Wednesday, February 16, 2011

மமகவுக்கு எதிரான தீர்மானம்; நெஞ்சமெல்லாம் வஞ்சம்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
ப்பாவியாய் நின்ற அண்ணன் கழுத்தில் மாலையிட்டு, தலைவராக்கிய அந்த பொதுக்குழு, அண்ணனின் ஆசைப்படி கடந்த நாடளுமன்றத் தேர்தலில் எடுத்த அதே முடிவை, இந்த சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாட்டிலும் தீர்மானமாக கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானம்; மமகவை தோற்கடிப்பது என்பதுதான்.

1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக
அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும்
தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை
சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை
அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்க்ளைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது
.
அண்ணன் ஜமாஅத்தின் தீர்மானத்தில் கூறியுள்ளபடி, மமக சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதித்துள்ளது உண்மை எனில், தனது வாக்குச்சீட்டின் மூலம் சமுதாயம் வெளிப்படுத்தட்டுமே! அதற்குள் தீர்மானம் நிறைவேற்றும் அவசியமென்ன? ஒருவேளை அண்ணன் ஜமாஅத்துதான் சமுதாயம்- சமுதாயம்தான் அண்ணன் ஜமாஅத் என்ற என்னமோ..?

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால், மத்தியசென்னையில், அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த சகோதரர் அப்துல்லத்தீப் ஸாஹிப் அவர்களும், திமுக கூட்டணியில் முரசொலி மாறனும், மூன்றவாது அணி சார்பில் பேராசிரியர் காதர்மொஹிதீன் அவர்களும் மோதும் நிலை. சமுதாயக்கட்சியின் இரு பிரமுகர்கள் மோதுவதை குறித்து, சமுதாயத்தில் பல்வேறு கருத்துக்கள் எழும்பியதையொட்டி, பேராசிரியர் காதர்மொஹிதீன் அவர்கள் தாமாக முன்வந்து போட்டியிலிருந்து விலகி பெருந்தன்மையோடு நடந்துகொண்டார். இப்படிப்பட்ட பெருந்தன்மையை பேரறிஞர்[!]ரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது தனிவிஷயம்.

சில நேரங்களில் முஸ்லிம்லீக்கும்- தேசியலீக்கும் சில தொகுதிகளில் மோதியுள்ளது. ஆனால் இவ்விரு அமைப்புகளும் அதை தேர்தல் போட்டியாகத்தான் கருதியதேயன்றி, அண்ணன் ஜமாஅத்தைப் போல் வஞ்சம் வைத்து வருஷா வருஷம் தீர்மானம்  நிறைவேற்றவில்லை. அவ்வளவு ஏன்? சங் பரிவார்கள் கூட முஸ்லிம் அமைப்புகளை களம் இறங்கி தோற்கடிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியதில்லை. ஆனால் 'நாங்கள்தான் சமுதாய பாதுகாவலர்கள்' என தம்பட்டம் அடிக்கும் அண்ணன் ஜமாஅத், இந்த தீர்மானத்தில் மூலம் சங்பரிவாரையும் மிஞ்சிய முஸ்லிம் விரோதிகள் என காட்டிவிட்டார்கள்.

அடுத்து, இவர்கள் கூறியது போன்ற துரோகங்கள் மமக செய்வதாகவே வைத்துக்கொள்வோம். சமீபத்தில் திராவிடக்கட்சிகள்  முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகங்கள் என்று ஒரு நாளிதழில் அண்ணன் பட்டியலிட்டாரே! அப்படிப்பட்ட இரு திராவிடக்கட்சிகளை மண்ணைக்கவ்வ வைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றாது ஏன்? காங்கிரஸையும் தாண்டி முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த கட்சி ஒன்று உண்டா? அந்த காங்கிரஸை மண்ணைக் கவ்வவைப்போம் என்று தீர்மானம் போடாதது ஏன்? போடமுடியாது. ஏனெனில் தேர்தலில் போட்டியிடாமலேயே தேர்தல் செலவுக்கு[?] லகரங்களை பெறவேண்டுமே!

மேலும், மமகவை நோக்கி குற்றம்சாட்டும் சமுதாய துரோகங்களை விட்டும் அண்ணன் ஜமாஅத் தூய்மையானதா என்றால் இல்லை என்பதற்கு,திருவிடைச் சேரி படுகொலைகளும், ஊர்கள் தோறும் ஜமாஅத்தில் குழப்பம் உண்டாக்கி தோல்விக்குப் பின் தனிப்பள்ளி காண்பதும், கடயநல்லூர்-மேலப்பாளையம்-திருச்சி-எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு, மற்றும் பட்டப்பகலில் பாக்கர் அமைப்பை திருடியது உள்ளிட்ட பல விஷயங்களில் அண்ணன் ஜமாஅத்தை நோக்கி மக்களின் குற்றப்பார்வை உள்ளதே! ஆக மமகவுக்கு எதிரான தீர்மானம், சமுதாயத்தின் குரல் அல்ல. மாறாக, சமுதாயப் போர்வையில் சண்டித்தனம் செய்யும் ஒருவரின் குரலே என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

இறுதியாக, மமகவை பெற்றெடுத்த தமுமுகவிற்கு ஒன்றை நினைவூட்டுகிறோம். பிறந்த இரண்டே மாதங்களில் தேர்தல் களம் கண்டபோது, அனைத்தையும் மறந்து, நீங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரவுக்கரம் நீட்டி, தேர்தல் பிரச்சாரம் செய்து, ஆளும்கட்சியால் மத்திய சென்னையில் மமக தாக்கப்பட்டபோது கண்டனக்குரல் எழுப்பி, தனது சகோதர பாசத்தை  வெளிப்படுத்தினார் பாக்கர். அவரது அமைப்பை அண்ணன் கள்ளத்தனமாக பதிவு செய்து உரிமை கொண்டாடியபோது, சக சமுதாய இயக்கம் என்ற ரீதியில் பீஜேயின் காவாளித்தனத்தை கண்டிக்க நீங்கள் முன்வரவில்லை. எங்கே கண்டித்தால் தேர்தலில் அண்ணனின் ஆதரவு நமக்கு கிட்டாமல் போய்விடுமோ என்று நீங்கள் கருதி மவ்னம்  காத்திருக்கலாம்.

ஒன்றை மமக தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தனக்கு தீங்கிழைத்தவனை யானை நீண்ட நாள் நினைவில் வைத்திருக்கும் என்று ஒரு கதையுண்டு. அது உண்மையா பொய்யா என்பது தெரியாது. ஆனால் அண்ணன் ஆயுளுக்கும் பகை மறப்பவரல்ல. அவ்வாறு அண்ணன் பகை மறக்க நீங்கள் திராவிடக் கட்சியல்ல என்பதை ஆணித்தரமாக உணர்ந்துகொண்டு, அரசியல் ஆதரவுக்காக அநீதியைக் கண்டு கண்மூடிகொள்ளும் செயலை தமுமுக விட்டொழிக்கவேண்டும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கண்டிக்க முன்வர வேண்டும். அதுதான் தமுமுகவின் உண்மையான சமுதாயப் பணியாக இருக்கும்.


--
2/15/2011 08:40:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment