Saturday, August 7, 2010

தனியோனை துதித்திட ததஜ பள்ளி மட்டுமே

அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்)...
த த ஜ பொது செயலாளர் மற்றும் தலைவர் அவர்களுக்கு,

ஏகத்துவத்திற்கு எதிரான எதிர்ப்புகள் எல்லாம் 90 சதம் தமிழக ஊர்களில் காணாமல் போய், பள்ளிகளில் தொழுவதை தடுப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விட்ட குறையை பூர்த்தி செய்ய நவீன அவதாரம் எடுத்துள்ள ததஜ ஷெய்கு தன் முரீதுகளில் பெரும்பாலோனோரை ஏற்கனவே ஊரின் பொதுப்பள்ளிகளில் தொழுவதிலிருந்தும் பல்வேறு பொருந்தாக் காரணங்களை கூறி தடுத்து வைத்துள்ளார்.

இது ஒருபக்கம் இருந்தாலும் இப்போது தவ்ஹீதின் பெயரால் கட்டப்படும் பள்ளிகளில் தொழுவதிலிருந்தும் தடுக்க தயாராகிவிட்டார்கள்.

எங்கள் ஊர் (கும்பகோணம்) மேலக்காவேரியில் டிஎன்டிஜே இயக்கத்தில் பேச்சாளராக இருந்த அஸ்கர் என்ற சகோதரர் தனது சொந்த பணத்தில் கடந்த மாதம் ஒரு பள்ளியை கட்டினார்.

டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் இந்த பள்ளியையும் விட்டு வைக்காமல் அவரிடம் கேட்டுள்ளனர், அவர் எழுதித்தர இயலாது நிர்வகித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

இந்த ஒரே காரணத்திற்காக, இந்த பள்ளி தவ்ஹீத் பள்ளியாக இருந்தும் டிஎன்டிஜேவினர் பள்ளி அருகிலேயே தனியாக ஒரு வீட்டில் தொழுகை நடத்திவருகின்றனர்.

சுன்னத்துல்ஜமாத் பள்ளி, இணை வைக்கும் இமாம் என்ற காரணங்கள் மலையேறி, இன்று டிஎன்டிஜேக்கு சொந்தமான பள்ளியில்தான் தொழுவோம் என்ற நிலைக்கு போய்விட்டார்களே! இவர்களின் இந்த நிலை எந்த குர்ஆன் சுன்னாவிற்கு உட்பட்டதோ தெரியவில்லை. தரீக்காவை விட மத்கபை விட கீழ் நிலைக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள்தான் உலகம் முழுவதுக்கும் தவ்ஹீதை எத்திவைப்பவர்களாம்???


இது பற்றி ஒரு சகோதரர் கேட்ட கேள்வியை உங்களுக்கு அனுப்பி தருகிறேன். விளக்கம் தாருங்கள்.

//தவ்ஹீத் பள்ளிவாசல் பக்கத்தில் இருந்தும் அது தங்கள் சொத்தாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு வீட்டில் தொழும் நிலைக்குத் ததஜவினர் சென்றுள்ளது குர்'ஆன், ஹதீஸ் ஒளியில் சரியா?

தங்கள் சொத்தாக உள்ள பள்ளிவாசலில் மட்டும் தான் ததஜவினர் தொழுவர் எனில், வளைகுடாவில் உள்ள ததஜ தொண்டர்களின் கதி? வளைகுடாவில் ததஜ பெயரில்சொத்து வாங்கி அதில் பள்ளி கட்டும் வரை இவர்கள் ஏதாவது வீடுகளில் தான் இணைந்து தொழ வேண்டும். அவ்வாறு செய்ய ததஜ தங்கள் தொண்டர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுமா?

அப்படி வெளியிடாது எனில், தமிழகத்தில் மட்டும் ஏனிந்த இரட்டை நிலைபாடு? அதுவும் அல்லாஹ்வை வணங்கும் தொழுகை விஷயத்தில்?//

....................................

TMB குழுமத்தில் வைக்கப் படும் சிலர் சார்ந்த விமர்சனங்களுக்கு உடனே மறுப்பை வெளியிடும் சகோ பீ ஜே அவர்களுக்கு த த ஜ சகோதரர்கள் இந்த மடலையும் அனுப்பி வைத்து அதற்கான விளக்கத்தை அவருடைய இணைய தளத்திலோ அல்லது இந்த குழுமத்திலோ வெளியிட்டால் நல்லது.

- மேலை ஷாஹுல்

0 comments:

Post a Comment