Friday, December 10, 2010

விரட்டும் கேள்விகளும்; பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பீஜேயும்!


விரட்டும் கேள்விகளும்; பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பீஜேயும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

வார்த்தைக்கு வார்த்தை குர்ஆன்- ஹதீஸ் என்று வார்த்தை ஜாலம் பேசும் வாய்ச்சொல் வீரர் பீஜே, பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை தனது குடும்ப உறுப்பினர்களை கொண்டு களவாடிய களவாணித்தனத்திற்கு மட்டும் இதுவரை ஒரு ஆயத்தையோ- ஒரு ஹதீஸையோ ஆதாரமாக காட்டி தன்னை யோக்கியர் என்று காட்டமுடியவில்லை.

ஆனால் தனது அயோக்கியத்தனத்தை மறைக்க, 'திருடிக் கொண்டு ஓடுபவன்; திருடன்-திருடன் என கத்திக் கொண்டே ஓடுவது போல், நாங்கள் முதலிலேயே பதிவு செய்துவிட்டோம். பாக்கர் அதை சிந்திக்காமல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என அமைப்பை தொடங்கிவிட்டார் என்று ரீல் விட்டார். அதற்கு நாம்,

''முன்பே பதிவு செய்துவிட்டோம் என்று சொல்லும் இந்த பொய்யர்கள் வெளியிட்டுள்ள சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காலம் மார்ச் 2010 என்று உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா? என்று கேட்டவுடன்பல்டியடித்து 8 மாதம் முன்புதான் பதிவு செய்தோம் என்று ஒப்புக்கொண்டு அசடு வழிந்தார் பீஜே.

பின்பு திருடவந்தவனுக்கு தேள் கொட்டிய கதையாக, இப்போது பாக்கர் ஏன் டிரஸ்டில் பதிவு செய்தார் என்று கேட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பி, தனது அயோக்கியத்தனத்தை நியாயப் படுத்தப் பார்க்கிறார். மேலும், நாம் இவரை நோக்கியும், இவரது ஆதிக்கத்தில் தடுமாறும், ததஜவை நோக்கியும் ஏற்கனவே தொடுத்த கேள்விகளில் ஒன்றுக்கு கூட பதில் சொல்லாமல் மவ்னம் காத்து விட்டு இப்போது தனது கள்ள அமைப்பின் இந்த வார மாநிலச்செயலாளர் பெயரில் கேள்விகள் அடுக்குகிறார். ஐயோ பாவம்! இவர் மாநிலச்செயலாளர் என்று அறிமுகப் படுத்தியவரை குறைந்த பட்சம் தனது கள்ள வெப்சைட்டில் நிர்வாகிகள் பட்டியலில் கூட போடக்காணோம் என்பது தனிக்கதை.

அடுத்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் ஆக்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சான்றிதழை எடுத்துப் போட்டு, அதில் ஐந்து நிர்வாகிகள் தான் இருக்கிறார்கள் என்று புலனாய்வு[!] அறிக்கை வாசிக்கிறார். அதுசரி! இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கைப்பற்ற, பதிவு செய்ய நிர்வாகிகளாக காட்டிய உண்மையான பட்டியலை வெளியிடத் தயாரா என்று கேட்டோம். இந்த யோக்கியர் வெளியிடவில்லை. பின்பு நாமே அபகரிக்கப்பட்ட அமைப்பின் உண்மையான நிர்வாகிகள் இப்போது மக்கள் முன்பு காட்டப்படுபவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் சாட்சாத் பீஜேயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே என்று பட்டியலிட்டோம்.

இப்போது ஏதோ இதஜ டிரஸ்ட் உறுப்பினர்களை சி.ஐ.ஏ. ரீதியில் புலனாய்வு செய்து கண்டுபிடித்தது போன்று ஃபிலிம் காட்டும் இவர், நாம் இவரின் குடும்ப உறுப்பினர்களை பட்டியலிட்டபோது, அதை மறுக்கமுடியாமல் 'இதெல்லாம் எனது ஆன்மீக[!] பித்தலாட்டத்தில் சகஜமப்பா' என்ற ரீதியில், கண்டுகொள்ளாமல் விட்டார்.

இப்போது மீண்டும் இதஜ டிரஸ்ட் தொடர்பாகவும் , முபாஹலா, பிறை, உள்ளிட்ட சில விஷயங்களை பத்து கேள்விக்குள் அடங்குவதை பல கேள்விகளாக பட்டியலிட்டு, 'நல்லா பாத்துக்கங்க! நானும் கேள்வி கேட்டிருக்கேன்' என்று காட்ட முனைகிறார். அவரது கேள்விக்கு கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் பதிலளிப்போம்.

அதற்கு முன்பாக, இவரை நோக்கி நம்மாலும், நம் சகோதரர்களாலும் எழுப்பப்பட்ட கேள்விகளின் ஒரு பகுதியை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். அதற்கு அவர் பதிலளிக்கட்டும். பின்னர்தான் அவரது எந்த கேள்விக்கும் நாம் பதிலளிப்போம்.

  1. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று தொடங்குவதற்கு முன் இந்த பெயரில் யாரவது பதிவு செய்துள்ளார்களா என்று கவனிக்கத் தவறிவிட்டார் பாக்கர் என்று கூறி,பாக்கர் அமைப்பை தொடங்குவதற்கு முன்பே நாங்கள் பதிவு செய்துவிட்டோம் என்ற கருத்தை வெளிப்படுத்தினார் பீஜே. அதற்கு நாம், முன்பே பதிவு செய்துவிட்டோம் என்று சொல்லும் இந்த பொய்யர்கள் வெளியிட்டுள்ள சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காலம் மார்ச் 2010 என்று உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா? என்று கேட்டவுடன் பல்டியடித்து 8 மாதம் முன்புதான் பதிவு செய்தோம் என்று ஒப்புக்கொண்டு அசடு வழிந்தார் பீஜே. இந்த பித்தலாட்டத்திற்கு பதில் எங்கே?
  2. கடந்த 2 வருடமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கி வந்த ஒரு அமைப்பை கள்ளத்தனமாக அபகரிப்பது தவறு என பிஜெயை தட்டிக்கேட்க ததஜ நிர்வாகம் முன்வராதது ஏன்? பீஜேயின் இந்த அபகரிப்பை ததஜ நிர்வாகம் ஆதரிக்கிறதா? தெளிவான மோசடி என்று தெரிந்த பின்னும் ஆதரிப்பதுதான் ததஜவின் குர்'ஆன்-ஹதீஸ் வழிமுறையா? என்று நாம் கேட்டோம். பதில் எங்கே?
  3. மவ்லவி இப்ராஹீம் காசிமியை மாநிலப் பேச்சாளர் என்று அடையாளம் காட்டி பீஜே பொய்யர் என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது ததஜ வலைத்தளம். அதை அச்சுப்பிழை என்று நச்சுக்கருத்தை சொன்னார் பீஜே. அப்படியாயின் பீஜே, மாநில நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையாக இணையதளத்திலும், உணர்விலும் அறிவிப்பு செய்த மாநிலப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிடத் தயாரா? அப்படி வெளியிட்டு அந்த பட்டியலில் இப்ராஹீம் காஸிமி இல்லை என்று நிரூபிக்கத் தயாரா? என்று கேட்டோம் பதில் எங்கே?
  4. உணர்வு, பீஜே தலைவராக இருந்த போது தான் அவர் உணர்வின் அனைத்து கட்டுரைகளையும் பார்த்து வந்தார், இப்போது உணர்வில் வரும் அனைத்தும் பீஜேயின் பார்வைக்கு வருவது கிடையாது.என்றார். அதற்கு நாம், பீஜே தலைவர் பதவியிலிருந்து இறங்கிய பிறகும் அவரது பார்வைக்கு சென்ற பின்தான் அச்சுக்கு செல்லும் என்பதை அந்த காலகட்டத்தில் பதவி வகித்த பொறுப்பாசிரியர் வாக்குமூலம் வாயிலாக நிரூபித்தோம். பதில் எங்கே?
  5. சகோதரர் அப்துர்ரஹ்மான் தாவத்தி அவர்களை மாநிலப் பேச்சாளர் இல்லை என்று கூறுகிறார். அப்படியாயின் பல ஆண்டுகளாக அவருக்கு சம்பளம் வழங்குவது எதற்காக? ஒருவரை மாநில அளவில் பிரச்சாரத்திற்கு தலைமை பயன்படுத்தி, அதற்காக அவருக்கு தலைமை மூலம் மாத ஊதியம் வழங்கப்பட்டால் அவருக்கு பெயர் என்ன? என்று கேட்டோம். பதில் எங்கே?
  6. 07 -11 -2010 வரை மாநிலப் பேச்சாளராக அங்கீகாரம் பெறவில்லை பீஜெயால் குறிப்பிடப்படும் அப்துர்ரஹ்மான் தாவத்தி பற்றி, மாநிலப் பேச்சாளர் என்று இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள உணர்வின் பக்கங்களை எடுத்துக்காட்டினால் பீஜேயின் நிலை என்ன? என்று கேட்டோம். பதில் எங்கே?
  7. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிக்கைகள் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் வெளியாகிறது என்று ரீல் விட்டார். அப்போது நாம்,இவர் கள்ளத்தனமாக பதிவு செய்து பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அறிக்கை ஷேக்பரீத் என்பவர் பெயரில் வெளியிடுகிறார். அது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில்தான் வெளியாகியுள்ளது என்று கூறினோம். பதில் எங்கே?
  8. ''சிலை திறப்பு விழாவில் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் கலந்து கொண்டார் என்று செய்தி பத்திரிக்கையில் வெளியானது என்று துணிந்து பொய் சொன்னார். அப்போது நாம், சம்மந்தப்பட்ட செய்தித்தாள்களில் இடம்பெற்ற செய்தியை வெளியிட்டு, பத்திரிக்கை செய்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் என்றுதான் உள்ளதே தவிர, பொய்யர் பீஜே புலம்புவது போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்று இல்லவே இல்லை என்று நிரூபித்தோம். பதில் எங்கே?
  9. மார்க்க அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றை சொந்தம் கொண்டாடுவது என்றால் அதற்கான முறையில் தான் சொந்தம் கொண்டாட வேண்டும். என்றார் பீஜே. அப்போது நாம், இந்திய தவ்ஹீத் ஜமாத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு ஆதாரமாக உள்ள குர்'ஆன் வசனங்களையும்- ஹதீசுகளையும் முதலில் வைக்கவேண்டும். பின்னர் பாக்கர் சொந்தம் கொண்டாடுவது குறித்த மார்க்க ஆதாரத்தை நாங்கள் வைக்கிறோம் என்றோம். பதில் எங்கே?
  10. ''ஒரு சொத்து வாங்கினால் அதற்கான பணத்தைச் செலுத்தி பத்திரத்தில் எழுதி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் யாரும் பயன் படுத்தாத இட்த்தில் குடிசை போடுவது தவறாகும் என்றார் பீஜே. அப்போது நாம், இதன் மூலம் யாரும் பயன்படுத்தாத இடத்தில்தான் பாக்கர் குடிசை போட்டார் என்று ஒப்புகொண்டு, பாக்கர் எதையும் அபகரிக்கவில்லை. ஆனால் நான்தான் பாக்கர் போட்ட குடிசையின் நடுமனையில் அமர்ந்து கொண்டு சட்டம் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டுவிட்டார் பீஜே என்றோம். பதில் எங்கே?
  11. கள்ளத்தனமாக பாக்கர் அமைப்பு பெயரை பதிவு செய்ததன் மூலம் , பெரியாரை விட, கருணாநிதியைவிட, முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்களை விட தன்னை மட்டமானவராக பீஜே காட்டிவிட்டார் என்று குற்றம் சாட்டினோம்.. பதில் எங்கே?
  12. தமுமுக என்றாலே எட்டடி தள்ளி நிற்கும் பீஜே, அந்த தமுமுகவிற்கு பொருளுதவி செய்தவரும், தமுமுக தலைமையின் தொழுகைத் தளம் முழுவதையும் பராமரித்து வருபவருமான ஒருவரை பீஜே முன்னிலைப் படுத்துவதும், பாக்கரின் அமைப்பு பெயரை பீஜே அநியாயமாக அபகரித்ததை தமுமுக இதுவரை கண்டிக்காததும் எங்கோ இடிக்கிறதே! என்று கேட்டோம். பதில் எங்கே?
  13. ததஜ மவ்லவிகள்- பேச்சாளர்கள்- மாநில நிர்வாகிகள் அனைவரும் அனைத்து மசாயில்களிலும் நூல் பிடித்தது போன்று ஒத்த கருத்தில் இருக்கிறோம் என்று பீஜே அறிவிக்கத்தயாரா? என்று கேட்டோம் பதில் எங்கே?
  14. பாக்கரின் அமைப்பு பெயரை பதிவு செய்யும்போது நிர்வாகிகளாக அடையாளம் காட்டினாரே! அந்த தனது இளவல்கள்- மைத்துனர்கள். இவர்கள் தவ்ஹீதிற்காக, தவ்ஹீத் ஜமாஅத்திற்காக, தமிழகத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை பட்டியலிடத் தயாரா? கள்ளத்தனமாக பதிவு செய்யும்போது பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக அறிவிக்கும் திராணி பீஜெயிக்கு உண்டா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  15. "நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ. இந்த ஹதீஸை வைத்து மாநிலப் பிறை முடிவெடுக்கும் இவர்கள், இந்தியப் பிறை என தீர்மானிக்க இந்த ஹதீஸில் என்ன தடை என விளக்கத் தயாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  16. உங்கள் வாதப்படி நபிவழிக்கு மாற்றமாக 17 ம் தேதி பெருநாள் கொண்டாடி, குர்பானி கொடுத்தவர்களிடம் உங்கள் அமைப்பினர் குர்பானித் தோலை கீழக்கரையில் வசூலித்த கதை தெரியுமா? அது எப்படின்னே அவங்க கொண்டாடுன பெருநாள் மட்டும் தப்பு. அவங்க குடுத்த குர்பானி மட்டும் சரியா? இது நபிவழிப்படி சரியா? கொஞ்சம் சொல்லுங்கண்ணே! என்று கேட்டோம். பதில் எங்கே?
  17. பீஜேயின் அநீதியை கண்டித்து, பாக்கர் தலைமையில் நாம் இணைந்தபோது, முகவைஅப்பாஸ் புதிய வரவல்ல. அவர் ஏற்கனவே பாக்கரோடு இருந்தவர் என்றும், அதற்கு சான்று அவர் சம்மந்தப்பட்ட விளம்பரம் தொலைக்கட்சியில் வருகிறது என்றார் பீஜே. அதற்கு நாம், விளம்பரத்தில் வருகிறது. இதுதான் நான் இதஜ வில் இருந்தேன் என்பதற்கான ஆதாரம் என்றால், சகோதரர் அப்துல்லாஹ்[பெரியார்] மற்றும் தேவநாதன் ஆகியோரும் குர்'ஆன் வழங்கினார்களே! அவர்களும் இதஜவை சேர்ந்தவர்களா? அவ்வளவு ஏன்? ததஜ மேடையில் எவரையும் ஏற்றமாட்டோம் என்ற கொள்கையை[!] குப்பையில் தள்ளி, பிரதமரை சந்திக்க இவர் உதவி தேவை என்ற காரணத்தால், ஜே.எம்.ஹாரூனின் நெஞ்சில் உங்கள் 'பேட்ச்' குத்தி பேசவைத்தீர்களே! அப்படியாயின் ஹாரூன் எம்.பி. உங்கள் அமைப்பில் இருந்தார் என்று சொல்வீர்களா? என்று கேட்டோம் பதில் எங்கே?
  18. பாக்கர் தலைமையிலான இதஜவை அடக்கவேண்டும் என்று சிலர் ததஜ தலைமையிடம் கோரிக்கை வைத்தபோது, அதை கண்டுகொள்ளாமல் விட்ட மாநிலத்தலைமையின் கட்டளையும் மீறி, தனது குடும்ப சொத்தாக இதஜ பெயரை பதிவு செய்த பீஜே மீது என்ன நடவடிக்கை? என்று கேட்டோம் பதில் எங்கே?
  19. பீஜேயின் இந்த செயலை ததஜ நிர்வாகம் ஆதரிக்கிறதா? ஆதரிக்கிறது என்றால், ததஜவில் இருந்து கொண்டே இன்னொரு அமைப்பை பதிவு செய்ய, இன்னொரு அமைப்பின் பெயரில் செயல்பட ததஜ நிர்வாகம் பொது அனுமதியளிக்கிறதா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  20. தனி அமைப்பு, தனி வெப்சைட், தனி தலைமையகம், தனி நிர்வாகம் என தனி ஆவர்த்தனம் செய்யும், பீஜேயின் குடும்ப அமைப்பான இதஜவின் தற்போதைய நிர்வாகிகள் மீது ததஜ நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதையே முன்னுதாரணமாக கொண்டு, ததஜவில் உள்ள ஒருவர் மற்றொரு அமைப்பை தொடங்கி நடத்தினால் ததஜ நிர்வாகம் அனுமதியளிக்குமா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  21. அல்லது பீஜேயின் குடும்பச் சொத்தான இதஜ, ததஜவின் அங்கீகாரம் பெற்றதுதான் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  22. தவறு செய்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லும் ததஜ, மேலாண்மை குழு உறுப்பினராக இருந்து கொண்டே, தனது குடும்ப நபர்கள் மூலம் இன்னொரு அமைப்பின் பெயரை பதிவு செய்ததையும், ததஜவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு கூட தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'லிங்க்' கொடுக்காத பீஜே, கள்ள அமைப்பிற்கு ஆதரவாக, அதற்கென அமைக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு தனது அதிகாரப் பூர்வ இணையதளம் மூலம் 'லிங்க்' கொடுத்து ஆதரவாக செயல்படுவதையும் ஆதரிக்கிறதா? ஒரு அமைப்பின் பிரதான தலைவராக இருந்து கொண்டே பக்கத்தில் இன்னொரு அமைப்பை வளர்க்கும் பீஜே மீது நடவடிக்கை எடுக்க ததஜ தயங்குவது, பீஜேயின் கைப்பாவை ததஜ என்பதாலா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  23. இல்லை. ததஜ எவரது கைப்பாவையும் இல்லை சுயமான அமைப்பு என்றால், தனி அமைப்பு கண்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ஏன்? என்று கேட்டோம். பதில் எங்கே?
  24. பாபர் மஸ்ஜித் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று அண்ணனும் ஒத்துக் கொள்கிறாரா? அதனால்தான் இடித்த குற்றவாளிகள் மீதான நடவடிக்கை கோரிக்கையை புறம் தள்ளினாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  25. பாபர் மஸ்ஜித் அங்கு இருக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும் அண்ணன் அந்த இடத்திற்கு மட்டும் உரிமை கொண்டாடுவது எந்த அடிப்படையில் என்று கேட்டோம். பதில் எங்கே?
  26. பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும் அண்ணன், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு தனியாக நடந்து வருவது குறித்து என்ன சொல்கிறார் என்று கேட்டோம். பதில் எங்கே?
  27. பாபர் மஸ்ஜிதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கூற்றின் படி, அத்வானி கும்பல் மீதான வழக்கு தள்ளுபடியாகாமல் இன்னும் கோர்ட்டில் நிற்பது எப்படி? என்று கேட்டோம். பதில் எங்கே?
  28. அலகாபாத் தீர்ப்பு மசூதி இடிப்பை நியாயப்படுத்தி விடாது என்று அண்ணன் ஓடிப்போய் பார்த்த சோனியாவும், அவரது அமைச்சர் சிதம்பரமும் சொன்னது குறித்து அண்ணனின் நிலை என்ன? என்று கேட்டோம். பதில் எங்கே?
  29. மசூதி இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று நீதிபதியின் கூற்றை வழிமொழியும் அண்ணன், இத்தனை ஆண்டு காலம் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு போராடியது தவறு என்று ஒத்துக்கொள்வாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  30. லிப்ரஹான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளை கைது செய் என்று இனிமேல் அண்ணன் முழங்க மாட்டாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  31. லிபரான் அறிக்கையை குப்பைக் கூடைக்கு அனுப்பி, குற்றவாளிகள் விடுதலைக்கும் அண்ணன் குரல் கொடுப்பாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  32. இல்லை மசூதி இருந்தது; அதை அத்வானி கும்பல் இடித்தது என்பது அண்ணனின் நிலைப்பாடு என்றால், அத்வானி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படாதது ஏன்? மேலும், பாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பின், குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோர முடியாத நிலை உள்ளது என்று பல்டியடித்து பின்வாங்கியது ஏன்? என்று கேட்டோம். பதில் எங்கே?
  33. அண்ணனின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, அண்ணன் வீட்டை ஒருவன் இடிக்க, அண்ணன் நீதிமன்றம் போக, நீதிபதி அந்த இடத்தில் எந்த வீடும் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று தீர்ப்பளித்தால் அண்ணன் அதற்கு பின் தனது வீட்டை இடித்த குற்றவாளியை கண்டுகொள்ள மாட்டாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  34. பாக்கரின் இதஜ வை தடை செய்யவேண்டும் என்று காவல் துறையிடத்தில் கொடுத்த புகார் மனுவில் சொல்லப்பட்ட விஷயங்களை இந்த சமுதாயத்தின் மத்தியிலும் சொல்ல ஏன் தயக்கம்?அதனால் அந்த புகார் மனுவின்நகலை உணர்வு இதழில் பிரசுரிக்கத் தயாரா என்று கேட்டோம். பதில் எங்கே?
  35. த த ஜ ஆரம்பித்து நான்கு ஆண்டுகளில் பிறை விசயத்தில் நான்கு வகையான முடிவை எடுத்து குழப்பியவர் பீ ஜெ மறுத்தால் முபாஹலாவுக்கு தயார் .

    2 அதிகமான சம்பளம் கேட்டு த த ஜ தாவா சென்டரில் இருந்து நான் விலகியதாக கூறுவது பச்சை பொய் இது விசயத்தில் பீ ஜெ முபாஹலாவுக்கு தயாரா ? நான் தயார்.

    3 சேலத்திற்கு தாவா சென்டர் மாற்றப்பட்டதால் தான் தாவா சென்டரில் இருந்து விலகினேன் என்பதற்கு த த ஜ மாநில தலைவர் அல்தாபி சாட்சி மறுத்தால் முஹாபலாவிற்கு நான் தயார்.
    என்ற அப்துல் ஹமீதின் முபாஹலா அழைப்பை கண்டு, அழைத்த அந்த மூன்று விஷயத்திற்கு மட்டும் முபாஹலாவிர்கு வராமல், தனது தோல்வியை மறைக்க 'பட்டியல்' கதை விட்டு வெருண்டோடியது ஏன் என்று கேட்டோம். பதில் எங்கே?
  36. ஒபாமாவின் வருகையை ஆதரித்த வைகோவை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இவரது ஜமாஅத், ஒபாமாவை விட கூடுதலான முஸ்லிம் விரோத சிந்தனை கொண்ட சர்கோஸி இந்தியா வந்த போது கண்டுகொள்ளாமல் பம்மியது ஏன்? என்று கேட்டோம். பதில் எங்கே?
  37. இவர்களது மோசடி அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கிவருகிறதாம். எங்கே இயங்கியது என்று கூறத் தயாரா என்று கேட்டோம். பதில் எங்கே?
  38. பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார்களாம். தமிழகத்தில் இவரது மோசடி அமைப்பு இரண்டாடுகளில் நடத்திய ஒரு நிகழ்ச்சியை காட்டத் தயாரா? என்றோம். பதில் எங்கே?
  39. இந்த அயோக்கியரின் மகன் தலைமையிலான இந்த அமைப்பு ரத்ததான முகாம்களை நடத்தி பலவிருதுகளை பெற்று இருக்கிறதாம். ரத்த தானத்தில் இவர் மகன் அமைப்பு வாங்கிய ஷீல்டுகளை பட்டியலிடத் தயாரா என்றோம். பதில் எங்கே?
  40. இவரது மகன் தலைமையில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான இட ஒதுக்கீட்டுக்காக போராடி பாமர முஸ்லிம்களுக்கு தமிழக அரசிடமிருந்து இட ஒதுக்கீட்டின் கனியை பறித்து கொடுத்து இருக்கிறதாம். என்றெல்லாம் புளுகியதற்கு ஒரு சான்றையாவது தரமுடியுமா என்று கேட்டோம். பதில் எங்கே?
  41. பாபர் மஸ்ஜித் போராட்டம் அர்த்தமற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது. இதுதான் யதார்த்த நிலை. இதை மூடிமறைத்து வேஷம் போடுவதிலும் -கோஷம் போடுவதிலும் இனி அர்த்தமில்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது. என்றார். அப்படியாயின் சென்னையிலும் மதுரையிலும் நடைபெறவுள்ள போராட்டம் தேர்தலை முன்னிறுத்தியா என்று கேட்டோம். பதில் எங்கே?
  42. தமுமுகவிலிருந்து பிரிந்ததற்கு அன்று தொட்டு சமீப காலம் வரை அண்ணன் சொன்ன ஒரே காரணம், 'தமுமுகவின் வளர்ச்சிக்கு தவ்ஹீத் பிரச்சாரம் தடையாக இருப்பதாக கூறினார்கள்' எனவே கொள்கைதான் முக்கியம் என்று தமுமுகவை விட்டு வெளியேறினோம் என்றவர், தமுமுக அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததுதான் தனது விலகலுக்கு காரணம் என்று இந்தியா டுடேயில் பல்டியடித்து பல்லிளித்தது ஏன் என்று கேட்டோம். பதில் எங்கே?
  43. ''திருவிடைச்சேரியில் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரை படுகொலை செய்த ததஜ குண்டர்களுக்கும், அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கு. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உடனே உரிய நிவாரணம் வழங்கு''
    என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டிய 19 முஸ்லிம்
    அமைப்புகளை சமூக விரோத அமைப்புகள் என்று கூறி போஸ்டர் ஒட்டிய அண்ணன் ஜமாத்திற்கு, இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களின் கையை பிடித்துக்கொண்டு பிரதமரையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்திக்கும்போது தேசிய லீக் சமூக விரோத அமைப்பாக அண்ணன் ஜமாஅத்திற்கு தெரியவில்லையா? என்று கேட்டோம். பதில் எங்கே?
  44. 19 அமைப்பினரை சமூக விரோத அமைப்புகள் என்று முத்திரை குத்துகிறது அண்ணன் ஜமாஅத். மேற்கண்ட இந்த அமைப்புகள் செய்த சமூக விரோத செயல்களை அண்ணன் ஜமாஅத் பட்டியலிட வேண்டும். என்று கேட்டோம் பதில் எங்கே?
  45. கடந்த 25 ஆண்டுகளாக இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதின் மூலம், தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் பல இஸ்லாமிய அமைப்புகளின் பகைமையை பெற்று அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. என்று உணர்வில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டி, இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளா? அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? என்ற வினாவை எழுப்பியிருந்தோம். பதில் எங்கே?
  46. திருவிடைச்சேரி குறித்து அண்ணனும் அவரது ஜமாத்தும் அடித்த பல்டிகள் குறித்து அடுக்கடுக்காக கேள்விகள் வைத்தோம்;கொலை நடந்தவுடன் கொலை நடந்தவுடன் விடுத்த முதல் அறிக்கையில் கொலையாளி குறித்து 'சமூக விரோதி' என்றார்.


    இரவு நடந்த விளக்க[!]உரையில், கொலையாளியை 'தற்காப்புவாதி' என்றார்.

    அதே விளக்க உரையில் ஆரம்பத்தில் கொலையாளி 'லைசன்ஸ் ஹோல்டர்' என்றார்.

    அதே உரையின் இறுதிப்பகுதியில், கொலையாளி 'லைசன்ஸ் ஹோல்டர்' இல்லாமலும் இருக்கலாம் என்றார்.

    பிறகு கொலையை கண்டிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியபோது, கொலையாளி துப்பாக்கியுடன் வந்தார்; கொல்லப்பட்டவர்களோ அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயதங்களுடன் இருந்தனர். எனவே கொன்றவர்- கொல்லப்பட்டவர் இருவரும் குற்றத்தில் சமமானவர்கள். எனவே நபிவழிப்படி இந்த படுகொலையை கண்டிக்கக் முடியாது என்றார்.

    செங்கல்பட்டில் நடந்த செயற்குழுவில் திருவிடைச்சேரி படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    அமைப்புகள் சார்பாக போஸ்டர் ஓட்டப்பட்டவுடன், இந்த போஸ்டர பாத்து எங்கமேல அரசாங்கம் கை வைச்சுருமா என்று கர்சித்தார்.

    எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஒப்புக்கொண்டு, அரசாங்கம் கை வைத்ததை ஒப்புக்கொண்டார்.

    எங்கள் மீது திருவிடைச்சேரி ஜமாஅத்தை வழக்குப் போடச்சொல் பார்க்கலாம் என்று பொய்யன் டிஜே மூலம் சவால் விட்டார்.

    எங்கள் அமைப்பு உள்ளூர் நிர்வாகிகள் மீது, ஜமாஅத் வழக்கு போட்டுள்ளது என்று அசடு வழிந்தார்.

    குத்புதீன் சும்மா எங்க மர்கசுக்கு தொழவந்தவர். அவருக்கும் ஜமாஅத்துக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்றார்.

    இன்று குத்புதீன் எங்கள் இயக்க அனுதாபி என்றார். இப்படி பீஜே உளறிய அடுக்கடுக்கான இந்த உளறல்களுக்கு பதில் எங்கே?
  47. [புதிய கேள்விகள்] இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை சங்கப் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், பதிவு செய்யாமல் டிரஸ்ட் ஆக்ட்டில் பதிவு செய்தது மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவும், என்னதான் குற்றம் செய்தாலும் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பாக்கர் செய்த சூழ்ச்சி என்று புலம்பும் பீஜே, முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் ஆகியவற்றை சங்கப் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், அவ்வாறு பதிவு செய்யாமல் டிரஸ்ட் ஆக பீஜே பதிவு செய்தது மக்கள் பணத்தை, மக்களிடம் வசூலித்து வாங்கப்பட்ட சொத்துக்களை ஆட்டைய போடவா என்பதற்கு பதில் சொல்லவேண்டும்.
  48. இந்த இரு டிரஸ்டுகளின் உறுப்பினர்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும்.
  49. இந்த இரு டிரஸ்டுகளின் பெயரால் வாங்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இப்போது யாரிடம் உள்ளன. அவற்றின் நிலை என்ன என்பதை பீஜே சொல்லவேண்டும்.
  50. இந்த சொத்துக்களின் பெயரால் மாதம் தோறும் வரும் வருவாய் எவ்வளவு? அந்த பணம் எந்த வகைக்கு இதுவரை பயன்படுத்தப்பட்டது என்ற கணக்கை பீஜே, மக்கள் முன் சமர்ப்பிக்கவேண்டும்.
  51. இவ்விரு டிரஸ்டுகளின் வரவு செலவுகள் இதுவரை மக்கள் முன் வைக்கப்படாதது ஏன்?
  52. இவ்விரு டிரஸ்டு தொடர்பாக விவாதிக்க சென்னையில் ததஜ மாநில செயற்குழு கூட்டப்பட்டதாக கூறும் பீஜே, இந்த டிரஸ்டுகளுக்கும் ததஜ மாநில செயற்குழுவிற்கும் என்ன சம்மந்தம் என்பதை விளக்கவேண்டும்.
  53. ததஜ செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இவ்விரு டிரஸ்ட்களிலும் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு விட்டார்களா என்பதை பீஜே விளக்கவேண்டும்.
  54. ஆம் எனில், அந்த உறுப்பினர்கள் பட்டியலை மக்கள் முன் வைக்கவேண்டும். மேலும், செயற்குழு உறுப்பினர்கள், டிரஸ்டின் உறுப்பினர்கள் என்றால், அவர்கள் முன்பாக செயற்குழுவில் இவ்விரு டிரஸ்டின் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது ஏன் என்று பீஜே பதிலளிக்கவேண்டும்.
  55. ததஜ செயற்குழுவோ, பொதுக்குழுவோ இவ்விரு டிரஸ்டுகளையும் மற்றவர்களிடம் ஒப்ப்படைக்கவேண்டும் என முடிவு செய்தால், அடுத்த நிமிடமே தவ்ஹீத் சகோதரர்கள் கட்டுப்பட்டு அதிலிருந்து விலகி விடுவார்கள் என்று கூறும் பீஜே, அனைத்து தவ்ஹீத்வாதிகளும் இவ்விரு டிரஸ்டின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளர்களா என்று பீஜே பதிலளிக்கவேண்டும்.
  56. மேலும், ததஜ பொதுக்குழு உறுப்பினர்கள் இவ்விரு டிரஸ்டு பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்றால், ததஜ பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இவ்விரு டிரஸ்டுகளின் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு விட்டார்களா என்று பீஜே பதிலளிக்கவேண்டும்.
  57. ததஜ பொதுக்குழு உறுப்பினர்கள் இவ்விரு டிரஸ்டின் உறுப்பினர்கள் என்றால், பொதுக்குழுவில் டிரஸ்டுகளின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?
  58. இவ்விரு டிரஸ்டுகளின் வருமானத்தில் இதுவரை சமுதாயப் பணிகளுக்கு செலவு செய்தது எவ்வளவு?
  59. இவ்விரு டிரஸ்டுக்கு சொந்தமான உணர்வு பத்திரிகைக்கு ததஜ பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்தது ஏன்?
  60. உணர்வு ததஜவின் ஒரு அங்கம் என்றால், அப்பத்திரிக்கை ததஜவுக்கு எழுதிக்கொடுக்கப் பட்டுவிட்டதா? இல்லை என்றால் ததஜ பணத்தை எதற்கு உணர்வுக்கு அள்ளிக்கொடுக்க வேண்டும் என்பதை பீஜே சொல்லவேண்டும்.
  61. உணர்வு ததஜவின் அங்கம் என்றால் உணர்வு பத்திரிக்கையின் வரவு-செலவு ததஜ செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் வைக்கப் படாதது ஏன்?
  62. பீஜேயின் மரணத்திற்கு பிறகு டிரஸ்டு சொத்துக்களின் நிலை என்ன?
  63. மதுரையில் ஜமாத்திற்கு வழங்கப்பட்ட நிலம் ஒன்றை தன் பெயரில் பதிவு செய்துகொண்ட பீஜே, அதை ஜமாத்திற்கு மாற்றித் தருவதாக கூறினாரே!? அது என்ன ஆச்சு?
  64. பாக்கரும் முகவை அப்பாசும் டெலிபோனில் பேசியதை பாலியல் என்று பதறும் பீஜே, தன் மகன் முஹம்மது உயிருக்கு உயிராக காதலித்த பெண் பற்றி கேள்வி எழுப்பியபோது, ''மார்க்க வரம்பு மீறாமல் பழகியது உண்மை'' என்றார். டெலிபோனில் அந்நியப் பெண்ணிடம் பேசினால் பாலியல் என்றால், நேருக்கு நேராக தினமும் சந்தித்து காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என்று டூயட் பாடியது பாலியல் இல்லையா?
  65. நேரில் சந்தித்து அந்நியப் பெண்ணிடம் காதல் வளர்ப்பது மார்க்க வரம்பிற்கு உட்பட்டதுதான் என்பதற்கு பீஜே குர்'ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரம் காட்டவேண்டும்.
  66. இல்லையேல் போனில் பேசுவதுதான் பாலியல்; நேரில் காதல் வளர்க்கலாம் என்று பத்வா வழங்க பீஜே தயாரா?

குறிப்பு; பீஜே நாம் வைத்துள்ள கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லவேண்டும். திசை திருப்பும் வகையில் பழைய தேய்ந்த ரிக்காடுகளை மீண்டும் ஓடவிடக் கூடாது என்று கூறிக்கொள்கிறோம்.
இன்னும் கேள்விக்கணைகள நீளும் இன்ஷா அல்லாஹ்.

0 comments:

Post a Comment