Tuesday, June 14, 2011

ஏழையின் முகத்தில் இறைவனைக் காணும் மருத்துவமனை தஃவா





ஏழையின் முகத்தில் இறைவனைக் காணும்
மருத்துவமனை தஃவா

ஆதமின் மகனே நான் நோயுற்று இருந்த போது என்னை ஏன் வந்து பார்க்கவில்லை? என்று மறுமையில் அல்லாஹ் கேட்கும் போது , அந்த அடியான் "அல்லாஹ் உனக்கு நோயா? எனக் கேட்கும் போது இன்ன அடியான் நோய் வாய்ப்பட்டு இருந்த போது நீ அவனை நோய் நலம் விசாரித்து இருந்தால் , அது என்னை விசாரித்து போலாகும் " என அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறியதாக வரும் செய்தி புஹாரி முஸ்லிம் உள்ளிட்ட நபி மொழி நூல்களில் இடம் பெற்றுள்ளது !



மேற்கண்ட நபி மொழியை நடை முறைப் படுத்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வாரந்தோறும் அரசு மருத்துவ மனைகளில்
சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கோரி அவர்களுக்கு இஸ்லாத்தின் இறைக் கொள்கையை எடுத்து சொல்வதன் மூலம் ஏழையின் முகத்தில் இறைவனைக் காணும் பணியை
செய்து வருகிறது !


அந்த வகையில் கடந்த 12.6.11 அன்று மாநில செயலாளர் செங்கிஸ் கான் தலைமையில் ஒரு குழுவும் , சேப்பாக்கம் கிளை தலைவர் கலீல் ரஹ்மான் தலைமையில் மற்றொரு குழுவுமாக
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகலை சந்தித்து அவர்களுக்கு சாத்துக்குடி ஹார்லிக்ஸ் போன்ற உணவுகளையும் வழங்கினர். இதில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களும் , இலங்கை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment