Wednesday, February 9, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்- 16







தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்; ""வரும் சட்டசபை தேர்தலில் எனது தொண்டர்கள் விரும்பினால் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிடுவேன்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவத பத்தி பிறகு பார்ப்போம். மொதல்ல ஒழுங்கா சட்டசபைக்கு போயி கருணாநிதியை எதிர்த்து, தொகுதி மக்கள் தேவையைப் பத்தி பேசுற வழிய பாருங்க.
 
தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்; கூட்டுறவு கடன் தள்ளுபடியால், பொள்ளாச்சி
அ.தி.மு.க., எம்.பி., சுகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி
பெற்றுள்ளார். உடுமலை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகவேல் ஒரு லட்சத்து
39 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி மனோன்மணி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும்
கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; இதனால் தாங்கள் சொல்ல வருவது என்ன? அதிமுக எம்.பியும், எம்.எல்.ஏவும் கடனைக் கட்டமுடியாத அளவுக்கு  ஏழைகள் என்றா? அல்லது 'தள்ளுபடி' விஷயத்துல நாங்க கட்சி வேறுபாடு பாக்கிறதில்ல என்றா?
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பேட்டி :கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் ஒரு
பிரயோஜனமும் இல்லை. ஒரு பக்கம் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்க, இன்றும்,
பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் நோயாளிகள் கால் கடுக்க காத்துக்
கிடக்கின்றனர். எனவே, அந்த திட்டத்தை நிறுத்திவிட்டு, அரசின் 10 சூப்பர்
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளைக் கட்டினால், தமிழகத்துக்கு நல்லது. இதை எல்லாம்
மக்கள் எங்களிடம் குறைகளாகக் கொட்டும் போது, எப்படி நான் பேசாமல் இருக்க
முடியும்? காங்கிரஸ்காரர்களான நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; நாங்க யாருக்கும் அடிமையில்லன்னு நீங்க சொல்றீங்க; ஆனால் உங்க கட்சி உறுப்பினர் சட்டசபையிலேயே,  'கலைஞர் உள்ளமே கடவுள் இல்லமே' என்று பாடுகிறார்களே!
முதல்வர் கருணாநிதி; அந்த [திராவிட] பெயரை வைக்காமல் யாரும் தமிழ்நாட்டில்
கட்சி தொடங்கமுடியாது. திராவிடம் என்றுதான் புதுக்கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அய்யா! திராவிட பாரம்பரியத்துல வந்த நீங்க, ஒரு பெரிய திராவிடக் கட்சிக்கு தலைவரா இருக்குற நீங்க, 'திராவிட' என்ற வார்த்தைக்கு சொந்தம் கொண்டாடாம, 'திராவிட' என்ற வார்த்தை சேர்த்து புதிய கட்சிகள் உருவாவதை திராவிடக் கொள்கையின் வெற்றி என பெருமிதப் படுறீங்க. அனா சிலர், ஓரிறைக் கொள்கையை விளக்கும் 'தவ்ஹீத்' என்ற வார்த்தைக்கு ஏகபோக உரிமை கொண்டாடி, 'தவ்ஹீத்' என்ற வார்த்தையை சேர்த்து அமைப்பு தொடங்கினா, கள்ளத்தனமா அபகரிப்பதோட, அடுத்தவன் காசை செலவு பண்ணி கேசு   வேற போடுறாங்கய்யா! இதை எங்கபோயி சொல்லுறது..?
முன்னாள்  காங்கிரஸ் பேச்சளார் தமிழருவி மணியன்; காமராஜர் இறந்தபோது அவரது சொத்தாக பத்து வேட்டி சட்டையும்- 62 ரூபாய் பணமும் தான் இருந்தது. இந்த ஜ்காமராஜர் ஆட்சியைத்தான் ஐம்பதாயிரம் ஊதியம் பேரும் காங்கிரஸ்காரர்கள்[ ச.ம.உ] தமிழகத்தில்  கொண்டுவரப் போகிறார்களாம். சித்த சுவாதீனமில்லாத மனிதர்கள் கூட இதை நம்பமாட்டார்கள்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; ''யார் நல்லாட்சி தந்தாலும் அது காமராஜர் ஆட்சிதான் என்று ஏற்கனவே ஒரு காங்கிரஸ் தலைவர் சொல்லிவிட்டார். போகிற போக்கில், 'கருணாநிதி ஆட்சியே காமராஜர் ஆட்சிதான்' என்று காங்கிரசார் சொல்லாமல் இருந்தாலே பெரிய விஷயம்தான் போங்க.

 

0 comments:

Post a Comment