Friday, February 25, 2011

பித்னாவின் மறு பெயர் பி.ஜே?


பித்னாவின் மறு பெயர் பி.ஜே?


இந்திய தவ்ஹீத் ஜமாத்தை தன குடும்பத்தார் பெயரில் திருட்டு தனமாக அபகரித்து , சமுதாயத்தாலும், சக நிர்வாகிகளாலும், வளைகுடா எஜமானர்களாலும் , ஏன் நீதி மன்றத்தாலும் கூட குட்டுப்பட்டு அவமானப்பட்ட பொய்யர் மீண்டும் திரு விளையாடலை துவங்கியுள்ளார். 

னது பைலாவை தானே மீறி மாத்தின் தலைவரான பொய்யர் , மீண்டும் அதிகாரம் கைக்கு வந்த ஆணவத்தில் ' குழப்பம் கொலையை விடக் கொடியது 'எனும் குர்ஆன் வசனத்தை மறந்து தன் குலத் தொழிலான குழப்ப வேலையை துவங்கியுள்ளார்.

பேரம் படியாத காரணத்தால் யாரை ஆதரிப்பது எனும் முடிவை அறிவிக்காமல், ம.ம.கவை மண்ணை கவ்வ வைப்பது தான் தன் தலையாய வேலை என இந்துத்வா சக்திகள் கூட எடுக்காத ஒரு நிலைப்பாட்டை தங்களின் தேர்தல் நிலைப்பாடாக அறிவித்து உள்ள இவர்களின் கொள்கை [?] முடிவை மக்களிடம் சொல்லாமல் ஒரு ஒப்பீட்டை வெளியிட்டுள்ளார்கள்!


  • எந்த கோரிக்கையும் வைக்காமல் அதிமுக வோடு இணைந்த ம.ம.க.
  • 5% இட  ஒதுக்கீடு தரும்   கட்சிக்கே வாக்கு ! எனும் த.த.ஜ
இந்த இரண்டு நிலைப்பாட்டில் எது சமுதாய சிந்தனையோடு எடுக்கப் பட்ட முடிவு? எனும் செய்தியை மக்களுக்கு வைக்கிறார்கள் !
 வைக்கட்டும் அது அவர்களுடைய உரிமை! 

ஆனால் அதை தங்கள் பெயரில் வெளியிட தைரியம் இன்றி இந்திய  தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வெளியிட்டுள்ளார்கள்! தங்கள் கருத்தை தங்கள் பெயரில் வெளியிடும் தைர்யமின்மை  அல்லது த.மு.மு.க.மற்றும் இ.த.ஜ.வுக்கு இடையில் உள்ள உறவை கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் ! இந்த இரண்டைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும் இவர்களின் இந்த இழி செயலுக்குக்கு?  முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் குரோதம் உண்டாக்க எண்ணி குழப்பம் ஏற்படுத்தும் இந்த செயல் யாருடைய செயல் என்பதை நீங்களே 
முடிவு செய்யுங்கள் ! 

குறைவான எண்ணிக்கையில் இருந்த உங்களை அவன் அதிகமாக்கி வைத்ததையும், குழப்பம் செய்தோரின் முடிவு என்னவானது ? என்பதையும் 
எண்ணிப்பாருங்கள்! [அல்குரான் 7:86]      
  
.

          

0 comments:

Post a Comment