Sunday, February 27, 2011

'ஹாமித்பக்ரியும்; பீஜேயின் முரண்பாடுகளும்! [பாகம்;1]


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அடுத்தவர் அந்தரங்கத்தை அலசுவதையே அழைப்புப் பணியாக கொண்டிருக்கும் அண்ணன் ஜமாத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில், பிரபல மார்க்க அறிஞரான மவ்லவி. ஹாமித் பக்ரி மன்பஈ அவர்கள், தர்காவில் கையேந்துவது போன்ற இரு படங்களை வெளியிட்டு, 'எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே என்று வருத்தப்படுபவர்கள் நேர்வழி பெற இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! 
என்று சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தார்கள்.

இதையடுத்து நாம், ''ஹாமித் பக்ரிக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அண்ணன் ஜமாஅத்! என்ற தலைப்பில் கட்டுரை வரைந்தோம். பார்க்க;http://amaibbukal.blogspot.com/2010/10/blog-post_11.htmlதற்கு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிலளிக்க தொடங்கிய அண்ணன், ஆறு தொடர்களோடு 'முற்றும்' என்று போடாமலேயே மூர்ச்சையாகிவிட்டார். நாமும் காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனதே  தவிர, அவர் அந்த தொடரை முழுமைப் படுத்துவதாக தெரியவில்லை. எனவே நாம் ஏற்கனவே அறிவித்தபடி, மவ்லவி ஹாமித்பக்ரி அவர்கள் விஷயத்தில் அண்ணனின் முரண்பாடுகளை பட்டியலிடுகிறோம். 

முதலாவதாக, அவர் எழுதிய தொடரின் தலைப்பிலேயே தனது கயமைத்தனத்தை  வெளிப்படுத்துகிறார். 'ஹாமித்பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்' என்று தலைப்பிடுகிறார். இவர் உண்மையாளர் என்றால், 'ஹாமித்பக்ரியை கைவிட்டது ஏன்? என்று பொதுவாக அல்லவா தலைப்பிட்டிருக்க வேண்டும்? அதை விடுத்து மேற்கண்ட தலைப்பை வைப்பதன் மூலம் இதைப் படிப்பவர்களுக்கு தமுமுகதான் கைவிட்டது போன்ற தோற்றத்தை முதலில் பதிவு செய்துவிட்டு பின்னர் தனது வழக்கமான புராணத்தை தொடங்குகிறார் பீஜே. 

முதல் தொடரில், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், கைது செய்யப்படுகையில் மேலாண்மைக்குழு தலைவராக இருந்தவரும், தமுமுகவின் தலைமைக் கழக  பேச்சாளருமான மவ்லவி ஹாமித்பக்ரி உள்ளிட்ட சிலரின் கைது பற்றி எழுதுகிறார் பீஜே. ஹாமித்பக்ரி கைது செய்யப் பட்டபோதும் அவரது வீடு, ஆயிஷா சித்தீக்கா பெண்கள் மதரஸா, அவரது தாவா செண்டர் ஆகியவை  சோதனை என்ற பெயரில் போலீசார் அல்லோலகல்லோல படுத்தியபோதும்  தாமும், அன்றைய தமுமுக நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். மேலும், பேர்ணாம்பட்டு கிளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தபோது  அதை வேண்டாம் என்று தடுத்ததையும் ஒத்துக் கொள்கிறார். 

இவ்வாறு பீஜேயும், தமுமுகவும் ஹாமித்பக்ரி அவர்கள் கைது செய்யப்பட்டபோது ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் அமைதி காத்ததற்கு  காரணம் அவரது தீவிரவாத தொடர்பு பற்றிய ஆதாரங்கள்  தம்மிடம் இருந்ததே என்று பின்னால் எழுதுகிறார் பீஜே. அவர் கூறும் தீவிரவாத தொடர்ப்பு குறித்த ஆதாரங்களை பின்னர் அலசுவோம். ஆனால், பீஜே கூறியது போன்று ஹாமித்பக்ரிக்கு தீவிரவாத தொடர்பு இருந்தது உண்மை. அதனால் கைது செய்யப்பட்டார் என்றே வைத்துக் கொள்வோம். 

ஒரு மாபெரும் இயக்கமான தமுமுகவின் மாநிலப் பேச்சாளர்-ஒரு தவ்ஹீத் அமைப்பின் மேலாண்மைக் குழு உறுப்பினர், தீவிரவாத திட்டங்களை ரகசியமாக செய்கிறார் என்று தெரிந்தும் அவரை காவல்துறை கைது செய்யும்வரையும், ஏன் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட தமுமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும், அதஜவின் மேலாண்மைக்குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி அறிவிப்பு செய்யாதது ஏன் என்பதற்கு பீஜெயிடம் எந்த பதிலுமில்லை. 

ஆனால், ஹாமித்பக்ரி அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் உணர்வில் வெளியான முக்கிய அறிவிப்பு என்ற செய்தியையும்,
பெண்கள்   மதரசாக்களுக்கும் பீஜெயுக்கும் எந்த தொடர்புமில்லை என்ற செய்தியையும் காட்டி பார்த்தீர்களா! நானும், தமுமுகவும் அன்றைக்கே மறைமுகமாக ஹாமித்பக்ரிக்கு உதவ மாட்டோம் என்று சொல்லிவிட்டோம் என்று காட்ட முனைகிறார். அரசு நடவடிக்கை விஷயத்தில் ஹாமித் பக்ரிக்கு உதவமாட்டோம்   என்ற தமுமுகவின்  மறைமுகமான அறிவிப்பும், பெண்கள் மதரசா குறித்த பீஜேயின் நிலைப்பாடும் ஹாமித்பக்ரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக ஆகுமா? இப்படித்தான் ஒரு தீவிரவாத  ஆலோசனையில் பங்கெடுத்தவர் என்று பீஜெயால் காட்டப்படும் ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்கும் லட்சணமா? ஹாமித்பக்ரியின் நடவடிக்கையை கடைசிவரை அனுமதித்துவிட்டு அல்லது கண்டும் காணாமல் இருந்துவிட்டு, அவர் கைது செய்யப்பட்டவுடன்  அவருக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று கழற்றி விடுவது  போல் அல்லவா உள்ளது இந்த இரு அறிக்கைகள்? இல்லையேல்  ஹாமித்பக்ரியை பகிரங்கமாக நீக்கி,  அதை பகிரங்கமாக அறிவிக்க தயங்கியது ஏன்? என்பதற்கு பீஜே பதிலளிக்க வேண்டும். 
  -சாட்டை தொடர்ந்து சுழலும் இன்ஷா அல்லாஹ்.


--
2/26/2011 07:27:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment