Friday, August 20, 2010

பஞ்ச்பட்டிக்காட்டான்!


பஞ்ச்பட்டிக்காட்டான்
[just 4 jokes]
செய்தி; 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட்டிற்கு ரூ. 1 கட்டணம் உயர்வு.
பட்டிக்காட்டான்; அப்ப இனிமே கரண்டு பில்ல தொட்டாக்கூட 'ஷாக்' அடிக்கும் போலத் தெரியுதே!

செய்தி; அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகள் செல்சியாவுக்கு ரூ. 19 கொடி செலவில் ஆடம்பரத்திருமணம் நடந்தேறியது.
பட்டிக்காட்டான்; இவ்வளவு தானாக்கும்! இதெல்லாம் வளர்ப்புமகன்[!] கல்யாணத்துக்கு கிட்ட நிக்கமுடியுமா..?

தமிழக காங் தலைவர் தங்கபா
; கூட்டணி பற்றி யாரும் பகிரங்கமாக பேசக்கூடாது. அதுபற்றி தேசியத் தலைவர் சோனியாகாந்தி முடிவு செய்வார். அவர் சார்பாக நான் மட்டுமே கூட்டணி பற்றி அறிவிக்கமுடியும்.
பட்டிக்காட்டான்; தமிழக காங்கிரசுக்கு நீங்க மட்டும்தான் தலைவர்னு காட்ட நீங்க படுற கஷ்டத்த பாத்தா பரிதாபமாத்தான் இருக்கு; என்ன செய்ய..? கோஷ்டியும்- தமிழக காங்கிரசும் ஒட்டிப்பிறந்த ரெட்டை பிறவிகளாச்சே!

செய்தி; விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பு நடந்தது.
பட்டிக்காட்டான்; தொகுதிப்பக்கம் போனது மாதியும் ஆச்சு; வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு; பரவாயில்லையே! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டாரே விஜயகாந்த்!
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்; காமாராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால் மட்டுமே தரமுடியும்.
பட்டிக்காட்டான் ; வாஸ்தவமான பேச்சுதான்! அப்பிடியே எந்த 'கோஷ்டி'யால தரமுடியும்னு சொல்லீட்டிங்கன்னா புண்ணியமா போகும்!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்; எம்.ஜி.ஆர். மறைந்தபோது 36 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்த அதிமுகவை, இன்று ஒருகோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா.
பட்டிக்காட்டான்; 36 லட்சம் தொண்டர்களை வைத்து அசைக்கமுடியாத ஆளும்கட்சியாக எம்.ஜி.ஆர் வைத்திருந்த அதிமுகவை, எதிர்கட்சியாக மாற்றி வீட்டில் உட்காரவைத்த பெருமை புரட்சித்தலைவிக்கே சாரும் என்று அடுத்த கூட்டத்தில் பேசும்போது சேர்த்து சொன்னீங்கன்னா நல்லாருக்கும்!

பாஜகவின் மாநில துணைத்தலைவர் ஹெஜ். ராஜா; கூட்டடணி பற்றி இப்போது சிந்திக்கவில்லை.
பட்டிக்காட்டான்; ஆமாமா! நீங்க என்ன பன்னுவீக..? யாராவது கூப்பிட்டாத்தான சிந்திக்கமுடியும்..?

ஏகத்துவம் கட்டுரை; ஜமாஅத் நடவடிக்கைக்கு உள்ளானோர் இயக்கத்தை விட்டு வெளியே சென்றுவிடக்கூடாது. அப்படி சென்றவர்கள் இயக்கத்தை விட்டு மட்டுமல்ல, ஏகத்துவத்தை விட்டே வெளியே சென்றுவிடுகிறார்கள்.
பட்டிக்காட்டான்; ஏதேது! போற போக்கப் பாத்தா ஒருத்தர் தன்னை முஸ்லிம்னு சொல்லிக்கனும்னா எங்க உறுப்பினர் கார்ட வச்சுருக்கனும்னு சொன்னாலும் சொல்வாங்க போலத் தெரியுதே..?

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்; முஸ்லிம் சமூகத்தை ஜெயலலிதா ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதிமுக கூட்டணிக்குள் நாங்கள் இருக்கவேண்டும் என்பதால்தான் எங்களை அழைத்துப் பேசுகிறார். இதுவே கூட்டணிக்கான உறுதிதான்.
பட்டிக்காட்டான்; 'நான் ஒரு தவறு செய்துவிட்டேன்; அந்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு; இனி ஒரு போதும் மதவாத பீஜெபியோடு, அதிமுக உறவு வைத்துக் கொள்ளாது' என்று நீங்க நடத்துன வாழ்வுரிமை மாநாட்டுல முழங்கிய ஜெயலலிதா, பின்பு ஏமாற்றியதை மறந்துட்டீகளாக்கும்! முஸ்லிம் சமூகத்தை ஜெயலலிதா ஏமாத்துறது ஒருபக்கம் இருக்கட்டும்; மொதல்ல ஒரு சீட்ட குடுத்து ஒங்கள ஏமாற்றாம பாத்துக்கங்க!

முதல்வர் கருணாநிதி; 50 ஆயிரம் கேபிள் இணைப்புகளுடன் அரசு கேபிள் அடக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எந்த ஒரு நிர்பந்தத்துக்காகவும் அரசு கேபிள் 'அடக்கமாகி' விடக் கூடாது என்பதுதான் அப்பாவி பொதுஜனத்தின் கவலையாக உள்ளது.
செய்தி; அரியானாவில் பணம் கேட்டு கடத்தப்பட்ட மகனை மீட்க ஒன்றரை வருடங்களாக போராடும் தாய்.
பட்டிக்காட்டான்; கடத்தப்பட்டது ஒரு நடிகரோ, அல்லது அரசியல் தலைவராகவோ இருந்திருந்தால் இந்நேரம் 'காட்டிற்குள்' இருந்தாலும் மீட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். என்ன செய்ய அச்சிறுவன் சமான்யனாச்சே!
-முகவைஅப்பாஸ்.

0 comments:

Post a Comment