Wednesday, June 29, 2011

சத்தி யம் வெல்லும்!!!!!

கடந்த கால வரலாற்றில் இலங்கையிப பல் வேறு அமைப்புகள் ,தமிழகத்திலிருந்து தாவா பணிபுரிய  சென்றாலும் அவற்றையெல்லாம் விட 
இந்தியதவ்ஹீத்ஜமா அத்திற்கு மக்களிடம் தனி இடம் கிடைத்துள்ளது.கடந்த மூன்று நாட்களுக்கு முன் லெட்பின்சன் அரங்கில் 
இந்தியதவ்ஹீத்ஜமா அத்தின் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் மற்றும் பேராசிரியர் அப்துல்லாஹ் ,ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.அதே தினத்தில் கொழும்பு பல்கலை கழகத்தில் மாணவர்கள் மத்தியில் "மனச்சிதைவு" என்னும் தலைப்பில் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிர கணக்கானோர் பயன் அடைந்தனர்.........
(லெட்பின்சன் அரங்கில் p.jஅவர்களுக்கு தாவா செய்ய அனுமதி மறுக்கப்பட்டது ,என்பது கடந்த கால வரலாற்று உண்மை)

இலங்கைசெய்திகளுக்காக-திருச்சி ஈஸா

Monday, June 27, 2011

பிற இணையதளங்கள்

பிற இணையதளங்கள் போஸ்ட் திருச்சி ஈஸா 
kaleelsms.com
மர்ஹும்-முஸ்லிம்

Sunday, June 26, 2011

பொதுக்கூட்டம்!!!!!!


இலங்கையில் பொதுக்கூட்டம்!!!!!
நேற்று இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் பொதுக்கூட்டம் இலங்கையில் நடை பெற்றது.
சூழ்ச்சியாளர்களின் அவதூறு பிரச்சாரத்தின் மத்தியிலும் ,
இந்த கூட்டத்திற்க்கு ஆண்கள்மற்றும் பெண்களும் 5000 மக்களுக்கு மேற்பட்டோர்
திரளாக திரண்டது சமுதாயத்தின் ஒற்றுமையை வெளிகாட்டியது....
இந்த கூட்டத்தில்
பேராசிரியர்:பெரியார்தாசன்(அப்துல்லாஹ்)அவர்களும், 
இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலைவர்
:எஸ்.எம்.பாக்கர் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.


இலங்கை செய்திகளுக்காக- திருச்சி ஈஸா....

தவ்ஹீத் பள்ளியில் உரை

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையிலுள்ள மஸ்ஜித் தவ்ஹீத்
பள்ளிவாசலில் இந்திய தவ்ஹீத் மாநில தலைவர் சகோ- எஸ்.எம்.பாக்கர்
அவர்களால் “சமுதாய ஒற்றுமை” எனும் தலைப்பில்
உரை நிகழ்த்தினார்...
இந்த நிகழ்ச்சியில் நூற்றுகணக்கனோர் கலந்துக்கொண்டனர்..
நிகழ்ச்சியின் போது கலந்து கொண்டோரில் பெரும்பாலோர் கண்களில் கண்ணீருடன்
விடை பெற்றது அங்குள்ள மக்களின் ஒற்றுமையை உலகிற்க்கு வெளிகாட்டியது!!!! 


இலங்கை செய்தி- திருச்சி ஈஸா...............

சுற்று பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும்!!!
அன்பிர்குரிய சகோதரர்களெ இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர்,துணைதலைவர் முஹம்மத் முனீர்,மாநில செயலாளர் செங்கிஸ்கான்
மற்றும் பேராசிரியர் அப்துல்லாஹ் ஆகியோர் தாவா பணி நிமித்தமாக
இலங்கை சென்றுள்ளார்கள்...............



திருச்சி ஈஸா

Saturday, June 25, 2011

சைபுல்லாஹ் ஹாஜா!!!!!

*சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜாவை நாம் சாதித்து விட்டு வந்த உடனே அவர்
நீக்கப் பட்டிருக்கிறார்! ஏற்கனவே எதிர் பார்த்த ஒன்று தான் என்றாலும் அவர்
மேல் சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சாரம் இல்லை! அவர்கள்
குறிப்பிட்டுள்ள குற்றங்களும் அது தொடர்பான சில கேள்விகளும் எழுந்துள்ளன அவற்றை
இங்கு பதிவு செய்கிறோம். *

*ஸைஃபுல்லாஹ் ஹாஜா மீது நடவடிக்கை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஸைஃபுல்லா ஹாஜா
அவர்களும், மாவட்டப் பொறுப்பிலும் கிளைப் பொறுப்பிலும் இருந்த அவருடைய
வகைறாக்களும் கீழ்கண்ட காரணங்களினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர்
உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர்.

*குரான் ஹதிஸ் மட்டுமே இயக்கத்தின் அடிப்படை என்போர் குரான் ஹதீஸில் இருந்து
ஒருவரை விலக்கலாமா? *

1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப்
பிரச்சாரங்கள், பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற அனைத்துக் காரியங்களையும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் மூலமாகவே நடத்தப்படவேண்டும். ஆனால்
ஸைஃபுல்லா ஹாஜா அவர்களோ தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத்,
முபாரக் நலச் சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவாக் குழு, அக்ஸா
மாணவர் அணி அமைப்பு போன்றவற்றை உருவாக்கி அவற்றின் பெயரில் தேர்தல் பிரச்சாரம்,
தெருமுனைப் பிரச்சாரம், பிரசுரங்கள் வெளியிடுதல், அரசியல் வாதிகள் சந்திப்பு
என்று செயல்பட்டு வருகிறார். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளுக்கு
எதிரானதாகும்.

*அப்படியானால் முஸ்லிம் டிரஸ்ட் , முஸ்லிம் மீடியா டிரஸ்ட் , என பி.ஜே என தன்
பெயரில் வைத்திருப்பது அமைப்பிற்கு எதிரானது இல்லையா? *

2- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்த தானம் செய்தல், கத்னா முகாம்
நடத்துதல், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற பல்வேறு பணிகளைக் குறிப்பிட்டு
அரபியிலும் ஆங்கிலத்திலும் புரஃபைல் தயாரித்து அதனைக் காட்டி பல இலட்சங்களை
(சுமார் 40 இலட்சம் அல்லது அதைவிட அதிகம்) வசூல் செய்து முபாரக் பள்ளிவாசல்
அருகில் உள்ள நிலத்தை வாங்கி அது தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது
நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்.

*ரத்த தானம், இட ஒதுக்க்கீடு போராட்டம் போன்றவற்றை தன் மகன் பெயரில் களவாடிய
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்தது என கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்ததும்
, அந்த களவாடிய அமைப்பின் பெயரில் 20 லட்சம் சொத்து உள்ளதாக கோர்ட்டில்
மவுன்ட் கட்டியதும் குற்றமாகாதா?*



3- இவ்வாறு பதிவு செய்யலாமா? என்று ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பிஜேயிடம் கேட்ட
பொழுது அவ்வாறு செய்வது கூடாது, ஜமாஅத்தின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும்
என்று கூறிய பிறகும், அல்தாஃபி அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு
புதிய நிர்வாகம் இது பற்றி கேள்விப்பட்டு அல்தாஃபி, பிஜே, சம்சுல்லுஹா இன்னும்
பல நிர்வாகிகள் முன்னிலையில் ஸைஃபுல்லாஹ் அவர்களை எச்சரிக்கை செய்த பிறகும்
ஜமாஅத்திற்குத் தெரியாமல் தனக்கு வேண்டப்பட்ட தனி நபர் பெயரில் பதிவு செய்தது
மிகப் பெரும் மோசடியாகும்.

இன்று தனி நபர் பெயரில் பதியலாமா? என கேட்கும் பி.ஜே மதுரை சொத்தை என் பெயரில்
eludh

4- நாங்கள் கடையநல்லூர் மக்களிடம் மட்டும் தான் வசூல் செய்தோம் என்று ஸைஃபுல்லா
ஹாஜா அவர்கள் கூறுகிறார். ஆனால் இது பொய்யாகும். கடையநல்லூர் மக்களிடம் மட்டும்
வசூல் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைக் காட்டி அரபியிலும்
ஆங்கிலத்திலும் ஏன் புரஃபைல் தயாரிக்க வேண்டும்.? ஆங்கிலத்தில் அல்லது அரபியில்
படித்தால் தான் கடையநல்லூர் மக்கள் உதவி செய்வார்களா? மேலும் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தின் துபை மண்டலத்தின் சார்பில் விசா எடுக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தின் மாநில நிர்வாகியாக பேச்சாளராக ரமலான் பிரச்சாரத்திற்காக துபாய்
சென்ற பொழுது ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அமீரகம்,
குவைத், சவூதி அரேபியாவில் உள்ள கடையநல்லூர் அல்லாத தமிழ்நாடு தவ்ஹீத்
சகோதரர்களிடமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையநல்லூரைச் சார்ந்த பலரும்
தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்காகவே உதவி செய்துள்ளனர். தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில்
இருந்து கொண்டே, தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக்காட்டி புரபைல் தயாரித்து, தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களிடம் வசூல் செய்து தனிப்பட்ட கமிட்டிக்கு
பாத்தியப்பட்டது என்று கூறுவது ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதும் ஜமாஅத்தின்
மீதும் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மைக்கு எதிரானதாகும்.

5- புதிதாக எந்த ஒரு சொத்து வாங்கினாலும் அது அந்தந்த கிளையின் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே வாங்கப்பட வேண்டும், அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கிளையிலுள்ள அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பது நமது சட்ட
விதியாகும். இதில் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால்
இது நடைமுறைக்கு வந்து பல்வேறு ஊர்களிலும் இவ்வாறு தான் நம்முடைய மர்கஸ்களுக்கு
இடம் வாங்கப்படுகிறது. ஆனால் இது நடைமுறைக்கு வந்த பிறகு இந்த விதிக்கு எதிராக
கடையநல்லூரில் புதிதாக வாங்கிய இடத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்ததுடன் அதில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, இது
முபாரக் கமிட்டிக்கு பாத்தியப்பட்டதாகும், மாநிலத் தலைமை எங்கள் நிர்வாகத்தில்
தலையிட அதிகாரமில்லை என்றெல்லாம் கூறுவது அமைப்பிற்கு எதிரான மிகப்பெரும்
துரோகமாகும்.

6- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தான்
பல்லாண்டுகளாக முபாரக் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. மேலும் மாநிலத் தலைமையின்
மூலம் அளிக்கப்படும் ஃபித்ரா போன்றவைகளையும் இந்தக் கமிட்டி மூலம்
விநியோகித்தனர். ஜாக்கினர் பள்ளியினை ஆக்கிரமிக்க வந்தபோது தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் சகோதரர்கள் தான் அதனை எதிர்த்து நின்றனர். வசைமொழிகளைத் தாங்கிக்
கொண்டனர். இஸ்லாமியக் கல்லூரி பணத்தைத் தான் (கடனாக) முபாரக் பள்ளிவாசல் வழக்கு
வகைக்காக ஸைஃபுல்லாஹ் பயன்படுத்தினார். மேலும் முபாரக் வழக்கு வகைக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பல்வேறு செலவினங்களைச் செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இல்லையென்றால் முபாரக் பள்ளிவாசலை
ஜாக்கினர் ஆக்கிரமித்திருப்பர். இது உலகிற்கே தெரிந்த உண்மை. அனைத்திற்கும்
தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முபாரக் கமிட்டி என்பது
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உட்பட்டதல்ல. என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது மாபெரும்
மோசடியாகும்.

7- ஆடம்பரத் திருமணங்களிலும், பித்அத்கள்,பெண்வீட்டு விருந்து நடைபெறும்
திருமணங்களிலும் கலந்து கொள்வது, அத்திருமணங்களை நடத்தி வைப்பது, சீர் சீராட்டு
என்ற பெயரில் தவ்ஹீத் வாதிகள் இலட்சக்கணக்கில் பாத்திர பண்டங்களை வாங்கிக்
கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

8- கிளை நிர்வாகத்தை கிளை நிர்வாகிகள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு
மாற்றமாக கடையநல்லூர் கிளை நிர்வாகத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு பல
ஆண்டுகளாக கிளையின் பெயரில் இயங்கக்கூடிய ஆம்புலன்ஸ் வரவு செலவு கணக்குகளை
தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் நிர்வாகக் குழுவிலோ பொதுக் குழுவிலோ
மக்களுக்கு மத்தியில் அதன் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற
குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

9- கிளை நிர்வாகிகள் தீர்த்து வைக்க வேண்டிய குடும்பப் பிரச்சினைகளையும் ஏனைய
பிரச்சினைகளையும் தான் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வைப்பது.

10- மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாநில நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல்,
கிளை உறுப்பினர்களிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் கடையநல்லூரைச் சார்ந்த மாவட்ட
நிர்வாகியையும், கிளை நிர்வாகிகளையும் கைப்பாவைகளாக்கி, ஜமாஅத்தின் பெயரைப்
பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் ஆதாயம் தேடி புறம் போக்கு
நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிவாசல் என்ற பெயரில் கட்டிடம் கட்டியது இதற்கு
தவ்ஹீத் ஜமாஅத் பணத்தினை இலட்சக்கணக்கில் செலவு செய்தது பொதுமக்களுக்கு
மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்ணியததிற்கு பாதிப்பை ஏற்பறடுத்தியுள்ளது.
இதற்கு அடிப்படையாக திகழ்ந்தவர் ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தான்.

11- மாநில நிர்வாகத்திற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல்
மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்த சகோதரர் அப்துந் நாசிர் அவர்களின் மீது
பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தி முபாரக் பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுவதற்கு
பல மாதங்கள் தடைவித்தது ஜமாஅத்திற்கு எதிரான செயலாகும். மாநில நிர்வாகிககள்
தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநிலத்
தலைமைக்குரியதே என்பதை ஸைஃபுல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தும் மாநிலத் தலைமைக்கு
எதையும் தெரிவிக்காமல் இவ்வாறு செயல்பட்டிருப்பது ஜமாஅத்திற்கு எதிரானது
என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

12- மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஜும்ஆ உரைக்காக தாயிக்களை அனுப்பும்
போது மாநில நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக
எதேச்சதிகாரமாக அந்த தாயிக்களை மாற்றியதும் அவர்களுக்கு நாங்கள் தான் சம்பளம்
கொடுக்கிறோம் எனவே எங்கள் விருப்பப்படி தான் பயன்படுத்துவோம் என்று கூறி
ஜமாஅத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டினார்.

13- கடையநல்லூரைச் சார்ந்த ஒரு தனவந்தர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதுள்ள
நம்பக்தன்மையாலும் நற்பணிகளாலும் கவரப்பட்டு தன்னுடைய நிலத்தினை பள்ளிவாசல்
கட்டுவதற்காகவும், மையவாடி அமைப்பதற்காகவும் தானமாக வழங்கினார். அவருக்கு
ஸைஃபுல்லாவாகிய என்னைத் தான் தெரியும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி அவருக்கு என்ன
தெரியும்? என்றெல்லாம் கேட்டு ஜமாஅத்தின் அந்தஸ்தை பின்னுக்குத் தள்ளி தன்னை
முன்னிறுத்தி ஸைஃபுல்லாஹ் பேசி வருகின்றார். இது அகம்பாவம் மற்றும் ஆணவத்தின்
உச்சகட்டம் ஆகும். ஸைஃபுல்லாஹ் ஜமாஅத்தினுடைய நிர்வாகியாக இல்லாமல்
இருந்திருந்தால் இவரை யாருக்காவது தெரிந்திருக்குமா? நபியவர்கள் ஸகாத்தை
வசூலிக்க அனுப்பிய நபித்தோழர் இவ்வாறு கூறிய போது இவர் தன்னுடைய தந்தை வீட்டிலோ
தாய் வீட்டிலோ இருந்திருந்திருந்தால் இவருக்கு கிடைத்திருக்குமா? என்று
நபியவர்கள் பதில் கூறினார்கள். அந்த நபித் தோழரின் கூற்றைப் போன்று தான்
ஸைஃபுல்லாஹ்வின் பேச்சுகளும் அமைந்துள்ளன.

14- சுய இலாபத்திற்காக அரசியில் வாதிகளுடன் கைகோர்த்து செயல்பட்டதும் தவ்ஹீத்
ஜமாஅத்திற்கு கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அரசியல்வாதிகளை
புகழ்ந்து பேசியும் ஸைஃபுல்லாஹ் அவர்கள் செயல்பட்டுள்ளார் என்பதும்
நிரூபிக்கப்பட்டுள்ளது.

15- தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கி வ்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட முபாரக்
பள்ளிவாசல் அருகில் அந்த ஆம்புலன்ஸிற்காக உள்ள இடம் என்று அனைவரும் ஏற்றுக்
கொண்ட இடத்தில் நிறுத்தக் கூடாது. என்று கூறியதுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தை
ரோட்டில் எடுத்து நிறுத்தி ஜமாஅத்திற்கு எதிரான தன்னுடைய குரோதத்தை ஸைஃபுல்லாஹ்
வெளிப்படுத்தினார்.

மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் இன்னும் ஜமாஅத்திற்கு எதிரான பல
செயல்பாடுகளாலும் ஸைஃபுல்லாஹ் அவர்களும் அவரைச் சார்ந்த அவருடைய வகையறாக்களும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப்
பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் மாநிலத்தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்புப்பட்டு ஒப்புதலும்
பெறப்பட்டது.

எனவே சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுடன் ஜமாஅத் தொடர்பான எந்த உறவும் வைத்துக் கொள்ள
வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

முபாரக் பள்ளிவாசல் தொடர்பாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல்
செய்து தனி நபரின் பெயரில் பதிவு செய்தது தொடர்பாகவும் மாநிலத் தலைமையின்
வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
தீர்மானிக்கப்பட்டுது.

மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த கூட்டம் சரியாக 1 : 30 மணிக்கு
பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
.

Tuesday, June 21, 2011

மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம், தர்பியா மற்றும் கல்வி உதவி நிகழ்ச்சி!











மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம், தர்பியா மற்றும் கல்வி உதவி நிகழ்ச்சி!





மதுரை மாவட்டத்திற்கு அண்மையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த 19.6.11 ஞாயிறு அன்று காலை மதுரை மாவட்ட தர்பியா நடை பெற்றது ! காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை முபாரக் பள்ளியில் நடை பெற்ற இந்த நல்லொழுக்க பயிற்சியை மாநில செயலர் செங்கிஸ்கான் நடத்தினார். இதில் மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட எரளமனோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

மாலை 7 மணியளவில் வில்லாபுரத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது !
இதில் மாவட்ட பேச்சாளர் சம்சுதீன் 'கல்வியின் அவசியம்' எனும் தலைப்பிலும்
சகோதரர் நசிர் அஹமத் ஜமாலி 'நபிகளார் உருவாக்கிய சமுதாயம் ' எனும் தலைப்பிலும்
மாநில செயலாளர் செங்கிஸ் கான் 'சமூகத் தீமை மது' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

இன்னிகழ்ச்சியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கப் பட்டது! மாவட்ட கிளை நிர்வாகிகள் , பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்னிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


மதுரையில் INTJ சுமை தூக்குவோர் பிரிவு துவக்கம்


மதுரையில் INTJ சுமை தூக்குவோர் பிரிவு துவக்கம்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த சுமை தூக்குவோர் அப்பகுதி முஸ்லிம்களிடம் மிக அநியாய கூலி கேட்டு மிரட்டுவதோடு , முஸ்லிம்கள் தங்கள் பொருளை தாங்களே தூக்கினாலும் எங்கள் கூலியை கொடுத்து விட வேண்டும் என முத்துராமலிங்க தேவர் பெயரில் ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு மக்களை மிரட்டி வந்தனர்.

இதைக் கண்ட அப்பகுதி இளைஞ்ர்கள் இ.த.ஜ சுமை தூக்குவோர் பிரிவை துவங்கி இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இனி எங்கள் சுமைகளை எங்கள் சங்கத்தின் சார்பில் நாங்களே தூக்கி கொள்கிறோம் என சம்பந்தப் பட்ட சங்கத்தினரிடம் கூறி விட்டனர். சாதுர்யமாக இப்பிரச்சனையை கையாண்ட மதுரை மாவட்ட நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

தென் காசியில் இலவச நோட் புக்ஸ் நிகழ்ச்சி!



தென் காசியில் இலவச நோட் புக்ஸ் நிகழ்ச்சி!

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தென்காசி கிளை சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு நோட் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 17.6.11 வெள்ளியன்று மாலை காட்டுபாவா பள்ளி அரங்கில் நடை பெற்றது ! நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் ஆனைமலை யாசிப் ,மற்றும் மாநில செயலாளர் செங்கிஸ் கான் ஆகியோர் உரையாற்றினர்.

இதில் பெண்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காட்டுபாவா பள்ளியின் தலைமை ஆசிரியரும் .தென்காசி நகர நிர்வாகிகளும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச நோட் புத்தகங்களை வழங்கினர்.



அண்ணன் ஜமாஅத்தை கண்டு அரண்டு போய் அரைமணி நேரத்தில் சாவியை பறித்ததா காவல்துறை?





இது [உணர்வு அலுவக ஆக்கிரமிப்பு?]குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.
என்று அண்ணன் ஜமாஅத் கூறி, தாங்கள் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து காவல்துறை சாவியை வாங்கிவிட்டதாக பெருமையடித்த இவர்களின் பித்தலாட்டத்தை படம் பிடித்து காட்டுகிறது அண்ணன் ஜமாஅத் வெளியிட்டுள்ள காவல்துறை துறைமுகம் சரகம் உதவி ஆணையாளரின் கடிதம்.




சாவியை பறித்து விட்டதாக
இவர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது 30 .5 .2011

காவல்துறை சாவியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்ததோ 11 .6 .2011


பதினொரு நாட்களுக்கு பிறகே காவல்துறை, ஆர்.டி.ஒ.விடம் சாவியை ஒப்படைத்திருக்க, இவர்களோ அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து
பெருமையடித்துக் கொள்கிறார்கள்.

காவல்துறை நாங்கள் புகார் கொடுத்த அன்றே அரைமணி நேரத்தில் சாவியை வாங்கிவிட்டது. ஆனால் நல்லநேரம் பார்த்து 11 நாள் கழித்து வட்டாட்சியர் இடம் ஒப்படைத்தது என்று இவர்கள்
சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில்
பொய்களே இவர்களை பார்த்து வெட்கப்படும் அளவுக்கு நல்லவர்களல்லவா? இன்னும்
என்னென்ன அடிச்சு விடப்போறாங்களோ?


s.s.u.சைபுல்லாஹ் - செங்கிஸ் கான் சந்திப்பு !




கடந்த 17-06-2011 வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் இதஜவின் தென்காசி நகர் கிளை சார்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் கலந்து கொண்டார்.

அவர் அந்நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் சென்றார். அங்கு ஜுமுஆ தொழுது விட்டு, ததஜவின் முன்னாள் தலைவர் மவ்லவி S.S.U.ஸைபுல்லாஹ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் சகோதரர்கள் ஜபருல்லாஹ் , செய்குனா உள்ளிட்ட சகோதரர்களையும் சந்தித்தார். சகோதரர் செங்கிஸ்கானை ஸைபுல்லாஹ், ஜபருல்லாஹ் மற்றும் செய்குனா உள்ளிட்ட சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினர்.

அப்போது, அனைத்து ஏகத்துவாதிகளும் ஒரு அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசையினை செங்கிஸ்கான் தெரிவித்தார். அல்லாஹ் நல்லது நாடுவான் இன்ஷா அல்லாஹ் என தனது பதிலினை ஸைபுல்லாஹ் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தலைவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என செங்கிஸ்கான் தெரிவித்தார்.

அவர்களின் நல்ல எண்ணத்தை நிறைவேற்றி அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் ஓரணியில் இணைத்து மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியினை ஆற்ற அருள் செய்யட்டும் என துஆச் செய்கின்றோம்.


--
Thanks & Regards

Aboobacker Thambi
Editor
Keelakarai Anjal
C/o.KECT, 8/194, Muslim Bazzar
Kilakarai - 623517, Ramnad Dist
India.

நாளொரு நாடகம் ! பொழுதொரு பல்டி! 'உணர்வற்றுப்' போன அலுவலக போராட்டம்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

உணர்வு அலுவலகத்தை தமுமுகவினர் கைப்பற்றி விட்டர்கள். அதை மீட்க ஜூன் 9ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் என்றார்கள் அண்ணன் ஜமாத்தினர். பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் ததஜ நிர்வாகிகளை அழைத்து, உணர்வு அலுவலகம் உங்களுடையதுதான்; ஜூன் 9ஆம் தேதி தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவலகம் ஒப்படைக்கப்படும்' என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்என்று கூறி 14 ம் தேதிக்கு முற்றுகை ஒத்திவைப்பு என்றார்களே! உயர் அதிகாரிகள் சொன்னபடி ஜூன் 9ஆம் தேதி இவர்கள் கையில் சாவியை கொடுத்து விட்டார்களா? என்றால் இல்லவே இல்லை. சரி சாவி கிடைக்கவில்லையானால் இவர்கள் அறிவித்தபடி 14 ம் தேதி சட்டமன்ற முற்றுகை அல்லது முதல்வர் வீடு முற்றுகை உறுதியாக நடைபெறும் என்று சொல்ல வேண்டுமல்லவா? பிறகு அதிலிருந்தும் பல்டியடித்து அடுத்த சட்டமன்றம் எப்போது கூடுகிறதோ அன்றைக்கு முற்றுகை என்று அறிவித்து விட்டு ஆழ்ந்த சயனத்திற்கு சென்றுவிட்டது அண்ணன் ஜமாஅத்.

இப்போது தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தை காரணமில்லாமல் அழுவது போன்று, சில போராட்டங்களை பட்டியலிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது அண்ணன் ஜமாஅத். அந்த போராட்டத்தை பார்ப்பதற்கு முன்பாக, உணர்வு அலுவலகம்[?] மீட்பு விஷயத்தில் மீண்டும் அண்ணன் ஜமாஅத் உளறியுள்ளதை பார்ப்போம்.

முதன் முதலாக ஜூன் 9 அன்று சட்டமன்ற முற்றுகை என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்களே அதில் இவர்களின் புகார் குறித்து காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி இவர்கள் கூறியதை பாருங்கள்;

12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது
.

உணர்வு அலுவலகம் மீட்பு தொடர்பாக இவர்களது புகாரை காவல்துறை கண்டுகொள்ளாமல் குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையை செய்ததால்தான் பொங்கி எழுந்து சட்டமன்ற முற்றுகை என்று அறிவித்தவர்கள், இன்று இவர்களது புகார் மனு மீது காவல்துறை விரைந்து செயல்பட்டு அரை மணி நேரத்தில் தமுமுகவின் மண்டையில் தட்டி உணர்வு அலுவலக சாவி வாங்கிவிட்டதாக விடும் கதை பாரீர்;

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.
இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.

காவதுறையின் செயல்பாடு விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாக உளரும் இவர்கள், இப்போது சாவியை காவல்துறை வைத்துக்கொண்டு தர மறுக்கிறதாம். எனவே போராட்டம் என்று குதிக்கிறார்கள். சரி ஏற்கனவே சட்டமன்றம் என்றைக்கு திறக்கிறதோ அன்றைக்கு போராட்டம் என்றவர்கள் இப்போது அதிலும் பல்டியடித்து நான்கு கட்ட போராட்டம் நடத்தப் போகிறார்களாம்;

1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .
எதையும் சட்டரீதியாக சந்திப்போம் என்றவர்கள், தாங்கள் நடத்தும் போராட்டத்தால் எந்த பயனும் விளையாது என்பதை எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் விவகாரத்தில் அனுபவ பூர்வமாக உணர்ந்ததால், சில கண்துடைப்பு போராட்டங்களை நடத்தி விட்டு பின்னர் தாங்களே சட்டத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளார்கள். அதுதான் இவர்களின் நான்காவது கட்ட போராட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சக முஸ்லிம்களுக்குள் மோதிக்கொள்ளவேண்டும் என்று அண்ணன் ஜமாஅத் நினைக்கிறது போலும்.

சாதாரண ஒரு சொத்துப் பிரச்சினையை சட்ட ரீதியாக சாதிக்க திராணியின்றி, போராட்டம்- முற்றுகை- கைப்பற்றுதல் என்று கண்டபடி உளறித்திரியும் இந்த 'உலவி'யை சமுதாயம் புறக்கணிக்கும் நாளே சமுதாயத்திற்கு விடிவு நாளாகும்.

by abdul muhaimin

போலிகள் ஜாக்கிரதை!


போலிகள் ஜாக்கிரதை!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புக்குரியவர்களே!

அல்லாஹ்வும் அவனது தூதரும் வலியுறுத்திய சமுதாயப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து அனைத்து மக்களின் மனதில் இடம் பெற்று வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சியினை கண்டு காழ்புணர்வு கொண்டு அதன் பெயரை கள்ளத்தனமாக திருடிய பிஜெ.அதன் மூலமாக சமுதாயத்தில் கொட்டுப்பட்டு அவமானப்பட்டு போய் கொண்டு இருப்பதை நாம் அறிவோம்.

அவருடைய பயிற்சி பாசறையில் பயின்ற சீடர்கள் (பொய்யன் டிஜே பிளாக்ஸ்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் இவர்கள்) பிஜெயுக்கும், அவரது பிடியில் சிக்கி தவிக்கும் ததஜவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் நம் மாநிலச் செயலாளர் சகோதரர் செங்கிஸ்கான் நடத்தி வரும் இணையதளத்தை முடுக்க பல வகையிலும் முயற்சி செய்தனர். செங்கிஸ்கானை எப்படியாவது இதஜவில் இருந்து பிரிக்கவும், இதஜ தலைவர் சகோதரர் பாக்கருடன் பிளவு ஏற்படுத்தவும் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கிஸ்கான் தனது பெயரில் நடத்திவரும் இணையதளமான செங்கிஸ்கான் ஆன்லைன் டாட் காம் போல் அச்சு அசலாக செங்கிஸ் ஆன்லைன் பிளாக்ஸ்பாட் டாட் காம் என்ற ஒரு பிளாக்ஸ்பாட்டை திறந்து பித்தலாட்டம் செய்துள்ளனர் இந்த அநியாயக்காரர்கள்.

செங்கிஸ்கான் பெயரில் உள்ள கானை மட்டும் நீக்கி விட்டு உருவாக்கி உள்ள இந்த பிளாக்ஸ்பாட்டுக்கு செல்பவர் கண்டிப்பாக குழப்பம் அடைந்து விடுவார். ஆகவே, இந்த விஷமிகளின் ஆட்டம் பாட்டத்தை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ் அவனே இவர்களுக்கு தக்க கூலி கொடுக்க போதுமானவன்.

மருந்துக்கூட மறுமை அச்சம் இல்லாத இந்த போலிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

by intjonline

இதஜ தாராபுரம் கிளையின் மருத்துவ உதவி



தாராபுரம் மாவட்டம் சார்பாக புற்று நோய் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவருக்கு உதவி வழங்கப்பட்டது

Thursday, June 16, 2011

பதிலடி!!!!

பதிலடி!!!!

பொய்யர்களின் புரட்டலுக்கு,இன்ஷா அல்லாஹ்

நாளை தென்காசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில்-

மாநில செயலாளர் செங்கிஸ்கான் அவர்கள்

பதிலடி கொடுக்கவுள்ளார்………………………

“மர்ஹூம்”