Thursday, November 11, 2010

சோனியாவின் பேச்சு - முஸ்லிம்களை திருப்திபடுத்துமா?



டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஒரு நாள் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ""அயோத்தி நிலம் தொடர்பாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாபர் மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்தவில்லை. எனவே மசூதியை இடித்தவர்களை தண்டித்தே ஆக வேண்டும்'' எனத் தெரிவித்து, முஸ்லிம்களுக்கு பாபரி மஸ்ஜித் தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் அவருக்கே தெரியும் முஸ்லிம்கள் அவரது பேச்சில் திருப்தி அடைய மாட்டார்கள் என்று!
""பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது ஒரு அவமானகரமான குற்றவியல் நடவடிக்கை. இதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது'' என்றும் சராசரி அரசியல்வாதியை விட பக்காவாகப் பேசியிருக்கிறார் சோனியா.

அயோத்தி அத்தியாயத்தின் ஆதி முதல் அந்தம் வரை காங்கிரஸ் துரோகம் மட்டுமே இழைத்து வந்தது என்ற வரலாற்றுப் பதிவை சோனியாவின் பேச்சு மாற்றி விடாது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால் போன்ற இந்துத்துவா சக்திகள்தான் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குக் காரணம் என்று நீதிபதி லிபரான் தெளிவாக அறிக்கை கொடுத்த பின்பும், மதச்சார்பற்ற சக்திகள் இந்த அறிக்கையை நாடாளுமன்ற விவாதத்திற்கு வைக்க வேண்டும் எனக் கத்தாத குறையாக சொன்ன பின்பும் அமைதி காத்தது சோனியா தலைமைப் பொறுப்பு வகிக்கும் காங்கிரஸ் கட்சி.

பாபரி மசூதியை இடித்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறதென்றால், குற்றவாளிகள் இவர்கள்தான் என்று தெரிந்த பின்பும் அவர்களை சுதந்திரமாக உலக விட்டிருப்பதும் இதே காங்கிரஸ் கட்சிதானே!

அணுசக்தி ஒப்பந்தம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழல் போன்றவற்றில் சர்ச்சைகளையும், விவாதத்தையும் கிளப்பி விடக் கூடாது என்பதற்காக அத்வானி உள்ளிட்ட பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுடன் ரகசிய ஒப்பந்தங்களைப் போட்டு சரிகட் டும் காங்கிரஸ் கட்சி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதை எவரேனும் நம்ப முடியுமா?

முஸ்லிம்களின் வாக்குகளை இழந்து விடக் கூடாது என்கிற ஆதாய அரசியலில் காங்கிரûஸ யாரும் விஞ்ச முடியாது என்பதை தமது பேச்சின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
""பாபரி மஸ்ஜித் இடிப்பை உயர் நீதிமன்றம் நியாயப்படுத்த வில்லை'' என்று அலகாபாத் உயர்நீதிமன்றத் திற்கு வக்காலத்து வாங்குகிறார் சோனியா. பாபரி மஸ்ஜித்தை இடித் தவர்கள் குற்றவாளிகள் என்றோ, இடிப்பை நியாயப்படுத்தவில்லை என்றோ அலகாபாத் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப் பிட்டிருக்கிறதா?

உண்மையைப் சொல்லப்போ னால் பாபரி மஸ்ஜித் இடிப்பைக் குறித்து அலகாபாத் நீதிமன்றம் எந்தக் கருத்தையும் குறிப்பிட்டுக் கூறாதது அச்செயலை நியாயப்படுத் துவதற்குச் சமம் என்றுதான் புரிந்து கொள்ள முகாந்திரம் இருக்கிறது.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் விட்டொழிக்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித்தை இடித்தவர் கள் மீது நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும். வெறும் வாய்ப் பந்தல் போடாமல் செயல்படுத்திக் காட்டிவிட்டு, இது போன்ற பேச்சுக்களை பேச காங்கிரஸ் முன் வந்தால் அதனைப் பாராட்டலாம்.

முஸ்லிம்களை திருப்படுத்த எண்ணி ஆர்வக் கோளாறில் பேசும் பேச்சுக்கள் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் மீது இன்னம் வெறுப்பை வளர்க்கவே உதவும் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஃபைஸ்
========

0 comments:

Post a Comment