Tuesday, November 30, 2010

தூக்கம் ஒரு கடமை !


தூக்கம் ஒரு கடமை

(அல்லாஹ்) அவன் தான் உங்க ளுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கி இருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:47, 78:9,10)

தூக்கம்
உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் வழங்கிய அருட் கொடைக ளில் ஒன்று ஆகும். உயிர் வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர், உணவு என்ற வரிசையில் தூக்கம் என்பதையும் சேர்த்துச் சொன்னால் அது மிகையாகாது என்று கூறும் அளவுக்கு மனித வாழ்வில் ""தூக்கம் என்பது மிக அத்தியாவசிய மான ஒன்றாக விளங்குகிறது.

அலட்சியமும் - அசட்டையும்
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதாகவே தெரியவல்லை. பலருக்கு தான் எத்தனை மணிக்குத் தூங்குகிறோம், எத்தனை மணிக்கு விழிக்கிறோம் என்பது கூடத் தெரியாது. உணவு விஷயத்தில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ளா விட்டால் ஏற்படும் பாதிப்பை விட, தூங்கும் விஷயத்தில் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ளா விட்டால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்பதைக் கூட பலரும் விளங்கிக் கொள்ளவே இல்லை. அந்த அளவு தூக்கத்தின் விஷயத்தில் அலட்சியமும், அசட்டையும் நிலவுவதைக் காண்கிறோம்.

இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்
நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், வீணான விளையாட்டுக்களுக்காகவும், வேடிக்கையான விஷயங்களுக்காகவும் (டிவியில் கிரிக்கெட், சினிமா) வெட்டி அரட்டைகளுக்காகவும் இரவில் கண் விழித்து பகலில் தூங்கும் பழக்கத்தை நடைமுறையாகக் கொண்டு உள்ளனர். இன்னும் சிலரோ, பொருளாதாரத்தை திரட்டுவதற்காக இரவில் உழைத்து பகலில் தூங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

குர்ஆன் ஹதீஸýக்கு முரண்
தூங்கும் விஷயத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலட்சியமாகவும், அசட்டையாக இருப்பதும், இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் என்று வாழ்க்கையை முறையை அமைத்துக் கொள்வதும் குர்ஆனுக்கும் -ஹதீஸýக்கும் மாற்றமான செயலாகும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

(அல்லாஹ்) அவன் தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதல் ஆகவும் ஆக்கியுள்ளான். இன்னும் அவனே பகலை உழைப்பதற்கு ஏற்றவாறு ஆக்கி உள்ளான்.
(அல்குர்ஆன் 25:47)


அல்லாஹ்தான் நீங்கள் இறைப்பாறு வதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளைப் பொழிகின்றான்.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ்வே நீர் எல்லா நாட்களும் நோன்பு வைப்பதாகவும், இரவு முழுவதும் தொழுவதாகவும் உன்னைப் பற்றிக் கூறப்படுகிறதே (உண்மையா?) என்று கேட்டார்கள். அதற்கு ஆம் (உண்மைதான்) என்று பதில் அளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ""அவ்வாறு செய்யாதே! (சில நாட்கள்) நோன்பு வை. (சில நாட்கள்) நோன்பை விட்டு விடு! (சிறிது நேரம்) தொழு, தூங்கு. ஏனெனில் நீ உனது உடலுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீ உனது கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீ உனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ

உழைப்பதற்காகவும், பார்ப்பதற்காக வும் ஏற்ற வகையில் பகலைப் படைத்தி ருப்பதாகவும், உறங்குவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் ஏற்ற வகையில் இரவைப் படைத்திருப்பதாகவும் அல்ல ôஹ் குர்ஆனில் கூறுவதைப் பார்க்கி றோம்.

இரவு முழுவதும் வணக்கத்திற்காக விழிப்பது கூட தவறு என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுவதையும், கண்களுக்கு செய்யும் கடமையை தவற விடக் கூடாது என்பதையும் நபிமொழிகள் மூலமாக அறிந்து கொள்கிறோம்.

மருத்துவ உலகம்
இரவு நேர உழைப்பு என்பது மிகவும் கடினமானது. பகலில் எட்டு மணி நேரம் வேலை செய்வதால் ஏற்படும் சக்தி இழப்பும், இரவில் ஒன்றரை மணி நேரம் வேலை செய்வதில் ஏற்படும் சக்தி இழப்பும் சமமாக உள்ளது என்று கூறுகிறார்கள். குர்ஆனின் கூற்றையும், ஹதீஸ்களின் கூற்றையும் உண்மைப்படுத்துகிறார்கள்.

தூக்கமும், துக்கமும்
தூக்கம் சரியாக இல்லை என்றால், வாழ்வு துக்கமாக மாறிவிடுவதைக் காண்கிறோம். நோய் வராமல் இருப்பதற் கும் தூக்கம் அவசியம். வந்த நோய் தீர்வதற்கும் தூக்கம் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். தூக்கம் இல்லை என்றால் அஜீரணக் கோளாறில் ஆரம்பித்து, மன உளைச்சலில் தொடர்ந்து, தீராத வியாதிகள் வருவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடுகிறது.
அதே போல நோய் வந்தது என்றால் மருந்து உட்கொள்கிறோம். மருந்தினால் உரிய பலன் கிடைக்க வேண்டும் என்றாலும் தூக்கம் அவசியமாகும்.

தூக்கத்தினால் அமைதி
அல்லாஹ் கூறுகிறான்:
(பத்ரு போர்க் களத்துக்கு முதல் நாள்) நீங்கள் அமைதி பெறுவதற்காக அவன் சிறிய தூக்கத்தை உங்களைப் பொதிந்து கொள்ளுமாறு செய்தான். இன்னும் அதன் மூலம் உங்களை தூய்மைப்படுத்தினான்.
(அல்குர்ஆன் 8:11)


(உஹத் போருக்கு) பிறகு, அந்த துக்கத்துக்குப் பிறகு அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக சிறு தூக்கத்தை இறக்கி வைத்தான்.
(அல்குர்ஆன் 3:154)


இந்த இரு வசனங்களையும் ஊன்றிக் கவனியுங்கள்
பத்ருப் போரில் பிரச்சினையை எதிர் கொள்வதற்கு முன்பு தூக்கத்தைத் தந்து உள்ளத்தை அமைதிப்படுத்துகிறான். உஹதுப் போர்க் களத்தில் பிரச்சினை முடிந்த பிறகு தூக்கத்தைக் கொடுத்து அமைதியை ஏற்படுத்துகிறான்.

மொத்தத்தில்...
ஆரோக்கியம், அமைதி, நிவாரணம், இளைப்பாறுதல் அனைத்துக்கும் தேவையானது தூக்கம்தான். சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம் என எண்ணுகிறார்கள். அது ஒரு வகையில் போதையைப் போலத்தான். சில நாள் ஒரு மாத்திரை போட்டால் தூக்கம் வரும் பிறகு இரண்டு, மூன்று என்று மாறி தூக்கம் வருவது நின்றுவிடும். அப்படியானால் இதற்கு தீர்வு என்ன?

தூக்கமின்மைக்கான காரணங்கள்
1. மனக் குழப்பம், 2. உடல் உபாதை, 3. பலவீனம்

1. பகல் முழுவதும் அலுவல் காரணமாக எதைப் பற்றியும் மனதை அலட்டிக் கொள்ளாதவர்கள், படுக்கையில் படுத்ததும் அன்றைய தினம் நடந்து முடிந்ததைப் பற்றி யோசிப்பார்கள். விளைவு ஒன்றுக் கொன்று மாறுபட்ட குழப்பங்களை ஷைத்தான் ஏற்படுத்தி தூக்கம் வராமல் செய்து விடுவான்.

2. கடினமாக உழைப்பை மேற் கொண்டு விட்டு படுக்கையில் படுக்கும் போது, அசதி இருந்தால் தூக்கம் வந்து விடும். அதே நேரத்தில் உடம்பு முழுவதும் கடுமையான வலி இருந்தால் ஜுரம் அடிப்பது போன்ற நிலை ஏற்பட்டு, தூக் கத்தை இழக்க வேண்டிய நிலை உண்டாகிறது.

3. சிலர் படுக்கையில் படுக்கும்போது, மறுநாள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிப்பார்கள். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலை கடினமானது என்று, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் எண்ணும் போதும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டி நிலை ஏற்படும். பெரும்பாலானவர்களுக்கு படுக்கையில் நேரத்தோடு படுத்த பிறகும் தூக்கம் வராததற்கு இது காரணமாக அமைந்துவிடுகிறது.

இஸ்லாம் கூறும் தீர்வு
1. ஃபித்ரா ஜகாத் பொருட்கள் வசூலிக்கப்பட்டு பெருங் குவியலாக மஸ்ஜிதுன் நபவியில் குவிக்கப்பட்டு இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அந்தப் பொருட்களை பாதுகாக்க அபு ஹுரைரா (ரலி) அவர்களை நியமித்தார்கள். ஒரு நாள் இரவு திருடன் வந்தான், அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பிடித்து விட்டார்கள். உடனே அந்தத் திருடன் தான் ஏழை என்றும், தன்னை மன்னித்து விட்டு விடும்படியும், இனி வர மாட்டேன் என்றும் கூறினான். அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அவனை விட்டு விட்டார்கள்.

நடந்த விஷயங்களை நபி (ஸல்) அவர்களிடம் அபுஹுரைரா (ரலி) கூறினார். அப்போது நபிகளால் அவன் நாளை மீண்டும் வருவான் விட்டுவிடாதே என்று கூறினார்கள்.
நபிகளார் கூறியது போலவே மறுநாளும் அந்தத் திருடன் வந்தான். அபுஹுரைரா (ரலி) அவனைப் பிடித்து தூணில் கட்டினார்கள். அப்போது அந்தத் திருடன் ""நான் உமக்கு ஒரு விஷயத்தைக் கற்றுத் தருகிறேன். அதனை (இரவில்)ஓதினால், அதிகாலை வரை ஷைத்தானின் தீண்டுதலை விட்டும் பாதுகாப்பு பெறுவீர் என்று கூறி, ""ஆயத்துல் குர்ஷி%%யை கற்றுக் கொடுத்தான். நடந்த விஷயங்களை நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ""அவன் சொன்னது உண்மையே. ஆனால் அவன் ஷைத்தான்%% என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி

2. நபி (ஸல்) அவர்கள் தூங்கச் செல்லும்போது, ""குல்ஹுவல்லாஹு அஹத்%%, ""குல்அவூது பிரப்பில் ஃபலக்%%, ""குல்அவூது பிரப்பின்னாஸ்%% ஆகிய மூன்று அத்தியாயங்களை ஓதுவார்கள். பின்னர் (கையில் ஊதி) தம் உடலில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தடவிக் கொள்வார்கள். தமது தலையில் ஆரம்பித்து முகம் முன் உடற்பகுதி ஆகியவற்றில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது, குர்ஆனின் 112,113,113 அத்தியாங்களை ஓதி (பரகத்துக்காக) நபிகளாரின் கைகளில் ஊதி அவர்கள் மீது தடவி விடுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி

3. நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் வீட்டு வேலைகளின் காரணமாக கஷ்டப்பட்டார்கள். அப்போது கணவர் அலி (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று வேலைக்காரர் ஒருவரை கேட்டு வாங்கி வா என்றார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் நபிகளாரிடம் வேலை செய்வதற்காக பணியாளை கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்டுவிட்டு, நீங்கள் இருவரும் தூங்கும்போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்து லில்லாஹ் 33, தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிக் கொள்ளுங்கள். இது பணியாளர்களை விட உங்கள் இருவருக்கும் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இந்த மூன்று வகையான ஹதீஸ்களும், தூக்கத்தை சம்பந்தப்படுத்தியே சொல்லப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நபிகளாரைப் பின்பற்றுவோம்
மனம் பல்வேறு வகையான சிந்தனையில் குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் படுக்கைக்குச் சென்றால் அல்குர்ஆன் 2:255 வசனமாகிய ""ஆயத்துல் குர்ஷி%%யை ஓதிவிட்டு தூங்கச் செல்வோம்.

உடல் கடுமையான வலியால் அவஸ்தைப்படும் நிலையில் படுக்கைக்குச் சென்றால் அல்குர்ஆன் 112,113,114 ஆகிய அத்தியாயங்களை ஓதி உடல் முழுவதும் தடவி விட்டு தூங்கச் செல்வோம்.
பணியாள் துணை இல்லாத, கையேறு நிலையில் படுக்கைக்குச் சென்றால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிவிட்டு தூங்கச் செல்வோம்.

படுக்கையில் படுத்ததும்...
நபி (ஸல்) அவர்கள் (இரவில்) படுக்கும்போது, வலது கரத்தை கன்னத்தின் கீழே வைத்து, வலப்புறம் ஒருக்களித்துப் படுப்பார்கள். அப்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா (இறைவா உனது பெயரால் மரணிக்கிறேன். மேலும் உயிர் பெறுகிறேன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

அறிந்து கொள்ளுங்கள்:
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் (மட்டுமே) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
(அல்குர்ஆன் 13:28)

நன்றி -தவ்ஹீத் மாத இதழ்
சந்தா தொடர்புக்கு: 9444822331

0 comments:

Post a Comment