Tuesday, June 21, 2011

அண்ணன் ஜமாஅத்தை கண்டு அரண்டு போய் அரைமணி நேரத்தில் சாவியை பறித்ததா காவல்துறை?





இது [உணர்வு அலுவக ஆக்கிரமிப்பு?]குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.
என்று அண்ணன் ஜமாஅத் கூறி, தாங்கள் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து காவல்துறை சாவியை வாங்கிவிட்டதாக பெருமையடித்த இவர்களின் பித்தலாட்டத்தை படம் பிடித்து காட்டுகிறது அண்ணன் ஜமாஅத் வெளியிட்டுள்ள காவல்துறை துறைமுகம் சரகம் உதவி ஆணையாளரின் கடிதம்.




சாவியை பறித்து விட்டதாக
இவர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது 30 .5 .2011

காவல்துறை சாவியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்ததோ 11 .6 .2011


பதினொரு நாட்களுக்கு பிறகே காவல்துறை, ஆர்.டி.ஒ.விடம் சாவியை ஒப்படைத்திருக்க, இவர்களோ அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து
பெருமையடித்துக் கொள்கிறார்கள்.

காவல்துறை நாங்கள் புகார் கொடுத்த அன்றே அரைமணி நேரத்தில் சாவியை வாங்கிவிட்டது. ஆனால் நல்லநேரம் பார்த்து 11 நாள் கழித்து வட்டாட்சியர் இடம் ஒப்படைத்தது என்று இவர்கள்
சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில்
பொய்களே இவர்களை பார்த்து வெட்கப்படும் அளவுக்கு நல்லவர்களல்லவா? இன்னும்
என்னென்ன அடிச்சு விடப்போறாங்களோ?


0 comments:

Post a Comment