Thursday, April 29, 2010

யாதவ மகாசபை மாநாட்டில் நடைபெற்ற உண்மை


அஸ்ஸலாமு அலைக்கும் !

கடந்த 25-4-2010 ஞாயிற்றுகிழமை நெல்லையில் நடைபெற்ற யாதவ மகாசபை மாநாட்டில் நடைபெற்ற உண்மை நிலையை செய்திகளை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளுக்கும் கொண்டு சென்றோம். சம்மந்தப்பட்ட பத்திரிக்கைகள் உண்மையை உணர்ந்து, பத்திரிக்கை தர்மத்தின் அடிப்படையில் மறுப்பை பிரசுரித்திருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் வெளிவந்த புகைப்படத்தின் அடிப்படையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தையும், அதன் நிர்வாகிகளையும், குறித்து உள்நோக்கத்துடன் தவறாக அவதூறுகளை பரப்பும் பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்ஷா அல்லாஹ்...

இதில் தினமணி, தினத்தந்தி மற்றும் தமிழ்நியூஸ் செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.

இப்படிக்கு,
எஸ். எம். ஸையத் இக்பால்
துணைப்பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

Pj -vin சொல்லும் -செயலும்

கடந்த வாரம் மக்கள் ரிப்போர்ட்டில் பீஸ் கண்காட்சியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கின்றது என மக்களை தடுத்தவர் மனைவி, மக்களோடு அதை விட அனாச்சாரங்கள் நிறைந்த பொருட்காட்சிக்கு சென்ற வி‘யத்தை மறுக்காதவர், தன் மகன் கடைசியில் கோக் விற்பதாக வைத்துக் கொண்டாலும் அது பீஸ் கண்காட்சிக்கு செல்வதற்கு ஆதாரம் ஆகாது என்று கூறியிருப்பதன் மூலம் தான் சொல் ஒன்று செயல் ஒன்றுமான “”வறட்டி ஆலிமின்” வாரிசு என்பதை வரட்டு வாதத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இவரின் முரண்பாடுகளில் மேலும் சில...

- இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பார். தன் மகனை காதலித்து இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை விரட்டி கொடிய மார்க்கமாகக் காட்டுவார்.

- இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்பார். தொழுகையை கடைபிடிக்காததன் மூலம் சிரமமான மார்க்கமாகக் காட்டுவார்.

- சிறிய கூட்டமே வெற்றி பெறும் - அப்போது. எங்கள் கூட்டமே பெரிய கூட்டம் - இப்போது.

- டிரஸ்டுகள் கூடாது என்பார். முஸ்லிம் டிரஸ்டை தன் பெயரில் வைத்துக் கொள்வார்.

- தனி நபர் பெயரில் ஜமாஅத் சொத்துக்கள் கூடாது என்பார். தன் பெயரில் மதுரை சொத்தை வைத்திருப்பார். கேட்டால் ரிஜிஸ்டர் பண்ண பணமில்லை என்பார்

- இப்ராஹிம் நபி வழியில் “கொள்கை சொந்தமே சொந்தம்’. தம்பிக்கு ல்ஜ்ல், உணர்வு விளம்பரம் ஏஜென்சிஸ், மைத்துனர்களுக்கு சன், மூன் பிரிண்டிங்

- குருதிச் சொந்தம் தேவையில்லை புறக்கணியுங்கள் என்பார். மகனுக்கு ரெக்கார்டிங், எடிட்டிங், தனக்கு குர்ஆன் என குருதிச் சொந்தங்களுக்காக கொள்கைச் சொந்தங்களிடம் கொள்ளையடிப்பார்.

- ஜகாத் வசூலிக்குச் சென்றவர். “”இது எனக்குத் தரப்பட்டது’’ என்று சொல்லும் ஹதீûஸயே உரக்க முழங்குவார். காரைப் பற்றி கேட்டால் தனக்கு தரப்பட்டது என்பார்.

- நடுவிரல் மோதிரம் அணிவது கூடாது என்பார். தன் மகளுக்கு ஐ விரல் மோதிரம் வாங்க தலைமை நிர்வாகியை கடைக்கு அனுப்புவார்.

- பேசி வைத்த பெண்ணோடு போனில் பேசுவது கூடாது என்பார். ஆற்காடு, முஹம்மத் பந்தர், பரங்கிப்பேட்டை என பல பெண்களிடம் அளவளாவிக் கொண்டிருப்பார்.

- ஸஹாபாக்கள் தான் இந்த மார்க்கத்தை முதலில் நடைமுறைப் படுத்தியவர்கள். அவர்களை பின்பற்றுவது தான் சுன்னா என்பார். ஸஹாபாக்கள் நம்மை விட மோசமாக நடந்தார்கள். நாம் எவ்வளவோ மேல் என்று பின்பற்றக் கூடாது என்பார்.

- பெண்ணோடு தனித்திருக்கக் கூடாது என்பார். ஆற்காடு வீட்டில் அனைவரையும் அனுப்பி விட்டு அவரோடு தனித்திருப்பார்.

- ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்பட்டது என்பார். குர்ஆனோடு மோதும் ஹதீஸ்களை தூக்கிப் போடு என்பார்.

- தத்தம் பகுதி பிறை என்பார். பின் தமிழக பிறை என்பார்.

- இஸ்லாத்தைப் பற்றி பேசுவார். இல்ôமிய கடமைகள் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எதையும் பேண மாட்டார்.

- மார்க்கத்தை யாரும் சொல்லலாம் என்பார். பிரிந்த பின் பேசினால் குறை குடம் என்பார்.

- தனக்கு பாதுகாப்புத் தேவையில்லை என தொலைக்காட்சியில் பேசுவார். பாதுகாப்பு காரணத்தால் தொழ வரவில்லை என்பார்.

- பதவி ஆசையில்லை என்பார். கொள்ளைப் புற வழியாக “”மேலாண்மை’’ செய்வார்.

- புகழ் போதை இல்லை என்பார். தன்னைத் தவிர டி.வி.யில் வருவதை விரும்ப மாட்டார்.

- ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பதாக பிறைக் குற்றம் சாட்டுவார். பிரிண்டிங், ரெக்கார்டிங், எடிட்டிங், சிடி, புக், ரீசார்ஜ், காலண்டர் என குடும்ப வியாபாரம் செய்வார்.

- மற்ற பள்ளிகளில் தொழுவது கூடாது என்பார். சொந்தப் பள்ளியிலும் தொழ வர மாட்டார்.

- மற்றவர்களைப் பார்த்து கட்டப் பஞ்சாயத்து கழகம் என்பார்.

- மகனின் காதலிக்காக கட்டப் பஞ்சாயத்துக்கு ஆள் அனுப்புவார்

இதக் கேளுங்க!

இதக் கேளுங்க!

அதிராம்பட்டிணத்தில் பள்ளிவாசல் சுவரை சங்பரிவாரக் கும்பல் இரவோடு இரவாக இடித்த விஷயத்தில் அங்கேயுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தன! முதலில் இப்போராட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த தனிநபர் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகி, திடீரென பல்டி அடித்து குழுவில் இருந்து விலகிக் கொண்டாராம்.

இந்த மனமாற்றத்துக்கு இடையில் என்ன நடந் ததோ தெரியவில்லை. ஆனால் அதிராம்பட்டின மக்கள் அந்த ஜமாஅத் தின் மேல் கடுங் கோபத் தில் உள்ளனராம். அது மட்டுமின்றி மேலாண் மைக் குழு தேவையில்லை என்று செயற்குழுவில் தைரியமாக கருத்துச் சொன்ன தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மீது ""மேல் விசாரணை'' ஏற்படுத்தியுள்ளதும், மாவட்டத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல் ஒற்றுமை நாடகத்திற்கு அந்த முன்னாள் நிர்வாகியை களமிறக்கி, தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையைக் கிள்ளிவிட்ட கதையாக மேலப்பாளையம் மேலாண்மையை விட்டு ""தூக்கு மாட்டிக்கச் சொன்னவர்களோடு ஒற்றுமையா?'' என பேசவும் வைக்கும் நிஜத் தலைவருக்கு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஜுஜுபி மேட்டர் என்கிறது நமது உளவுத்துறை.

அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...

இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்... பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவரின் தொல்லைகள் தாங்க முடியாமல் பொம்மைத் தலைவர் ராஜினாமா செய்து சேலத்திற்கு சென்றார். சேலத்து சின்னத்தம்பி சென்னை வந்து தலைவராக பொறுப்பேற்றார். இவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்களெல்லாம் மல்லுக்கு நின்ற காமராஜ் அரங்க பொதுக்குழு நாடகத்தில், தான் முடிவு செய்த பனைக்குளத்தார் தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக, சின்னத் தம்பிக்கு பொதுச் செயலாளருக்குரிய தோரணை இல்லை என புது விளக்கம் கொடுத்தார் நிஜத் தலைவர். பிறகு பாக்கரை பாய்ந்து பிராண்டும் வேட்டை நாயாக்கி, வேலை முடிந்ததும் வீட்டுக்கனுப்பி விட்டார். அதே பொதுக் குழுவில் சில்லறை காசையெல்லாம் கணக்குப் பார்ப்பார் என்று சொல்லி கடலை மிட்டாய்க்காரரை பொருளாளராக்கிய பின்பு தான் தெரிந்தது அவருக்கு சில்லறையை மட்டும்தான் எண்ணத் தெரியும் பற்று வரவு என்றால் என்னவென்றே தெரியாது என்பது! பிறகு பொருளாளர் தனது நிறுவனத்திற்கு வேலை பார்க்கவும், பொருளாளர் வேலையை "பை'க் கடைக்காரர் பார்த்து கை நிறைய சம்பளமும் பெற்றார். இப்போது கோவைத் தம்பி களமிறக்கி விடப்பட்டு குடும்பத்தோடு சென்னை வந்துள்ளாராம். இவர் சென்னையிலே நிலைத்திருப்பாரா? விரைவிலேயே வேலூர் செல்வாரா? அல்லது பிறந்த ஊரான கோவைக்கே செல்வாரா? என்பது தான் அப்பாவித் தொண்டனின் தற்போதைய கேள்வி. மேலும் கோவை ஜாபரையும் நீக்கி விட்டார்களாம். காரணம் என்ன தெரியுமா? 1. ஐ.என்.டி.ஜே. பள்ளியில் தொழுதார். 2. அதிரை ஜமாலோடு பயணித்தார். 3. ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டுக்குச் சென்றார். பள்ளிவாசலில் தொழுவது பாவமா? அதிரை ஜமால் என்ன அழகு மங்கையா தனித்த பயணத்தை தவிர்ப்பதற்கு? ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தியதென்ன கும்பமேளாவா? என அப்பாவி தொண்டன் அறியாமல் கேட்பது நமக்குப் புரிகிறது. அப்படியானால் ஐ.என்.டி.ஜே. மற்றும் த.மு.மு.க.வோடு பேச்சு வார்த்தை எனும் பெயரில் லட்டர் கொடுத்து போட்டோவும் எடுத்துக் கொண்ட அந்த "அற்புத விளக்கு' மீது எப்போது நடவடிக்கை எடுப்பார்களாம்? தமுமுக நிர்வாகிகளோடு ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தும் மாவட்ட - மாநில நிர்வாகிகள் மேலும் நடவடிக்கை எடுப்பார்களா? இப்படியே போனால் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டுக்கு பதிலாக ஒதுக்கப்பட்டோர் மாநாடு அல்லவா நடத்த வேண்டியிருக்கும் என்கிறான் அதே அப்பாவித் தொண்டன்.

முஸ்லிம் சமுதாயத்தின் பார்வைக்கு.....

இறைவனின் திருப்பெயரால்....

மூன்று சம்பவங்கள்

முஸ்லிம் சமுதாயத்தின் பார்வைக்கு.....

சம்பவம் 1 :

இலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் சகோதரி சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவரிடம் அறுவை சிகிச்சைக்காக அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு மயக்க மருந்தை கையாளுவதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கோமா நிலைக்கு சென்றார். இதுபற்றி நமக்கு வந்த தகவலை உறுதிபடுத்தி கொண்டபின் நிர்கதியாய் நின்ற முஸ்லீம் குடும்பத்திற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிப் பயனில்லாமல் போனதால் முற்றுகையை நாம் அறிவித்தோம் !

முதல்வரின் மருத்துவர் என்று இறுமாப்போடு பேசியவரை நமது முற்றுகை இறங்கி வரச் செய்தது. மொத்த செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதன் அடிப்படையில் முற்றுகை வாபஸ் பெறப்பட்டதால், மருத்துவமனைக்கு வெளியே நமது நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது சமுதாயத்திற்கு பாடுபடுவதாக கூறும் இந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகளான பைக்கடைகாரும், களஞ்சியத்தாரும், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்திறங்கி உள்ளே சென்றனர். நாம் கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரிக்காக வந்திருப்பார்கள் என நினைத்தோம் போன பின் மருத்துவரை கேட்டால் நமக்கு அதிர்ச்சி ! எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் எங்களிடம் கூறுங்கள் என்று கூற மருத்துவரே தேவையில்லை பிரச்சனையை ஐஎன்டிஜே வினர் சுமுகமாக முடித்துவிட்டார்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.

சமுதாயத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட சகோதரி என்று பார்க்காமல் நமக்கு எதிராக களமிறங்குவதற்காக, மருத்துவமனைக்கு ஆதரவாக களம் கண்டு நின்ற போது இவர்களின் உண்மை முகம் நமக்கு புரிந்தது. இந்த கேடு கெட்ட இயக்கத்தினர் எப்படி சமுதாயத்தை காப்போம் என்று கூறமுடியும்.



சம்பவம் 2 :

சென்னை மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் சகோதரருடைய வீட்டை வக்கீல் ஒருவர் வாடகையும் வசூல் பண்ணி கொண்டு, காலியும் செய்யாமல் ஆக்ரமித்து கொண்டிருக்க சம்மந்தப்பட்ட சகோதரர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று, காவல் துறையினரை கொண்டு வக்கீல் தரப்பை வெளியேற்றி விட்டு, மீண்டும் அந்த வக்கீல் ஆக்கிரமித்து விடுவார் என்ற அச்சம் மேலிட மேற்படி இடத்தை நம் ஜமாஅத்வசம் ஒப்படைத்து ஓராண்டு காலம் நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என நம்மிடம் ஒப்படைத்து விட்டார். நாமும் நம்முடைய தாஃவா சென்டரை அங்கு துவங்க எண்ணி மறுநாள் மராமத்து வேலைகளை பார்க்க சென்ற நம் சகோதரர்களுக்கு அதிர்ச்சி. பூட்டை உடைத்து வக்கீலின் ஆட்களான சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு தண்ணியடித்து கொண்டு இருந்தனர். உடனடியாக மாநில நிர்வாகிகள் தலைமையில் நம் சகோதரர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாநில செயலாளர் செங்கிஸ்கான் தலைமையில் சென்ற நிர்வாகிகள் மஃரிப் வக்த் வந்ததும் எதிரே இருந்த இவர்களின் தலைமையகத்தில் தொழச் சென்றனர். தொழுகை முடிந்த அனைவரோடும் நல்ல முறையீயல் சலாம் சொல்லி வெளியே வந்த பின் சிறுது நேரத்தில் மாநில நிர்வாகிகள் மளமளபென வந்திறங்கினர். சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு வர அங்கு சென்றால் இவர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அந்த பக்கம் சம்மந்தப்பட்ட வக்கீல் ஆதரவாளர்கள் 50பேர் நமக்கு புரியவில்லை எதற்காக இவர்கள் வந்தார்கள் என விசாரித்தால் நீங்கள் அங்கு தொழுகை சென்றது அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாம். மேலும் நீங்கள் அவர்களது தெருவில் தாஃவா சென்டர் துவங்குவது இடைஞ்சலாக இருக்கும் என புகார் கொடுக்க வந்துள்ளனர் என்றபோது நமக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. தங்களது பள்ளிக்கு வரக்கூடாது. எனக்கூறும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் பள்ளியில் தொழுவது அச்சுறுத்தல், தாஃவா சென்டர் இடைஞ்சல் என்ற இவர்களின் நிலைப்பாடு நமக்கு உண்மையிலேயே சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை இதுதான் இவர்களின் லட்சணம்.



சம்பவம் 3 :

இலங்கை பேருவளையில் நடந்த கலவரத்தில் தரிக்கா கூட்டத்தினரால் பேருவளை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டு ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். இந்த சம்பவம் நடைbப்றற சில நாட்களுக்கு பின் நமது மாநில நிர்வாகிகள் நேரில் சென்று சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லியதோடு நிதி உதவியும் வழங்கனர்.

படுகாயமடைந்த சகோதரர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறு நாம் விடுத்த அழைப்பை ஏற்று சென்னை வந்த அவர்களுக்கு பல வகையிலும் நமது நிர்வாகிகள் உதவினர் ! பண உதவி தேவையா என பாக்கர் கேட்ட போது தேவையில்லை “எங்களுக்கு இலங்கை சல்லி 10 லட்சம் ஒரு சகோதரர் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார் அதை பெற்றுக் கொள்ள அந்த ஜமாத்தின் அலுவலகத்திற்கு செல்கிறோம்” என்று கூறிச் சென்றார் பேருவளை பள்ளி நிர்வாகி. சென்றவரை கடலை மிட்டாய்காரர் காக்க வைத்து பனைக்குளத்தார் வந்ததும் அவரிடம் பணத்தை கேட்டதற்கு பாக்கர் உங்களை வரச் சொல்லி விட்டு கைவிட்டு விட்டார். என்று ஒரு பேட்டி மட்டும் கொடுத்தால் போதும் என கேமரா மேனை அழைக்க பேருவளை பள்ளிநிர்வாகி “இன்னொருவரை குற்றம் சாட்டி பெறும் பணம் எனக்கு தேவையில்லை” என்று கூறி கிளம்பி விட்டார். இதை அவர் நம்மிடம் சொன்ன போது அவர் மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். இன்னோருவர் தந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவதற்கு இடைத்தரகுவேலை பார்க்கும் இவர்கள் பாக்கரை பற்றி தவறாக பேட்டி கொடுக்கச் சொல்லும் கொடுமையை என்ன செய்வது ? இதிலிருந்து தெளிவாக நமக்கு தெரிகிறது இவர்கள் பொய்யர்கள்.

மேற்கண்ட மூன்று சம்பவங்களும் அல்லாஹ் மீது ஆணையாக நடந்த உண்மைச்சம்பவங்கள் சமுதாயத்தை காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளை, இயக்க வெறியை எங்கே காட்டுவது என்று கூட தெரியாத இவர்கள் எப்படி சமுதாயத்தை காப்பார்கள் ? எப்படி மக்களுக்கு நேர்வழியை காட்டுவார்கள்? என்பதை சமுதாயத்தின் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.

அல்லாஹ்வின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறோம்.



வேதம் கொடுக்க பட்ட பின்னரும் தங்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே

அவர்கள் பிரிந்து நின்றனர் - அல்குர்ஆன்

கேள்விக் கணை

கேள்விக் கணை

கடைய நல்லூர் கசமுசா பற்றி நாம் கூறியதற்கு கோவைத் தம்பி கொதித்து போய் கொந்தளித்துள்ளார். ஹோமோ செக்ஸ் பற்றி கூறினால் கோவைத் தம்பிக்கு கோபம் வருவது கடைய நல்லூர் கல்லூரி முதல்வருக்கே வெளிச்சம் !

உடனே பாக்கர் பஸ் மேட்டர் என மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்துவிட்டனர். களியக் காவிளை விவாதத்தின்போது எதிரணிக்காரர் ஒருவர் சொன்னது இப்போது நமக்கு ஞாபகம் வருகிறது. ‘ஸஹிரத்துன்’ என்ற வார்த்தை ‘சிறிய’ என்பதை தான் குறிக்கும் என்பது சாதாரண மதரஸா மாணவனுக்கு கூட தெரியும் ! ஆனால் அதை “பெரிய” என்று நிறுவ இரண்டு நாள் போராடியதை பார்த்த அவர் சாகுல் ஹமிது குளத்தில் சிறுமியின் தலையை தடவி விட்டு உடனே கரையேறி விட்டார். நீங்கள் இரண்டு நாட்களாக குளத்திற்குள்ளேயே நிற்கின்றீர்களே? என்று கூறியதை போன்று பாக்கர் பஸ்ஸை விட்டு அன்றே இறங்கி விட்டார் இவர்கள் இன்னும் இறங்குவதாக இல்லை எங்கு சுற்றினாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதை போல் மீண்டும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மாட்டோம் என அடம்பிடிக்கிறார்கள்.

பஸ்ஸை விட்டு இறங்கிய பாக்கரை ஏன் மீண்டும் பொதுச் செயலாளராக ஆக்கினீர்கள்?

பாக்கர் பக்கத்தில் அமர்ந்து சென்றதை தவிற வேறெந்த செயலும் செய்யவில்லை. என்று திருச்சி செயற்குழுவிலும் கடலூர் பொதுக்குழுவிலும், முபாஹலாவிலும் கூறியது ஏன்?

பாலியல் குற்றச்சாட்டு என இன்று கூறும் நீங்கள் பாக்கரை அதன் பின் ஊர் ஊராக பயான் செய்ய அனுப்பியது ஏன் ? வல்லம் மாநாட்டுக்கு வசூல் செய்ய வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பியது ஏன் ? இந்த கேள்விக்கெல்லாம் பதில் இருக்காது !

40 பேரோடு பஸ்ஸில் பயணம் செய்வது தவறுக்கு வழிவகுக்கும் என்றால் உங்கள் குடும்ப நண்பர் என நீங்கள் கூறும் ஆற்காடு டீச்சரை அழைத்து வர ஆட்டோ எடுத்து தலைமை அலுவலக ஊழியரை அனுப்புவதேன் ? குடும்ப நண்பரை குடும்பத்து பெண்களை அனுப்பி தானே அழைத்து வர வேண்டும் ! குடும்பத்தோடு வீட்டில் தானே தங்க வைக்க வேண்டும் ! ஏன் லாட்ஜில் தங்க வைத்துவிட்டு தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டிவிட்டு கைலியை மடித்து கட்டிக்கொண்டு தனியே சந்திக்க செல்ல வேண்டும் “டிவியில் பேசும் தலைவர்” தொப்பி கண்ணாடி இல்லாமல் தனியே வந்தார் என லாட்ஜ் ஊழியர் ஏன் சொல்ல வேண்டும் ?

கேள்விக் கணை தொடரும்.....