Thursday, August 26, 2010

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா! பகீர் தகவல்!


வாஷிங்டன்:அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக் வெப்சைட். இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் விக்கிலீக் வெப்சைட்டின் சர்வர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு பெறுவதற்காக விக்கிலீக் தலைவர் ஜூலியன் அசாஞ்ச் ஸ்வீடனில் தங்கியிருந்தார். அவருக்கு திடீரென பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது உத்தரவு பிறப்பித்து மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இருக்கலாம் என ஜூலியன் அசாஞ்ச் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்றை, விக்கிலீக் தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைக்கு, அமெரிக்க மக்களை தீவிரவாதிகள் தேர்வு செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஹெட்லி போன்ற அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், இந்தியாவில் பல இடங்களில் உளவு பார்த்து மும்பை தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டியது அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்தது.

வெளிநாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அமெரிக்காவில்தான் சதிதிட்டம் தீட்டப்படுகிறதா, என்றும் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்காவை, வெளிநாட்டினர் பார்க்கின்றனரா? என்ற தலைப்பில் சி.ஐ.ஏ. தயாரித்த ஆய்வறிக்கை யை விக்கிலீக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், உளவுத்துறை தயாரித்த அறிக்கையை எப்படியோ பெற்று வீக்கிலீக் வெளியிட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment