங்கு நடவடிக்கை என்ன ஆச்சு..??


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
 
''எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனம் பேசும் அண்ணன் ஜமாஅத்தின் வளைகுடா மேலாண்மை நிர்வாகி ஒருவர், கடவுள் இல்லை என்ற கொள்கையை விதைத்த பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து விருது பெற்றதோடு, கடவுள் மறுப்பாளர் பெரியாருக்கு புகழ் பாடி வாழ்த்துப்பா எழுதியதையும் மையமாக வைத்து, கடந்த 19 -02 -2011 அன்று பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; நடவடிக்கை எடுக்க அண்ணனுக்கு துணிவுண்டா..? என்ற தலைப்பில் கட்டுரை வடித்தோம் பார்க்க;http://amaibbukal.blogspot.com/2011/02/blog-post_19.html
 
சம்மந்தப்பட்ட கட்டுரையை நாம் வெளியிட்டு ஒருவாரம் கடந்த நிலையில், ஒன்று நாம் வெளியிட்ட செய்தி பொய் என்று பீஜே மறுத்து விளக்கம் தந்திருக்கவேண்டும். அல்லது சம்மந்தப்பட்டவரை நீக்கி, அதை பகிரங்கமாக உணர்வில் வெளியிட்டு, தன்னை முதுகெலும்புள்ள தலைவர் என்று காட்டியிருக்க வேண்டும். இரண்டையும்  செய்யாமல் மவுனம் சாதிப்பதன் மூலம், நாம் வைத்த குற்றச்சாட்டு உண்மை என்பதை பீஜே ஒப்புக்கொண்டுவிட்டார்  என்பதும், உணமையாக  இருந்தும் ஏகத்துவத்திற்காக நடவடிக்கை எடுத்து 'எண்ணெய்வயலை' இழக்க அவர் தயாரில்லை என்பதையும் காட்டிவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
 
தனது ஜமாஅத்தில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்பது, ஆண்டான்-அடிமை அடிப்படையிலும், தனது சொந்த விருப்பு வெறுப்பின்  அடிப்பைடையிலும்தானேயன்றி, கொள்கை அடிப்படையில் அல்ல என்பதை மீண்டும் பீஜே காட்டிவிட்டார். 'நீதி வழங்கிறலாம்; நீதிதான் என்று எல்லாருக்கும் தெரியனும்' என்பதெல்லாம்  மேடைக்குத்தானேயன்றி செயல்பாட்டுக்கல்ல  என்பதை  அண்ணன் காட்டிய பின்னும், அவரை பின்பற்றும் தம்பிகளை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

Friday, February 25, 2011

குன்றத்தூர் இ.த.ஜ.கிளை சார்பில் மாபெரும் ரத்த தான முகாம்



இன்ஷா அல்லாஹ் வரும் 27.2.11 ஞாயிறு அன்று காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் இ.த.ஜ.கிளை சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான ஆட்டோ பிரசாரம் நடை பெற்று வருகிறது!  .  

கடலூரில் மாவட்ட ஆட்சியருக்கு இ.த.ஜ. மனு!





கடலூரில் குடிமைப்பொருள் வழங்கலில் உள்ள குறை பாடுகளை நீக்க கோரி இ.த.ஜ. சார்பில் மனு அளிக்கப் பட்டது! மேலும் வட்டாசியரின் அலட்சியப் போக்கையும் , வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள லஞ்ச லாவண்யத்தை 
தடுத்து நிறுத்தும் படியும் மாவட்ட  ஆட்சியருக்கு   மனு அளிக்கப் பட்டது!     

பாஸ்போர்ட் மீட்டு தந்த இ.த.ஜ.

பாஸ்போர்ட் மீட்டு தந்த இ.த.ஜ.




நாகூரில் வெளி நாடு செல்ல பயண முகவரிடம் கொடுத்த பாஸ்போர்ட் திரும்ம்பதர  மறுத்து அதனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் நகர நிர்வாகிகளிடம் உதவி கோரினார். இதை அடுத்து களமிறங்கிய நிர்வாகிகள் காவல் துரை மூலம் நடவடிக்கை எடுத்து பாஸ்போர்ட் பெற்று தந்தனர்.      

கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் சம்பந்தமாக இதஜ நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு!


கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் சம்பந்தமாக 

இதஜ நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு!

தமிழக முஸ்லிம்களிடம் கடும் அதிருப்தியினை ஏற்படுத்திய கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்திலுள்ள ஷரத்துக்களை மாற்றுக் கோரி அனைத்து சமுதாய அமைப்புகளை ஒன்றிணைத்து  அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான ஒப்புதலையும் கடந்த வருடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெற்றது. 
இது சம்பந்தமாக  கடந்த 22-02-2011 அன்று சமுதாய பிரமுகர்களுடன் இதஜ நிர்வாகிகளும், அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், டி.பி.மைதீன்கான்  ஆகியோருடன் பதிவுத்துறை சம்பந்தமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சபீதா, பஷீர் அஹ்மது, மாலிக் ஃபெரோஸ்கான் ஆகியோரை சந்தித்தனர்.

பித்னாவின் மறு பெயர் பி.ஜே?


பித்னாவின் மறு பெயர் பி.ஜே?


இந்திய தவ்ஹீத் ஜமாத்தை தன குடும்பத்தார் பெயரில் திருட்டு தனமாக அபகரித்து , சமுதாயத்தாலும், சக நிர்வாகிகளாலும், வளைகுடா எஜமானர்களாலும் , ஏன் நீதி மன்றத்தாலும் கூட குட்டுப்பட்டு அவமானப்பட்ட பொய்யர் மீண்டும் திரு விளையாடலை துவங்கியுள்ளார். 

னது பைலாவை தானே மீறி மாத்தின் தலைவரான பொய்யர் , மீண்டும் அதிகாரம் கைக்கு வந்த ஆணவத்தில் ' குழப்பம் கொலையை விடக் கொடியது 'எனும் குர்ஆன் வசனத்தை மறந்து தன் குலத் தொழிலான குழப்ப வேலையை துவங்கியுள்ளார்.

பேரம் படியாத காரணத்தால் யாரை ஆதரிப்பது எனும் முடிவை அறிவிக்காமல், ம.ம.கவை மண்ணை கவ்வ வைப்பது தான் தன் தலையாய வேலை என இந்துத்வா சக்திகள் கூட எடுக்காத ஒரு நிலைப்பாட்டை தங்களின் தேர்தல் நிலைப்பாடாக அறிவித்து உள்ள இவர்களின் கொள்கை [?] முடிவை மக்களிடம் சொல்லாமல் ஒரு ஒப்பீட்டை வெளியிட்டுள்ளார்கள்!


  • எந்த கோரிக்கையும் வைக்காமல் அதிமுக வோடு இணைந்த ம.ம.க.
  • 5% இட  ஒதுக்கீடு தரும்   கட்சிக்கே வாக்கு ! எனும் த.த.ஜ
இந்த இரண்டு நிலைப்பாட்டில் எது சமுதாய சிந்தனையோடு எடுக்கப் பட்ட முடிவு? எனும் செய்தியை மக்களுக்கு வைக்கிறார்கள் !
 வைக்கட்டும் அது அவர்களுடைய உரிமை! 

ஆனால் அதை தங்கள் பெயரில் வெளியிட தைரியம் இன்றி இந்திய  தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வெளியிட்டுள்ளார்கள்! தங்கள் கருத்தை தங்கள் பெயரில் வெளியிடும் தைர்யமின்மை  அல்லது த.மு.மு.க.மற்றும் இ.த.ஜ.வுக்கு இடையில் உள்ள உறவை கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் ! இந்த இரண்டைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும் இவர்களின் இந்த இழி செயலுக்குக்கு?  முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் குரோதம் உண்டாக்க எண்ணி குழப்பம் ஏற்படுத்தும் இந்த செயல் யாருடைய செயல் என்பதை நீங்களே 
முடிவு செய்யுங்கள் ! 

குறைவான எண்ணிக்கையில் இருந்த உங்களை அவன் அதிகமாக்கி வைத்ததையும், குழப்பம் செய்தோரின் முடிவு என்னவானது ? என்பதையும் 
எண்ணிப்பாருங்கள்! [அல்குரான் 7:86]      
  
.

          


நியாயமின்றி ஒரு கொலை எங்கு நடந்தாலும், எவரால் நிகழ்த்தப் பட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத் தக்கதே! அதே நேரத்தில் அந்த கொலை பற்றிய செய்தியை வெளியிடும் ஊடகங்கள், அதன் மூலம் ஒரு சாரார் மீது தப்பெண்ணம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிடக் கூடாது. தினத்தந்தியில் வெளிநாட்டு செய்திகள் என்று ஒரு பகுதி உண்டு. இப்பக்கத்தில் இடம்பெறும்  செய்திகளை  தினத்தந்தி தனது சொந்த நிருபர்கள் மூலமாக சேகரித்து வெளியிடுகிறதா? என்பது நமக்கு தெரியாது. ஆனால் அப்பக்கத்தில் வெளியாகும் செய்திகளில், பல நேரங்களில் முஸ்லிம் நாடுகள் குறித்த  செய்திகள் மிகைப்பைடுத்தப்படுகிறதோ என்று எண்னும் வண்ணம் உள்ளன.  
 
பாகிஸ்தானில் ஒருவரை சிலர் சுட்டுக்கொன்றதாக ஒரு செய்தியை தினத்தந்தி தொடர்ந்து இரு நாட்களாக இப்பகுதியில் வெளியிடுகிறது. ஒரு கொலை செய்தியை வெளியிட்டால், கொலையாளியின் பெயரையும், அவரை கொன்றவர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். ஆனால் தந்தியோ,
 
''பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் சுட்டுக்கொலை'' என்று முதல் நாளும், அதே செய்தியை  
''பாகிஸ்தானில் இந்து வியாபாரி சுட்டுக்கொலை'' என்று இரண்டாம் நாளும் வெளியிடுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொல்லப்பட்டவர்கள் குறித்து இதுவரை எத்தனையோ செய்திகளை  வெளியிட்ட தினத்தந்தி, அப்போதெல்லாம் இந்து சுட்டுக்கொலை- முஸ்லிம் சுட்டுக்கொலை-கிறிஸ்தவர்   சுட்டுக்கொலை என்று போடவில்லையே! மாறாக, பாகிஸ்தானில் நடந்த ஒரு கொலையை ஒரு மத அடையாளத்தோடு , மறுபடி- மறுபடி செய்தியாக்குவது, பாகிஸ்தான் இந்து விரோத நாடு என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கிவிடும் என்பது தினதந்தி அறியாத ஒன்றா?
 
எனவே ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது, குற்றத்தைக் கண்டியுங்கள். குற்றவாளியை தண்டிக்க உறுதுணையாய் இருங்கள். ஆனால் எவனோ ஒருவன் செய்யும் செயலுக்கு மத அடியாளம் காட்டி, மத நல்லிணக்கத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் உங்கள் எழுத்துரு அமையவேண்டாம் என்பதே எமது அவா.
 

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!


தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பொருளீட்டும் வழிமுறைகள் கடந்த 200 ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அடிப்படையில் முஸ்லிம்கள் தொடக்க காலம் முதல் வியாபார ரீதியான சமுதாயம் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருள் வாங்கி விற்பதன் மூலம் உழைத்துச் சம்பாதிப்பதை உயர்வாகவும் பாதுகாப்பகவும் முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
இன்றைய முதலாளித்துவம் வலியுறுத்தும் எல்லையற்ற, முறைகேடான இலாபம் என்ற கீழ்த்தரமான தத்துவமும் குறுகியகாலத்தில் வளர்ச்சி என்ற விவேகமற்ற போக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுரண்டல் மற்றும் பதுக்கலில் ஈடுபடாத நேர்மையான வியாபரிகள் என்றுதான் இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.
வரலாறு முழுவதும் கடலோர முஸ்லிம்கள் அரபு நாடுகள், இலங்கை மற்றும் கீழ்திசை நாடுகளுக்கு வியாபாரம் செய்யும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். தமிழகத்தின் உள்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மாட்டு வண்டிகள் மூலம் கடற்கரை பட்டிணங்களுக்கு கொண்டு வரப்பட்டு அது கடலோர முஸ்லிம்களால் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றைக்கும் கூட இதற்கான அடையாளங்களை கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் காண முடிகிறது. இப்படி கொடி கட்டிப் பறந்த வியாபாரத்தை போர்சுகீஸ் மற்றும் பிரிட்டிஷார் வந்துதான் நாசமாக்கினார்கள்.
இறைவன் படைத்த கடலுக்கு எல்லைகள் வகுத்து தமிழர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் முஸ்லிம்களின் வியாபாரத்திற்கும் நெருக்கடி கொடுத்தனர். பிரிட்டிஷாருக்கு தெரியாமல் இலங்கை சென்று வியாபாரம் செய்தவர்களை (Smugglers) கடத்தல்காரர்கள் என்ற படத்தைச் சூட்டினார்கள். சென்ற நூற்றாண்டு வரை கூட இலங்கைக்கான வியாபாரங்கள் தொடர்ந்து வந்தன. 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமான கப்பல் போக்குவரத்து என்று சொல்லி தனுஷ்கோடிக்கும் – தலை மன்னாருக்கும் இடையே கப்பல் விட்டனர்.
தனிப்படட முறையில் மரக்கலன் வைத்து ஏற்றுமதி செய்து வந்த முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசு கப்பல் போக்குவரத்தைத் துவங்கியதால் அதைப் பயன்படுத்தி இலங்கை சென்று வியபாரம் செய்து வந்தனர். இந்த கப்பல் போக்குவரத்து 50 ஆண்டுகள் நீடித்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்தோ – சிலோன் போட் மெயில் என்ற இரயில் 110 பயணிகளுடன் பாம்பனிலிருந்து தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷன் நுழைய இருந்த நேரத்தில் மிகப்பெரிய கடல் அலையால் தாக்கப்பட்டு 110 பேரும் 5 பணியாளர்களும் உயிரிழந்தனர். கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
புயலுக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. 1980 களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நேரத்தில் வட இலங்கையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர். அனைத்தையும் இழந்து அகதிகளாக இராமேஸ்வரத்தில் வந்து இறங்கினார்கள் முஸ்லிம்கள். அதோடு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
வேறு வழியில்லாமல் அப்போது முதல் அரபு நாடுகளுக்கு அடிமை வேலை செய்திட புறப்பட்ட பெருவாரியான முஸ்லிம் சமுதாயம் இன்று வரை அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக தனது பாரம்பரியத்தை அறியாத மக்களாக மாதச் சம்பளத்திலேயே காலத்தை கடத்தி வருகின்றனர்.
இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புகளை முஸ்லிம் சமுதாயம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் இனக் கலவரம் முடிந்து அமைதி திரும்பியுள்ள சூழலில் அங்கே வியாபாரத்திற்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து பெரிய அளவிற்கு இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களுக்கு இந்த கப்பல் போக்குவரத்து சற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் வியாபாரம் செழித்து வளரும் என்பதும் உண்மை. தமிழகத்தின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் இலங்கையின் தற்போதைய தேவையை உணர்ந்து வியாபாரம் செய்ய தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேற்றத்திற்கான சில அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்களின் மக்கள் தொகை 60-75 இலட்சம். இலங்கை முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-25  லட்சம். ஆக மொத்தம் 1 கோடி மக்கள் தொகை.
இவ்விரு நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு எல்லாமே 95 விழுக்காடு ஒன்றுதான். எல்லாவற்றையும் விட இவர்களின் இறைவழிபாட்டுக் கொள்கை 100 விழுக்காடு ஒன்றுதான். அதனடிப்பபடயில் இவர்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனையும் ஒன்றுதான். நாடுகளுக்கு மத்தியிலான எல்லைகளால் கடந்த 60 ஆண்டுகளாக பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஒரே சமூகம் ஒன்றோடு ஒன்றாக கலக்க வேண்டும். தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதற்கும் இந்த சமூகக் கலப்பு மிகப் பெரிய பங்களிப்பை செய்யும்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அடைத்துள்ள கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தமிழக முஸ்லிம் சமூகம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போல இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையை இரு சமூகங்களும் சேர்ந்து பயன்படுத்திட தேவையான பொருளாதாரம் மற்றும் வழிகாட்டுதலை இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஏற்படுத்திட வேண்டும்.
அதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள், பொருளியல் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அது சமுதாய முன்னேற்றம் என்ற அடிப்படையில் உழைத்திட வேண்டும்.
- CMN சலீம்

திருவல்லிக்கேணியில் திரண்ட பெண்கள்.

திருவல்லிக்கேணியில்  திரண்ட பெண்கள். 

அல்லாஹ்வின் கிருபையினால் சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  மர்கஸில் 24-02-2011 .இன்று.மாலை மக்ரிப்.  தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி.மஸுதாஆலிமா ( நம்முடிய இலக்கு எது ) என்ற தலைப்பில்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)

 





Tuesday, February 22, 2011

பல்வேறு இயக்கங்களில் இருந்து வந்து இ.த.ஜ.வில் இணைந்த சகோதரர்கள்!

 

                                  பல்வேறு இயக்கங்களில் இருந்து வந்து 
                                     இ.த.ஜ.வில் இணைந்த சகோதரர்கள்!







சைதை மருத்துவ முகாம் !எங்கும் தஃவா! எதிலும் தஃவா!


                                 சைதை மருத்துவ முகாம் !எங்கும் தஃவா! எதிலும் தஃவா!





Picture 029.jpg
Picture 018.jpg
Picture 034.jpg
Picture 035.jpg





Picture 027.jpg
Picture 019.jpg
Picture 033.jpg
Picture 036.jpg





Picture 026.jpg
Picture 021.jpg



Picture 025.jpg
Picture 024.jpgPicture 023.jpgPicture 022.jpg
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சைதாபேட்டை கிளையும் சென்னையின் புகழ் பெற்ற பில்ரோத் மருத்துவ மனையும் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது!    

எங்கும் தஃவா! எதிலும் தஃவா!  என இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், போராட்டம் கருத்தரங்கம், அதிகாரிகள் அரசியல்வாதிகள் சந்திப்பு என அனைத்து மட்டத்திலும் மாமறை குர் ஆனை மக்களிடம் சேர்க்கும் வாய்ப்பாக கொண்டு செயல் படுகிறது!

அந்த வகையில் இந்த மருத்துவ முகாமிலும் ஆண்கள் ,பெண்கள் என தனிதனி தஃவா டெஸ்க் அமைத்து , மருத்துவத்திற்கு வந்தவர்களின் மனங்களுக்கு சிகிச்சை செய்தது! இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, மனித குல மீட்சிக்கு இறைவன் அளித்த  மாமருந்தான மாமறை குர் ஆனை நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கி அழைப்பு பணி செய்தது!

ஆட்சி அதிகராங்களுக்கான பேச்சுக்களும் , அழைப்புகளும் நடந்து கொண்டிருக்கும் இன்றைய தேர்தல் சூழலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்சி அதிகாரங்களின் அரசன் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைத்துக் கொண்டிருப்பது அதன் இலக்கை தெளிவு படுத்தியது!
                  

ஆவடியில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி!


ஆவடியில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி!

அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில்,  20-02-2011 ஞாயிறன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் திருவள்ளுவர் தெருவில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி மஸுதா ஆலிமா இறையச்சம் என்ற தலைப்பிலும்,  உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)
-அபூ ஆபிதீன்.

பூவையில் சமூக தீமை எதிரப்பு தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பரப்புரை!


பூவையில் சமூக தீமை எதிரப்பு தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பரப்புரை!

திருவள்ளுவர் மாவட்டம் பூவையில் சமூக தீமை எதிர்ப்பு தொடர்  விழிப்புணர்வு ஆட்டோ   பிரச்சாரம்.   
மார்க்கம்  மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது.   சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை மாநிலம் முழுவதும் செய்து வருகிறது. 
அந்த வகையில், திருவள்ளுவர் மாவட்டம் பூவை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்  விழிப்புணர்வு ஆட்டோ   பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன், மாவட்ட நிர்வாகிகள் ஆவடி ஃபாரூக், முஹம்மது ஆபீத் அலி, மவ்லவி அக்பர் அலி,   ஆகியோர் சமூக தீமைகளின் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள். அவர்களின் ஆக்கப்பூர்வமான உரைகளால் மக்கள் பயன் அடைந்தனர்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
-மசூதா ஆலிமா.

Monday, February 21, 2011

பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; நடவடிக்கை எடுக்க பி .ஜே .வுக்கு துணிவுண்டா..?


பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; 

நடவடிக்கை எடுக்க பி .ஜே .வுக்கு துணிவுண்டா..?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''தான் நல்லவன் என்பது தன்னம்பிக்கை; தான் மட்டுமே நல்லவன் என்பது தலைக்கனம்' அப்படிப்பட்ட தலைக்கனம் கொண்ட தலைவர் அண்ணன், தன்னையும், தனக்கு தலையாட்டும் தம்பிகளையும், தனது ஜமாஅத்தையும்  தான் நேர்வழியில் உள்ளவர்கள் என்றும், மற்றவர்கள்  எல்லாம் கொள்கையில் இருந்து தடம் புரண்டவர்கள் என்றும் பட்டியல் போடுவார். அதோடு, எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனமும் அவ்வப்போது பேசுவார். ஆனால்  உண்மை நிலை என்ன?
'ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம்; அதன் உள்ளே இருப்பதெல்லாம்  ஈரும் பேனாம்' என்றான் ஒரு கவிஞன். அதுபோல கொள்கை உறுதி- குருதி உறுதி எல்லாம் சாமான்யனுக்குத் தானேயன்றி, மேல்மட்டத்திற்கு அல்ல என்பதுதான் அண்ணன் ஜமாத்தின் நிலை. இதை நாம் சும்மா சொல்லவில்லை. சில நாட்களுக்கு முன்னாள் வளைகுடா நாடு ஒன்றிருந்து ஒரு சகோதரர் நமக்கு  ஒரு நூலை அனுப்பி, சில விவரங்களையும் தந்திருந்தார். அண்ணன் ஜமாத்தின் உள்ளே- வெளியே விவகாரங்களை உறுதியுடன் எழுதும் நீங்கள் இதுபற்றியும் எழுதவேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறிய தகவல் அடிப்படையிலும், அவர் அனுப்பிய நூலை ஆதாரமாக கொண்டும் கீழே உள்ள விபரங்களை தருகிறோம்.
செல்வம் கொழிக்கும் வளைகுடா நாட்டின் அண்ணன் ஜமாஅத்தின் மேலாண்மை பதவி வகிக்கும் ஒரு கொள்கைக்குன்று. அந்த நாட்டில் நாத்திகர்களால் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக நாத்திக தலைவரின் கரத்தால் விருது பெற்றுள்ளார். எதற்காக தெரியுமா? நடைபெற்ற அந்த நாத்திக  விழாவுக்கு களப்பணிஆற்றியமைக்காக!
ஓரிறைக் கொள்கையே உயிர்மூச்சு என்று சொல்லிக்கொள்ளும் அண்ணன் ஜமாத்தின் மேலாண்மை, கடவுளே இல்லை என்ற கொள்கையுடைய அந்த விழாவில் என்ன களப்பணியாற்றியது? எதற்காக விருது வாங்கியது?  என்பதை அண்ணன் தான் விளக்கவேண்டும்.
இதோடு நிற்கவில்லை அந்த மேலாண்மை! அந்த விழாவையொட்டி ஒரு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரில், 'கடவுள் இல்லை; கடவுளை கற்ப்பிப்பவன்  காட்டுமிராண்டி; கடவுளைக் கற்ப்பிப்பவன்  முட்டாள் என்ற கொள்கையை விதைத்த பெரியாருக்கு புகழ்மாலையை 'வாழ்த்து' என ஒரு பக்கம் தீட்டுகிறது அந்த மேலாண்மை. அது கீழே;
''விருதுகள் பல பெற்றாலும் பெரியார் விடுதலைக்காகவே பாடுபட்டார். இன்று சிலர் விருதுகளுக்காகவே  விலை போகின்றனர்.
இந்தியத் தலைவர்களிலேயே எவராலும் எட்டமுடியாத  வெற்றியை  எட்டிப்பிடித்தவர்.[அண்ணன் அவுட்]
அடிமை என்று மிரட்டிய ஆதிக்க சக்தியின் ஆணவத்தை புரட்சியால் புரட்டி போட்டவர்[ அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அடிமையினத்தை ஒழிக்கவில்லையா?]
பெரியார் அவர்கள் கடைத்தெருவில் பன்னிரண்டுவயது ராமசாமியாக இருந்தபோது செய்த விதண்டாவாதங்களால் ஏற்பட்ட பிரம்மாண்டம்தான் இன்றைய சுயமரியாதை இயக்கம்.[அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சுயமரியாதையை மண்ணில் விதைக்கவில்லையா?]
கட்டிய வீட்டிற்குள் ஒட்டிய நூலாம்படையை எட்டியே உதைத்திட்டார் ஈரோட்டு பெரும்படை.
தீப்பொறி பறக்க வைத்த தர்க்கங்கள் எதிராளிகளைக் கூட ரசிக்கவைத்தது. [பெரியாரின் தர்க்கங்களை அண்ணனும் ரசித்தாரோ?]
பெரியாரின் கைத்தடி பேரினவாதத்திற்கு பெரும் இடி; தமிழனுக்கே நீதான் தாய் மடி. [ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக அண்ணனுக்கும் பெரியார்தான் தாய் மடியோ?]
உன்னால்தான் தழைத்தது தமிழ்குடி [அண்ணனையும் சேர்த்துதானோ]
அப்படிப்பட்ட தந்தை [?] பெரியார் அவர்களின் இந்த 132  வது பிறந்த நாள் விழாவில் [அண்ணனுக்கு பிறந்த நாள் கொண்டாட  முன்னோட்டமோ?]
அவரின்  உண்மைத்தொண்டன் ........பெரியார் திரு.....................அவர்களுக்கு வழங்கப்படும்............... சமூக நீதி விருது சாலப்  பொருத்தமானது.
[மேலாண்மை வாழ்த்தும் இந்த விருது பெரும் நபர், நாத்திக புத்தகங்களை கொண்டு நூலகம் நடத்துபவர் என்பதும், அவரது நாத்திகப் பிரச்சாரத்தை மெச்சியே விருது வழங்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது]
அய்யா........[விருது பெறுபவர்] செய்துவரும் இப்பணி [ கடவுள் மறுப்புப் பணி] மேலும், மேலும் சிறப்புற்று தொடர்[?] தொண்டாற்ற என்றும் வாழ்த்துகிறோம்.
இவன்.......
என்ன படித்தீர்களா? அண்ணன் ஜமாஅத்தின் கொள்கை உறுதியை..? ஒருவர் செய்வதற்கு ஒரு ஜமாத்தை குறை கூறலாமா? என்று சிலர் நினைக்கலாம். மேற்கண்ட செயலை மேலாண்மை செய்து சுமார் நான்கு  மாதங்கள் கடந்த பின்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மேலாண்மையின் செயலை சமந்தப்பட்ட வளைகுடா நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறதல்லவா?
எனவே இப்போதும் சொல்கிறோம் அண்ணனுக்கு துணிவிருந்தால் இந்த மேலாண்மையை அடிப்படை  உறுப்பினரிலிருந்து நீக்கத் தயாரா? அதை உணர்வில் அறிவிக்கத் தயாரா? முடியாது. ஏனெனில், இந்த மேலாண்மை கருவேப்பிலை அல்ல எடுத்து வீசுவதற்கு; அண்ணன் ஜமாஅத்தின் 'எண்ணை வயல்' என்று கூறுகிறார்கள் சில  சகோதர்கள்.
எண்ணைவயலை  விட ஏகத்துவமே முக்கியம் என்று அண்ணன், மேலாண்மையை நீக்கிக் காட்டுவாரா? இல்லை 'நீக்குப் போக்காக' நடந்து கொள்வாரா என எதிர்பார்ப்பதோடு, இந்த மேலாண்மை பற்றி இதுவரை தனக்கு தெரியாது என்று அண்ணன் கூறினால், இந்தவிஷயத்தை அமுக்கிய சம்மந்தப்பட்ட வளைகுடா  நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை என்றும் அண்ணனை நம்பும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
குறிப்பு: சிவப்புக் கலரில் உள்ளவைகள் நமது கருத்துக்கள்.
 -அப்துல்முஹைமீன்

Friday, February 18, 2011

தவ்ஹீத் வாதிகளிடம் பணிந்த தர்கா வாதிகள்! நாகூர் பிரச்சனையில் சமரசம்!

தவ்ஹீத் வாதிகளிடம் பணிந்த தர்கா வாதிகள்!
நாகூர் பிரச்சனையில் சமரசம்!
photo0116.jpg Photo0115.jpg

கடந்த சில நாட்களுக்கு முன் நாகூர் இ.த.ஜ. நகரத் தலைவரை , தமிழக தர்கா பேரவை தலைவரும் தி.மு.க. பிரமுகருமான சச்சா முபாரக் ஆட்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி விட்டு தாக்கப் பட்டவர்கள் மீதே தங்களின் அரசியல் பலத்தால் காவல்துறையை கொண்டு வழக்கு போட்டதும் நாம் அறிந்ததே !

இந்த நிலையில் நாகூரில் மீலாது எதிர்ப்பு பொது கூட்டத்திற்காக சென்றிருந்த மாநில பேச்சாளர் முஹம்மத் மைதீன் பொதுக்கூட்டத்திலும் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்! நாளைக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வில்லை என்றால் இன்ஷா அலலாஹ் தாக்கப் பட்டவன் மீதே வழக்கு பதிந்த காவல் துறை அலுவலகத்தை முற்றுகை என அறிவித்தனர்.இயக்க பேதமின்றி 200 கும் மேற்பட்ட ஏகத்துவ சகோதரர்கள் ஒன்று திரண்டனர்.  

நிலைமை மோசமடைவதை அடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை முடிவு செய்து சச்சா முபாரக்கிடம் வேறு வழியில்லை ! நீங்கள் சமரசம் பேசி முடித்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் நாங்கள் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என எச்சரித்ததை அடுத்து சச்சா முபாரக் நேரில் வந்து மன்னிப்பு கேட்டதோடு இனி எந்த வகையிலும் ஏகத்துவ பிரசாரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என இருபது ருபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கை எழுத்திட்டார்!

இணைவைப்பின் கோட்டையான   நாகூரில் இனி ஏகத்துவப் பிரசாரத்துக்கு இடையூறு செய்யமாட்டோம் !என தமிழக தர்கா  பேரவை தலைவர் எழுதிக் கையெழுத்திட்ட சம்பவம் இஸ்லாமிய வரலாறுகளை நினைவு படுத்தியது!ஏகத்துவ வாதிகள் ஒன்றிணைந்தால் எந்நாளும் வெற்றி என்பதை எடுத்து சொல்லியதோடு , எல்லோரோடும் இணக்கமாக இருப்போம் ! ஏகத்துவத்தில் உறுதியாக இருப்போம் ! எனும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதை ஒருங்கிணைக்கும் சக்தியாக விளங்கும் என்பதை இச்சம்பவம் உறுதி படுத்தியது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

scan0008.jpgscan0009.jpgscan0010.jpgscan0011.jpg
  

இதஜ குவைத் மண்டலம் சார்பாக ரத்த தான முகாம்!


BLOOD%203.jpg


"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"[5:32 ]
 حمله التبرع بالدم
இதஜ குவைத் மண்டலம் சார்பாக ரத்த தான முகாம்.
[1 'ST  BLOOD  DONATION  CAMB  FROM  INTJ  KUWAIT ]
 
நாள்; 04 -03 -2011 வெள்ளிக்கிழமை[இன்ஷா அல்லாஹ்]
நேரம்; மாலை 2 மணிமுதல்,
இடம்; ஜாப்ரியா ரத்த வங்கி.
 
அன்புடன் அழைக்கிறது; இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.[INTJ]
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054
 
வெளியீடுமுகவைஅப்பாஸ்.
மண்டலத்தலைவர் இதஜ குவைத்.
 


--