Friday, February 11, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[17]





செய்தி; அரசு நிலம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் எடியூரப்பா மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்து  உத்தரவிட்டார். இந்நிலையில், உடனடியாக முதல்வர் மீது  2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்ச் பட்டிக்காட்டான்வழக்குதான போட்டிருக்காங்க! குற்றப்பத்திரிக்கை தாக்கல் பன்ன பல வருஷம் ஆகும். அப்பிடியே தாக்கல் பண்ணுனாலும் குற்றப்பத்திரிக்கை ஆங்கிலத்தில இருந்தா, எனக்கு  இந்தில வேணும்னு கேட்கலாம். இந்தில தந்தா எனக்கு கன்னடத்துல வேணும்னு கேட்டு காலத்த கடத்தீரலாம். எதுக்கும் இது சம்மந்தமா தமிழ்நாட்டு அம்மாகிட்ட ஒரு ஆலோசனை பண்ணுங்க மிஸ்டர் எடியூரப்பா!

கர்நாடக  முதல்வர் எடியூரப்பா;   பந்தின் மீது ஏற்பட்ட ‌சேதத்தின் மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடியாக கணக்கி்டப்பட்டுள்ளது. இந்த சேதத்தி்ற்கு காரணமான கவர்னர் பரத்வாஜை, மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.பந்த்தின்போது ஏற்பட்ட இழப்புக்கு கவர்னர் பரத்வாஜே முழு காரணம் இது‌தொடர்பாக, அவர் மீது வழக்கு தொடரப்படும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; சூப்பரப்பூ! அவர் உங்க மேல வழக்கு போட அனுமதிச்சாருல்ல. விடப்பிடாது! எல்லா மாநிலத்துலயும், ஆளுங்கட்சி எதிர்கட்சியை எதிர்த்து அரசியல் பன்னுனா, நீங்க கவர்னரை எதிர்த்து பந்த் பண்ணி நான் 'வித்தியாசமான'[!?] அரசியல்வாதின்னு காட்டீட்டீங்க! 
 
செய்தி; வரி ஏய்ப்பு! நடிகைகள் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை!
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அதிரடி சோதனை, பல தஸ்தாவேஜுகள் சிக்கியதுன்னு பரபரப்பா ரெண்டு நாளைக்கு செய்தி வருது. பிறகு நடவடிக்கையைத் தான் காணோம். சுருக்கமா சொன்னா 'ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு; ஆனா 'பினிஸிங்' சரியில்லையே!
 
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்; திரைத்துறையினர் ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கக் கூடாது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்மருத்துவரய்யா! என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான்  பேசுறீங்களா? நீங்க மாம்பழத்த பழுக்க வைக்க தோட்டத்துக்கு போனாலும், அறிவாலயத்துக்கு  போனாலும், ரெண்டு பேருமே திரைத்துறை சம்மந்தப்பட்டவுக தானே! இல்ல விஜயகாந்த மனசுல வச்சுக்கிட்டு சொன்னீகளா?
 
இதஜ தலைவர் பாக்கர்பிப்ரவரி மாதம் முழுவதும் 'சமூகத் தீமைகள்' எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத்தீமைகளை ஒழிக்க, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்உங்க அமைப்ப  ஒழிக்கிறதுக்கு ஒரு சாரார் ஓய்வில்லாம  பாடுபட்டுக்கிட்டு இருக்கையில, நீங்க அதை கண்டுகிராம, சமூகத் தீமைகளை ஒழிக்கிறதில, நீங்க கவனம் செலுத்துறது உள்ளபடியே நெகிழ்ச்சியா இருக்குதுங்க.
 
 

0 comments:

Post a Comment