Friday, August 27, 2010

'பஞ்ச் பட்டிக்காட்டான்' 2


உணர்வு செய்தி; கல்வி வேலைவாய்ப்புகளில் தமிழக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஜெயலலிதா தான் முதன்முதலில் கமிஷன் அமைத்தார்.
பட்டிக்காட்டான்; மொதல்லயே இருந்த கமிஷனை, பலமுறை புதுப்பிக்கப்பட்டு காலாவதியான கமிஷனைத் தானே, தன் பங்குக்கு ஜெயலலிதாவும் புதுப்பித்தார். உண்மை நிலை இப்படியிருக்க, ஜெயலலிதா தான் முதன் முதலில் கமிஷன் அமைத்தார் என்று சொல்வது எங்கேயோ இடிக்கிறதே!

உணர்வு செய்தி; திருச்சி 28 வது வார்டு மமக வேட்பாளர், அப்பகுதி மகளிடம் கையெடுத்து கும்பிட்டு ஓட்டுக் கேட்டது முகம் சுழிக்க வைத்தது.
பட்டிக்காட்டான்; ஒரு முஸ்லிம் வாக்கு கேட்கும்போது கையெடுத்து கும்பிடுவது முகம் சுழிக்க வைக்கும் செயல் என்றால், அத்தகைய செயலை செய்யத் தூண்டும் அரசியலில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்பது உங்களுக்கே முரணாக தெரியவில்லையா..?

பத்திரிக்கை செய்தி; ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
பட்டிக்காட்டான்; அங்கதான் ஊசியின்றி, மருந்தின்றி, ஆபரேஷன் இன்றி, நோய் நீக்கும் 'பெரிய டாக்டர்' இருக்கிறாரே என்று அரசு நினைத்திருக்கும்..?

பாஜக மூத்த தலைவர் வெங்கையாநாயுடு; ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை. ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியினரை எதிரிகள் போல் அணுகுகின்றனர்.
பட்டிக்காட்டான்; அவர்களாவது கட்சிக்காரர்களுக்கு மத்தியில்தான் அப்படி அணுகுகிறார்கள். ஆனால் நீங்களோ, பிறப்பின் அடிப்படையில் ஒரு சாராரை இழிவாக்கி, கோயிலுக்குள் விடமாட்டோம்னு அடம்புடிக்கிறீங்களே! உங்களுக்கு அவங்க எவ்வளவோ பரவாயில்லைதானே!

குஜராத் முதல்வர் மோடி; சத்தியம் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி, அநீதிக்கு எதிராக அனைத்து வகையிலும் போராடுவோம்.
பட்டிக்காட்டான்; இப்புடி சொல்றதை விட 'போலி என்கவுண்டர்' எனும் ஆயுதத்தை பயன்படுத்தி, எதிரிகளை வீழ்த்துவதன் மூலம் நீதியை[!] நிலைநாட்டுவோம்னு சொல்லியிருந்தா நல்லாருக்கும். சத்தியத்திற்கு வந்த சோதனை!

அதிமுக கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.சந்திரன்; எங்களை அவதூறாக பேசும்போதெல்லாம், நாங்களும் பதிலுக்கு போட்டிக் கூட்டம் போட்டு அவர்களை அவதூறாக பேசுவோம்.
பட்டிக்காட்டான்; 'அவதூருக்குப் பதில் அவதூறு' சபாஷ்! சரியான போட்டி!! உங்கள சொல்லிக் குத்தமில்ல. தப்பெல்லாம் அப்பாவி வாக்கு வங்கிகளான எங்க மேலதான். தொடரட்டும் உங்களின் அரும்பணி[!]

தமிழ் மாநில முஸ்லிம்லீக் தலைவர் ஷேக்தாவூத்; இந்தியாவில் பலபகுதிகளில் கலவரம், போராட்டம்,ரயில் மறியல், குண்டுவெடிப்பு, நக்சலைட் ஆதிக்கம், ஏழை மக்கள் நிலங்களில் அரசு ஆக்கிரமிப்பு, அதனால் போராட்டம் இவை அனைத்தும் தீர ஒரே வழி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுதான்.
பட்டிக்காட்டான்; 'இதத்தான் மொட்டத் தலைக்கும் மொளங்காலுக்கும் முடிச்சுப்' போடுவதாக சொல்வார்கள். நீங்கள் சொன்னவைகளுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் என்ன சம்மந்தம்..? சரி! இப்பதான் நீங்க சொன்னமாதிரி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கப் போகுதுல்ல. அப்ப இனிமே நாட்டுல எந்த அசம்பாவிதமும் நடக்காது அப்படித்தானே!

பத்திரிக்கை செய்தி; ராமநாதபுரத்தில் 'டாஸ்மாக்' மதுபான பாட்டிலில் மீன் இறைச்சி மிதந்தது.
பட்டிக்காட்டான்; பரவாயில்லையே! 'குடிமகன்'கள் 'சைடிஸ்க்கு' கஷ்டப்படக் கூடாதுன்னு பாட்டில்லேயே 'அட்டாச்'! இனி குடிமகன்களுக்கு 'சைடிஸ்ட்' பற்றிய கவலை இல்லை.

உடுமலை எம்.எல்.ஏ. சண்முகவேலு பேச்சு; நாங்கள் அரசியல்வாதிகள்; எங்களுக்கு வெட்கம், மானம் எதுவும் கிடையாது. அவற்றை விட்டுட்டுத்தான் அரசியல் செய்கிறோம்.
பட்டிக்காட்டான்; இவ்வளவு வெளிப்படையா பேசுறீங்களே! நீங்கதான் நெசமாலுமே புரட்சி அரசியல்வாதி.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ்; தற்போது எம்.பி.க்களுக்கு தரப்படும் ஊதியம் அரசின் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தைவிட மிகக்குறைவாக உள்ளது. அரசு ஊழியர்கள் எட்டுமணிநேரம் உழைக்கிறார்கள் . நாங்கள் இருபத்தி நான்கு மணிநேரம் சேவை செய்கிறோம்.
பட்டிக்காட்டான்; எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தவுடன் வாங்கிய சொத்து மதிப்பையும், வாங்கிய சம்பளத்தையும் 'கம்பேர்' பன்னுனா பெரும்பாலான எம்.பி.க்களின் கணக்கு, 'டேலி'யே ஆகாதே! இதில சம்பள உயர்வு வேற வேணுமாக்கும்..?


0 comments:

Post a Comment