Monday, February 7, 2011

['பஞ்ச்' பட்டிக்காட்டான்] பஞ்ச் பட்டிக்காட்டான் [15]






செய்தி; வெங்காயம் திருடிய வாலிபர் கைது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஏதேது! போற போக்கப் பாத்தா பணம்-நகைகளை பேங்கு  லாக்கரில் வைக்கிறதுக்கு பதிலா, வெங்காயத்தை வைக்கிற நிலைமை வந்துடும் போலிருக்கே!
 
தமிழக முதல்வர் கருணாநிதி;  "சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ்காந்தி பெயர் சூட்டப்படும்.
 பஞ்ச் பட்டிக்காட்டான்கொள்கையை விட கூட்டணிதான் முக்கியம்னு மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிருக்கீங்க. என்ன புரியலையா? இதே மருத்துவமனைக்கு உங்க ஆசான் பெரியார் பெயரை சூட்டனும்னு வீரமணி கேட்டதை புறந்தள்ளுனதை சொல்றேன்!
 டில்லி ஜும்மா மசூதி இமாம் செய்யது அகமது புகாரி ; இடிக்கப்பட்ட டில்லி நிஜாமுதீன் மசூதி அமைந்திருந்த இடத்தில் தொழுகை நடத்த அனுமதிப்பதாகவும் மேலும், அந்த இடத்தை அரசே வாங்கி, அதை வக்புபோர்டுக்கு அளிக்கும் என்றும், மசூதியை மறுபடியும் கட்டவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார். 

பஞ்ச் பட்டிக்காட்டான்; ஏற்கனவே பாபர் மஸ்ஜித் இடிச்சப்ப, நரசிம்மராவ் இப்பிடித்தான்  சொன்னார்; இப்ப பாபர்மசூதி இடம் எந்த  நிலைமைல இருக்குன்னு  தெரியும்ல. மறுபடியும் ஏமாறாம இருந்தா சரி!
 
ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர்  நாஞ்சில் சம்பத்: ஸ்பெக்ட்ரம் தான், இந்திய அரசியலையே இன்று ஆட்டம் காண வைத்துள்ளது. அவ்வளவு பெரிய கொள்ளை. அந்த பணத்தைக் கொண்டு, ஒரு ஓட்டிற்கு, 42 ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று கணக்குப் போட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில், உங்கள் வீடுகளில் ஐந்து ஓட்டு இருந்தால், இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாங்குங்கள்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்ஐந்து ஓட்டு இருந்தால், இரண்டு லட்சம் ரூபாய் வேணும்னு  கேட்டு வாங்குங்கன்னு சொல்றீங்களே! உங்க கட்சி வேட்பாளர்கிட்டையும் இந்த அளவு குடுக்குறதுக்கு பணம் இருக்குதோ..?
 
துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி
 வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அதிமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டும்
பஞ்ச் பட்டிக்காட்டான்; அதெல்லாம் சரி! உங்க ஆஸ்தான கட்சியான பாஜகவை விட்டுட்டீங்களே! ஏன் பாஜகவால தமிழ்நாட்டுல ஒரு பிரயோசனமும் இல்லன்னு முடிவு பண்ணீட்டீங்களா!



--
1/30/2011 05:21:00 AM அன்று 'பஞ்ச்' பட்டிக்காட்டான் இல் Blogger ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment