Thursday, December 30, 2010

கீழக்கரையில் டிவி வழங்குவதில் முறைகேடை கண்டித்து இதஜ நடவடிக்கை!

கீழக்கரையில் டிவி வழங்குவதில் முறைகேடை கண்டித்து இதஜ நடவடிக்கை!


சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்ட நகராட்சியான கீழக்கரையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் முறைகேடு நடைபெற்றது.







இதனால் பெண்களும், பொது மக்களும் ஆத்திரம் அடைந்தனர். டிவி வழங்கும் கிழக்குத தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் பெரும் பிரச்னையும், சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து இதஜ மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார், வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் ஆகியோர் தங்களது கண்டனங்களை தினமலர், தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகளும், ஜெயா டிவி, மக்கள் டிவி, விண்டிவி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பதிவு செய்தனர்.







திமுக கட்சியை சேர்ந்த பஷீர் அவர்கள் தலைமையில் நடைபெறும் நகராட்சி நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் பின்தங்கி போய் உள்ளது. ஊர் எங்கும் குப்பை கூளங்கள் நிறைந்தும், புதியதாக போடப்பட்ட சாலைகள் அத்தனையும் குண்டு குழியுமாக மழை நீரால் சகதி சாலையாக காட்சியளிக்கிறது. இந்த சீர்கேடுகள் களையப்பட வேண்டும் என ஏற்கனவே நம் இதஜ சார்பாக மனு கொடுக்கப்பட்டும் சரியாக செயல்படவில்லை. இந்த நிலையில் டிவி வழங்குவதில் பாராபட்சம் காட்டுகிறது.



நகராட்சித் தலைவர் தனது வார்டு மற்றும் தனக்கு தேவையானவர்களுக்கு மட்டும் டிவிகளை வழங்கி விட்டு மற்றவர்களுக்கு வழங்காமல் பொறுப்பை தட்டி கழித்த காரணத்தால் மக்கள் மத்தியல் பெரும் குழுப்பம் ஏற்பட்டது.







இதை நகராட்சித் தலைவர், தாசில்தார், கிராம அலுவலக அதிகாரி ஆகியோரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. கிராம அலுவலக அதிகாரி, டிவி வழங்கும் பொறுப்பு அதிகாரி உள்ளிட்டவர் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் டிவி வழங்வோம் என உறுதி அளித்தனர். இந்த வாக்குறுதியை மீறினால் வரும் வெள்ளிக் கிழமை (01.01.2011) அன்று நகராட்சியினை முற்றுகை இடப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கை கீழக்கரை இதஜ நிர்வாகம் செய்து வருகிறது.



-அபூ உமைமா.

0 comments:

Post a Comment