Saturday, August 7, 2010

உணர்வு தலையங்கம்-.அந்நஜாத் பார்வையில்

வழக்கம் போல பல மாதங்கள் முயற்சித்து, பல லட்சம் பணங்களை செலவழித்து திரளான மக்கள் எண்ணிக்கையில் ஒரு மாநாட்டை நடத்தி முடித்த த.த.ஜ. அவர்களை சாராத மற்ற சகோதர சமூகத்தினரை கழிசடை என்று காரி உமிழ்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், வார்த்தைக்கு வார்த்தை பொய்யையும், புரட்டையும் கலந்து அவதூறாக ஒரு தலையங்கத்தையும் தான் அபகரித்த பத்திரிகையான உணர்வில் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்களை சற்று அலசுவோம்!

எடுத்தவுடன் சுய தம்பட்டத்தில் துவங்கி, பிறகு பிற சமூக நல ஆர்வலர்களை, இறை நெறியை எடுத்தியம்பி பலரை ஏகடியம் செய்து ஒருவிதமான ரசனையை த.த.ஜ.வின் உறுப்பினர்களுக்கு வழங்குகிறது உணர்வு. ஒரு பத்திரிகை என்றால் அதற்கு ஒரு ரிஜிஸ்ட்ரேன் நடைமுறை உண்டு. அதை அந்தப் பத்திரிகை யின் குழு ஆலோசித்து ஒருவர் பெயரில் பதிவு செய்ய அனுமதி கொடுக்கும். இதை ஒரு இமாலய குற்றம் போல் சித்தரிக்கிறது தலையங்கம்.

இதன் பின் அந்நஜாத்தை ஆதரிப்போர் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப் பட்டோமாம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25 வருடங்களாக தூய இஸ்லாத்தை எழுத்தாலும், பேச்சாலும் பதிவு செய்து கொண்டிருக்கும் நம்மை பார்த்து ஆரம்பத்திலேயே ஒரு அண்டப் புளுகை கொட்டுகிறது உணர்வு தலையங்கம். பிறகு அவருடைய இயக்கம் மாபெரும் கொள்கை கூடாரமாக வளர்ந்ததாக சுய தம்பட்டம் அடித்தவர், அடுத்த பாராவில் இனியும் இந்த கொள்கை அற்றவர்களிடம் இருக்க முடியாது என அதிலிருந்து (JAQH) வெளியேறியதாக முரண்படுகிறார். ஜாக்கிலிருந்து கொண்டே சமுதாயப் பணிக்கு த.மு.மு.க. ஆரம்பித்ததை வசதியாக மறைத்துவிட்டார். த.மு.மு.க. ஆரம்பித்த பிறகும் பல மாதங்கள் ஜாக் மர்கஸில் பயான் செய்ததையும் மறந்து விட்டார். பிறகு அனைத்து தவ்ஹீத் என்று ஒன்றை ஆரம்பித்ததாக சொல்கிறார். ஒரே ஒரு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை மட்டும் கூட்டி அனைத்து தவ்ஹீத் ஜமாத் என்று எப்படி பெயரிடலாம் என்று சிந்தனையாளர்கள் கேட்கக் கூடாது.

பிறகு மக்களின் உரிமைக்காக த.மு.மு.க.வை ஆரம்பித்ததாக சொல்கிறார். தற்போது தமுமுக அதற்குச் சொந்தமான உணர்வு மேற்படியாரால் அபகரிக்கப்பட்டதால் மக்கள் உரிமையை ஆரம்பித்தது நமக்கு நினைவுக்கு வருகிறது. தமுமுக.வில் பலரை முன்னிலைப் படுத்தினாராம். இப்படி முன்னிலைப் படுத்தியவர்களின் மீது பல லட்சம் சுருட்டியதாக நீங்கள் ஏன் புகார் கொடுத்தீர்கள்? ஊழல் மலிந்தவர்களை சமுதாயத் தலைவர்களாக நீங்கள் ஏன் முன்னிலைப் படுத்தினீர்கள் என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது!

தமுமுக.வில் அடக்கு முறைக்கு ஆளானவர்கள், பொருளுதவி செய்தவர்கள் எல்லாம், தவ்ஹீத் வாதிகள் மட்டும் தானாம். பிற சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்கள் இந்த காலங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என நீங்கள் கேட்கக் கூடாது!

தவ்ஹீத்வாதிகளின் உழைப்பில் இயக்கம் வளர்ந்த பின் பீ.ஜை. இனி நான் பொறுப்பில் இருக்க வேண்டியது இல்லை என விலகிக் கொண்டார் என தலையங்கம் கூறுகிறது. தனக்கு வேறு ஒரு இயக்கம் ஆரம்பித்து சமுதாயத்தை துண்டாட வேண்டும் என்று பீ.ஜை. நினைத்தாரா என நீங்கள் கேட்கக் கூடாது!

அந்தக் காலக்கட்டத்தில் அமைப்பாளர் பொறுப்புதான் முதல் நிலை பொறுப்பு என உணர்வு கூறுகிறது, ஆனால் இப்பொழுது மேலாண்மைக் குழு உறுப்பினர் பொறுப்புதான் முதன்மை பொறுப்பாகுமா? என நீங்கள் கேட்கக்கூடாது.

த.மு.மு.க. வளர்ந்த பின் அரசியல் ஆசை ஊட்டியதாக தலையங்கம் கூறுகிறது! த.த.ஜ மேடைகளில் மாறி மாறி அரசியல் கட்சித் தலைவர்கள் ஏறியதையும் அரசியல் வாதிகளின் மேடைகளில் த.த.ஜ.வினர் ஏறி கும்பிடு போடும் அவர்களை சல்யூட் அடிக்க வைக்க முயன்று தோற்றுப் போன தெல்லாம் அரசியல் இல்லையா என நீங்கள் கேட்கக் கூடாது!

பிறகு த.மு.மு.க.வில் இருந்து தவ்ஹீத் கொள்கைக்காக வெளியேறினோம் என்று தலையங்கம் கூறுகிறது. தர்கா வழிபாட்டுக்காரன் நான் என்று மார்தட்டிய ஹாரூன் M.P.யை இந்த மாநாட்டிலும், அதன் பிறகும் முன்னிலைப்படுத்தியதும் ஏன் என்று உங்கள் மனதில் கேள்வி எழக்கூடாது?

த.மு.மு.க. வில் இருந்து வெறுங்கையுடன் வெளியேறியதாக கூறுகிறார். பலமிக்க உணர்வு என்ற பத்திரிகையும், பெரும் மதிப்பிலான இரண்டு கட்டிடங்களும் அந்த வெறுங்கையில்(?) இருக்கவில்லையா? அதன் அலுவலகம் உங்களிடம் தானே இருக்கிறது என்றெல்லாம் நெஞ்சை தொட்டு நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது!

பிறகு கொள்கைக்காக ஒரு இயக்கம், சமுதாய பிரச்சினைக்கு ஒரு இயக்கம் என்று இனி வேண்டாம் என முடிவு செய்தார்களாம்! நீங்கள் செய்யும் முடிவுதான் இஸ்லாத்தின் முடிவா? என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது!

தவ்ஹீத் சகோதரர்கள் பிரிந்தபின் தமுமுக ஒரு மாநாட்டையும் நடத்தவில்லை என்று தலையங்கம் கூறுகிறது! திரளான மக்களை திரட்டி இவர்களைப் போலவே ம.ம.க. இயக்க மாநாட்டை த.மு.மு.க. சென்னையில் நடத்தியதை மறந்து விட்டது தலையங்கம். மனிதக் கணக்குப்படி தவ்ஹீத் ஜமாஅத் அழிந்திருக்க வேண்டுமாம் கூறுகிறது தலையங்கம். மனிதர்களிடம் அழிக்கும் சக்தி இருக்கிறதா என்ன? என்று நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது!

இவர்களின் வழக்கமான உரிமை மாநாடுகளைப் போன்றே திரளான மக்கள் சேர்ந்த தஞ்சை மாநாட்டை குறை கூறுகிறது தலையங்கம். காரணம், இவர்களின் தனி மரியாதை, தனி நபர் ஆதிக்கம் தஞ்சை மாநாட்டில் ஓரளவு தடுக்கப்பட்டது. அதனால் இவர்கள் ஒன்றாக இருந்தபோது நடத்தப் பட்டாலும் அது தோல்வி மாநாடாம்!

பாலியல் மற்றும் பண மோசடி காரணமாக பாக்கர் நீக்கப்பட்டாராம். கடலூர் ஜமாஅத் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் குற்றச் சாட்டை கூறிய போதும் பீ.ஜைக்கு வேண்டியவர் என்பதால் முன்பே ஏன் அவரை நீக்க வில்லை? என்ற நியாயமான கேள்வியை நீங்கள் கேட்கக்கூடாது!

பின்னர் நிர்ப்பந்தம் காரணமாக அவரை நீக்கி, அவர்மீது இதே பாலியல், பண மோசடி என குற்றம் சுமத்தியபின், எப்படி சில நாட்களிலேயே மீண்டும் சேர்த்துக் கொண்டீர்கள் என்று யாரும் கேட்கக் கூடாது.

அதனால் கருத்து வேறுபாடு கொண்ட கடலூர் ததஜ ஜமாஅத் தினரோடு அன்று பாக்கர் குற்றம் செய்தார் என கடலூர் ததஜவினரிடம் நான் கூறவில்லை எனத் துணிந்து அவர்களுடன் சத்தியமிட்டு “முபாஹலா’ செய்துவிட்டு இன்று அதற்கு முரணாக பாக்கர் மீது அதே குற்றச்சாட்டுக்களைப் பரப்பித் திரிகிறீர்களே! என யாரும் கேட்கக்கூடாது.

இப்படி தலையங்கம் முழுவதும் சுய தம்பட்டம், பிறரை சீண்டுதல் என்று ஒரே அவதூறு. இது போதாதென்று பிரதமருடன் சந்திப்பு என்ற பெயரில் ஒரு பில்டப் கட்டுரையையும் உணர்வு வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டு அதிபர்கள் அமரும் சேரில் பீ.ஜை. அமர வைக்கப்பட்டாராம்! வடை மற்றும் பலகாரங்கள் கொடுத்து உபசரிக்கப் பட்டார்களாம்! பதினைந்து நிமிட சந்திப்பில் நடந்த பல நிகழ்வுகளில் பீ.ஜை தமிழில் கூறியதை மொழி பெயர்த்து கூறினார்களாம்! காரியமாக என்ன பேசினார்கள்? சமுதாய நன்மைக்கு பிரதமரிடம் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு ஏதாவது செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதி மொழி வாங்கப்பட்டதா? என்ற விபரங்கள் ஏதும் எழுதாமல் வடை சாப்பிட்டோம், அதிபர்களின் நாற்காலியில் பி.ஜை. அமரவைக்கப்பட்டார் போன்ற பில்டப்கள் தேவைதானா? என நடுநிலை சிந்தனையாளர்கள் கேட்கிறார்கள்! சிந்திப்பார்களா த.த.ஜ.வினர்?

அபூஜுமானா 119-4 அண்ணா நகர், பைபாஸ் ரோடு, தெற்கு உக்கடம், கோவை-1.



குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக் கெல்லாம் கேடுதான். (104:1)

மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்து விட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசிவிடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கிறான். (4:112)

நீங்கள் நெறிநூலை (அல்குர்ஆன்) படித்துக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, உங்களை நீங்கள் மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? (2:44)

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். அழைப்பவரின் அழைப்பிற்கு விடையளிக்கிறேன்; அவர்கள் என்னையே அழைக்கட்டும்; என்னையே நம்பட்டும் (ஆலிம்களை நம்ப வேண்டாம்) அப்பொழுதே அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக! (2:186)

நன்றி - அந்நஜாத்

0 comments:

Post a Comment