Wednesday, February 16, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான் [18]just4jokes



செய்தி; மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கைதுசெய்யப்பட்ட  4 பேராசிரியைகளுக்கு திடீர் நெஞ்சு வலி; ஆஸ்பத்திரியில் அனுமதி.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; கைது பண்ணுன உடனே அரசியல்வாதிகளுக்குத்தான் நெஞ்சுவலி வரும்னு பாத்திருக்கோம். இப்ப ஆசிரியைகளுக்கு  கூட வருதே?  ஆமா! ஒரே நேரத்துலயா நாலுபேருக்கும் ஒரே வியாதி வரும்..?
 
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி; வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை கண்டு பிடித்து திரும்ப கொண்டு வர இன்னும் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது இந்தியாவின் பணம், இந்திய மக்களின் பணம். அதை விடக்கூடாது. இந்த பணம் திரும்ப வரும் என்ற உத்தரவாதம் வேண்டும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்தியாவின் கறுப்பு பணம் பற்றிய விவரத்தையும், அதனை இந்தியர்கள் யார்- யார்? போட்டு வைத்து இருக்கிறார்கள் என்ற ரகசியத்தையும் வெளியிட முடியாது என மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜியும், அவருக்கு முன்னாடியே பிரதமரும் சொல்லீட்டாங்க. நீங்க  யார்ட்ட இந்த கோரிக்கைய வைக்கிறீங்க..?




நடிகை விஜயசாந்தி;, தெலுங்கானா மாநிலத்தை இங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் எதிர்க்கிறார்கள். அவர்கள் தெலுங்கானாவுக்கு ஆதரவாக பதவி விலக மறுக்கிறார்கள். தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக் கொல்வோம்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; மேடைக்குமுன்னாடி கேமராவ பாத்ததும் சினிமா சூட்டிங்குன்னு நெனச்சு பேசிட்டாங்க போல தெரியுது. 
பாஜக தேசியத்தலைவர் நிதின்கட்காரி; நேரு, இந்திராகுடும்ப வாரிசு ராகுல் காந்தி குடும்ப  அரசியல் பற்றி பேசுகின்றார். இவரே வாரிசு முறையில் தான் அரசியலுக்கு வந்து உள்ளார். சுவரில் போஸ்டர் ஒட்டிய நான் அகில இந்திய தலைவர். ஆனால் காங்கிரசில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், சிதம்பரம் யாராவது தலைவராக வரமுடியுமா? 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; வாஸ்தவம்தான்! ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகமுங்க! போஸ்டர் ஒட்டுன தொண்டர்ங்கின்றனலதான் உங்களுக்கு தலைவர் போஸ்டிங் கெடைச்சதா..? இல்ல உங்க கையில உள்ள 'பசை'க்காக கெடச்சதுங்களா..?
 
கர்நாடக முன்னாள் முதல்வர்குமாரசாமி: நான் கர்நாடகமுதல்வராக இருந்த போது,துணை முதல்வராக இருந்தவர்தான் எடியூரப்பா. என் மீதுஅவர் ஊழல் புகார் கூறினால்,அதில் அவருக்கும் தொடர்புஇருக்கும் என்பதை மறந்துவிட்டார். எங்கள் குடும்பசொத்துக்களை அவர் பறிமுதல் செய்தால், அவர் செய்தமுறைகேடுகளை நாங்கள்வெளியிட வேண்டியிருக்கும்.எடியூரப்பா பழி வாங்கும்போக்கை கைவிடுவது நல்லது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அதாவது 'நான் மட்டும் ஊழல் பண்ணல; எனது ஆட்சியில துணை முதல்வரான எடியூரப்பாவும்தான்  தான் ஊழல் பண்ணுனாருன்னு சொல்ல வர்றீங்களா..? துணை முதலைமைச்சர் சேக்குறது   நிர்வாகம் பன்னவா..? இல்ல துணைக்கு துணையா ஊழல் பன்றதுக்குத்தானான்னு கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும்.  
 
அ.தி.மு.க., பேச்சாளர் பழ.கருப்பையா: கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சந்தித்தது அவ்வளவு மோசமானதோல்வி அல்ல. அப்போதுஅ.தி.மு.க., கூட்டணி 1கோடியே 33 லட்சம் ஓட்டுகளை பெற்றது. இதில்அ.தி.மு.க., மட்டும் 1கோடியே ஏழு லட்சம் ஓட்டுகளை பெற்றது. ஆனால்,தி.மு.க., தனித்து 87 லட்சம்ஓட்டுகளை மட்டுமே பெற்றது.அதன் கூட்டணி 1கோடியே 46 லட்சம் ஓட்டுகளை பெற்றது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஓட்டு சதவிகிதத்த வச்சு ஆளுநர் பதிவிப் பிரமாணம் செஞ்சு வைக்கமாட்டாரு; ஆட்சிக்கு வர  சீட்டு சதவிகிதம்தான்  வேணும்னு மொதல்ல புரிஞ்சுக்கங்க.
 
விஷ்வ இந்து பரிஷத்தின்அகில உலக தலைவர் அசோக்சிங்கால்: காங்கிரஸ் இன்று பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறது. சோனியாவே பெரியஊழல்வாதி. அவரால் எப்படிஊழலை ஒழிக்க முடியும்? இதையெல்லாம் சந்திக்கஒரே வழி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; சரி ஏற்படுத்தீருவோம். ஆனா மக்கள் விழிப்படைஞ்ச  பின்னாடி, நீங்க 'மதவாத' அரசியலும் பண்ணமுடியாது. என்ன ஓகேவா..?
 
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா; ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், நாட்டிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கு, உலகளவில் கருணாநிதி குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; வெறும் ஒத்த ரூவா சம்பளம் வாங்குன நீங்களே, கோடிக்கணக்குல சேத்ததா உங்கமேல ஆயிரத்தெட்டு வழக்கு இருக்கு. இதில 'குடும்பத்தோட' அரசியல் பண்ணுற அவங்கட்ட இருக்காதா என்ன?
 
செய்தி;ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள துனிஷியாவில் இதுவரை 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய ஜைனுல் ஆபிதீன் என்பவர் நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்.சவூதி அரேபியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; மக்கள் விழிப்படைஞ்சுட்டா, இந்த ஜைனுல் ஆபிதீன் மாதிரி ஆளுக, துண்டக்காணோம்; துணியக்காணோம்ன்னு ஓடுறத தவிர வழியில்ல. ஹூம்.. துனிஷியாவுல மக்கள் விழிப்புணர்வு அடைஞ்சுட்டாங்க. ஆனா....?
 
“நாம் தமிழர்” கட்சி தலைவர் சீமான்;ஈழத்தில் தமிழின படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் பிரதான நோக்கமாகும்.  வருகிற சட்டசபை தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை. நீண்ட பயணத்தின் இடையே இளைப்பாற கிடைத்த நீர்த்தேக்கமாகவே இந்த சட்டபேரவை தேர்தலை நாம் தமிழர் கட்சி கருதுகிறது. 2011-2016-ல் வரும் இடைத்தேர்தலே எங்கள் களம்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஜெயில்ல இருந்து விடுதலையானப்ப, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட  வாய்ப்புன்னு  சொன்னது வெறும் பரபரப்புக்குத்தானா..?
 

0 comments:

Post a Comment