Wednesday, December 8, 2010

பாபர் மஸ்ஜித் என்ற ஒன்று இருக்கவில்லையா? அண்ணனின் புதுக் கதை..


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பாபர்மஸ்ஜித் விஷயத்தில் தீர்ப்பு வந்த மாத்திரமே பயாஸ்கோப் முன் தோன்றிய அண்ணன், தீர்ப்பு குறித்து கருத்து சொன்னதோடு விஷயத்தை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாம் என்று நினைத்த வேளையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நீதிமன்ற முற்றுகை போராட்டம் அவரை அடுத்த ஸ்டெப்புக்கு தள்ளியது. உடனே மண்ணடியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பும்- முஸ்லிம்களின் கடமையும் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை போட்டார்.

இந்த கூட்டத்தில் பாபர்மஸ்ஜித் தீர்ப்பு குறித்து அண்ணன் ஏதாவது முக்கியமான கருத்தை சொல்வார் என எதிர்பார்த்து கூட்டமும் கனிசமாக வந்தது. கூட்டத்தை பார்த்து குஷியான அண்ணன், 'மினி மாநாடு' என்று தனது தம்பிகள் மூலம் எஸ்.எம்.எஸ். பறக்கவிட்டு புளங்காகிதம் அடைந்தார். சரி! தனது பேச்சில் ஏதாவது சொன்னாரா என்றால், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை பொறுமை காப்போம். அதிலும் நியாயம் கிடைக்கவில்லையெனில் பின்னர் அறிவிப்போம்' என்று முடிக்க, அவரை பின்பற்றுபவர்களுக்கே அண்ணனின் பேச்சு 'சப்பென்று' போக, இதையறிந்த அண்ணன் செங்கல்பட்டு செயற்குழுவில் சென்னை- மதுரையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என அறிவித்து தம்பிகளை குஷிப்படுத்தினார்.

பாபர் மசூதிக்காக சாவகாசமாக அடுத்த வருஷம் போராட்டம் அறிவித்து விட்டாலும், போராட்டம் பயனற்றது எனபதுதான் அண்ணனின் நிலைப்பாடு என்பதை பாபர் மஸ்ஜித் போராட்டம் அர்த்தமற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது. இதுதான் யதார்த்த நிலை. இதை மூடிமறைத்து வேஷம் போடுவதிலும் -கோஷம் போடுவதிலும் இனி அர்த்தமில்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது. என்று 'உணர்வலைகளாக' வெளிப்படுத்தினார்.

மேலும் ஜனவரி 4 பேரணி- ஆர்ப்பாட்டம் என்று அறிவித்து பின்னர் சிந்துபாத் கதையாக நீண்டு 27 க்கு மாற்றப்பட்டுள்ள அண்ணனின் போராட்டத்தில், ஒவ்வொரு டிச 6 போராட்டத்திலும் வைக்கப்படும் கோஷமான, பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு என்ற கோரிக்கை 'மிஸ்ஸிங்'
பாபர் மஸ்ஜிதை இடித்த அத்வானி கும்பல் மீதான நடவடிக்கை பற்றி பேசப்படாமல் அது என்ன பாபர் மஸ்ஜித் போராட்டம் என்று நாம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், இதற்கு அண்ணன் விடைதரும் விதமாக,
இந்த ஆண்டு தனது ஜமாஅத் டிச 6 போராட்டம் நடத்தாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வீடியோ முன் தோன்றிய அண்ணன்,
''ஒவ்வொரு ஆண்டும் டிச 6 போராட்டத்தின் போது என்ன கோரிக்கை வைத்தோம்? பாபர் மஸ்ஜித் குறித்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும்.
பள்ளியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்.
என்ற இரண்டு கோரிக்கை வைத்தோம். ஆனால் இந்த ஆண்டு பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வந்த பின்பு 'கிரவுண்டு' மாறிவிட்டது. அதாவது தீர்ப்பை கேட்டோம். அதை தந்துவிட்டார்கள். எனவே அந்த கோரிக்கையை இப்போது வைக்கமுடியாது. அடுத்து பள்ளிவாசலை குற்றவாளிகளை தண்டிக்க சொல்லமுடியுமா என்றால் முடியாது. ஏனெனில், அந்த இடத்தில் பள்ளிவாசல் என்று ஒன்று இருக்கவில்லை. அதை யாரும் இடிக்கவில்லை. அது அன்றும் கோயிலாகத்தான் இருந்தது; இன்றும் கோயிலாகத்தான் இருக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறிவிட்டார்கள். எனவே நீதிபதிகளின் தீர்ப்பின் படி இல்லாத பள்ளிவாசலை இடித்தவர்களை தண்டிக்கவேண்டும் என்றும் கூறமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே நமக்கு முன் இருக்கும் ஒரே வழி,

  1. தீர்ப்பளித்த நீதிபதிகளை கண்டித்தல்.
  2. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளல்.
என்பதுதான். இவ்வாறாக நீள்கிறது அண்ணனின் வியாக்கியானம்.

அண்ணனின் வியாக்கியானப்படி அந்த இடத்தில் பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை என்று நீதிபதிகள் கூறிவிட்டார்களாம். எனவே பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் பற்றி வாய் திறக்கமுடியாதாம். அத்வானி கேட்டால் அண்ணனை உச்சி மோந்து பாராட்டி பி.ஜே.பி.க்கு செயல் தலைவராக முன்மொழிவார். எந்த நீதிபதியும் அங்கே மசூதி இருக்கவில்லை என்றோ, மசூதியை யாரும் இடிக்கவில்லை என்றோ, அங்கு கோயில் தான் இருந்தது என்றோ கூறவில்லை என்பதை கீழே தருவோம்.

அதற்கு முன்பாக அண்ணனின் வாதப்படியே நீதிபதிகள் கூறினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியாயின்,
  • பாபர் மஸ்ஜித் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று அண்ணனும் ஒத்துக் கொள்கிறாரா? அதனால்தான் இடத்த குற்றவாளிகள் மீதான நடவடிக்கை கோரிக்கையை புறம் தள்ளினாரா?
  • பாபர் மஸ்ஜித் அங்கு இருக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும் அண்ணன் அந்த இடத்திற்கு மட்டும் உரிமை கொண்டாடுவது எந்த அடிப்படையில்?
  • பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும் அண்ணன், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு தனியாக நடந்து வருவது குறித்து என்ன சொல்கிறார்?
  • பாபர் மஸ்ஜிதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கூற்றின் படி, அத்வானி கும்பல் மீதான வழக்கு தள்ளுபடியாகாமல் இன்னும் கோர்ட்டில் நிற்பது எப்படி?
  • அலகாபாத் தீர்ப்பு மசூதி இடிப்பை நியாயப்படுத்தி விடாது என்று அண்ணன் ஓடிப்போய் பார்த்த சோனியாவும், அவரது அமைச்சர் சிதம்பரமும் சொன்னது குறித்து அண்ணனின் நிலை என்ன?
  • மசூதி இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று நீதிபதியின் கூற்றை வழிமொழியும் அண்ணன், இத்தனை ஆண்டு காலம் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு போராடியது தவறு என்று ஒத்துக்கொள்வாரா?
  • லிப்ரஹான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளை கைது செய் என்று இனிமேல் அண்ணன் முழங்க மாட்டாரா?
  • லிபரான் அறிக்கையை குப்பைக் கூடைக்கு அனுப்பி, குற்றவாளிகள் விடுதலைக்கும் அண்ணன் குரல் கொடுப்பாரா?
  • இல்லை மசூதி இருந்தது; அதை அத்வானி கும்பல் இடித்தது என்பது அண்ணனின் நிலைப்பாடு என்றால், அத்வானி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படாதது ஏன்? மேலும், பாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பின், குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோர முடியாத நிலை உள்ளது என்று பல்டியடித்து பின்வாங்கியது ஏன்?
  • அண்ணனின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, அண்ணன் வீட்டை ஒருவன் இடிக்க, அண்ணன் நீதிமன்றம் போக, நீதிபதி அந்த இடத்தில் எந்த வீடும் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று தீர்ப்பளித்தால் அண்ணன் அதற்கு பின் தனது வீட்டை இடித்த குற்றவாளியை கண்டுகொள்ள மாட்டாரா?
மேற்கண்டவைக்கு அவர் வியாக்கியானம் இன்றி நேரடியாக பதிலளிக்கவேண்டும்.

அடுத்து அண்ணன் புளுகியபடி, எந்த நீதிபதியாவது அந்த இடத்தில் பள்ளிவாசல் இருக்கவில்லை என்று தமது தீர்ப்பில் கூறியுள்ளார்களா என்றால் இல்லவே இல்லை. கோயிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதில்தான் நீதிபதிகள் முரண்பட்டார்களே தவிர, பள்ளிவாசல் இருந்ததா என்பதில் முரண்படவில்லை. மூன்று நீதிபதிகளின் பள்ளிவாசல் குறித்த தீர்ப்பின் சாரம் கீழே;

நீதிபதி சுதிர் அகர்வால்;
அந்த கட்டிடம் [பாபர் மஸ்ஜித்], ஏற்கனவே அங்கிருந்த முஸ்லிம் அல்லாத மத வழிபாட்டுத் தலத்தை (உதாரணம்: இந்து கோவில்) இடித்து விட்டு கட்டப்பட்டது.

நீதிபதி டி.வி.சர்மா;
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து விட்டுத்தான், அந்த இடத்தில்மசூதியை பாபர் கட்டினார்.

நீதிபதி எஸ்.யு.கான்;
மசூதியை கட்டுவதற்காக எந்தவொரு கோவிலும் இடிக்கப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, கோவில்கள் அழிந்து விட்டிருந்தன.

மூன்று நீதிபதிகளுமே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்தது என்பதை உறுதிப்படுத்திய நிலையில், அந்த இடத்தில் பள்ளிவாசல் என்று ஒன்று இருக்கவில்லை. அதை யாரும் இடிக்கவில்லை. அது அன்றும் கோயிலாகத்தான் இருந்தது; இன்றும் கோயிலாகத்தான் இருக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறிவிட்டார்கள். என்று அண்ணன் புளுகியது இந்துத்துவாக்கள் கூட சொல்லாத பொய்யல்லவா? ஏனெனில், மசூதியை நாங்கள் தான் இடித்தோம் என்று பெருமையாக கூறி, அங்கு மசூதி இருந்தது என்று இந்துத்துவாக்கள் சாட்சி கூறிக்கொண்டிருக்கையில், அண்ணனின் ஆகாசப் புளுகு அவரின் உள்ளக்கிடைக்கை வெளிப்படுத்தவில்லையா?

மேலும் நீதிபதிகள் மட்டுமன்றி, தொல்லியல் துறையும் அங்கு பாபர் மஸ்ஜித் இருந்தது என்று சான்று பகர்கிறது அது கீழே;

கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கு பிறகும் நீதிபதிகள் பெயரால் அண்ணன் கூறியதை நம்பி, பட்டப் பகலில் பல்லாயிரம் பேர் சாட்சியாக 450 ஆண்டுகால வரலாற்று சின்னமான பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்யும் கோரிக்கையை புறம் தள்ளப் போகிறீர்களா முஸ்லிம்களே! அண்ணனின் வழியில் பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்களா முஸ்லிம்களே!!

சிந்தியுங்கள்! நாம் சிந்திக்கும் மார்க்கத்தில் பிறந்தவர்கள்.

--
12/08/2010 08:02:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment