Thursday, December 16, 2010

பெருங்குற்றம்!

                                  பெருங்குற்றம்
கட்டிடங்கள்
சென்னை உட்பட பல நரங்களில் பழமை வாய்ந்த, உயர்ந்த, உறுதிமிக்க கட்டிடங்களைப் பார்க்கிறோம். (உதாரண மாக நீதிமன்றம், பல்கலைக் கழகம், ரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம்...) இந்தக் கட்டிடங்களில் பல முஸ்லிம்கள் உருவாக்கியது. மற்றவை முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கி யவை.
ஆனால் இந்தக் கட்டிடங்களின் வடிவமைப்பு இஸ்லாமிய கலாச்சாரத்தை, இஸ்லாமியர்களின் கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் முறையில் அமைக்கப் பட்டு இருப்பதைக் காண்கிறோம்.
நீதிமன்றங்கள்
நமது நாட்டில் கீழ்க் கோர்ட், மேல் கோர்ட், ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று (தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து) பல அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் அடிக்கடி சில வார்த்தைகள் பயன்படுத்தப்ப டும். அந்த வார்த்தைகளை சற்று உற்று நோக்குங்கள்

வக்கீல் வந்துவிட்டாரா?
மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
பஞ்சாயத்து கூடி முடிவெடுத்தது.
இன்று முதல் அமல் படுத்தப்படுகிறது
சாட்சிகள் ஆஜர் படுத்தப்பட்டார்கள்
அமீனா முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. (இன்னும் பல
)
வக்கீல், மகஜர், தாக்கல், ஜாமீன், பஞ்சாயத்து, அமல், ரத்து, ஆஜர் அமீனா என்ற இது போன்ற "சொற் பிரயோகங் களெல்லாம் அரபி மொழியில் அமைந்தவை. இந்த வார்த்தைகள் கொஞ்சம் கூட திரிபு இல்லாமல் இன்றும் அதிகமதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை
நாம் வாழும் இந்த நாட்டை தமிழ்நாடு என்றும் நமது நாட்டின் தலைநகரை சென்னை என்றும் இப்போது நாம் கூறிக் கொள்கிறோம்.
இதற்கு முன் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக இணைந்திருந்தபோது திராவிட நாடு என்றும், திராவிடர்கள் என்றும் கூறிக் கொண்டோம். ஆனாலும் வடநாட்டிலும், வெளிநாடுகளிலும் நம்மை "மதராஸி' என்றே அழைப்பார்கள். மத்ராஸி என்றால் மதராûஸ சேர்ந்தவன் என்பது பொருள் ஆகும்.
ஐம்பது வருடங்களுக்கு முன் உள்ள இந்திய வரைபடத்தில் மதராஸ் என்றும், மெட்ராஸ் என்றுமே தமிழ்நாட்டை குறிப்பிட்டு இருப்பார்கள்.
மத்ராஸி என்பதும், மதராஸ் என்பதும் மதரசா  (பள்ளிக் கூடம்) என்ற வார்த்தையின் மூலச் சொல் ஆகும். மதரசா  என்பது அரபி மொழியில் அமைந்த வார்த்தையே அன்றி வேறில்லை,மதராக்கள் நிறைந்த ஊராக இருந்ததால் மதரசா பட்டினம் என அழைக்கப்பட்டது பின்னர் மருவி மெட்ராஸ் என்றும் தற்போது சென்னை என மாற்றப்பட்டுள்ளது!

மான்யம்
முஸ்லிம் மன்னர்களில் பலர், கோவில் களுக்கு மான்யம் கொடுத்துள்ளார்கள். சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதனை இன்றும் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, அதற்கான ஆவணங்களை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்பதும் உண்மையான செய்தியாகும்.

மாமன் - மச்சான்
தமிழ்நாட்டின் தென்பகுதியில் வாழக் கூடிய, முஸ்லிம்களும், நாயக்கர்களும் மாமன் - மச்சான் என்று அழைத்துக் கொள்வதும், முஸ்லிம்களும் தச்சர்களும் அப்பு, மகன் என்று அழைத்து உறவு கொண்டாடுவதும் இன்றும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பிரியாணி, நெய்சோறு
முஸ்லிம்கள் விருந்துகளில் பயன் படுத்தும், விரும்பிச் சாப்பிடும் உணவு பிரியாணி, நெய்சோறு போன்றவை ஆகும். இதனை முஸ்லிம் அல்லாதவர்கள் விரும்பி உண்ணுவதும், விருந்துக்கு அழைத்தால் மறுக்காமல் விருந்தோம் பலை ஏற்பதும், விருந்தைப் பற்றி சிலா கித்துச் சொல்வதையும் பார்க்கிறோம்.
இவை போல இன்னும் உள்ளன....

சிந்தியுங்கள்...
  • முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட கட்டிடக் கலையை, அதன் அமைப்பை, மற்ற சமுதாய மக்கள் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். 

  • முஸ்லிம் கள் உயர்வாக மதிக்கும் அரபிச் சொற் களை நீதிமன்றங்கள் இன்றும் பயன் படுத்திக் கொண்டு இருப்பதை பார்க்கிறோம், கேட்கிறோம்.

  • அரபியில் அமைந்துள்ள மதராஸ் என்ற வார்த்தையின் அடிப்படையில், அனைவரையும் "மத்ராஸி'கள் என்று அழைக்கப்படுவதை யாரும் வெறுக்கவே இல்லை. 

  • முஸ்லிம் மன்னவர்கள் வழங் கிய மான்யத்தை, அதற்கான ஆணை வழங்கப்பட்ட பட்டயத்தை இன்றும் பாது காத்து வைத்திருப்பதை பாருங்கள். உணவு, உறவு முறைகள் இன்றும் பரஸ்பரம் பேணப்படுகிறது, அது பற்றி யோசித்துப் பாருங்கள்

சிந்தித்தால்...
  1. முஸ்லிம்களை முன் மாதிரியாகக் கொள்வதற்கு, முஸ்லிம்களுடன் உற வைப் பேணுவதற்கு, முஸ்லிம்களோடு உரிமையோடு பேசிப் பழகுவதற்கு, முன்னுரிமை கொடுக்க நம் நாட்டு மக்கள் என்றுமே மறுப்பதில்லை. மாறாக விரும் புகிறார்கள் என்பதை விளங்க முடிகிறது.

பெருங்குற்றம்
இந்த உலக வாழ்வில் பல விஷயங் களில் முஸ்லிம்களாகிய நாம் முன் மாதிரியாக இருந்துள்ளோம். இந்த முன் மாதிரியை மற்ற மக்களும் ஏற்றிருக் கிறார்கள் என்பதையும் மேற்கண்ட விஷயங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், இம்மையில் இன்பத்தையும், மறுமையில் வெற்றியையும் அளிக்கக் கூடிய இஸ்லாத்தைச் சொல்லி கொடுத் தோமா? இறைச் சட்டங்களை எடுத்து ரைக்கும் குர்ஆனைத்தான் வழங்கி னோமா? இப்போது கூறுங்கள் குர்ஆனை வழங்காதது சிறு குற்றமா? அல்லது...?
======
நன்றி- தவ்ஹீத் மாத இதழ் 
சந்தா மற்றும் விளம்பர தொடர்புக்கு:
அப்துல் ஹமீத் 9444822331  .

0 comments:

Post a Comment