Wednesday, June 15, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[33] just4jokes!


பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி; "இப்போதைக்கு தி.மு.க. எங்கள் கூட்டணி கட்சி. அதில் எந்த மாற்றமும் இல்லை.
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஏதோ மத்தியில கூட்டணி நீடிக்கிறதால 'ஜாமீனையாவது பிடிச்சிரலாம்னு நெனைச்சா, நீங்க வலையிலேயே பெரிய ஓட்டையா போடுறது நியாயமா?
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு : திராவிடக் கட்சிகளை அழித்து விட்டால், தமிழர்களை அழித்து விடலாம் என கனவு காண்கிறார் சோனியா. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., வளர்த்த திராவிடக் கட்சிகளை, அழிக்க நினைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான் இந்த வைகோ.
பஞ்ச் பட்டிக்காட்டான்; திராவிடக்கட்சிகளை சோனியா அழிக்க நெனைக்கிறது ஒரு பக்கம் கிடக்கட்டும். உங்க பேச்சுப்பிரகாரம் பார்த்தாக்கூட உங்களை அந்த அம்மையார், திராவிடக் கட்சி கணக்குலேயே எடுக்கலியே. இதுக்காகவல்லவா நீங்க பொங்கணும்..?

பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு: தபால் நிலையங்களை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது. அவை, கூடுதலாக திறக்கப்பட வேண்டும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; ஏற்கனவே இருக்குற தபால் நிலையங்கள் காத்து வாங்குது. இதுல கூடுதலா வேற திறக்கனுமாக்கும்? எதுக்கு தபால்களை பட்டுவாடா பண்ணாம கெணத்துலயும் புதருளையும் வீசுறதுக்கா?

பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேட்டி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக, இந்தியா பல முறை தெரிவித்தது. எனினும், பின்லாடன் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்தது போலவே, இதையும் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக, மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; எதுக்கு இப்பிடி சுத்தி வளைக்கிறீங்க? பேசாம பாகிஸ்தானுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராடணும்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே?

தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை;சமூக வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பாடுபடும் தி.மு.க., தொண்டர்கள் கூடா நட்பை தொடர்ந்தால் கேடாக முடியும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; இது தொண்டர்களுக்கு சொல்ற மாதிரி தெரியலையே! இப்ப இருக்குற கூட்டணியை மனசுல வச்சுக்கிட்டு உங்களுக்கு நீங்களே சொல்ற மாதிரி தெரியுதே?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மராட்டியத்தைப் போல், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில், மதுக்கடைகளை உடனே மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் மது பரிமாற தடை விதிக்க வேண்டும். காலை, 10 மணி முதல், பகல், 1 மணி வரை, மூன்று மணி நேரம் மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்க வேண்டும். இதையும் படிப்படியாக குறைத்து, குறிப்பிட்ட காலத்திற்குள், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; மருத்துவரய்யா! உங்க அறிக்கை எல்லாம் சரிதான். அதோட, 'மேற்கண்ட எனது அறிவுரையை ஏற்காத கட்சியுடன் வருங்காலத்தில் எனது கட்சி கூட்டணி சேராது'ன்னு ஒரு வரி சேர்த்தீங்கன்னா நல்லாருக்கும்.


0 comments:

Post a Comment