Thursday, April 29, 2010

முஸ்லிம் சமுதாயத்தின் பார்வைக்கு.....

இறைவனின் திருப்பெயரால்....

மூன்று சம்பவங்கள்

முஸ்லிம் சமுதாயத்தின் பார்வைக்கு.....

சம்பவம் 1 :

இலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் சகோதரி சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவரிடம் அறுவை சிகிச்சைக்காக அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு மயக்க மருந்தை கையாளுவதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கோமா நிலைக்கு சென்றார். இதுபற்றி நமக்கு வந்த தகவலை உறுதிபடுத்தி கொண்டபின் நிர்கதியாய் நின்ற முஸ்லீம் குடும்பத்திற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிப் பயனில்லாமல் போனதால் முற்றுகையை நாம் அறிவித்தோம் !

முதல்வரின் மருத்துவர் என்று இறுமாப்போடு பேசியவரை நமது முற்றுகை இறங்கி வரச் செய்தது. மொத்த செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதன் அடிப்படையில் முற்றுகை வாபஸ் பெறப்பட்டதால், மருத்துவமனைக்கு வெளியே நமது நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது சமுதாயத்திற்கு பாடுபடுவதாக கூறும் இந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகளான பைக்கடைகாரும், களஞ்சியத்தாரும், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்திறங்கி உள்ளே சென்றனர். நாம் கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரிக்காக வந்திருப்பார்கள் என நினைத்தோம் போன பின் மருத்துவரை கேட்டால் நமக்கு அதிர்ச்சி ! எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் எங்களிடம் கூறுங்கள் என்று கூற மருத்துவரே தேவையில்லை பிரச்சனையை ஐஎன்டிஜே வினர் சுமுகமாக முடித்துவிட்டார்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.

சமுதாயத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட சகோதரி என்று பார்க்காமல் நமக்கு எதிராக களமிறங்குவதற்காக, மருத்துவமனைக்கு ஆதரவாக களம் கண்டு நின்ற போது இவர்களின் உண்மை முகம் நமக்கு புரிந்தது. இந்த கேடு கெட்ட இயக்கத்தினர் எப்படி சமுதாயத்தை காப்போம் என்று கூறமுடியும்.



சம்பவம் 2 :

சென்னை மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் சகோதரருடைய வீட்டை வக்கீல் ஒருவர் வாடகையும் வசூல் பண்ணி கொண்டு, காலியும் செய்யாமல் ஆக்ரமித்து கொண்டிருக்க சம்மந்தப்பட்ட சகோதரர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று, காவல் துறையினரை கொண்டு வக்கீல் தரப்பை வெளியேற்றி விட்டு, மீண்டும் அந்த வக்கீல் ஆக்கிரமித்து விடுவார் என்ற அச்சம் மேலிட மேற்படி இடத்தை நம் ஜமாஅத்வசம் ஒப்படைத்து ஓராண்டு காலம் நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என நம்மிடம் ஒப்படைத்து விட்டார். நாமும் நம்முடைய தாஃவா சென்டரை அங்கு துவங்க எண்ணி மறுநாள் மராமத்து வேலைகளை பார்க்க சென்ற நம் சகோதரர்களுக்கு அதிர்ச்சி. பூட்டை உடைத்து வக்கீலின் ஆட்களான சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு தண்ணியடித்து கொண்டு இருந்தனர். உடனடியாக மாநில நிர்வாகிகள் தலைமையில் நம் சகோதரர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாநில செயலாளர் செங்கிஸ்கான் தலைமையில் சென்ற நிர்வாகிகள் மஃரிப் வக்த் வந்ததும் எதிரே இருந்த இவர்களின் தலைமையகத்தில் தொழச் சென்றனர். தொழுகை முடிந்த அனைவரோடும் நல்ல முறையீயல் சலாம் சொல்லி வெளியே வந்த பின் சிறுது நேரத்தில் மாநில நிர்வாகிகள் மளமளபென வந்திறங்கினர். சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு வர அங்கு சென்றால் இவர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அந்த பக்கம் சம்மந்தப்பட்ட வக்கீல் ஆதரவாளர்கள் 50பேர் நமக்கு புரியவில்லை எதற்காக இவர்கள் வந்தார்கள் என விசாரித்தால் நீங்கள் அங்கு தொழுகை சென்றது அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாம். மேலும் நீங்கள் அவர்களது தெருவில் தாஃவா சென்டர் துவங்குவது இடைஞ்சலாக இருக்கும் என புகார் கொடுக்க வந்துள்ளனர் என்றபோது நமக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. தங்களது பள்ளிக்கு வரக்கூடாது. எனக்கூறும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் பள்ளியில் தொழுவது அச்சுறுத்தல், தாஃவா சென்டர் இடைஞ்சல் என்ற இவர்களின் நிலைப்பாடு நமக்கு உண்மையிலேயே சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை இதுதான் இவர்களின் லட்சணம்.



சம்பவம் 3 :

இலங்கை பேருவளையில் நடந்த கலவரத்தில் தரிக்கா கூட்டத்தினரால் பேருவளை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டு ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். இந்த சம்பவம் நடைbப்றற சில நாட்களுக்கு பின் நமது மாநில நிர்வாகிகள் நேரில் சென்று சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லியதோடு நிதி உதவியும் வழங்கனர்.

படுகாயமடைந்த சகோதரர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறு நாம் விடுத்த அழைப்பை ஏற்று சென்னை வந்த அவர்களுக்கு பல வகையிலும் நமது நிர்வாகிகள் உதவினர் ! பண உதவி தேவையா என பாக்கர் கேட்ட போது தேவையில்லை “எங்களுக்கு இலங்கை சல்லி 10 லட்சம் ஒரு சகோதரர் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார் அதை பெற்றுக் கொள்ள அந்த ஜமாத்தின் அலுவலகத்திற்கு செல்கிறோம்” என்று கூறிச் சென்றார் பேருவளை பள்ளி நிர்வாகி. சென்றவரை கடலை மிட்டாய்காரர் காக்க வைத்து பனைக்குளத்தார் வந்ததும் அவரிடம் பணத்தை கேட்டதற்கு பாக்கர் உங்களை வரச் சொல்லி விட்டு கைவிட்டு விட்டார். என்று ஒரு பேட்டி மட்டும் கொடுத்தால் போதும் என கேமரா மேனை அழைக்க பேருவளை பள்ளிநிர்வாகி “இன்னொருவரை குற்றம் சாட்டி பெறும் பணம் எனக்கு தேவையில்லை” என்று கூறி கிளம்பி விட்டார். இதை அவர் நம்மிடம் சொன்ன போது அவர் மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். இன்னோருவர் தந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவதற்கு இடைத்தரகுவேலை பார்க்கும் இவர்கள் பாக்கரை பற்றி தவறாக பேட்டி கொடுக்கச் சொல்லும் கொடுமையை என்ன செய்வது ? இதிலிருந்து தெளிவாக நமக்கு தெரிகிறது இவர்கள் பொய்யர்கள்.

மேற்கண்ட மூன்று சம்பவங்களும் அல்லாஹ் மீது ஆணையாக நடந்த உண்மைச்சம்பவங்கள் சமுதாயத்தை காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளை, இயக்க வெறியை எங்கே காட்டுவது என்று கூட தெரியாத இவர்கள் எப்படி சமுதாயத்தை காப்பார்கள் ? எப்படி மக்களுக்கு நேர்வழியை காட்டுவார்கள்? என்பதை சமுதாயத்தின் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.

அல்லாஹ்வின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறோம்.



வேதம் கொடுக்க பட்ட பின்னரும் தங்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே

அவர்கள் பிரிந்து நின்றனர் - அல்குர்ஆன்

0 comments:

Post a Comment