Tuesday, August 31, 2010

பள்ளிவாசல் சொத்துகளை மீட்க INTJ அபாபீல் குழு


திங்களன்று வேலூர் மாவட்டம்
பெர்ணம்பெட் அருகில் துத்திபெட்
கிளை சார்பில் இப்தார் நிகழ்ச்சியும்
அதனை தொடர்ந்து சகோதரர்.
செங்கிஸ்கானின் பயான் நிகழ்ச்சியும்
நடை பெற்றது! இதில் மாநில செயலாளர்
இனாயத்துல்லாஹ் , தாம்பரம் ரஹ்மத்துல்லாஹ் ,
வேலூர் மாவட்ட தலைவர் அத்திக் , மற்றும்
வாணியம்பாடி ,திருப்பத்தூர் கிளை நிர்வாகிகள்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு
பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்திருந்தனர்
பெர்ணம்பெட் நகர தலைவர் சர்பாராஸ்
தலைமையிலான குழுவினர்.நிகழ்ச்சியில்
வேலூர் மாவட்டத்திலுள்ள வக்ப் சொத்துக்களை
மீட்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 'அபாபீல்' குழு'
அமைக்க தலைமை அனுமதி பெறவும்
முடிவு செய்யப்பட்டது.

Sunday, August 29, 2010

லைலத்துல் கதர் இரவின் சிறப்புகள்

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
“இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்'. (அல்குர்ஆன் 97:1-3)
1. சிறப்புகள்:
அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு
ரமதான் மாதத்தில் ஒரு இரவு
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு
2. அது எந்த இரவு?:
ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)
'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)
மேற்கண்ட ஹதீஸ்கள் ரமதானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
'லைலத்துல் கத்ர் இரவை ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
இந்த ஹதீஸில் ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.
3. லைலத்துல் கத்ரை தேடுவது:
'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)
4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:
'ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)
5. (இஃதிகாஃப்) பள்ளியில் தங்குதல்:
'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)
6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:
'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)
7. லைலத்துல் கத்ரின் துஆ:
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي
பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'
லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!
ஆக்கம் : மசூதா ஆலிமா

தலைமையக இப்தாரில் தினம் ஒரு த்லைவர்


விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கண்ணியமிகு இந்த ரமதானில் மார்க்கப் பணிகளை ஆற்றி வருகிறது.
ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் “இஃப்தார்” நிகழ்ச்சியில் நூற்றும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் சமுதாய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அதில் தேசியலீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மது அவர்கள், சமுதாய பிரமுகர் அப்போலா ஹீனிஃபா அவர்கள் கலந்து கொண்டர்கள்.
இன்று 27.08.2010 அன்று தமுமுகவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொள்கிறார். அவரைத் தொடர்ந்து முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பிரஸிடண்ட் அபூபக்கர் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இந்த நிகழ்சிகள் வின் டிவியில் சகர் நேரத்தில் ஒளிபரப்பாகிறது.
இஷா தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும் இரவு தொழுகைக்கு பின் மவ்லவி அப்துல் காதர் மன்பஈ அவர்களால் நடத்தப்படும் தொடர் பயானும் நடைபெற்று வருகிறது. அவ்வாறே நூற்றுக்கு மேற்ப்பட்ட சகோதரர்கள் தினமும் நம் தலைமையகத்தில் ஸஹரில் நோன்பு பிடிக்க உணவு ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, இஃப்தார் நிகழ்ச்சிக்கு உங்களால் முடிந்த உதவிகளை அள்ளி வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : +91-9791145050 / +91-9600191610

மேலும் பல வெடி மருந்து லாரிகளை காணவில்லை


மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற 60 லாரிகளைக் காணவில்லை என்ற அதிர்ச்சியான செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், காணாமல் போனவை 60 லாரிகள் மட்டும் அன்று; மொத்தம் 163 லாரிகளைக் காணவில்லை என்ற பேரதிர்ச்சியான தகவலை போபால் நகரக் காவல்துறையினர் கண்டறிந்தள்ளனர்.

டெடனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு டோல்பூர் தொழிற்சாலையில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சந்தேரி மற்றும் சாகர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களுக்குச் சென்று கொண்டிருந்த லாரிகளைக் காணவில்லை.

இந்த இரு நிறுவனங்களில் உரிமையாளர் ஜெய்கிஷன் அஸ்வானி தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது உதவியாளர் ராஜேந்திர செளபே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாகருக்குச் சென்று கொண்டிருந்த 60 லாரி வெடி பொருள்கள் சாகர் சென்றடையவில்லை. அதுபோல சந்தேரிக்குச் சென்ற 103 லாரி வெடி பொருள்கள் சந்தேரிக்குச் செல்லவில்லை என்று மத்தியப் பிரதேச மாநில ஐஜி ஏ.கே. சோனி கூறியுள்ளார்.

காணாமல் போன லாரிகளின் எண்ணிக்கை மேலும் சில நூறுகள் அதிகரிக்கக் கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த வெடிபொருள்கள் சட்டத்துக்குப் புறம்பான சுரங்கத்தொழிலில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், இவை நக்சல் மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கின்றனர்.

மிகப்பெரும் அளவிலான வெடிபொருள்கள் காணாமல் போயுள்ள நிலையில், காவல் துறையினரின் அச்சம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.
-noorul ameen

Friday, August 27, 2010

'பஞ்ச் பட்டிக்காட்டான்' 2


உணர்வு செய்தி; கல்வி வேலைவாய்ப்புகளில் தமிழக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஜெயலலிதா தான் முதன்முதலில் கமிஷன் அமைத்தார்.
பட்டிக்காட்டான்; மொதல்லயே இருந்த கமிஷனை, பலமுறை புதுப்பிக்கப்பட்டு காலாவதியான கமிஷனைத் தானே, தன் பங்குக்கு ஜெயலலிதாவும் புதுப்பித்தார். உண்மை நிலை இப்படியிருக்க, ஜெயலலிதா தான் முதன் முதலில் கமிஷன் அமைத்தார் என்று சொல்வது எங்கேயோ இடிக்கிறதே!

உணர்வு செய்தி; திருச்சி 28 வது வார்டு மமக வேட்பாளர், அப்பகுதி மகளிடம் கையெடுத்து கும்பிட்டு ஓட்டுக் கேட்டது முகம் சுழிக்க வைத்தது.
பட்டிக்காட்டான்; ஒரு முஸ்லிம் வாக்கு கேட்கும்போது கையெடுத்து கும்பிடுவது முகம் சுழிக்க வைக்கும் செயல் என்றால், அத்தகைய செயலை செய்யத் தூண்டும் அரசியலில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்பது உங்களுக்கே முரணாக தெரியவில்லையா..?

பத்திரிக்கை செய்தி; ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
பட்டிக்காட்டான்; அங்கதான் ஊசியின்றி, மருந்தின்றி, ஆபரேஷன் இன்றி, நோய் நீக்கும் 'பெரிய டாக்டர்' இருக்கிறாரே என்று அரசு நினைத்திருக்கும்..?

பாஜக மூத்த தலைவர் வெங்கையாநாயுடு; ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை. ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியினரை எதிரிகள் போல் அணுகுகின்றனர்.
பட்டிக்காட்டான்; அவர்களாவது கட்சிக்காரர்களுக்கு மத்தியில்தான் அப்படி அணுகுகிறார்கள். ஆனால் நீங்களோ, பிறப்பின் அடிப்படையில் ஒரு சாராரை இழிவாக்கி, கோயிலுக்குள் விடமாட்டோம்னு அடம்புடிக்கிறீங்களே! உங்களுக்கு அவங்க எவ்வளவோ பரவாயில்லைதானே!

குஜராத் முதல்வர் மோடி; சத்தியம் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி, அநீதிக்கு எதிராக அனைத்து வகையிலும் போராடுவோம்.
பட்டிக்காட்டான்; இப்புடி சொல்றதை விட 'போலி என்கவுண்டர்' எனும் ஆயுதத்தை பயன்படுத்தி, எதிரிகளை வீழ்த்துவதன் மூலம் நீதியை[!] நிலைநாட்டுவோம்னு சொல்லியிருந்தா நல்லாருக்கும். சத்தியத்திற்கு வந்த சோதனை!

அதிமுக கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.சந்திரன்; எங்களை அவதூறாக பேசும்போதெல்லாம், நாங்களும் பதிலுக்கு போட்டிக் கூட்டம் போட்டு அவர்களை அவதூறாக பேசுவோம்.
பட்டிக்காட்டான்; 'அவதூருக்குப் பதில் அவதூறு' சபாஷ்! சரியான போட்டி!! உங்கள சொல்லிக் குத்தமில்ல. தப்பெல்லாம் அப்பாவி வாக்கு வங்கிகளான எங்க மேலதான். தொடரட்டும் உங்களின் அரும்பணி[!]

தமிழ் மாநில முஸ்லிம்லீக் தலைவர் ஷேக்தாவூத்; இந்தியாவில் பலபகுதிகளில் கலவரம், போராட்டம்,ரயில் மறியல், குண்டுவெடிப்பு, நக்சலைட் ஆதிக்கம், ஏழை மக்கள் நிலங்களில் அரசு ஆக்கிரமிப்பு, அதனால் போராட்டம் இவை அனைத்தும் தீர ஒரே வழி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுதான்.
பட்டிக்காட்டான்; 'இதத்தான் மொட்டத் தலைக்கும் மொளங்காலுக்கும் முடிச்சுப்' போடுவதாக சொல்வார்கள். நீங்கள் சொன்னவைகளுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் என்ன சம்மந்தம்..? சரி! இப்பதான் நீங்க சொன்னமாதிரி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கப் போகுதுல்ல. அப்ப இனிமே நாட்டுல எந்த அசம்பாவிதமும் நடக்காது அப்படித்தானே!

பத்திரிக்கை செய்தி; ராமநாதபுரத்தில் 'டாஸ்மாக்' மதுபான பாட்டிலில் மீன் இறைச்சி மிதந்தது.
பட்டிக்காட்டான்; பரவாயில்லையே! 'குடிமகன்'கள் 'சைடிஸ்க்கு' கஷ்டப்படக் கூடாதுன்னு பாட்டில்லேயே 'அட்டாச்'! இனி குடிமகன்களுக்கு 'சைடிஸ்ட்' பற்றிய கவலை இல்லை.

உடுமலை எம்.எல்.ஏ. சண்முகவேலு பேச்சு; நாங்கள் அரசியல்வாதிகள்; எங்களுக்கு வெட்கம், மானம் எதுவும் கிடையாது. அவற்றை விட்டுட்டுத்தான் அரசியல் செய்கிறோம்.
பட்டிக்காட்டான்; இவ்வளவு வெளிப்படையா பேசுறீங்களே! நீங்கதான் நெசமாலுமே புரட்சி அரசியல்வாதி.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ்; தற்போது எம்.பி.க்களுக்கு தரப்படும் ஊதியம் அரசின் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தைவிட மிகக்குறைவாக உள்ளது. அரசு ஊழியர்கள் எட்டுமணிநேரம் உழைக்கிறார்கள் . நாங்கள் இருபத்தி நான்கு மணிநேரம் சேவை செய்கிறோம்.
பட்டிக்காட்டான்; எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தவுடன் வாங்கிய சொத்து மதிப்பையும், வாங்கிய சம்பளத்தையும் 'கம்பேர்' பன்னுனா பெரும்பாலான எம்.பி.க்களின் கணக்கு, 'டேலி'யே ஆகாதே! இதில சம்பள உயர்வு வேற வேணுமாக்கும்..?


Thursday, August 26, 2010

கட்டாய திருமண பதிவு சட்டத்தில் மாற்றம்! முஸ்லிகளின் ஒற்றுமைக்கு வெற்றி!



அல்ஹம்து லில்லாஹ்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினாலும் ,
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் முயற்சியாலும் ,
முஸ்லிம் அமைப்புகள் ஒன்று பட்டு நின்று
ஒரே குரலில் உரத்து சொன்னதன் முயற்சியாலும் ,
முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தின் மேல் கை வைக்க
இருந்த முயற்சி முறியடிக்கப்பட்டு கட்டாய திருமண
பதிவு சட்டம் முஸ்லிம் ஜமாத்துகளின் திருமண பதிவை
அப்படியே அரசு ஏற்று கொள்ளும் வகையில் சட்ட
திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா! பகீர் தகவல்!


வாஷிங்டன்:அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக் வெப்சைட். இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் விக்கிலீக் வெப்சைட்டின் சர்வர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு பெறுவதற்காக விக்கிலீக் தலைவர் ஜூலியன் அசாஞ்ச் ஸ்வீடனில் தங்கியிருந்தார். அவருக்கு திடீரென பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது உத்தரவு பிறப்பித்து மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இருக்கலாம் என ஜூலியன் அசாஞ்ச் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்றை, விக்கிலீக் தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைக்கு, அமெரிக்க மக்களை தீவிரவாதிகள் தேர்வு செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஹெட்லி போன்ற அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், இந்தியாவில் பல இடங்களில் உளவு பார்த்து மும்பை தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டியது அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்தது.

வெளிநாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அமெரிக்காவில்தான் சதிதிட்டம் தீட்டப்படுகிறதா, என்றும் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்காவை, வெளிநாட்டினர் பார்க்கின்றனரா? என்ற தலைப்பில் சி.ஐ.ஏ. தயாரித்த ஆய்வறிக்கை யை விக்கிலீக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், உளவுத்துறை தயாரித்த அறிக்கையை எப்படியோ பெற்று வீக்கிலீக் வெளியிட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூதர்களை அழித்த ஹிட்லர் ஒரு யூதர் ? ஆச்சரியமூட்டும் மரபணு சோதனை முடிவு!


லண்டன் : இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக சொல்லப்படும் நாஜி கட்சியின் தலைவரும் ஜெர்மனியின் அப்போதைய அதிபருமான ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தை சார்ந்தவர்கள் என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை சமீபத்திய மரபணு சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.



ஜீன் - பால் முல்டர்ஸ் எனும் பத்திரிகையாளர் நியூயார்க்கில் தற்போது வசித்து வரும் ஹிட்லரின் தம்பி மகன் அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் மற்றும் ஆஸ்திரியாவில் வசிக்கும் ஹிட்லரின் மாமா மகன் நார்பர்ட் என்பவரிடமிருந்தும் பெற்ற சாம்பிள்களை வைத்து டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனையை நடத்தியதில் இம்முடிவுகள் கிடைத்துள்ளன.

அச்சோதனையில் ஜெர்மனியில் அரிதாக இருக்கும் ஒரு வகை ஒய் க்ரோமஸோம் மூலம் இம்முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வகை குரோமஸோம்கள் யூத மற்றும் லிபியா, மொராக்கோ போன்ற வட ஆப்பிரிக்க மக்களிடத்தில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த ரோன்னி டெக்கார்ட் எனும் மரபியல் விஞ்ஞானி யூத இனம் ஒரு யூதரின் மூலம் அழிக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆச்சரியம் என்றும் நிச்சயமாக உலகில் ஆரிய இனமே உயர்ந்தது என்றும் தன்னை அப்படிப்பட்ட பரிசுத்தவானாக நினைத்த ஹிட்லர் இம்முடிவை கேட்டிருந்தால் நிச்சயம் துக்கப்பட்டிருப்பார் என்றார்.

காவிப் பயங்கரவாதம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை!



நாட்டில் புதுவித காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் காவ‌ல்துறை தலைவ‌ர்க‌ள் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ப.சிதம்பரம், நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு குண்டு வெடிப்புக்களில் காவிப் பயங்கரவாதத்தின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மாலேகான், நந்தித், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மசூதி, கோவாவின் மார்கோ உள்ளிட்ட பல்வேறு குண்டு வெடிப்புக்களில் இந்துத்துவாவின் கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
மாலேகான் மற்றும் நந்தித் குண்டுவெடிப்புக்களுக்கு பின்னணியில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பே செயல்பட்டது என்பதை மும்பைத்தாக்குதலின் போது கொல்லப்பட்ட மஹாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் : இப்னு ஹுஸைன்.

Tuesday, August 24, 2010

முதலில் போதிக்க வேண்டியது எது? அகீதாவா? கிலாஃபத்தா?

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.
“இஸ்லாமிய அரசாங்கம்”(கிலாபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடாத்த வேண்டும். அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எனவே கிலாபத் அமைப்பது பற்றிய போதனைகளை முதலில் போதிக்கவேண்டும், என்கிறார்கள்.
மார்கக் விவகாரங்கள் பற்றிய முரண்பாடுகளோ அகீதா பற்றிய சீர்குலைவுகளோ ஏனைய விடயங்கள் பற்றிய விளக்கங்களோ பேசி மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் -கொள்கைகளில்- இருந்து செயற்படுகிறார்களோ அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வேண்டும், என்கிறார்கள்.
அகீதா பற்றியும் ஸுன்னாவுக்கு முரணான விடயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டு விடும். ஒற்றுமை குழைந்து விடும். ஐக்கியம் கருதி அதனை விமர்சிக்காமல் விலகி நிற்க வேண்டும். அவரவர் விரும்புகின்ற போக்கில் விட்டுவிடவேண்டும், என்பதாக கூறுகிறார்கள்.
மக்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடக் கூடிய பொது விடயங்கiளுக்கு முன்னுரிமை வழங்கி தஃவாவை முன்கொண்டு செல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அரசாங்கமொன்றை நிருவினால் அதிகாரபூர்வமாக ஒரே கொள்கையின் கீழ் மக்களை வழிநடத்தலாம் என வாதிக்கிறார்கள்.
உண்மையில் இந்த கொள்கையும் அணுகுமுறையும் சரியல்ல. கேட்பதற்கு இனிமையாகவும் பார்பதற்கு அழகாகவும் இருந்தாலும் அடிப்படைக்கே முரணானதாகும்.
ஒரு முஸ்லிமுடைய இம்மை மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அகீதாவாகும். அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் அடிப்படை நோக்கம் கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதுதான்.
அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாமலும், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தில் பலரையும் கூட்டு சேரத்தும் (ஷிர்க் செய்தும்) செயற்படுவதும் அல்லாஹ்வுடைய வல்லமையை சிதைப்பதாகும்.
தனக்கு (ஷிர்க்) இணைவைப்பதை மன்னிக்க முடியாத பாவமாக அல்லாஹ் கூறுகிறான். மக்களிடம் ஷிர்க் நுழைந்த போதுதான் இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.
மனித ஆத்மாக்களை படைத்து “நானல்லவா உங்கள் ரப்பு” என்று அல்லாஹ் கேட்டபோது “ஆம்! நீயே எங்கள் ரப்பு” என்றே ஆன்மாக்கள் பதில் கூறின. உலகிற்கு வந்த பின் அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அசல் வடிவில் வணங்காது வாழந்தபோதுதான் இந்த இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.
இறைநம்பிக்கை ஒழுங்கில்லாமல் ஒரு முஸ்லிம் வாழும் காலம் எல்லாம் அவன் புரிகின்ற அத்தனை அமல்களும் பாழாகிவிடும்;
அதே நிலையில் அவன் மரணித்தாலும் தண்டனைக்குரியவனாக மாறிவிடுவான். எனவே பிரச்சாரப் பணியில் முதலிடம் கொடுக்க வேண்டியது அகீதாவை சீர் படுத்துவதிலும் பின்பற்றுவதிலும்தான்.
அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வர்ணிக்கின்ற பிரகாரமும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணிக்கின்ற பிரகாரமும் தான் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும். அதுவே ஈமானுக்கு பாதுகாப்பாகும்.
அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
எல்லா பொருட்களிலும் வஸ்துகளிலும் அல்லாஹ் சங்கமிக்கிறான்
அல்லாஹ் ஷைக்கிடத்தில் சூபியிடத்தில் காட்சியளிக்கிறான். அவர்களுடன் பேசுகிறான்.
அமல்கள் இபாதத்கள் செய்தால் அல்லாஹ்வை நெருங்கமுடியாது. அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு புரோகிதர் (அவ்லியா) தேவை. மறுமையின் வெற்றிக்கு அவரது சிபாரிசு தேவை, என்று ஒரு முஸ்லிம் நம்பினால்
அவன், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய ஈமானுக்கு மாற்றமான நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
பள்ளிக்குச் சென்று தொழுது அல்லாஹ்விடம் முறையிடுவதை விட கப்றுகளுக்குச் சென்று அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி கஷ்டங்களை முறையிட்டு காணிக்கைகள் செலுத்தி பிள்ளை வரம் கேட்டு கப்றுகளை சுற்றி வந்து மண்டியிடுதல் என்பது இறை நம்பிக்கைக்கு எதிரானது.
தகடு தாயத்துக்கள் எழுதி மேனியிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தொங்க விடுவதும் பாதுகாப்பு தேடுவதும் இறை நம்பிக்கைக்கு விரோதமானது.
அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றாமல் முன்மாதிரியாகக் கொள்ளாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களை வழிமுறைகளை சரிவர செயற்படுத்தாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களுக்கு மாற்றமாக சமுதாயத்தின் செயல்பாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்து செயல்படுத்தல் என்பது இறைத் தூதரை நிராகரிப்பதற்கு சமமானதாகும்.
கலிமாவுக்கு மாற்றமாக மக்கள் செயல்பட்டாலும் சமுதாய ஒற்றுமை கருதி பயணிக்க வேண்டும் என்ற கோஷம் குப்ரியத்தில் கொண்டு போய் சேர்க்கும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலும் இத்தகைய வழிகள் களையப்பட வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் களையெடுக்க பாடுபட வேண்டும்.
இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பும்போது முதலில் அரசாங்கத்தை (கிலாபத்தை) அமைத்து பிறகு அகீதா பற்றிப் பேச அனுப்பவில்லை. மாறாக அரசாங்க தலைவர்கள், மன்னர்கள் புரிகின்ற ஈமானுக்கெதிரான செயல்பாடுகளையும் சமூக விரோத செயற்பாடுகளையும் கண்டித்து தவ்ஹீதை எடுத்துச் சொல்லி; அந்த போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்தவே நபிமார்களை அனுப்பி வைத்தான்.”அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை” என்றே எல்லா இறைத்தூதர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.அதனூடாக சமூக அவலங்களையும் சீர்கேடுகளையும் கண்டித்துப்பேசினார்கள்.
மூஸா நபி இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்காக போராடிய போதும்
லூத் நபி ஓரினச்சேர்க்கைக்கு எதிராக போராடிய போதும்
ஷூஹைப் நபி அளவை நிலுவை மோசடிக்கு எதிராக போராடியபோதும்
தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்வைத்தே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணமானார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரசார பணியினை ஆரம்பித்த போது தவ்ஹீதை முதன்மை படுத்தியே 13 வருடங்கள் பாடுபட்டார்கள். எதிரிகள் இப்பிரசார பணியினை தடுக்கும் முகமாக சமரசம் செய்ய முனைந்த போதும் நபிகளார்(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை.நபிகளாருடைய பிரசாரப் பணி மதீனாவில் தாக்கம் செலுத்தி மதீனத்து மக்கள் இஸ்லாத்தை தழுவியபின் மதீனாவை தளமாக கொண்டு படிப்படியாக கிலாபத்தை நோக்கி மக்களை நகர்த்தினார்கள். மதீனாவில் அருளப்பட்ட வசன அமைப்புக்களும் இதனை நன்கு தெளிவுப்படுத்துகின்றன.
எனவே பிரசாரப் பணியில் நபிகளாரின் இந்த வழிமுறைதான் பின்பற்ற வேண்டும். ஈமானுக்கு எதிராக, தூதுத்துவத்துக்கு எதிராக மக்கள் வாழ்கின்ற போது அகீதாவை பற்றியோ ஸுன்னாவைப் பற்றியோ பேசாமல், கிலாபத்தை பற்றி பேசவேண்டும் கிலாபத் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த நியதிக்கே முரணானது.
இந்நிலையில் அகீதாவில் பிடிப்பு இல்லாமல் சுன்னாவுக்கு முக்கியமில்லாமல் சடங்கு சம்பிரதாய கொள்கையில் மரணிக்கின்ற மக்களுடைய நிலையோ படுமோசமாகி விடும் என்பதை கிலாபத் பற்றி பேசுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
கிலாபத் ஏற்பட முன் அகீதா பற்றி; பேசப் பயப்படுபவர்கள் (ஒரு வாதத்திற்காக வழிகெட்ட கூட்டங்கள் பிரிவுகளின் ஆதரவில் கூட்டரசாங்கம் நடத்தினாலும்) கிலாபத் ஏற்பட்ட பின்பும் பேசவே மாட்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு நடந்து விடுமோ ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகி விடுமோ தலைமை பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இருக்குமே தவிர அகீதாவை சீர்படுத்தி ஆதாரபூர்வமான சுன்னாவை அமுல்நடாத்துகின்ற பற்றிய எண்ணம் இருக்காது.
இஸ்லாமிய நாட்டுக்குள்ளே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறியவர்களால் கூட அகீதாவின் அத்திவாரத்தில் இஸ்லாமிய ஆட்சியை இன்று வரை ஏற்படுத்தமுடியவில்லை. இளைஞர்களை ஒன்று கூட்டி கிலாபத் பற்றி பேசி புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர போராடும் இவர்களால் அந்த இளைஞர்களுக்கு ஈமான் பற்றியும் ஆதாரபூர்வமான சுன்னாவின் நிழலின் அமல்கள் பற்றியும் போதிக்க முடியவில்லை. எப்படி வேண்டுமானாலும் நம்பிக்கை கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் அமல்கள்; செய்யலாம். எமது கிலாபத் பயணத்திற்கு அவைகளை தடைகளாக்கக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாகும்.
புரட்சிகரமான கிலாபத் சிந்தனைகளை வழங்கி ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்க முனைவதைவிட ஈமானிய உணர்வுகளை ஊட்டி பலபேருடைய ஹிதாயத்திற்கு வழிகாட்ட தயார்படுத்தலாம்.
மக்களிடத்தில் அகீதாவுக்கெதிரான கொள்கைளையும் சுன்னாவுக்கெதிரான செயற்பாடுகளையும் பேசுவதற்கு பயப்படும் இவர்கள் ¬குறைந்தபட்சம் தங்களுடைய வாழ்விலாவது அதை விட்டும் ஒதுங்கி வாழ்கிறார்களா என்றால்; அதுவுமில்லை.
தங்களுடைய வீடுகளிலும் ஜமாஅத்திலும்; குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான விடயங்களை ஒதுக்காமல் செய்துகொள்கிறார்கள். தங்களுடைய வியாபார ஸ்தலங்களிலும அகீதாவுக்கு முரண்பட்டவைகளை விற்பனைசெய்கிறார்கள்.
தவ்ஹீதையும் பேசுவோம் ஷிர்க்கையும் செய்வோம்.
பித்அத்தையும் ஆதரிப்போம் சுன்னாவையும் தொட்டுக்கொள்வோம்.
எதையும் எதிர்க்கவுமாட்டோம். எல்லாவற்றையும் அரவணைக்கவுமாட்டோம்.
என்பதே இவர்களது கொள்கையாகும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் கொள்கை அதுவாக இருக்காது.
உலகாயுதமும் மக்கள் செல்வாக்கும் கௌரவமான வாழ்வும்தான் இவர்களது இலக்காக தெரிகிறதே தவிர அதற்குத்தான் கிலாபத் கோஷமே தவிர, பரிசுத்தமான தீனை பின்பற்றுவதோ நிலைநாட்டுவதோ அல்ல.
இஸ்லாத்தின் ஆணிவேரை பிடுங்கி எறியத் துடிக்கும் தீய கொள்கைகள் உடைய வழிகெட்ட கூட்டங்கள் குறிப்பாக ஷீஆவும் காதியானியும் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவல் செய்தமைக்கு தீனை விட்டு கொடுக்கும் இவர்களது தாராளமான கொள்கைகளும் அரசியல் இலாபமே காரணம். படித்த மக்களோ பாமர மக்களோ இந்த வழிகேட்டின் அடையாளத்தை கண்டு கொள்ளாமல் அதில் போய் வீழ்ந்தமைக்கும் இந்தஅணுகுமுறையே காரணம்.
ஈரானில் ஏற்பட்ட ஷீஆ புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்ததனால் இன்று ஷிஆயிஸம் வேகமாக பரவி வருகிறது. ஸஹாபாக்களை, நபிகளாரின் மனைவிமார்களை தவறாக சித்தரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில காலங்களில் ஷிஆ-சுன்னி பிரச்சினை இந்த நாட்டிலும் (அவர்களது குடும்பத்திலும்) நடக்கலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
எனவே அகீதாவையும் தூய்மையான சுன்னாவையும் மக்கள் மத்தியில் வைத்து புனரமைக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்கினால் கிலாபத் ஏற்படாவிட்டாலும் ஈமானையாவது பாதுகாத்து ஈமானுடன் மரணிப்பதற்கு வாய்ப்பாக அமையும். வழிகேட்டை அடையாளம் கண்டு அதனை விட்டு தவிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்;. தீனுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவேபெரிய கிலாபத்தாகும்.எனவே அகீதாவுக்கு மக்கள் மத்தியில் இமுதலிடம் கொடுத்து பிரசாரப்பணியினை செய்வோமாக! -மௌலவி இம்தியாஸ் ஸலஃபி!

Monday, August 23, 2010

குணமடைய பிரார்த்திக்கவும்!


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் MMDA கிளை தலைவர்
ஜாஹிர்ஹுசைன் அவர்களின் பத்து வயது மகன்
இன்று லுஹர் தொழுது விட்டு வரும் போது,
இரு சக்கர வாகனம் ஒன்றில் அடிபட்டு மிகவும்
மோசமான நிலையில் மருத்துவ மனையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.அவர் குணமடைய பிரார்த்திக்கவும்!

எண்பது ஆண்டு மூடிக் கிடந்த பள்ளி வாசலில் இதஜா முயற்சியால் மீண்டும் தொழுகை.


ஆற்காடு உப்பு பேட்டை பகுதியில்
சுமார் எண்பது ஆண்டு காலமாக
பாழடைந்து ,சிதிலமடைந்து கிடந்த
பள்ளிவாசல் வேலூர் மாவட்ட
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியால்
மீண்டும் இன்ஷால்லாஹ் திறக்கப்பட
உள்ளது. வரும் வெள்ளிக்ழமை முதல்
ஜும்மா தொழுகையுடன் துவங்க உள்ளது .
முதல் ஜும்மா உரையை எஸ்.எம்.பாக்கர்
நிகழ்த்த உள்ளார். அல்லாஹ்வின் பள்ளியில்
அணு தினமும் தொழுகை தொடர்ந்து
நடை பெற பிரார்த்தியுங்கள். .

Sunday, August 22, 2010

பாலியல் வழக்கில் ததஜ நகரத்தலைவர் கைது


பரிசுத்தமான ஜமாஅத்! அப்பழுக்கற்றவர்கள்'
என்று வாய் ஜாலம் பேசும் மேலப்பாளையம்
மேலாண்மை சம்சுல்லுஹா வின் சீடரும் ,
ததஜவின் மேலப்பாளையம் நகர தலைவருமான
சேபளி மைதீன் பாலியல் வழக்கொன்றில்
கைது செய்யப்பட்டுள்ள செய்தி இன்றைய
தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகளில்
வெளியாகி உள்ளது. உண்மை என்ன என்று
விசாரித்த போது ஒரு வீட்டுக்கு வெள்ளையடிக்கும்
வேலைக்கு சென்ற மைதீன் மேலே நின்று
கீழே குளித்துக் கொண்டிருந்த பெண்ணை
தனது செல் போனில் படமெடுத்து அதை
வைத்து மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல்
பலாத்காரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்.
பொருத்து பார்த்த அந்தப்பெண் ஒரு கட்டத்தில்
உறவினர்களிடம் சொல்லி, காவல் துறையின்
மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது
செய்யப்பட்டுள்ளார்.இதில் வேதனையான விஷயம்
என்னெவென்றால் இந்த கேவலமான இழி செயலை
செய்த தங்களின் நகர தலைவருக்கு ஆதரவாக
மாவட்ட நிர்வாகிகள் யூசுப் அலி, சையத் அலி,
ரோஷன் உள்ளிட்டோர் காவல் நிலையம் செல்ல,
'என்ன பெரிய தியாகம் செஞ்சு உள்ள வந்தவனா இவன்?
பொறுக்கித்தனம் பண்ணிட்டு வந்தவனுக்கு வக்காளத்
வாங்கி வருகின்றீர்களே வெட்கமில்லையா ?
என அதிகாரிகள் கேட்டதும் கேவலப்பட்டு
திரும்பியுள்ளனர் இந்த பரிசுத்த ஜமாத்தினர்.
ஏற்கனவே கடையநல்லூர் மதராசா ஹோமோசெக்ஸ்
பிரச்னையில் இவர்களின் பரிசுத்தத்தை வெளிப்படுத்திய
அலலாஹ் தற்போது மேலப்பாலயதிலும் வெளிப்படுத்தி
'தன்னை தானே பரிசுத்தம் என்று கூறுவோரை '
இழிவு படுத்தி உள்ளான். கடந்த ஜூலை மாத ஏகத்துவம்
இதழில் , வெளிநாடுகளில் வேலை செய்து தங்களின்
வியர்வையை காசாக்கி சமுதாயத்திற்கு வாரித் தரும்
வளைகுடா சகோதரர்களின் வீட்டு பெண்களை எல்லாம்
கொச்சை படுத்தி கண்டவனோடும் தொடர்பு படுத்தி
எழுத்து விபசாரம் செய்த ஏகத்துவம் ஆசிரியர்
சம்சுல்லுஹா, இனி உள்நாட்டில் கணவன் இல்லாத
நேரத்தில் வரும் 'ஊறுகாய் வியாபாரிகளையும்'
தனது சீடர் மைதீன் போன்று வெள்ளையடிக்க
சென்ற வீட்டுப்பெண்ணை வீடியோ படமெடுத்து
மிரட்டி பலாத்காரம் செய்பவர்களையும் எழுதட்டும்

Friday, August 20, 2010

பஞ்ச்பட்டிக்காட்டான்!


பஞ்ச்பட்டிக்காட்டான்
[just 4 jokes]
செய்தி; 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட்டிற்கு ரூ. 1 கட்டணம் உயர்வு.
பட்டிக்காட்டான்; அப்ப இனிமே கரண்டு பில்ல தொட்டாக்கூட 'ஷாக்' அடிக்கும் போலத் தெரியுதே!

செய்தி; அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகள் செல்சியாவுக்கு ரூ. 19 கொடி செலவில் ஆடம்பரத்திருமணம் நடந்தேறியது.
பட்டிக்காட்டான்; இவ்வளவு தானாக்கும்! இதெல்லாம் வளர்ப்புமகன்[!] கல்யாணத்துக்கு கிட்ட நிக்கமுடியுமா..?

தமிழக காங் தலைவர் தங்கபா
; கூட்டணி பற்றி யாரும் பகிரங்கமாக பேசக்கூடாது. அதுபற்றி தேசியத் தலைவர் சோனியாகாந்தி முடிவு செய்வார். அவர் சார்பாக நான் மட்டுமே கூட்டணி பற்றி அறிவிக்கமுடியும்.
பட்டிக்காட்டான்; தமிழக காங்கிரசுக்கு நீங்க மட்டும்தான் தலைவர்னு காட்ட நீங்க படுற கஷ்டத்த பாத்தா பரிதாபமாத்தான் இருக்கு; என்ன செய்ய..? கோஷ்டியும்- தமிழக காங்கிரசும் ஒட்டிப்பிறந்த ரெட்டை பிறவிகளாச்சே!

செய்தி; விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பு நடந்தது.
பட்டிக்காட்டான்; தொகுதிப்பக்கம் போனது மாதியும் ஆச்சு; வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு; பரவாயில்லையே! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டாரே விஜயகாந்த்!
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்; காமாராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால் மட்டுமே தரமுடியும்.
பட்டிக்காட்டான் ; வாஸ்தவமான பேச்சுதான்! அப்பிடியே எந்த 'கோஷ்டி'யால தரமுடியும்னு சொல்லீட்டிங்கன்னா புண்ணியமா போகும்!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்; எம்.ஜி.ஆர். மறைந்தபோது 36 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்த அதிமுகவை, இன்று ஒருகோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா.
பட்டிக்காட்டான்; 36 லட்சம் தொண்டர்களை வைத்து அசைக்கமுடியாத ஆளும்கட்சியாக எம்.ஜி.ஆர் வைத்திருந்த அதிமுகவை, எதிர்கட்சியாக மாற்றி வீட்டில் உட்காரவைத்த பெருமை புரட்சித்தலைவிக்கே சாரும் என்று அடுத்த கூட்டத்தில் பேசும்போது சேர்த்து சொன்னீங்கன்னா நல்லாருக்கும்!

பாஜகவின் மாநில துணைத்தலைவர் ஹெஜ். ராஜா; கூட்டடணி பற்றி இப்போது சிந்திக்கவில்லை.
பட்டிக்காட்டான்; ஆமாமா! நீங்க என்ன பன்னுவீக..? யாராவது கூப்பிட்டாத்தான சிந்திக்கமுடியும்..?

ஏகத்துவம் கட்டுரை; ஜமாஅத் நடவடிக்கைக்கு உள்ளானோர் இயக்கத்தை விட்டு வெளியே சென்றுவிடக்கூடாது. அப்படி சென்றவர்கள் இயக்கத்தை விட்டு மட்டுமல்ல, ஏகத்துவத்தை விட்டே வெளியே சென்றுவிடுகிறார்கள்.
பட்டிக்காட்டான்; ஏதேது! போற போக்கப் பாத்தா ஒருத்தர் தன்னை முஸ்லிம்னு சொல்லிக்கனும்னா எங்க உறுப்பினர் கார்ட வச்சுருக்கனும்னு சொன்னாலும் சொல்வாங்க போலத் தெரியுதே..?

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்; முஸ்லிம் சமூகத்தை ஜெயலலிதா ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதிமுக கூட்டணிக்குள் நாங்கள் இருக்கவேண்டும் என்பதால்தான் எங்களை அழைத்துப் பேசுகிறார். இதுவே கூட்டணிக்கான உறுதிதான்.
பட்டிக்காட்டான்; 'நான் ஒரு தவறு செய்துவிட்டேன்; அந்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு; இனி ஒரு போதும் மதவாத பீஜெபியோடு, அதிமுக உறவு வைத்துக் கொள்ளாது' என்று நீங்க நடத்துன வாழ்வுரிமை மாநாட்டுல முழங்கிய ஜெயலலிதா, பின்பு ஏமாற்றியதை மறந்துட்டீகளாக்கும்! முஸ்லிம் சமூகத்தை ஜெயலலிதா ஏமாத்துறது ஒருபக்கம் இருக்கட்டும்; மொதல்ல ஒரு சீட்ட குடுத்து ஒங்கள ஏமாற்றாம பாத்துக்கங்க!

முதல்வர் கருணாநிதி; 50 ஆயிரம் கேபிள் இணைப்புகளுடன் அரசு கேபிள் அடக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எந்த ஒரு நிர்பந்தத்துக்காகவும் அரசு கேபிள் 'அடக்கமாகி' விடக் கூடாது என்பதுதான் அப்பாவி பொதுஜனத்தின் கவலையாக உள்ளது.
செய்தி; அரியானாவில் பணம் கேட்டு கடத்தப்பட்ட மகனை மீட்க ஒன்றரை வருடங்களாக போராடும் தாய்.
பட்டிக்காட்டான்; கடத்தப்பட்டது ஒரு நடிகரோ, அல்லது அரசியல் தலைவராகவோ இருந்திருந்தால் இந்நேரம் 'காட்டிற்குள்' இருந்தாலும் மீட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். என்ன செய்ய அச்சிறுவன் சமான்யனாச்சே!
-முகவைஅப்பாஸ்.

Thursday, August 19, 2010

மதானி கைதுக்கு பாக்கர் கண்டனம்



கேரள மார்க்க அறிஞரும் மக்கள் ஜனநாயக கட்சி
தலைவருமான அப்துல் நாசர் மதனி அவர்களை
சங்க்பரிவார சக்திகளின் தூண்டுதலின் பேரில்
கைது செய்துள்ள கம்னிஸ்ட் அரசை இந்திய
தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம் பாக்கர்
வன்மையாக கண்டித்தார். பாபா மசூதியை இடித்த
வழக்கில் முதன்மை குற்றவாளிகள் எல்லாம் கைது
செய்யபடாமல் சுதந்திரமாக உலவும் போது,
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அறுபதாவது
இடத்தில உள்ள மதானியை கைது செய்திருப்பது
உள்நோக்கம் கொண்டது என்றும் வழக்கை சந்திக்க
தயாராக உள்ள அவருக்கு , உடல் நிலையை கருத்தில்
கொண்டு மேல் முறையீடு தீர்ப்பு வரும் வரை
கைதை தவிர்த்திருக்க வேண்டும் என கூறினார்.

காஷ்மீரில் தொடர்ந்து நீடிக்கும் பதட்டம்


காஷ்மீர் - சவக் குழிகளின் சாட்சியங்களும்... மத்திய அரசின் பேச்சுவார்த்தை நாடகமும்!
அபு திங்கள், 16 ஆகஸ்ட் 2010 16:21
காஷ்மீரில் தொடர்ந்து நீடிக்கும் பதட்டம், அமைதியை விரும்பும் மக்கள் அனைவரையும் கவலை கொள்ள வைப்பதாக உள்ளது. காஷ்மீர் கலவரங்களின் அடிப்படைக் காரணமாக இருப்பது அம்மக்கள் வெறுக்கும் ராணுவத்தினரின் அடாவடிகளும், அதிகார துஷ்பிரயோக‌ங்களும்தான் என்பதை இந்திய அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டு துணை ராணுவத்தினரால் துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட இளைஞன் கடந்த 9ந் தேதி இறந்து விட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் மீண்டும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எனக் கிளம்ப - மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கே இயல்பு வாழ்க்கை திரும்ப, அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேரத்தை வீணடித்து வருகிறது மத்திய அரசு.

காஷ்மீர் எதிர் கட்சிகளும், பொது மக்களும் துணை ராணுவப் படையினரை திரும்பப் பெற வேண்டும். ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள தனிச் சிறப்பு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும், அப்பாவி மக்களை படுகொலை செய்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை உள்வாங்காமல் வழக்கமாக பாகிஸ்தானுடன் நடத்தும் பேச்சு வார்த்தைகளைப் போலவே காஷ்மீர் விஷயத்தையும் அணுகுகிறது மத்திய அரசு.

காஷ்மீர் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஜிலானியை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங், ஆனால் ராணுவத்தை வாபஸ் பெற்றால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் பதில் சொல்லி காஷ்மீர் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் ஜிலானி.

காஷ்மீர் நிர்வாகம் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை காஷ்மீரில் நிலை கொண்டுள்ள மத்திய ரிசர்வ் படையினரும், துணை ராணுவத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவப் படையினர் நடத்தி வரும் மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்தாமல், அதனை கட்டுக்குள் கொண்டு வராமல் பேச்சுவார்த்தை எனப் பிதற்றுவதன் மூலம் மத்திய அரசுக்கு உண்மையாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும், காஷ்மீர் பகுதியை ராணுவ மயமாக்க அது விரும்புகிறது என்பதையுமே காட்டுகிறது.

தங்களது குடும்பத்தினர், ரத்த உறவுகள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதை பார்க்கும் எவரும் போராட்டத்தை நோக்கித்தான் தள்ளப்படுவர். இதுதான் காஷ்மீரில் நிதர்சனமாக நடந்து வருகிறது. ஆனால் காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்பாதவர்களாகவும், இந்திய அரசுக்கு எதிரானவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

காஷ்மீரில் நிலவி வரும் மனித உரிமை மீறல்களும், நீதி நிலைமைகளும் குறித்து சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தீர்ப்பாயம் நடத்திய ஆய்வில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியின் பண்டிபூரா, பாரமுல்லா, குப்வாரோ ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 52 கிராமங்களில் அடையாளம் காணப்படாத 2943க்கும் அதிகமான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் இருப்பதாக சுட்டிக் காட்டுகிறது.

நீதிக்குப் புறம்பாகவும், ஒருதலைப்பட்சமாகவும், முகாந்திரம் ஏதுமின்றியும் ராணுவத்தினராலும், துணை ராணுவப் படையினராலும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருப்பதை தீர்ப்பாயம் ஆவணப்படுத்துகிறது.

மேற்சொன்ன மூன்று மாவட்டங்களிலுள்ள 2373 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் 23 புதைகுழிகளில் 3லிருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறும் தீர்ப்பாயம், திரளான சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதே தண்டனை ஏதுமின்றி கொலைகளை செய்வதை நோக்கமாகக் கொண்டது என்பதோடு, ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்வதையும் கொலை செய்யப்படடவர்களின் எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது எனச் சுட்டிக் காட்டுகிறது.

அப்படி என்றால் இந்திய ராணுவமும், துணை ராணுவப் படையும் சேர்ந்து கொண்டு கொத்துக் கொத்தாக செய்த கொலைகளை ஒட்டுமொத்தமாகப் புதைப்பதற்கு பரந்த வெளிகளைத் தேடிப் பிடித்து புதைகுழிகளை உருவாக்கியுள்ளது என்பதற்கு பாரமுல்லா, பண்டிபூரா, குப்வாரோ மாவட்டங்கள் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

இந்திய ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் இப்புதை குழிகளில் புதைக்கப்பட்டு அடையாளம் தெரியாத சடலங்கள் யாவும் அயல் நாட்டுத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று வழக்கமாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் பயிற்சி பெற பாகிஸ்தானுக்குள் புக முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அவர்கள் என கதை கட்டி வருகிறது ராணுவம்.

இதுபோன்று கொடுமைகளை தினமும் சந்தித்து வரும் காஷ்மீர் மக்கள், ஜனநாயக ரீதியில் நிதிகேட்டு வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கு காஷ்மீர் அரசு தடை விதிப்பதும், துணை ராணுவம் கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி பொது மக்களைச் சுட்டுக் கொல்வதும் தொடரும் நிலையில் காஷ்மீரில் பதட்டம் எப்படித் தணியும்?

காஷ்மீர் மாநிலம் - காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் என மூன்று பிராந்தியங்களாக உள்ளது. இவற்றில் ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், லடாக்கில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராகவும் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும் ராணுவத்தால் குறி வைக்கப்படுவதற்கு என்ன காரணம்? பள்ளத்தாக்கில் மட்டும் ஏன் இந்த பதட்டம்?

காஷ்மீரும் தனது நிர்வாகத்தின் கீழ் தான் இருக்கிறது என உண்மையிலேயே இந்திய அரசு நம்புமேயானால் - இல்லாத ஊருக்குப் போகாத வழியைத் தேடும் பேச்சுவார்த்தை என்கிற நாடகத்தை அரங்கேற்றுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான தீர்வை நோக்கி நகர வேண்டும்.

காஷ்மீரில் உள்ள 667000 ராணுவ, துணை ராணுவப் படையினரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். காஷ்மீர் சட்டம் ஒழுங்கை அம்மாநில காவல்துறையிடம் விட்டுவிட வேண்டும். ராணுவப் படையினருக்கான சிறப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். அப்பாவி மக்களை படுகொலை செய்த ராணுவ அதிகாரிகளைத் தேடிப் பிடித்து தண்டிக்க வேண்டும். இவை காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகளே! இவைதான் அம்மக்களை அமைதிப்படுத்தும்.

- அபு

Wednesday, August 18, 2010

இது தான் கிறிஸ்தவம் நூல் வெளியீடு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளியன்று
ஜும்மா தொழுகைக்கு பின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகத்தில் இதுதான் கிறிஸ்த்தவம்
எனும் நூலை டாக்டர் அப்துல்லாஹ் வெளியிட
எஸ்.எம்.பாக்கர் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.
இதை எழுதிய சகோதரர் விஜயன் என்ற உமர் பாருக்
ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறி
பெந்தேகொஸ்தே சபை போதகராக பணியாற்றி ,
பின்னர் உண்மை இறைவனை தேடும் முயற்சியின்
காரணமாக இறுதியில் சத்தியத்தை ஏற்று முஸ்லிம்
ஆனார்.தான் அறிந்த சத்தியத்தை மற்றவர்களும் அறிய
தாவா பணியை மேற்கொண்டுள்ளார்.அதன் ஒரு பகுதியாக
அவர் எழுதிய இந்த புத்தகம் கிறிஸ்தவ சகோதரர்களிடம்
அழைப்பு பணி செய்ய ஏற்ற நூலாகும்.

Tuesday, August 17, 2010

( குணங்குடி அனிபாவின் சிறை வாழ்க்கைக் குறித்த கவிதை


சிறைச்சாலையின் தனிமையில்
செடிகளோடு
பேசிக் கொண்டிருக்கிறேன்
என் கண்ணீர்த் துளிகளால்!

ஆயுள் தண்டனையை விடவும்
அதீத காலம் ஆனது
என் விசாரணைக் காலம்!

கணவன்
உயிரோடிருந்தும்
விதவைகளாகினர்!
விசாரணைக் கைதிகளின்
மனைவிகள்!

ஒரு எளிய மனிதனின்
நம்பிக்கையைப் போல
சூரியனின் ஒளிக்கதிர்கள்
பரவிக்கொண்டிருந்த
காலைப்பொழுது
எனக்கு மட்டும் இருளானது!

கைவிலங்கிட்டு இழுத்து
செல்லப்படுகிறேன்!
என் செல்ல மகளின்
திருமண நாளன்று!

பூமிக்கடியில்
குழாய்க்குண்டுகளை
பதுக்கி வைத்தாயா?

தொடர்வண்டி செல்லும்
வழிபார்த்து
தண்டவாளத்தைத் தகர்த்தாயா?

பயங்கரவாத செயல்களுக்கு
பயிற்சி அளித்தாயா?

உளவுத்துறையின் யூகங்களால்
தயாரிக்கப்பட்ட
மலர்வளையத்துக்கு மத்தியில்

உண்மைகளைப் பேச இயலாத
ஊமை நாவுகளின்
உயிர்ப்பிணம் நான்!

காந்தி தேசமே!
மதச்சார்பின்மை நாட்டில்
எனக்கான மரண தண்டனையை
நிறைவேற்றாத
உன் கருணையை என்னவென்பது?

காந்தியைக் கொன்றவனை
தண்டித்தோம்!
அதன் காரணங்களை
உயிரோடு உலவ விட்டோம்!

"நாம் வெளியில் இருப்பதை விடவும்
சிறையில் இருப்பதே சிறந்தது!"
சிறுபான்மை மக்களைக் காக்கும்
அரசுகள் சிந்திக்கின்றன!

நீதியின் புனைப்பெயரால்
அநீதியின் ஆவேசம் அடங்க
ஆண்டுகள் பதிமூன்றுகள் ஆயின!
விடுதலையாகி
வீடு திரும்ப!

கோலிக்குண்டு விளையாடும்
என் பேரன் கேட்கிறான்!
"வெடிகுண்டு எப்படி இருக்கும்
சொல்லுங்க தாத்தா?"

பயங்கரவாதி என
முத்திரைக் குத்தப்பட்ட
நான்
எப்படி சொல்வேன்?
"பார்த்ததே இல்லை என்று"

(சகோதரர் குணங்குடி அனிபாவின் சிறை வாழ்க்கைக் குறித்த கவிதை)

- அமீர் அப்பாஸ் (

திருவல்லிகேணியில் தினமும் சொற்பொழிவு.


சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹித் ஜமாஅத்
மர்கசில் சகோதரர் அப்துல் ஹமித் அவர்களின்
வரலாற்று நாயகர் தொடர் சொற்பொழிவின் போது
தினமும் திரளான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

ரமலானில் சிறப்பு குரான் வகுப்பு


இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான்
பிறை பத்தில் இருந்து முப்பது வரை
இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில்
ரமலானை முன்னிட்டு பேச்சாளர் பயிற்சி
முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தவ்ஹித் ஜமாஅத் சேப்பாக்கம்
கிளை சார்பில் ;இருபது நாட்களில்
இறை வேதம் கற்கலாம்; எனும் முயற்சி
ஏற்பாடு செய்ய பட்டுள்ளது!
இதில் ஓத தெரியாதவர்களும் ,
ஓதி மறந்தவர்களும் பங்கேற்று
ரமலானை பயனுள்ளதாக்கலாம்.

துவா செய்யுங்கள்.

துவா செய்யுங்கள்.
இந்திய தவ்ஹித் ஜமாஅத்
பண்டுருட்டி நகர தலைவர்
ரம்ஜான் ஷா விபத்தில் சிக்கி
பாண்டிச்சேரி மருத்தவமனையில்
அவசர சிகிச்சை பிரிவில்
கோமா நிலையில் உள்ளார்.
அவர் பூரண நலம் பெற
பிரார்த்திக்கவும்.

Monday, August 16, 2010

திருச்சியில் ரமலான் சிறப்பு நிகழ்சிகள்.


திருச்சி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்
ரமலான் சிறப்பு நிகழ்சிகளாக தினமும்
இப்தார் ஏற்பாடுகள் மற்றும் நபி வழியில்
இரவு தொழுகை அதை தொடர்ந்து பயான்
நிகழ்ச்சியும் நடை பெற்று வருகிறது!
இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொள்கின்றனர். கடந்த சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் மாநில செயலாளர்
செங்கிஸ் கான் கலந்து கொண்டு உரை
நிகழ்த்தினார் . முன்னதாக நடை பெற்ற
மாவட்ட பொது குழுவிலும் கலந்து கொண்டார்.

திருச்சியில் ரமலான் சிறப்பு நிகழ்சிகள்.



திருச்சி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்
ரமலான் சிறப்பு நிகழ்சிகளாக தினமும்
இப்தார் ஏற்பாடுகள் மற்றும் நபி வழியில்
இரவு தொழுகை அதை தொடர்ந்து பயான்
நிகழ்ச்சியும் நடை பெற்று வருகிறது!
இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொள்கின்றனர். கடந்த சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் மாநில செயலாளர்
செங்கிஸ் கான் கலந்து கொண்டு உரை
நிகழ்த்தினார் . முன்னதாக நடை பெற்ற
மாவட்ட பொது குழுவிலும் கலந்து கொண்டார்.

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?



நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் கணக்கில் கிடையாது. 29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும் அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக்கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்படும். சில போது தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது. எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், மார்க்க அறிவுள்ளவர்-அற்றவர் அனைவரும் மார்க்கம் குறித்து வாதம் செய்யும் நிலை அதிகரித்திருப்பதாலும், தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பிறை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படும் அம்சமாக ஆகிவிட்டது.
ஸஊதியில் பெருநாள் தொழுவதை நோன்புடன் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒருவருக்கு, தான் நோற்ற நோன்பு சரியானது தானா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதான். இந்த வகையில் சமீப காலமாகப் பிறை தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்களும், ஏட்டிக்குப் போட்டியான பிரசார அணுகுமுறைகளும், இயக்கப் பிரிவுகளும் தோன்றி வரும் ஆரோக்கியமற்ற சமூகச் சூழலைச் சந்தித்து வருகின்றோம். ஒரு நாளைத் தீர்மானிப்பதில் இவர்களுக்குள் இத்தனை சர்ச்சைகளா? என்ற மாற்று மதச் சகோதரர்களின் ஏளனத்திற்குமுள்ளாகி வருகின்றோம்.
சர்ச்சைகளுக்கான முதல் காரணம்:
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிறை தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு குழு இருக்கும். இவர்கள் பெரும்பாலும் குர்ஆன்-ஸுன்னா என்ற தூய வட்டத்தை விட்டும் சற்று விலகியவர்களாகவே இருப்பர். இவர்களின் மெத்தனப் போக்கே இந்தச் சர்ச்சை பூதாகரமாக எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினால் மிகையாகாது.
பிறை கண்டதாக அறிவித்தால் ஏற்க மறுப்பது, தகவல் உண்மையாக இருந்தாலும் கூட்டம் முடிந்த பின்னர் வந்த தகவல் என்பதற்காக ஏற்க மறுப்பது, ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவிப்பது போன்ற செயற்பாடுகளால் பிறைக் குழுக்கள் மீது மக்கள் குறை காண முற்பட்டனர். எனவே, மாற்றுத் தீர்வுக்காக மக்கள் மனம் அலைபாய ஆரம்பித்தது.
அந்தந்தப் பிரதேசங்களில் பிறை கண்டு நோன்பு நோற்றல், பெருநாளைக் கொண்டாடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து மக்கள் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தனர்.
அந்தந்தப் பிரதேசத்துப் பிறையை வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பது என்பது தவறான நிலைப்பாடு அல்ல. ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இருக்கின்ற நடைமுறை குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படவில்லை என்றால் அதை மாற்றுவதற்காகப் பெரிய சமூக சவாலைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும், பிறைக் குழுவிலுள்ள குறைகளாலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த சிக்கல்களாலும் சர்வதேசப் பிறை என்ற சிந்தனை உருவானது.
பிறை பார்த்து நோன்பு பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்கு பிறை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தாலும் பிறை பார்த்தல் என்பது நடந்து விட்டது. உள்நாடு-வெளிநாடு என்று நபி(ஸல்) அவர்கள் பிரிக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்த நாடுகள். இவை ஒன்றாக இருக்கும் போது ஒரு பிறை; அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்த பின்னர் மூன்று பிறைகளா? இலங்கையில் விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்கின்றனர். அப்படித் தனி நாடு கொடுக்கப்பட்டால் கொழும்பில் கண்ட பிறை வடகிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தாதா? என்றெல்லாம் வாதம் செய்யப்பட்டது.
ஒரு இறைவன்!
ஒரு தூதர்!
ஒரு கிப்லா!
பிறை மட்டும் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயமாக மக்களால் நோக்கப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் குர்ஆன்-ஸுன்னா பேசியோர் இரு கூறுகளாகப் பிரிந்தனர். சிலர் சர்வதேசப் பிறைதான் சத்தியமானது; உள்நாட்டுப் பிறை என்பது அசத்தியம் என்ற தோரணையில் பேச ஆரம்பித்தனர். இந்தக் கருத்து வேறுபாடு பெரும் பிளவாக மாறியது.
உள்நாட்டுப் பிறையை வைத்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துள்ள அறிஞர்கள் சர்வதேசப் பிறையை வன்மையாக மறுக்காததால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு இந்தப் பிரசாரப் போராட்டம் ஓய்ந்தாலும், இதன் காரணமாக ஏற்பட்ட ரணங்கள் ஆறவில்லை. ஏற்பட்ட பிளவு, பிளவாகவே இருந்து வந்தது. காலப் போக்கில் சர்வதேசப் பிறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. பிறை பார்த்தல் என்ற ஸுன்னாவுக்கு இடமில்லாமல், பிறை கேட்டல் என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் தொழில் புரிவோர் தரும் தொலைபேசிச் செய்திகளே சர்வதேசப் பிறையைத் தீர்மானிக்கும் சாட்சியங்களாகின. சர்வதேசப் பிறைப் படி நோன்பு நோற்போரே, ஒரு நாள்-இரு நாட்கள் வித்தியாசத்தில் ஒரே நாட்டில் நோன்பையும், பெருநாளையும் அனுஷ்டிக்கும் நிலை ஏற்பட்டது. முழு உலகத்திற்கும் ஒரே நாளில் நோன்பு-பெருநாள் எனப் பிரசாரம் செய்தவர்கள், ஒரே வீட்டிற்குள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடும் நிலையை ஏற்படுத்தினர்.
சர்வதேசப் பிறையிலும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை எனும் போது, மக்கள் மனதில் பிறையைக் கணிப்பீடு செய்தல் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இந்தக் கருத்து சர்வதேச மட்டத்திலும் வளர்ந்து வரும் அதே வேளை, தமிழகத்தில் அமைப்புகளைத் துண்டாடுமளவுக்குச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. இலங்கையில் சிலரின் மனதில் இப்போதுதான் இந்த எண்ணம் துளிர் விட ஆரம்பித்துள்ளது.
காலத்தைக் கணிப்பீடு செய்யத் தெரியாத உம்மத்தாக இருக்கும் போதுதான் பிறை பார்த்து நோன்பு பிடிக்க நபி(ஸல்) அவர்கள் ஏவினார்கள். இப்போது காலத்தைக் கணிப்பிடும் அறிவை நாம் பெற்று விட்டோம். நூறு வருடங்களுக்கு நோன்பு-பெருநாள் எப்போது வரும் என்பதை நாம் இப்போதே தீர்மானித்து விடலாம் என இத்தரப்பினர் வாதிடுகின்றனர்.
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வானியல் அறிவில் அரசர்களாக இருந்த போது கூட இந்த எண்ணம் முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்படவில்லை. அடுத்து, பிறையைப் பார்க்க வேண்டும்! என்ற உத்தரவை எப்படிக் கைவிடுவது என்பதும் புரியவில்லை. எனினும், சர்வதேசப் பிறைக் குழுவினர் எப்படித் தமது வாதத்திற்குத் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகியதை ஆதாரமாக முன்வைத்தனரோ, அதே போன்று விஞ்ஞான வளர்ச்சியை இத்தரப்பார் ஆதாரமாக முன்வைக்கின்றனர். “பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறும் போது, நீங்கள் நிழலைப் பார்த்து அதான் கூறுகின்றீர்களா?” அதே போன்று, “காலத்தைக் கணித்து அந்தக் கணிப்பின் பிரகாரம் நோன்பையும், பெருநாளையும் கொண்டாடினால் என்ன குற்றம் வந்து விடப் போகின்றது?” எனக் கேட்கின்றனர். இந்தக் கேள்விகள் நியாயமானவையாகத் தென்பட்டாலும் முடிவுகளைச் சரியானவை என்று கூற முடியாது. அது இந்தக் கட்டுரையின் நோக்கமுமல்ல.
பிறை தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகளால் குர்ஆன்-ஸுன்னா பேசும் அமைப்புகள் பிளவுபட்டு ஒருவரை மற்றவர் பகைத்துக்கொள்ளலாமா? ஒருவரை மற்றவர் தரக் குறைவாக விமர்சிக்கலாமா? ஹறாத்தைச் செய்பவர்கள் எனக் கண்டிக்கலாமா?
இது இஜ்திஹாதுக்கு உரிய ஒரு மஸ்அலாவாகும். இது விடயத்தில் இஜ்திஹாதான அம்சங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய அம்சங்களைக் கடைபிடிக்கின்றோமா? என்பது பற்றி தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.
பார்வைகள் வித்தியாசப்பட இடமுண்டு:
ஒரு ஆயத்தை அல்லது ஹதீஸை நல்ல நோக்கத்துடன் ஆராயும் இருவர், இரு வேறுபட்ட முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. நோக்கமும், ஆராயும் வழிமுறையும் சரியாக இருந்தால் இரு கருத்துகளை வெளியிட்டவர்களும் கண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
“ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)
இங்கே தவறான முடிவை எடுத்தவர் கண்டிக்கப்படவில்லை. இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரனான அல்லாஹ்வே அவருக்கு நற்கூலியைக் கொடுக்கும் போது, அவரைக் கண்டிக்கும் உரிமையை எமக்குத் தந்தது யார்? என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.
அடுத்துத் தீர்ப்புக் கூறுவோர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் இதில் தலையிடக் கூடாது! என்பது கவனிக்கப்பட வேண்டும். ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட “அல்ஹாகிம்” என்ற பதம் இதை உணர்த்துகின்றது.
அடுத்து, ஒருவரது தீர்ப்புத் தவறு என்பது தெளிவானால் தீர்ப்பை வெளியிட்டவர் கண்டிக்கப்படாத அதே வேளை, தவறான முடிவு புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
ஒரு வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருப்பதை உணர்த்த மற்றுமொரு நிகழ்ச்சியைக் கவனத்திற்கொள்ளலாம்.
“அப்துல்லாஹ் இப்னு உபை” எனும் முனாஃபிக் மரணித்த போது, நபித் தோழரான அவனது மகன் நபியவர்களிடம் வந்து, தனது தந்தைக்காக ஜனாஸாத் தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருக்காகத் தொழுகை நடத்த நபி(ஸல்) அவர்கள் முற்பட்ட போது உமர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது ஆடையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்காகத் தொழுகை நடத்தப் போகின்றீர்களா? உங்களது இரட்சகன் இவனுக்குத் தொழுகை நடத்துவதைத் தடுத்துள்ளான் அல்லவா?” எனக் கேட்டார்கள்.
அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் தடுக்கவில்லை. “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லது பாவ மன்னிப்புக் கோராதிருப்பீராக! நீர் அவர்களுக்காக எழுபது தடவைகள் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் நிராகரித்தமையே இதற்குக் காரணமாகும். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (9:80) என்ற வசனத்தில் எனக்குப் பாவ மன்னிப்புக் கேட்பதா? இல்லையா? என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்துள்ளான். நான் அவருக்காக எழுபதுக்கும் அதிகமான தடவைகள் மன்னிப்புக் கேட்பேன்!” என்றார்கள். பின்னர், “அவர்களில் மரணித்து விட்ட எவனுக்காகவும் ஒரு போதும் நீர் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்!..” (9:84) என்ற வசனம் அருளப்பட்டது. (புகாரி 4670, 4393)
மேற்படி சம்பவத்தில் ஒரு வசனத்தை உமர்(ரழி) அவர்கள் நோக்கிய விதமும், நபி(ஸல்) அவர்கள் நோக்கிய விதமும் வித்தியாசப்பட்டுள்ளது. இது முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுவிப்பது குறித்து நேரடியான சட்டம் வர முன்னர் நடந்த சம்பவம். மேற்படி (9:80) வசனம் முனாஃபிக்களுக்காக பாவ மன்னிப்புத் தேடக் கூடாது! என்று கூறுகின்றது. ஜனாஸாத் தொழுகையில் இறந்தவருக்காகப் பாவ மன்னிப்புக் கோரப்படுகின்றது. எனவே, முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது! என உமர்(ரழி) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் மேற்படி வசனம் முனாஃபிக்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவதைத் தடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனக்குத் தந்துள்ளது என நபி(ஸல்) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஒரே வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாக விளங்க வாய்புள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே இந்தச் செய்தியைக் கூறினோம்.
பார்வைகள் வித்தியாசப்படுவதுண்டு:
நேரடியான முடிவு கூறப்பட்ட விடயத்தில் வித்தியாசமான விளக்கம் கூற முடியாது. ளுஹர் தொழுகையின் றகஅத்கள் நான்கு என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தால் இது கண்டிக்கத் தக்க கருத்து வேறுபாடாகும். ஏனெனில், முடிவு தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. முடிவு கூறப்படாத ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அம்சத்தில் அவரவரது பார்வை, சிந்தனை, உணர்வுகள், அவரவர் முக்கியத்துவம் கொடுக்கும் துறை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகள் வர வாய்ப்புள்ளது.
இஸ்லாத்தில் நடந்த முதல் போரான “பத்ர்” கைதிகள் குறித்து அபூபக்கர்(ரழி) அவர்களதும், உமர்(ரழி) அவர்களதும் முடிவுகள் வித்தியாசமாக இருந்தன. உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாப்பையும், அபூபக்கர்(ரழி) அவர்கள் குடும்ப உறவு, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் கருத்துக் கூறினார்கள். எனவே, கைதிகளைக் கொல்ல வேண்டும் என்று உமர்(ரழி) அவர்கள் கூற, அவர்கள் விடயத்தில் மென்மையான கருத்தை அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
இதை வைத்து அபூபக்கர்(ரழி) அவர்கள் காஃபிர்களுக்கு support பண்ணுவதாகவோ, வளைந்து கொடுப்பதாகவோ, சமாளிப்பதாகவோ, கொள்கையில் தடம் புரண்டு விட்டதாகவோ உமர்(ரழி) அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.
பிரிவினை ஏன்?
குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே சில மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மற்றும் சில விடயங்களைப் பொறுத்த வரையில் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களாக உள்ளன. இதில் தாராளமாக விட்டுக் கொடுத்து நடக்கலாம்.
மற்றும் சில அம்சங்கள் இஸ்லாம் அங்கீகரித்தவை. ஏற்றுக்கொள்வதற்கும், சந்தர்ப்ப-சூழ்நிலையை அவதானித்துத் தவிர்த்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ள அம்சங்கள். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளாக இருக்குமே தவிர கொள்கை ரீதியானதாகவோ, மார்க்கச் சட்டதிட்டத்தின் அடிப்படையில் எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்குரியதாகவோ இருக்காது. இந்த மூன்று அம்சங்களிலும் ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்யாமல் சுமுகமான உறவைக் கையாளலாம்.
இவற்றுக்கு உதாரங்களாகப் பின்வரும் செய்திகளைக் கூறலாம்;
-1- விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் அவரவர் கருத்துப் படி அமல் செய்வதைத் தடுக்காத போக்கைக் கைக்கொள்ள வேண்டிய அம்சம்:
இமாம் சத்தமிட்டு ஓதும் தொழுகைகளில் பின்னாலுள்ளவர்கள் சூறதுல் ஃபாதிஹாவை ஓத வேண்டுமா? அல்லது கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
——
-2- இஜ்திஹாதுக்குரிய அம்சம்
உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? எதை வைத்து அமல் செய்வது? உறுப்பு தானம் செய்யலாமா?
——
-3- நிர்வாக ரீதியான முடிவு:
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சமூகச் சேவைக்காகவும், அழைப்புப் பணிக்காகவும் நிதியைப் பெறலாமா? அல்லது தவிர்க்க வேண்டுமா?
இது போன்ற நிலையில் நாம் நிதி பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். நீங்கள் நிதியைப் பெற்றுச் சேவை செய்வதென்றால் எமக்கு ஆட்சேபனையில்லை என்ற போக்கே கடைபிடிக்கப்பட வேண்டும்.
எனினும், குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணவும், தப்பபிப்பிராயங்களை வளர்க்கவும், அவதூறுகளையும், போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கவும் இத்தகைய சாதாரணப் பிரச்சினைகளைத்தான் பயன்படுத்துகின்றான் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
அகீதாவில் ஒன்றுபட்டவர்கள் இத்தகைய சாதாரணக் கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு நிற்பதும், நீதி-நியாயங்களையும், இஸ்லாமிய வரம்புகளையும் மீறிக் கோபத்தையும், குரோதத்தையும் வெளிப்படுத்துவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிறை போன்ற அம்சங்களை அடிப்படையாக முன்வைத்து இயக்கங்களைத் துண்டாடுவதையும், ஆலிம்களைப் புறக்கணிப்பதையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?
அனைத்திலும் குர்ஆன்-ஸுன்னா பேசுவோர் அகீதா ரீதியான முரண்பாடுகளைக் கையாள்வதை விட மிக மோசமான வெறியுணர்வுடன் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களை எப்படிக் கையாள முடியும்?
உண்மையில், மார்க்கத்தில் பற்றிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. தனிநபர் மீதுள்ள பற்றும், பகையும், தனியான அமைப்புகள் மீதுள்ள முத்திப் போன பக்தியும்தான் இத்தகைய பகையை ஏற்படுத்துகின்றன.
எனவே, இஜ்திஹாதுக்குரிய அல்லது சாதாரண நிர்வாக ரீதியான முடிவுகள் எமது சகோதரத்துவத்தையோ, பிரசார அமைப்புகளையோ சிதைக்காத விதத்தில் கையாளப்பட வேண்டும்.
பிறை விடயத்தில் இதன் பின் ஒன்றுபட்ட முடிவு வருவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கின்றது. இஜ்திஹாதுக்குரிய அம்சம் என்ற வகையில் சுய ஆய்வை இது விடயத்தில் விட்டுக் கொடுப்பது கூடக் குற்றமாகாது. குறிப்பாகப் பிறை விடயத்தில் இஸ்லாமே விரிந்த தாராளப் பார்வையைத்தான் வேண்டி நிற்கின்றது. அப்படி வர முடியாது போனால் கூட பிறையால் பிளவுபட்டுப் பகையுணர்வுடன் செயற்படும் இந்த நிலையையாவது நீக்குவதற்கு நாம் நிச்சயமாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இதனைக் கருத்திற்கொண்டு களப்பணி புரிவோமாக!- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி

மாரிஸ் புஹைல் இஸ்லாத்தை ஏற்ற சம்பவம்


ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மம்மியும் 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது. இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான். அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.

Thursday, August 12, 2010

இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தின் பெயர் மாற்றம்


. இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாவா குழுவின்
மூலம் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தின்
அரசிதழ் பெயர் மாற்ற வேலைகளுக்கு
பொறுப்பேற்று அதற்கான ஆவணங்களை
திருவல்லிக்கேணி கிளை நிர்வாகிகள்
வழங்கிய போது தாவா குழு உறுப்பினர்
பெரும்பாக்கம் ஜாபர் .

Wednesday, August 11, 2010

ரமலானின் முதல் பத்து.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய மிக முக்கியமான அமலை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆதார நூல்; இப்னு குஜைமா எண் 191 .

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் ரமலானை மூன்றாக பிரித்து அந்த மூன்றிலும் மிக முக்கியமான பலன்கள் இருப்பதை சொல்லிக்காட்டுகிறார்கள். அந்த பலன்களை அடைய நாம் செய்யவேண்டியது என்ன?
முதல்பத்தில் இதுவரை நாம் அடைந்த அருட்கொடைக்கு நன்றி கூறுவதும், அல்லாஹ்வின் அருளை வேண்டுவதும்.
நமது நம் முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ் உங்களுக்கு செய்த அருட்கொடை என்ன என்று கேட்டால் செல்வத்தைத்தான் சொல்லிகாட்டுவார்கள். பெரிய பங்களாவை எழுப்பி விட்டு அதன் நெற்றியில் 'இது என் இறைவனின் அருட்கொடை' என்று எழுதியிருப்பார்கள். அப்படியாயின் இதுவரை அவர்கள் வாழ்வில் அனுபவித்த எதுவும் அவர்களுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.

மாட மாளிகைகளில் வாழ்பவர்களில் பலர் மன நிம்மதியின்றி உறக்கமின்றி தவித்தபோது இவன் குடிசையில் சுகமாக உறங்கினானானே அந்த அருட்கொடை இவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
எத்துணையோ பேர் வீடின்றி ரோட்டிலே வாசம் செய்துகொண்டிருந்தபோது இவனுக்கு ஒரு கூட்டை தந்தானே இறைவன்.அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
பெட்டி பெட்டியாக பணமும்- கட்டி கட்டியாக தங்கமும் வைத்துள்ள ஒரு செல்வந்தன் ஆங்கில எழுத்தில் உள்ள அத்துணை நோய்களையும் தாங்கி அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது அன்றாடம் காய்ச்சியான இவன் காய்ச்சல் கூட இன்றி இருந்தானே அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
அத்துணை வசதிகள் இருந்தும் வெறும் கூழ் மட்டுமே குடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பல செல்வந்தர்கள் இருக்க, சின்ன எலி முதல் பென்னம்பெரிய பிராணியையும் முழுங்கிவிட்டு இருமுறை தரையில் புரண்டுவிட்டு பின்பு சாவகாசமாக ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு போல், சாதாரண கஞ்சி முதல் கனமான ஒட்டக இரைச்சிவரை கிடைத்ததை உள்ளே தள்ளி விட்டு 'ஏவ்' என்று ஏப்பமிட்டு சாதாரணமாக இவன் வாழ்ந்தது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
எது மட்டும் அருட்கொடையாக தெரிகிறது எனில் செல்வம் மட்டுமே அருட்கொடையாக தெரிகிறது. செல்வமும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். ஆனால் அதுமட்டுமே அருட்கொடை என்று எண்ணிவிடக்கூடாது. அல்லாஹ் நமது உடலில் அமைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அருட்கொடைதான். 'நிழலின் அருமை வெயிலில் இருந்தால்தான் தெரியும்' என்பார்கள். அதுபோன்று முழுமையான உடலமைப்பை பெற்ற ஒருவனுக்கு அவனது உறுப்புகளின் மகிமை புரிவதில்லை. நம்முடைய ஒவ்வொரு உறுப்பும் எப்படிப்பட்ட அருட்கொடை என்று புரிய வேண்டுமெனில், மாற்றுத் திறனாளிகளிடம் கேட்டால் தெரியும். கண் இன்றி அவர்கள் படும் கஷ்டங்கள்-செவிப்புலன் இன்றி அவர்கள் படும் துன்பங்கள்- பேசும் புலன் இன்றி அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள்- பிடிக்க கையின்றி, நடக்க கால்களின்றி அவர்கள படும் பாடுகள். இதையெல்லாம் நாம் கவனித்துப்பார்த்தால் அல்லாஹ் நமக்கு எப்படியெல்லாம் தனது அருளை வாரி வழங்கியிருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளலாம். செல்வம் மற்றும் நம் உடலமைப்பு மட்டுமன்றி,

ஒரு பெற்றோருக்கு அவர்களின் பெயரை காக்கும் வகையில் ஸாலிஹான குழந்தை கிடைப்பது அல்லாஹ்வின் அருட்கொடை.
பிள்ளைகளுக்கு இஸ்லாமிய நன்னெறி போதித்து வளர்க்கும் பெற்றோர் கிடைப்பது அல்லாஹ்வின் அருட்கொடை.
ஒரு கணவனுக்கு மார்க்கத்தை கற்ற சிறந்த மனைவி அமைவது அல்லாஹ்வின் அருட்கொடை.
ஒரு பெண்ணுக்கு மது-மாது-சூது-புகை-சினிமா உள்ளிட்ட தீமைகளை செய்யாத இறையச்சமுடைய கணவன் அமைவது அல்லாஹ்வின் அருட்கொடை.
கடுகளவும் பெருமையின்றி, சுயநலமின்றி சமுதாயத்தின் நலம் காக்கும் ஒரு வழிகாட்டி அமைவதும் அல்லாஹ்வின் அருட்கொடை.
முட்டாள்களுக்கு மத்தியில் கற்றவனின் கல்வி அதிலும் குறிப்பாக இஸ்லாமிய கல்வி அல்லாஹ்வின் அருட்கொடை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் முஸ்லிம்களாக பிறப்பதற்கும், வாழ்வதற்கும் அல்லாஹ் அருள் புரிந்தானே இது மிகப்பெரிய அருட்கொடை. எப்படியெனில், உலகில் உள்ள அத்த்துனை பெரிய கல்விகளையும் கற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியில் வீற்ற போதும் தன்னை படைத்த அந்த பரம்பொருளை அறியும் அந்த பகுத்தறிவில்லா முட்டாள்களாக பலகோடி பேர் இருக்கும் நிலையில், ஏட்டுப்படிப்பை ஊறுகாய் அளவுக்கு கற்ற இந்த முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய இறைவன் யார் என்பதை தெளிவாக விளங்கிவைத்துள்ளதே! கல்லையும்- மண்ணையும்-மரத்தையும்-பாம்பையும்-பல்லியையும் இப்படி மனிதனை விட கீழான படைப்புகளை இறைவனாக கருதி வழிபடும் மக்களுக்கு மத்தியில், இறைவன் யார்? அவன் வல்லமை என்ன? என்பதை விளங்கி அவனை தவிர வேறு எந்த படைப்பினங்களுக்கும் தலைவனங்கமாட்டோம் என்று அறுதியிட்டு உறுதியாக சொல்லும் நெஞ்சுரத்தை தந்தானே வல்ல ரஹ்மான். இதுதான் மிகப்பெரிய அருட்கொடை.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு)இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு

ஆதாரம்;புஹாரி எண் எண் 6412 .

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் இரு முக்கியமான அருட்கொடை பற்றி கூறுகிறார்கள். ஆரோக்கியம் என்பது ஒரு அருட்கொடை. அந்த ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிவிக்கும், மது-மாது-புகை போன்ற தீய பழக்கவழக்கங்களை விட்டொழிக்கவேண்டும். மேலும், உழைப்பிற்கு ஏற்ப உடம்பிற்கு ஓய்வும் அளிக்கவேண்டும் . ஒய்வு என்ற பெயரில் சினிமா-டிராமா-கிரிக்கெட்-சூதாட்டம் போன்ற தீமைகள் செய்வதையும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே அன்பானவர்களே! இதுவரை இறைவன் நமக்களித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம். இனியும் அவனது அருள் நிழலில் வாழ இந்த புனித ரமலானின் முதல் பத்தை பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.

அணு உலை இழப்பீடு கருத்தரங்கம்.



சென்னையில் கடந்த திங்களன்று
உலக பயங்கர வாதி அமெரிக்க ஜப்பானின்
ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில்
அணு குண்டு வீசிய நினைவு நாளன்று
கண்டன கருத்தரங்கும் அணு உலை
இழப்பீடு பற்றிய விழிப்புணர்வு கூட்டமும்
மனித உரிமை ஆர்வலர்களால் ஏற்பாடு
செய்யப் பட்டு இருந்தது. நிகழ்ச்சியில்
எஸ்.எம்.பாக்கர்,டி.எஸ்.எஸ்.மணி ,
வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்டோர்
பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

Tuesday, August 10, 2010

திருவல்லிக்கேணியில் இறை வேதம் அழைக்கிறது



கடந்த ஞாயிறு சென்னை திருவல்லிக்கேணி
மர்கசில் நடந்த பிற மத சகோதரர்களுக்கான
கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
நிகழ்ச்சியல் ஏராளமான பிற மத சகோதரர்கள்
கலந்து கொண்டு மார்க்கத்தை அறிந்து கொண்டனர்.
விருந்து உபசரிப்பும் , இலவச குரான்
மொழியாக்கமும் வழங்கப்பட்டது. !

Monday, August 9, 2010

எஸ்.எம்.பாக்கர் நிகழ்சிகள்



கடந்த ஞாயிறு அன்று திரு முல்லை வாசலில்
திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு
எஸ்.எம்.பாக்கர் உரை நிகழ்த்தினார். மேலும்
நாச்சியார் கோயிலில் நடை பெற்ற ரத்த தான
முகாமிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து
உரையாடி விட்டு ஆண்டி குப்பம் அஹ்லே ஹதிஸ்
பள்ளிவாசலில் நடை பெற்ற பெண்கள் பயானிலும்
கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இலங்கையையும் விட்டு வைக்காத அண்ணன்.

மதிப்பிற்குறிய மௌலவி பீஜே அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களது இணையத் தளத்தில் “உங்கள் கருத்து” ப் பகுதியில் களுத்துறையைச் சேர்ந்த சகோதரர் பர்ஹான் என்பவரின் கேள்விக்கு அளித்த பதிலை வாசித்தேன்.


http://onlinepj.com/YFeedback/

சூனியம் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று என்பதை மறுக்கும் தங்களது நிலைப்பாட்டைப் பற்றி நான் விவாதிக்க எனது இணையதளத்தில் தாங்களை அழைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு நீங்கள் “இப்போது அவர் மிக மிக அசிங்கமான செயலில் ஈடுபட்டு இனிமேல் தஃவா செய்யக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் குறித்த குறுந்தகடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடைப்பதற்கே விவாத அழைப்பு” என்று பதில் அளித்துள்ளீர்கள்.

அவர் குறிப்பிட்டதைக் கொஞ்சம் நீங்கள் உறுதிப்படுத்தியபின் மேற்கூறியவாறு சொல்லியிருந்தால் குறுற்தகடுகளை மறைக்கத்தான் இந்த விவாத அழைப்பு என்ற குற்றச்சாட்டு உண்மையெனலாம். நான் தங்களுடன் எப்பொழுதும் களந்துரையாடுவதையும் கருத்துப்பறிமாற்றம் செய்வதையுமே விரும்பியுள்ளேன். தங்களுக்கு எங்கேயும் விவாத அழைப்புக்கள் விடுத்ததில்லையே. என்னைப் பற்றிய குறுந்துகடுகளை தாங்கள் வைத்திருப்பதனாலோ அல்லது வேறு காரணங்களிற்காகவோ இந்த நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. அதற்கு முன்னரே பல உரைகளிலும் எழுத்துக்களிலும் நான் அவ்வாறுதான் நடந்துள்ளேன்.


“ஏற்கனவே முஜாஹிதிடம் விவாதம் செய்வது குறித்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் அவர் அதற்கு ஒத்துவரவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நான் நல்லதொரு கலந்துரையாடலுக்குத் தயாராகவே உள்ளேன் என்று ஒரு மடலை எஸ் எல் டி ஜேயிற்கு எழுதியதும் அது டி என் டி ஜேயிற்கு கிடைத்ததும் தாங்கள் அறிந்தேயிருப்பீர்கள். பின்வரும் லின்கில் அந்தக் கடிதம் உள்ளது.

ஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம்


“முஜாஹிதிற்கு நிகரான கேவலமான ஒருவர் இந்த உம்மத்திலேயே கிடையாது” என்று சொல்லியுள்ளீர்கள். அந்த ஓடியோப் பதிவை தாங்கள் கேட்டதால்தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அதைக் கேட்பவர்கள் அந்த முடிவுக்குத்தான் வருவார்கள் என்றும் எழுதியுள்ளீர்கள்.

நான் ஒரு இணைய அரட்டையின்போது மிகமோசமான முறையில் ஒரு அழைப்பாளனுக்குத் தகாத முறையில் பேசினேன் என்பதை உலகறிய நான் ஏற்கனவேயே ஏற்றுக்கொண்டுவிட்டேன். அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன் கேட்டுக்கொண்டுமிருக்கிறேன். அப்படியொரு அரட்டை நடந்ததை எண்ணிப் பார்க்கும் நேரமெல்லாம் நான் மனம் வருந்தி தவ்பா செய்கிறேன். ஆனால் பதிவுசெய்யப்பட்ட அந்த அரட்டை சம்பந்தமான குறுந்தகடுகளை நான் தஃவா செய்யக் கூடாது என்பதாக நிபந்தனையிட்டு தடுத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளதுதான் ஆச்சரியமாக உள்ளது. மரணம் வரை எனது பிரச்சாரத்தை எந்தக் குறுந்தகடும் தடுக்காது இன்சா அல்லாஹ்.

அதே நேரம் அந்த அரட்டையை டீ என் டீ ஜேயின் இலங்கைக் கிளை முன்னால் தலைவர் ரஸ்மிதான் தன்னை ஒரு பெண்ணாக “பஸீரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டு செய்தார்.(ஆனால் தற்பொழுது அந்தச் சகோதரர் அவ்வாறு தான் செய்ததை எண்ணி மனம் வருந்துகிறார்). அதனால் அவரைப் பற்றி தவறாக இங்கே சொல்ல வரவில்லை. அவர் அவளாக எழுத்திலும் நான் நானாக எனது குரலிலும்தான் அந்த அரட்டை நடந்தது. அதில் தான் எப்படி அந்த அரட்டை அமைய வேண்டுமென்று விரும்பினாரோ அதற்கேற்ப கேள்விகளைக் கேட்டார். சைத்தானின் மாய வலையில் சிக்கியிருந்த நான் மோசமாக அதற்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். அதைப் பதிவு செய்து டி என் டி ஜே இலங்கைக் கிளையினர் மூலம் தஃவா செய்யக் கூடாது என்று ஒப்பந்தம் எடுக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுக்கப்பட்ட வீடியோவும் அரட்டை ஓடியோவும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அந்தப்பதிவைத்தாங்கள் பத்திரமாக வைத்திருப்பதும் முதல் விவாதமாக அது அமைய வேண்டும் என்று சொல்வதும் எந்த வகையிலும் மார்க்கம் அனுமதிக்கும் முறையல்ல. ஒருவேளை நான் அதுபொய்யான பதிவு என்று சொன்னால் நீங்கள் சொல்வதில் ஒரு ஞாயம் உள்ளது என்று சொல்லலாம். ஆனால் நான் ஏற்றுக்கொண்ட ஒரு தவறை மறுபடி விவாதிக்க வேண்டும் என்று சொல்வது முறையல்ல.

இதில் இன்னும் பல விடயங்கள் பேசப்பட வேண்டியுள்ளன. ஆனாலும் ஒருபொழுதும் நான் பாவமன்னிப்புக் கேட்டு தவிர்ந்துகொண்ட ஒன்றை பாதுகாத்து வைத்துக் கொண்டு என்னை அச்சமுற வைக்கலாம் என்ற தப்பான எண்ணங்கள் இருந்தால் அதை இன்றோடு தவிர்ந்துகொள்ளுங்கள். டிவீடிகளாக அரட்டையை மாற்றி டி என் டி ஜேயின் இளவச விநியோகங்களில் ஒன்றாக இதைச் செய்தாலும் என்னை அவமானப்படுத்தலாம் ஆனால் அது மாத்திரமல்லாமல் ஒரு முஸ்லிம் தன் தவறை ஏற்றுக்கொண்ட பின்னர் அவரது மானத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது உங்கள் தகுதிக்கும் பிரச்சாரத்திற்கும் உகந்ததல்ல. தாங்களே ஒரு முஸ்லிமுடைய மானம் சம்பந்தமாக தனித்தலைப்பில் உரை கூட நிகழ்த்தியுள்ளீர்கள். “தவறாக நடக்கும் போலிகளைத்தான் அடையாளப்படுத்துகிறோம்” என்று பதில் சொல்லிவிடாதீர்கள். அவ்வாறே வைத்துக்கொண்டாலும் தவறை உணர்ந்து நான் 6 மாதகாலம் மௌனமாக இருந்து அமைதிகாத்த பின்னரே மறுபடி பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். கொஞ்சம் சிந்தியுங்கள். தயவுசெய்து இந்த வழிமுறை நல்லதல்ல. தங்களின் மீது நான் மிகுந்த மரியாதையுடையவன் என்பதனால் இந்த மடலை தங்களுக்கு வரைந்துள்ளேன். பதிலை எதிர்பார்க்கிறேன்.



Filed Under: தவறான செய்திகள், நன்நெறிகள், மறுப்புக்கள், விமரிசன விளக்கங்கள்
Tags: chatting, setting, கடிதம், செடிங்கில், பீஜே, பீஜேயிற்கு, மௌலவி, ஸெடிங்
12 Responses to ““செடிங்கில் ஒரு ஸெடிங்” மௌலவி பீஜேயிற்கு ஒரு கடிதம்”
saneej says:
August 4, 2010 at 11:45 pm
அல்லாஹ் நமது பாவங்களை மறுமை நாளில் மறைப்பதற்காய் இது போன்ற சந்தர்ப்பங்களை பயன் படுத்திக் கொள்வோமாக. நமக்குள்ளேயே இருக்கட்டும். மற்றவர்கள் மறை படுவதை விரும்பவில்லை என்றால், நம்மால் என்ன தான் செய்ய முடியும்? சும்மா மறைக்கிறேன், மறைக்கிறேன் என்றால் சரியாகி விடுமா? பொறுமையின் உச்சிக்குப் போனாலும் மறைக்கொனும். உச்சி அல்ல, தூண்டுபவர்களின் சிறு சதிக்கே சட்டென்று சரிகிரார்கர். ஆட்பட்டு, வீராப்போடு கடுகடுக்கிரார்கள். அல்லாஹ்வின் தூதரின் அழகிய முன் மாதிரியை விட்டு விட்டு அனுமதித்ததில் தாழ்ந்ததட்கே செல்வதால் ஜாஹிலியத்தில் இலகுவாக வீழ்கிறார்கள். இது சம்பந்தமான எந்த ஆராய்ச்சியும் நமக்குத் தேவையில்லை. தவறை ஒப்புக் கொண்டார். அதற்காக இறைவனிடம் மன்றாடினார். இந்த அளவில் நமக்குப் போதும். இருவரும் அறிஞர்கள். இருவரும் மனிதர்கள். சகோதரர் முஜாஹித் மட்டுமல்ல, சகோதரர் பீ ஜே யும் மனிதர் தான். அவரும் தவறு விடக்கூடியவர் தான். இந்த விடயத்தில் சகோதரர் முஜாஹிதின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். நானும் அதில் தான் நிற்கிறேன். சகோதரர் பீ ஜே விடுகின்ற சில தவறுகளுக்காய் அவரை வெறுக்க முடியாது. அவர் நம்பிய யாரோ அவரை திசை திருப்பி இருக்கலாம். நான் உட்பட பல கொள்கை வாதிகள் நேசிக்கும் மனிதர் அவர். அவர் செய்த தியாகங்களை இலகுவில் மறந்து விடவும் முடியாது.
ஒன்றும் இல்லை கொள்கை வாதிகளுக்கு மத்தியில் ஜாஹிலியமும், அறிவின்மையும் தலை தூக்குகிறது. இது தான் இந்தக் குழப்பங்களுக்கு காரணம்.

சகோதரர் முஜாஹிதிற்கு ஒரு வேண்டுகோள்; இது சம்பந்தமாக அறிஞர் பீ ஜே எழுதி இருந்த விதத்திற்கு நீங்கள் சற்றும் நிதானமிழக்காது பதிலளித்த விதம் அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருள். முதற் கண் அதற்காய் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். அதே போன்று உங்கள் மனம் பட்ட வேதனைக்காய் அவரை மன்னிக்காது விட்டு விடாதீர்கள். நம்மில் பலரை அடிக்கடி தௌஹீத் பிரச்சாரத்தின் பக்கம் மூழ்க வைத்து, களத்தை உயிரோட்டமாகக பாடு பட்டவர்களில் அவரும் ஒருவர். இதை நீங்கள் நன்கு அறிந்தவர். அடிக்கடி ஞாபகப் படுத்துபவரும் கூட. மற்றவர்கர் (நிதானம் கடந்து விமர்சிப்பதால்) நடிப்பாய் எடுத்துக் கொண்டாலும் நான் இவ்விடயத்தில் நல்லெண்ணம் தான் கொண்டுள்ளேன். ஏன், என் போன்ற பல சகோதரர்கள் அப்படித் தான் நினைக்கிறோம். அல்லாஹ்வுக்காக இது சம்பந்தமாய் தவறு விட்ட அனைத்து கொள்கைச் சகோதரர்களையும் மன்னித்து விடுங்கள். அல்லாஹ் திருமறையில் மன்னிக்கச் சொல்வதால், இதன் மூலமாக மறுமையில் அந்த சகோதரர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்க இருப்பதை விட மேலான ஒன்றை தருவான். இல்லாவிட்டால் நீதமான அவன் பாதிக்கப் பட்டவனை பார்த்து இவ்வாறு மன்னிக்கச் சொல்லி இருக்க மாட்டானல்லவா? நமது பிரச்னை மறுமை ஸ்கோர் தானே?

Reply
Zain says:
August 4, 2010 at 1:29 pm
பாமர மக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய படித்தவர்கள் நீங்களே இப்படி சண்டையிட்டுக்கொள்ளும்போது….?? உண்மையில் வேதனையாகவே இருக்கிறது.
மெலளவி அவர்களே, ”அவர் அவளாக எழுத்திலும் நான் நானாக எனது குரலிலும்தான் அந்த அரட்டை நடந்தது. அதில் தான் எப்படி அந்த அரட்டை அமைய வேண்டுமென்று விரும்பினாரோ அதற்கேற்ப கேள்விகளைக் கேட்டார்.” என நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால் இது ஒரு ஸெட்டிங் என நீங்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. அல்லாஹ் ஒருவனே அனைத்தும் அறிந்தவன்!
பெண்ணாக நடித்துப் பேசிய நபர் இலங்கை தஹ்வாக் களத்திலிருந்து உங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற டிஎன்டிஜே யின் திட்டத்தின்படிதான் இந்த நாடகத்தை அரங்கேற்றினார் என நீங்கள் நினைக்கின்றீர்களா? அப்படியிருந்தால் அதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பீர்களா..??
செய்த பாவத்தை உணர்ந்து, வருந்தி, தவ்பாச் செய்த நீங்கள் ஏன் இனி தஹ்வாச் செய்வதில்லை என ஒபப்ந்தம் செய்தீர்கள்??? இந்த ஒப்பந்தத்தின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு அமானிதமாகத் தந்திருக்கின்ற ஆற்றல்களை அவனது தீனைப் பரப்புவதற்காக பயண்படுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்ததுபோல் அல்லவா இருக்கிறது….???
உங்கள் பதிலை எதிர்பார்ப்பதோடு உங்களது தஹ்வாப் பிரச்சாரம் தொடர்வதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

Reply
Abu abdullah dubai says:
August 4, 2010 at 11:27 am
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆடு கசாப்புக்காரனை நம்புவதுப்போல் பீ.ஜே வை நம்பி இருந்தீர்கள். வேண்டுமென்றே செய்த சதியில், உங்களை சிக்க வைத்ததால் நீங்கள் இப்படி தவரு செய்தீர்கள் என்று தெரிந்துக்கொண்டே,உங்களை கேவலப்படுத்தும் பீ.ஜே வை இன்னும் நீங்கள் நம்பிதான் இருக்க வேண்டுமா? பித் அத்தை எதிற்த்தால் மட்டும் போதாது. பித் அத்தை வளர்க்கும் பீ.ஜே வை எதிர்க்கவேண்டும்.

Reply
saneej says:
August 5, 2010 at 12:02 am
விமர்சிப்பில் கண்ணியம் வேண்டும் என்னருமைச் சகோதரனே! நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மட்டும் மூழ்குங்கள். விமர்சிப்பில் நிதானம் வரும். மறுமைக்குப் பயந்து யாரையும் விமர்சியுங்கள். இது கொள்கைச் சகோதரனான உங்களில் வைத்த அன்பில் சொல்லும் ஞாபகமூட்டல். கவலையில் இருக்கும் ஒருவரை இப்படியா தேற்றுவது? வழி நடத்துவது? நமக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாம்? ஏட்டிக்குப் போட்டி! இஸ்லாம் காட்டித் தந்த உயர் தர வழி காட்டல் எங்கே!!!!!!!!! இது உங்களுக்கு மட்டும் அல்ல. நான் உட்பட நம் அனைவருக்குமாய் தான் சொல்கிறேன். நான் இது போன்று சொன்னால் நீங்களும் ஞாபகமூட்டுவதை எதிர் பார்கிறேன். நானென்றால் மனிதன் தான்.

Reply
Abu Abdullah, Dubai says:
August 6, 2010 at 10:18 am
அஸ்ஸலாமு அலைக்கும். முஜாஹித் அவர்களை நான் கன்னியக்குரைவாக எழுத என்னம் எனக்கு இல்லை. நம்பிக்கை துரோகம் செய்பவர்களையும் நம்பி இருக்கும்போது,”ஆடு கசாப்புக்காரனை நம்புவதுபோல்” என்ற ஒரு வழக்கமொழியை தான் நான் சொன்னேன். இது அவர் மனதை புன்ப்பட வைத்திருந்தால், என்னை மன்னிக்கவும்.பீ.ஜே மோசமானவர் என்று நான் முன்பே அவரிடம் பேசி இருக்கிறேன். அவர் அப்போது பீ.ஜேவை பற்றி நல்லென்னம் கொண்டு இருந்தார்கள். பீ.ஜே வின் அந்த பதிலை கண்டு ,” முஜாஹித் அவர்களை இப்படி வர்னித்துள்ளாரே ” என்று நான் கோபம் அடைந்தேன். அந்த கோபத்தில் எழுதியது தான் இது. பித் ஆவை மட்டுமே எதிற்து, பீ.ஜே மேல் பாசம் வைத்திருந்தால், மக்களுக்கு ஹக் எதுவென்று தெரியாது.

saneej says:
August 6, 2010 at 11:08 pm
வஅலைக்குமுஸ்ஸலாம். நான் குறிப்பிட்டது பீ ஜே பற்றிய விமர்சிப்பின் விதத்தை. முஜாஹித் அவர்களைப் பற்றி அல்ல. நீங்கள் மட்டுமல்ல பார்க்கும் எவருக்கும் பீ ஜே வர்ணித்த விதத்தில் அழகிய வழிமுறை தெரிய வாய்ப்புக் குறைவு என்பது தான் எனது கருத்தும் கூட. ஏன் அறிஞர்கள் இப்படி நிதானம் இழக்கிறார்கள் என்பது சங்கடமாக தோன்றினாலும், அவரும் மனிதர் தானே!!!! அவர் விமர்சித்த பாணியில் நீங்களும் விமர்சித்தால் அது எப்படி சரியாகும்? நீங்கள் விமர்சித்த தோரணையில் எழுத அந்த இடத்தில் முஜாஹித் அவர்களுக்கு அனுமதி இருந்தும் அனுமதித்தை தவிர்த்து அழகிய முறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அது அழகிய முன்மாதிரி. அதையே உங்களிடம் எதிர்பார்கிறேன். பிடிவாதம் வேண்டாம். மனக்கசப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். கொள்கை வாதிகளின் உள்ளங்கள் பிளவு பட வேண்டாம். அவர்கள் விலக்கி நடந்தால், நாம் சேர்த்து நடப்போம். நமது எதிர்பர்ரப்பு மறுமை தானே???

Reply
faleelsrilanki says:
August 4, 2010 at 11:02 am
சகோதரா்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

முஜாஹித் அவா்கள் குறிப்பிட்டுள்ள ரஸ்மி என்பவா் வேறு ரஸ்மின் என்பவா் வேறு ரஸ்மின் என்பவா் இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறார் அவரைப் பற்றி அறிய ******************* / *********************** என்ற இணையத்தளத்தையும் ************@gmail.com என்ற மின்னஞ்சலையும் தொடா்பு கொள்ளவும்.இதை அறியாமல் உங்களில் சிலா் முஜாஹி்த் விஷயமாக ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி என்பவரை அவா்தான் ரஸ்மி என்று நினைக்கிறீா்கள் அதனை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியப் போதுமானவன்.

இவன்
பளீல் (இலங்கை) கத்தரிலிருந்து.

Reply
Ahmed Ruzik says:
August 4, 2010 at 9:55 am
//அதே நேரம் அந்த அரட்டையை டீ என் டீ ஜேயின் இலங்கைக் கிளை முன்னால் தலைவர் ரஸ்மிதான் தன்னை ஒரு பெண்ணாக “பஸீரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டு செய்தார். //

ஒரு முஸ்லீமை பவத்தில் விழ வைக்க வேண்டும் எற நோக்கத்தில் இப்படிப்பட்ட வேலைய் செய்வது மிகவும் ஓர் அசிங்கமான வேலையாகும்.

அதிலும் இதைச் செய்திருப்பது தமிழ் நாடு தவஹீத் ஜமாத் இலங்கைய சார்ந்த வர்களா !!! அதற்கு பீஜேயும் இணக்கம் தெரிவித்துமிருப்பது இன்னுமோர் அசிங்கமான வேலை

இப்படி பாவத்தை செய்வதற்கு தூண்டுவது சரியேயில்லை..!

Reply
asfar says:
August 4, 2010 at 8:01 am
stop this battle between you and PJ, both are not angles, we all are mankind, so we must give mistake including PJ according to our sunnath.

Reply
sharafaqsa says:
August 4, 2010 at 6:21 am
I was wondering when I was reading this article really TNTJ had shit job ithrough Rasmin how dame he can record a voice without his permission also he did with bad willing? Also I’m wondering TNTJ take this as a big issue Brother Mujahid is not angel he is human being also beware of almighty allah even to dame Rasmin or Brother PJ don’t have right to spread about his personal life I don’t know you all talking about Quran and Hadeed I don’t know under which context of prophet muhammed (pbuh) you record this chat and audio?

sharafaqsa

Reply
M.C.Kasim says:
August 3, 2010 at 11:06 pm
Assalamu alikum,

I think moulovi PJ should not take this chat incident as a trump to prevent the debate with molovi mujahid.
This chat incident is a different topic clearly as per the article, moulovi mujahid already asked tawba for this incident and corrected his mistake. So should not take this issue as tool to prevent the debate. come on! let’s both of you have a nice debate on sooniyam topic very soon.

Kasim

Reply
sharafaqsa says:
August 4, 2010 at 6:30 am
This is right whether mujahid Brother ask tawba or not this is not our matter that is between Allah and him? If allah accept this tawba what is going to happened to Brother Rasmin and PJ trying to spread his personal life there was a hadeed “ if you hide one person’s bad attitude allah will hide your bad attitude in front of the whole world in the here after (AHIR) I don’t know if you leak one person bad attitude so society purposely what allah will ? Rasmin I think he is angel if you leak others personal allah is enough BE WARE OF ALLAH HE IS GREATEST AND ALL KNOWS

Reply