Monday, November 15, 2010

இப்ராஹீம் காசிமி விசயத்தில் பீஜேயின் பித்தலாட்டம்!

First Alphabet



ததஜவில் இருந்து மவ்லவி இப்ராஹீம் காசிமி அவர்கள் விலகிய செய்தியை, 'முன்னாள் TNTJ மாநிலப் பேச்சாளர் இபுராஹீம் காஸிமி ததஜவிலிருந்து விலகினார்!

என்ற தலைப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்து கள்ள வெப்சைட்டில் செய்தி வெளியிட்டுள்ள பீஜே,

''இப்ராஹீம் காசிமி அவர்கள் மாநிலப் பேச்சாளர் கிடையாது. மாநிலப் பேச்சாளர் என்று பலரும் குறிப்பிட்டு வருவதால் மாநிலப் பேச்சாளர் என்ற தகுதியை மேலாண்மைக் குழுவும் மாநில நிர்வாகக் குழுவும் இணைந்து அங்கீகாரம் அளித்தால் தான் ஒருவர் மாநில பேச்சாளர் தகுதி பெறுவார். அத்தகைய தகுதி இப்ராஹீம் காசிமிக்கு வழங்கப்படவில்லை. எனவே மாநிலப் பேச்சாளர் என்று அவர் குறிப்பிட்டால் அது தவறாகும். என்று கூறியுள்ளார்.

மவ்லவி இப்ராஹீம் காசிமியை மாநிலப் பேச்சாளர் என்று குறிப்பிட்டால் அது தவறாகும் என்று சொல்லும் பீஜேயின் கருத்துக்கு எதிராக, மவ்லவி இப்ராஹீம் காசிமி அவர்களை மாநிலப் பேச்சாளர் என்று அடையாளம் காட்டுகிறது ததஜவின் அதிகாரப்பூர்வ இணையதளம். இதோ;


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் 20.02.10 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மாநிலத் தலைவர் சகோ:பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். மாநில பேச்சாளர் சகோ:இப்ராஹீம் காசிமி அவர்கள் ஈமானும் நல்லறமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

மவ்லவி இப்ராஹீம் காசிமியை மாநிலப் பேச்சாளர் என்று அடையாளம் காட்டி பீஜே பொய்யர் என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது ததஜ வலைத்தளம். எங்கே போய் முட்டிக்கொள்ளப்போகிறார் பீஜே?

அடுத்து, அவர் நடத்தும் ஹஜ் சர்வீஸ் சம்மந்தமான புகார்கள் இனிமேல் நம் ஜமாஅத்துக்கு வராது.என்று கூறி மவ்லவி இப்ராஹீம் காசிமியை ஹஜ் மோசடியாளராக இன்று காட்டும் பீஜே, அவர் உண்மையில் மோசடி செய்திருந்தால் அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வெளியிட தயாரா?

மேலும் காசிமி ததஜவில் இருந்து விலகல் என்றுதான் செய்தி வெளியிட்டோம். இதஜ வில் சேர்ந்து விட்டார் என்று அல்ல. ஆனால் இதஜவில் காசிமி சேர்ந்து விட்டதாகவே நினைத்து பீஜே புலம்பியுள்ளதை பாருங்கள்;

சட்ட விரோதமான இயக்கத்தில் சேர்வது அவர்களுக்குப் பொருத்தமானது தான். ஆதாயம் என்று பார்த்தால் அவர்கள் போக வேண்டிய இடத்துக்குத் தான் போய் உள்ளனர். என்று அங்ககலாய்க்கிறார்.

பாவம்! கூடாரம் காலியானால்? அவர்தான் என்ன செய்வார்? புலம்புவதை தவிர!

0 comments:

Post a Comment