Saturday, February 12, 2011

மக்களை மாக்களாக்கி அரியாசனம் ஏறிய அண்ணன்!

மக்களை மாக்களாக்கி 

அரியாசனம் ஏறிய அண்ணன்!

அண்ணன் பீஜே, சமீபத்தில் மீண்டும் ததஜ மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதையொட்டி, அண்ணன் 'மீண்டும் அரியாசனம் ஏறிவிட்டார்' என்று சில சகோதரர்கள் விமர்சிக்கிறார்கள். அது தவறாகும். ஏனெனில் அண்ணன் தொடர்ந்து நான்காவது முறையாக மாநில நிர்வாகத்தில்தான் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
தமுமுகவிலிருந்து பிரிந்தவுடன்,

  1. துணைத்தலைவர்.
  2. மாநிலத்தலைவர்.
  3. மேலாண்மைக்குழு உறுப்பினர்.
  4. மாநிலத்தலைவர். [தொடர்கிறார்]
இவ்வாறாக அண்ணன் தொடர்ந்து மாநில நிர்வாகத்தில் தான்  இருக்கிறார். ஆனால் இது பைலாவுக்கு முரணானது. கேட்டால், 'தொடர்ந்து' என்ற பதத்தை  பிடித்துக் கொண்டு, ''நான் தொடர்ந்து இருக்கவில்லையே. இடைவெளி விட்டு மக்கள் தேர்ந்தெடுத்தால் தவறில்லை. ஒரு பதவிக்காலம் விட்டு மீண்டும் பதவிக்கு வர தடையில்லை என்று பைலாவில் உள்ளது என்று பக்கா 'எஸ்கேப்' ஆகிறார். திருத்தப்பட்ட பைலாவில் அவ்வாறு உள்ளது என்பது சரிதான். ஆனால் இது பீஜேவுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர் தொடர்ந்து நான்கு முறையாக மாநில நிர்வாகத்தில் இருக்கிறார் எனபதுதான் உண்மை.

அதஜ என்பதிலிருந்து ததஜ ஆன பின் முதலில் துணைத்தலைவர். அதைத் தொடர்ந்து மாநிலத்தலைவர். அதைத் தொடர்ந்து பாக்கரை  கழட்டிவிடும் நோக்கில் நடத்தப்பட்ட காமராஜர் அரங்க பொதுக்குழு நாடகத்தில், நிறுவனத் தலைவராக முடிசூட்டிக்கொண்டார். இது கிளைத்தலைவர் பதவிக்கு ஒப்பானது என்று யாரும் கூறமாட்டார்கள் என நம்புகிறோம்.


அடுத்து கொஞ்ச நாளில் மேலாண்மை குழு அமைத்து அதில் தன்னை உறுப்பினர் என்று கூறிக்கொண்டார். அதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் மாநிலத்தலைவர். ஆக தொடர்ந்து நான்காவது முறையாக கோலோச்சுகிறார் என்பதுதான் உண்மை.

மேலும், தான்  இடைவெளிவிட்டு மீண்டும் பதவிக்கு வந்ததாக  பாமரர்களை நம்பவைக்கிறார். மேலாண்மைக்குழு உறுப்பினர் பதவி என்பது மாநில நிர்வாகம் அல்ல என்று காட்ட முனைகிறார். ஆம்! அது மாநில நிர்வாகத்தைவிட உயர்ந்தது. மாநில நிர்வாகத்தின் குடுமியை கையில் வைத்துள்ளதுதான் மேலாண்மைக்குழு. இந்த மேலாண்மைக்குழு 'மாநில நிர்வாகம்' என்ற பிரிவின்  கீழ்தான் பைலாவில் வருகிறது.
மேலும், இந்த மேலாண்மைக் குழுவுக்கு  கீழேதான் மாநில நிர்வாகம் பற்றிய விபரங்களே  வருகிறது. அதோடு மாநில நிர்வாகக் குழுவை கூட்டும் அதிகாரம் மேலாண்மைக் குழுவிற்கு உண்டு. மாநிலப் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் மாநில நிர்வாகத்திற்கு இல்லை. மேலாண்மைக் குழுவிற்கே உண்டு. இத்தகைய அதிகாரம் வாய்ந்த மேலான்மைக்குழுவில் இருந்த பீஜே, இடையில் நான் 'சும்மா' இருந்தேன்; இப்ப  மறுபடியும் யானை என் கழுத்தில் மாலை போட்டு என்னை தலைவராக்கிவிட்டது என்று கூறுவது தார்பாயில் வடிகட்டிய பொய்யல்லவா?

இது மட்டுமல்ல. மாநிலத்தலைவர் என்று அல்தாபியையும், நிர்வாகத் தலைவர் என்று ரஹ்மத்துல்லாஹ்வையும், மேலாண்மைக் குழுத் தலைவர் என்று ஷம்சுல்லுஹாவையும் வைத்துக் கொண்டு, 'பிரதமர் சந்திப்பிலிருந்து, பிசுக்கோத்து பிரச்சினை வரைக்கும் பயாஸ்கோப் முன் தோன்றி தன்னை முன்னிலைப் படுத்தியதோடு, தான் உறுப்பினர்தான் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் ஜமாஅத்தின் குடுமி என் கையில் எனும் அளவுக்கு எல்லா விஷயத்திலும் காட்டிக்கொண்டரே! இது எப்படி..?  மாநில நிர்வாகத்தில் இல்லாமலா?

ஆக அண்ணன் பதவிக்கு புதிதாக வரவில்லை; அவர் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார், இப்போதும் தொடர்கிறார், இன்னும் தொடர்வார் ஏனெனில் மாநிலத் தலைவர் என்று பெயர் போட்டாலும் போடாவிட்டாலும்  அவர்தான் ததஜவுக்கு ஆயுட்காலத் தலைவர். அதை எந்த பைலாவைக் காட்டியும் எவரும் கேள்வி கேட்டால், நீங்கள் 'தடம் புரண்டவர்கள்' என்பதைக் கவனத்தில் கொள்க.
-அப்துல் முஹைமீன்.

0 comments:

Post a Comment