Sunday, November 14, 2010

புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள்

புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள்
ஆதத்தின் சந்ததிகளை கூறு போட்டுச் சுரண்டுவதற்கென்றே உள்ளவர்கள் புரோகிதர்கள். அற்ப உலக ஆதாரங்களுக்காக மக்களை மதவெறியைக் கொண்டு தூண்டி, ஒரு சாரார் இன்னொரு சாராருடன் காலங்காலமாக சண்டையிட வைத்து அதில் குளிர் காய்பவர்கள் புரோகிதர்கள். இதற்கு பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வெளியான சங்கராச்சாரியாரின் அறிக்கை போதுமான சான்றாகும்.

மக்களிடையே பல மதங்களையும், அந்த மதங்களில் பல ஜாதிகளையும், பிரிவுகளையும் உண்டாக்கி மகிழ்பவர்கள் புரோகிதர்கள், சுருங்கச் சொன்னால் இறைவனின் பெயரால் மோட்சத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லி நரகில் தள்ளி அதற்குக் கிரமமாக உலக ஆதாயம் அடைபவரின் புரோகிதர்கள், ஆனால் பெரும் துரதிஷ்டம் கசாப்புக் கடைகாரர்களுக்குப் பின்னாலே செல்லும் ஆடுகளைப் போல் இந்தப் புரோகிதர்களுக்குப் பின்னால் செல்லும் மக்கள் கூட்டம் அதிகம் தான். ஆயினும் 1400 வருடங்களுக்கு முன்பாகவே அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் இந்த புரோகிதத்தின் வசீகர வலை கிழித்தெறியப்பட்டது. மக்கள் இடைத்தரகர்களில்லாமல்-புரோகிதர்களில்லாமல் இறைவனை நேரடியாக நெருக்கும் சாதாரண நிலை எளிதாக்கப்பட்டது.
இது குறித்து “டாக்டர் ஜூலியஸ் ஜெர்மான்ஸ்” என்ற அறிஞர் இவ்வாறு கூறுகிறார்.

“முஹம்மது(ஸல்) அவர்கள் புரோகிதத்தின் வசீகர வலையை 1400 ஆண்டுகளுக்க முன்பே கிழிந்தெறித்துவிட்டார். அல்குர்ஆனின் ஞானபோதனைகள் மூலமே ஒவ்வொருவரும் இறைவனுடன் நேரடித் தொடர்பு கொள்ள உரிமை ஏற்பட்டுவிட்டது. இதன் மீது எந்தப் புரோகிதக் குழுவினரும் எப்படிப்பட்ட தடை உத்திரவையும் பிரயோகிக்க வழி இல்லாமல் போய்விட்டது” என்று டாக்டர் தெளிவாகக் கூறியுள்ளார்.

இப்படித் தெள்ளத் தெளிவாக அறிவிக்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்திலும் எப்படியோ இந்தப் புரோகிதர்கள் புகுந்து கொண்டு, இஸ்லாம் மார்க்கத்தையும் மதமாக்கி அதிலும் பல பிரிவுகளை உண்டாக்கி முஸ்லிம் சமுதாயத்தைச் சிதறடித்துவிட்டார்கள். முஸ்லிம் சமுதாயம் அதனால் அதன் உன்னத ஸ்தானத்திலிருந்து அடிபாதாளத்திற்குத் தள்ளப்படடுவிட்டது. உலக முழுவதும் முஸ்லிம் சமுதாயம் பலவீனப்பட்டு மாற்று மதத்தினரால் நசுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும், அவர்களது நியாயமான உரிமைகள் பறிக்கப்பட்டும் வருவதைப் பார்க்கிறோம்.

ஆதத்தின் சந்ததிகளின் எல்லா சீரழிவுகளுக்கு இந்தப் புரோகிதர்களே முழு முதல் காரணம் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியவுடன், அது குறித்து அன்று நம்முடன் நெருங்கிய தொடர்புடனிருந்த தப்லீக் மெளலவிகளோடு விவாதித்தோம். கடித மூலமும் தொடர்பு கொண்டோம். அவர்களும் புரோகிதர்கள் தானே. எனவே நேர்மையான, எதார்த்தமான பதிலை அவர்களால் தர முடியவில்லை. உங்களுக்கு ஏன் இந்த வேலை? உங்கள் தொழிலைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருங்கள். எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்ற எச்சரிக்கையைத்தான் பெற முடிந்தது.

அந்த சமயத்தில் இந்த தவ்ஹீத் மவ்லவிகளில் யாரையும் நாம் அறிந்திருக்கவில்லை. பார்த்ததும் கூட இல்லை. அப்படிச் சிலர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவரும் நமக்கு எந்த வகையிலும் அறிமுகமில்லாதவர்களே.
இந்த நிலையில் 30.10.1984-ல் சென்ட் பால்ஸ் செயினேரியில், பல்சமய உரையாடற் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் “மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு எமக்கேற்பட்டது. அதில் தெள்ளத் தெளிவாக புரோகிதத்தின் கெடுதிகளையும், அதனால் ஏற்பட்டுள்ள மதப்பிரிவுகளையும், ஒவ்வொரு மதப்பிரிவிலும் ஏற்பட்டுள்ள உட்பிரிவுகளையும் விளக்கி மக்கள் அவை அனைத்தையும் விட்டு நீங்கி, மக்களின் ஒரே இறைவனாகிய அல்லாஹ் கொடுத்த வாழ்க்கை நெறியில் – இஸ்லாத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம்.

அந்த உரையை தனி நூலாக “பல்சமய சிந்தனை” என்ற பெயரில் அச்சிட்டு இலவசமாக விநியோகம் செய்தோம். அந்த நூலைப் பார்த்தே இந்த தவ்ஹீத் மவ்லவிகள் அனைவரும் நம்முடன் தொடர்பு கொண்டனர். தற்போதைய JAQH அமீர் S.கமாலுத்தீன் மதனி இந்த நூலைப் பார்த்துவிட்டு, தங்கள் ஊரான கோட்டார் மவ்லவிகள் நிறைந்த ஊர். எனவே அங்கு வந்து இதே பேச்சைப் பேச வேண்டும் என அழைப்பு விட்டார். அவர் அழைப்பை ஏற்று அங்கு சென்று மவ்லவிகளுக்கு மத்தியில் உரையாற்றினோம். அவர்கள் கிளப்பிய பல ஐயங்களுக்கு விடையளித்தோம். பின் அதேபோல் மவ்லவிகள் நிறைந்த கடையநல்லூரிலும் விடையளித்தோம். பின் அதேபோல் மவ்லவிகள் நிறைந்த கடையநல்லூரிலும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதிலும் கலந்து கொண்டு உரையாற்றினோம். அதில்தான் முதல் முதலாக P.J.யை சந்தித்ததாக ஞாபகம்.

இப்படி இந்த தவ்ஹீத் மவ்லவிகள்தான் வலிய வந்து நம்முடன் இணைந்தனர். அப்போது நாம் மிகவும் சந்தேகப்பட்டோம். புரோகிதத்தை ஒழிக்க அந்த புரோகித இனத்திலிருந்தே மவ்லவிகள் கிடைத்தது நமது வேலை எளிதாக்கும் என்று எண்ணினோம். பருத்தி புடவையாகக் காய்த்ததாகவே மகிழ்ந்தோம். அப்போது இவர்கள் கூட இருந்தே குழி பறிக்கத் திட்டமிட்டு வருகிறார்கள் என்று நாம் நினைக்கவில்லை. புரோகிதத்திற்கு ஆபத்து வந்தால், தங்கள் எதிரிகளோடும் நண்பர்களாகப் பழகி அவர்களின் நல்ல திட்டங்களைப் பாழாக்கும் திறமையும் இந்தப் புரோகிதர்களுக்கு இருக்கின்றது என்பதை நாமறிந்திருக்கவில்லை.
ஆனால் அவர்கள் நம்மோடு இணைந்ததிலிருந்து அவர்கள் செயல்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இவற்றை எல்லாம் நிரூபிக்கிறது. புரோகிதத்தை ஒழிக்க ஒப்புக் கொண்டு நம்மோடு வந்து இணைந்தவர்கள் புரோகிதத்தை ஒழிக்க நாம் அமைத்த கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் செய்துவிட்டனர். நாமமைத்த கல்வித் திட்டமாவது:

10 வயதிலிருந்து 15 வயதிற்குள் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 100 சிறார்களைத் தேர்ந்தெடுப்பது. நமது கல்வித் திட்டக்காலம் 10 ஆண்டுகள், மார்க்கத்தை – குர்ஆன், ஹதீஸை தினசரி காலை பஜ்ருக்குப்பின் சில குர்ஆன் வசனங்களை ஓதி, பொருள் விளங்கி, மனதிலிருத்திக் கொள்வது. அதேபோல் இஷாவுக்குப் பின் சில ஹதீஸ்களைப் படித்துப் பொருள் விளங்கி மனதிலிருத்திக் கொள்வது. இளமை வயதில் குர்ஆனயும், ஹதீஸையும் பொருள் விளக்கத்துடன் தொடர்ந்து 10 வருடங்கள் மீண்டும் மீண்டும் படித்து விளங்கி வருவதால் அவை அப்படியே அவர்களின் உள்ளங்களில் பதிந்து விடும். குர்ஆனிலும், ஹதீஸிலும் தெளிந்த அறிவைப் பெற்றுக் கொள்வார்கள்.

அடுத்து காலை 7 மணியிலிருந்து லுஹர் வரை பாடத்திட்டம் (Syllabus) நாமே அமைத்து அரபி, தாய்மொழி, உலகத் தொடர்பு மொழி (ஆங்கிலம் அல்லது உருது) ஆகிய மூன்று மொழிகளில் முழுத் திறமை பெற பயிற்சி கொடுக்கிறோம். அதல்லாமல் கணக்கு, விஞ்ஞானம், சரித்திரம், புவியியல் மற்றும் பொது அறிவு வளர்ச்சிக்குரிய வகையில் பயிற்சி கொடுக்கிறோம். 10 வருட அவகாசத்தில் இவை அனைத்திலும் தெளிந்த ஞானத்தை அவர்கள் பெறமுடியும் என்பதில் சந்தேகமிருக்க முடியாது.

லுஹர் தொழுகை – சாப்பாட்டுக்குப் பின் 100 மாணவர்களை அவர்களின் திறமை, ஆர்வ அடிப்படையில் பல பகுதியினர்களாகப் (Batch) பிரிக்கிறோம். வாட்ச், கார், லாரி, மோட்டார் சைக்கிள், ரேடியோ, T.V. வீடியோ ஃபேன், மோட்டோர் லேத், மோட்டார் வைண்டிங், டைலரிங், வெல்டிங், பிளம்பிக், வயரிங் போன்ற தொழில் நுட்பங்கலைகளில் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு செயல்முறையோடு பயிற்சி கொடுக்கிறோம்.

புரோகிதர்கள் வளர அடிப்படைக் காரணமே அவர்களின் இவ்வுலகத் தேவைகளை அவர்கள் மதத்தை வைத்து தேடிக்கொள்ளும் நிலை இருந்து வருவதேயாகும். இதுவும் திட்டமிட்ட செயலே. புரோகிதர்கள் தங்கள் வயிற்றுப் பிரச்சினையைத் தீர்க்க வேறு வழி தெரியாமலிருந்தால் தான் புரோகிதத்தில் நிலைத்திருப்பார்கள். வேறு வழி தெரிந்துவிட்டால் அவர்கள் மனச்சாட்சியே அவர்களைப் புரோகிதத்தை விட்டும் வெளியேறச் செய்துவிடும். எனவே எல்லா மதங்களிலும் புரோகிதக் கல்வியை ஓசிச்சோறு போட்டு புகட்டுவதை நாம் பார்க்கலாம்.

முஸ்லிம் புரோகிதர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. மவ்லவி படிப்பை ஓசிச் சோறு போட்டு, வளர்த்து வருகிறார்கள். அந்த மவ்லவிகள் சுயமாகத் தொழில் கற்று இவ்வுலகத் தேவைகளை அதைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்ளும் முறையை அவர்கள் அமைத்துக் கொடுப்பதில்லை. அப்படி அமைத்துக் கொடுத்தால் அவர்களின் புரோகிதத் தொழில் நசிந்துவிடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவே என்னதான் அவர்களுக்குத் தெளிவு கொடுத்தாலும், அவர்கள் அதற்கு இணங்கி வரமாட்டார்கள். இது தப்லீஃ மவ்லவிகளோடு பழகும் காலத்திலேயே நாம் நன்கு அறிந்து கொண்ட ஒரு விஷயம்.

ஆனால் நாம் அமைத்துக் கொடுத்த கல்வித் திட்டத்தில் அந்த நிலை இல்லை. தொழிற்கல்வியையும் இணைந்தே கற்பிக்கிறோம். அதல்லாமல் அந்த மாணவர்கள் ஆரம்ப ஓரிரு ஆண்டுகளே நம்மை எதிர்பார்த்திருப்பார்கள். அதன்பின் அவர்கள் பயிற்சி பெறும் தொழிலைக் கொண்டே அவர்களுக்கு வருமானம் வர வழிவகை செய்கிறோம். அவர்களது உழைப்புக்கு மாதம் நியாயமான ஊதியம் கொடுக்கிறோம். அந்த ஊதியத்திலிருந்து அவர்களது செலவு போக எஞ்சியதை சேமிக்கவும் வழிவகை செய்கிறோம் ஆரம்பத்திலிருந்தே உழைத்துச் சாப்பிடும் தன்மான உணர்வை ஊட்டி வருகிறோம். கையேந்திப் பிழைக்கும் இழிதொழிலை உணர வைக்கிறோம்.

ஆக 10 வயதில் வருபவர்கள் 20 வயதிலும், 15 வயதில் வருபவர்கள் 25 வயதிலும் நம்மைவிட்டு வெளியேறுவார்கள். திருமணம் முடிக்கும் நியாயமான வயது. இந்த வயதில் அவர்கள் மார்க்க அறிவையும், உலக அறிவையும் நிறைவாகப் பெற்றிருப்பார்கள். அரபி உட்பட மூன்று மொழிகளில் பண்டிதர்களாக இருப்பார்கள். குர்ஆன், ஹதீஸில் தெளிந்த ஞானமிருக்கும். அல்லாஹ்வுக்காக கூலி வாங்காமல் மார்க்க சேவை செய்யும் ஆர்வமும் பக்குவமும், துடிப்பும் இருக்கும். கையில் அழகிய ஒரு தொழில் இருக்கும் அதோடு கணிசமான பணமும் கையில் (சேமித்தது) இருக்கும். எவரையும் சார்ந்திராமல் சுயமாக உழைத்துச் சாப்பிடும் தன்நம்பிக்கை இருக்கும். விரும்பும் பெண்ணை கைக் கூலி வாங்காமல் மஹர் கொடுத்து திருமணம் முடித்து முழுச் சுதந்திரத்துடன் வாழ வழியேற்படும். அரசு உத்தியோகத்தைத் தேடி அலையும் அவலமும் இருக்காது. ஆங்காங்கே தொழில் செய்து வருவாய் ஈட்டிக்கொண்டு அங்கிருக்கும் பள்ளியில் அவர்கள் தொழப் போவதோடு, கூலி வாங்காமல் அல்லாஹ்வுக்காக இமாமத்தும் செய்வார்கள்.
இந்த வகைக்குரிய பொருளாதார வசதிக்காக பஜார் திட்டமும், அந்த மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியை அடுத்து ஒரு ஊரே அலையும் விதத்தில் மாதிரி மஹல்லா திட்டமும் கொடுத்து அவர்களும் ஒப்புக் கொண்டு, மாதிரி மஹல்லா இடத்திற்கும், பஜார் திட்ட இடத்திற்கும் அட்வான்சும் நஜாத் ஆரம்பிக்கும் போதே கொடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் நஜாத் மக்களிடையே இவ்வளவு குறுகிய அவகாசத்தில் இவ்வளவு வேகமாகப் பரவும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஏதோ மற்ற இயக்கங்களைப் போல் காமா சோமா என்று நடைபெறும். அதைக் கொண்டு நாம் பேரும் புகழும் பெறுவதோடு, பணமும் கிடைக்குமென்ற நினைத்தார்கள் போலும். நஜாத் 500லிருந்து 1000 காப்பிகள் ஓடுமென்று நான் நினைத்தேன். ஒரு சில மாதங்களிலேயே 5000 காப்பிகளை எட்டுமென்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று P.J. அவர் வாயால் நம்மிடம் அன்று சொன்னது இன்றும் நமக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது.

ஆக புரோகிதத்தை எதிர்த்து நமது முயற்சி மிக வேகமாக வளர்ந்து வந்தது அவர்களது அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. அதை முறியடிப்பது எப்படி என்று அவர்கள் சதித்திட்டங்கள் தீட்ட ஆரம்பித்து விட்டார்கள். அப்போதிலிருந்தே மக்களிடையே நம்மைப் பற்றி தப்புப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாததால், தனிப்பட்ட முறையில் நம்மைப்பற்றி, அவதூறுகள் கூறி மக்களுக்கு மத்தியில் தப்பான எண்ணத்தைத் தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கின்றனர். வெளியூர்களுக்கு இவர்களைப் பிரசாரத்திற்கு அனுப்பியது இவர்களுக்கு நல்ல வாய்ப்பாகப் போய்விட்டது.

மேலும் அவர்களெல்லாம் மவ்லவிகள், நாம் மவ்லவி இல்லை. அதே சமயம் நஜாத்தில் மக்களுடைய கவனத்தைக் கவர்ந்ததெல்லாம் எமது கட்டுரைகள்தான். நஜாத் இரண்டாவது இதழில் வெளிவந்த ரமழான் இரவுத் தொழுகை கட்டுரை நாம் உருது நூல்களின் உதவியுடன் தயார் செய்தது அதில் இந்த மவ்லவிகளின் பங்கு அணுவளவும் இல்லை. ஆனால் இன்றுவரை அது உருது நூல்களிலிருந்து கோர்வை செய்யப்பட்டது என்பது வெளியில் தெரியாது. அடுத்த பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. நவம்பர் இதழில் ரஹ்மத் ஆசிரியருக்கு எழுதப்பட்ட கடிதம். அக்கடிதத்தின் அடியில் P.J. தனது பெயரைப் பெரிதாகப் போட்டு தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொண்டால் உண்மையில் அது நமது கட்டுரையாகும். நஜாத் ஆரம்பிக்க முன்பே நாம் வெளியிட்ட நேர்வழி எது? என்ற பிரசுரத்தில் வெளியிட்டிருந்த இமாம்களின் கூற்றுக்களை அரபி மூலத்துடன் இடம் பெறச் செய்தோம். நாம் துபை செல்லு முன்பு அதற்குரிய அரபி பிளாக்குகளை ‘ஸலாத்துன் நபி” என்ற அரபி நுலிலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டுச் சென்றோம். மற்றும் பிக்ஹு வண்டவாளங்களை ‘ஹகீகத்துல் பிக்ஹு” என்ற உருது நூலிலிருந்து மொழி பெயர்த்துப் போடும்படி எடுத்துக் கொடுத்துவிட்டு துபை சென்று விட்டோம். P.J. செய்த சில தவறுகளினால் இந்த ஆக்கம் உருது நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 67-ல் திருச்சி காஜா நகர் மதரஸாவில் நடந்த ஜ.உ.ச. மாநாட்டில் இதைப் போட்டு உடைத்தது அனைவரும் அறிந்ததே.

இந்தக் கட்டுரையை P.J. தனது பெயரில் போட்டுக் கொண்டாலும் உள்ளே உள்ள அனைவருக்கும் அது எமது கட்டுரை என்பது நன்கு தெரியும். அதேபோல் டிசம்பர் இதழில் வெளிவந்து ‘நாட்டு நடப்பும் நமது நிலையும்’ என்ற கட்டுரை நாம் துபை செல்லுமுன்பே தயாரித்துச் சரிபார்த்து நவம்பர் இதழில் வெளியிடும்படி சொல்லிச் சென்றதை P.J. வெளியிடவில்லை. டிசம்பர் இதழிலும் அவர்களின் வெறுப்புக்கிடையிலேயே இடம் பெற்றது. அதாவது மவ்லவிகளாகிய அவர்கள் இருக்க, தொடர்ந்து நமது கட்டுரைகளே மக்களிடையே புரட்சியை உண்டாக்கி வந்தது அவர்களுக்கு தம்மீது பொறாமை உணர்வை உண்டாக்கிவிட்டது.

இது ஜனவரி ’87 முதல் வாரத்தில் குட்டிபுரத்தில் நடைபெற்ற முஜாஹித் மாநாட்டில் வெடித்தது. அபூ அப்துல்லாஹ்வின் கட்டுரைகள்தானே மக்களிடையே சிந்தனைப் புரட்சியை உண்டுபண்ணுகின்றன. மவ்லவிகளால் அப்படிப்பட்ட கட்டுரைகளை வெளிக் கொணர முடியவில்லையே என்று சையது முஹம்மது மதனி பிரச்சினையைக் கிளப்பியதாக நமக்குத் தகவல் கிடைத்தது. அது மட்டுமல்ல நம்மை வீழ்த்த அங்கேயே பெரும் சதித்திட்டங்களும் தீட்டப்பட்டன. அதில் இந்த மவ்லவிகள் அனைவரும் பங்கு கொண்டுள்ளனர்.

அதில் கலந்து கொண்டு கோவை திரும்பிய P.J. ஒரு சகோதரரிடம் சொல்லி அவர் எழுதி கடிதமும் அதற்கு நாம் கொடுத்த பதிலும் இந்த நூலின் பிரிதொரு பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த சகோதர் அந்தக் கடிதத்தை எழுதிவிட்டு, P.J.க்கு நீங்கள் சொன்னபடி அபூ அப்தில்லாஹ்வுக்கு நான் கடிதம் எழுதிவிட்டேன் என்று எழுதிய கடிதமும் நம் கையிலேயே வந்து கிடைத்தது. அதேபோல் P.J. துபைக்கு நம்மை பழி கூறி எழுதிய சில கடிதங்களும், P.J., S.K. இன்னொருவர் ஆக மூவரும் சேர்ந்து சுமார் 2 மணிநேரம் நம்மைப் பற்றி கழுவிக் குடித்து பேசிய பேச்சு அவர்கள் கையாலேயே பதிவாகி, அவர்கள் கையாலேயே நம்மிடம் வந்து சேர்ந்ததும் பெரும் ஆச்சரியம்தான் சதிகாரர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரன் அல்லாஹ் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆக டிசம்பர் ’86க்கு முன்பாகவே நஜாத்தின் வளர்ச்சி, புரோகித ஒழிப்பு முயற்சியின் வளர்ச்சி அவர்களை நிலை தடுமாற வைத்திருக்கிறது. உடனே அவர்கள் தங்களுக்கென்று ஒரு ஜமாஅத்துல் உலமா சபை அமைத்து அதை ரிஜிஸ்டரும் செய்து கொண்டார்கள். அதாவது தங்களின் புரோகித இனம் அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமே அவர்களை இவ்வாறு செய்யவைத்தது. நம்மையும், நஜாத்தையும் ஒழித்துக்கட்ட திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் துபை ஜமாஅத் எனக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் தங்கள் முயற்சி வெற்றி பெறாது என சமயம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

‘ஸலபி’ விவகாரத்தில் எமக்கும் K.M.I.க்கும் விவகாரம் முற்றி துபை சென்று அவருடன் ‘ஸலபி’ முனாழரா நடத்தும் அளவுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் K.M.I.யும் நமக்கு விரோதியாகிவிட்டார். ஆக எல்லா மவ்லவிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை வீழ்த்த சபதம் ஏற்றனர். 1987 பிப்ரவரி 2-ல் K.M.I. இந்தியா வந்த பின் 14,15 மாநாடு வரை அவர்கள் செய்த சதித்திட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அல்லாஹ்வின் உதவி மட்டும் நமக்கில்லை என்றால் என்றோ அவர்கள் நம்மை ஒழித்துக் கட்டியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்று வேறு வழியின்றி அவர்கள் நஜாத்தை விட்டு வெளியேறித் தங்கள் புரோகிதத்தை வளர்க்க பெரும் முயற்சிகள் எடுத்தனர் நாம் கொடுத்த அழகிய கல்வித்திட்டத்தை நிராகரித்து, முகல்லிது மவ்லவிகள் பாணியிலேயே இவர்களும் ஒரு மதரஸா ஆரம்பித்தனர். புரோகிதத்தை வளர்க்கும் வகையில் ஓசிச் சோறு போட்டு கல்வி போதிக்கும் அதே இழிந்த முறை. ஐந்து ஆண்டுகளக்குப்பின் அதிலிருந்து வெளியேறிய தவ்ஹீது மவ்லவிகள் பள்ளிகளில் இமாமத் செய்தே பிழைப்பு நடத்தும் அதே இழிவான நிலை. அவர்கள் கொடுக்கும் காகிதப்பட்டத்தை வைத்து வயிறு வளர்க்கும் நிலை. அவர்கள் கொடுக்கும் காகிதப்பட்டத்தை கொடுக்காமல் பரிதவிக்கப்பட்ட நிலை. முகல்லிது மவ்லவிகள் இமாமத்திற்கு சம்பளம் வாங்குவது இந்தக் காலத்திற்கு ஹலால்தான் என்று பிக்ஹு சட்டம் வகுத்து வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இந்த தவ்ஹீது மவ்லவிகளோ இமாமத்திற்கு சம்பளம் வாங்குவது கூடாது – ஹராம் என்று சொல்லிக் கொண்டே சம்பளம் வாங்கும் நிலையை உண்டாக்கி வைத்துள்ளனர். அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் செயல்படும் ஜாக்ஹ் பள்ளிகள் அனைத்திலும் சம்பளம் கொடுத்தே இமாமத்திற்கு ஆட்களை வைத்திருக்கிறார்கள். இவர்களின் போதனைக்கும் இவர்களின் செயல்களுக்கும் தொடர்பிருக்கிறதா?

முகல்லிது மதரஸாக்களில் காணப்படும் எல்லா இழி செயல்களும் இவர்களின் தொளஹீத் மதரஸாவிலும் நுழைந்துவிட்டன. ஏன்? அதைவிட ஒருபடி மேலே போய் தெளஹீத் மவ்லவி பட்டப் பகலில் பணத்தைப் பகல் கொள்ளை அடிக்கும் அனைத்தையும் இங்குதான் பார்க்க நேரிட்டது. புரோகிதத்தை வளர்க்க நடத்தப்படும் மதரஸாக்களின் நிலை இதுவாகத்தான் இருக்க முடியும்.
புரோகிதம் ஒழிக்கப்படுவதை P.J. விரும்பவில்லை என்பதற்குச் சில சான்றுகள் நம்மிடம் வந்து சேர்ந்த ஆரம்பத்திலேயே ஹஸரத் – ஹஜரத் இரு பதங்களும் தவறானவை. தவறான நோக்கில் புகுத்தப்பட்டவை. ‘சந்நிதானம்’ என்ற கருத்தில் ஹிந்துக்களின் நடைமுறையில் இருப்பதை ஒட்டி ‘ஹழரத்’ என்ற அடைமொழி இங்கு வழக்கில் உள்ளது. இந்தப் பழக்கம் அரபு நாட்டில் இல்லை என்பதை P.J.யும் ஒப்புக் கொண்டு விட்டார்; ஏன்? அதனைத் துபைக்க அவர் எழுதிய கடிதத்தில் எழுதியும் உள்ளார். ஆனால் இன்றுவரை மக்கள் அவரை ஹஜரத், ஹஜரத் என் அழைப்பதைத் தடுத்ததாகத் தெரியவில்லை. ஏன்? அவரோடு இருக்கும் மவ்லவிகளே அவரை ஹஜரத், ஹஜரத் என்று மூச்சுக்கு முப்பது தடவை அழைப்பதையே அவர் விரும்புகிறார். உளப்பூர்வமாக அதனை அவர் வெறுத்தால் அவர்கள் அப்படி அழைப்பதைத் தடுத்து நிறுத்த முடியும்.

அவர் அந்நஜாத் ஆசிரியராக இருக்கும்வரை அந்நஜாத்தை தக்லீது செய்யாதீர்கள் என்று பின் அட்டையில் போட அவர் அனுமதிக்கவில்லை. அவர் வெளியேறிய பின்பே அதனை இடம் பெறச் செய்தோம். P.J.யைப் பற்றி ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். அவரது அகராதியே தனிதான். அவரது கூற்றுக்கு நேர் முரணான கருத்தையே நீங்கள் எடுக்க வேண்டும். பணம் வேண்டாம், வேண்டாம் என்று பெரிதும் பிகு பண்ணுவார். நீங்கள் பலாத்காரமாக பணத்தை அவர் பாக்கெட்டில் திணிக்க வேண்டும். இந்த இரகசியம் ஆரம்பத்தில் S.K. சொல்லித்தான் நமக்குத் தெரியும். அதேபோல் ‘தனிமனித வழிபாட்டுக்கு என்னை ஆளாக்காதீர்கள்” என்று அவர் சொன்னால் அதற்குப் பொருள் ‘தனி மனித வழிபாட்டிற்கு என்னை ஆக்குங்கள்” என்பதே, “சூழ்ச்சி செய்ய எனக்கத் தெரியாது. எனக்கு நேரமில்லை” என்று அவர் கூறினால் அதன் பொருள் “சூழ்ச்சி செய்ய அவருக்கு நன்கு தெரியும். அதற்கு நேரமும் அதிகம் இருக்கிறது” “நான் எனக்கு ஆள் சேர்க்கவில்லை” என்று அவர் கூறினால் அதற்குப் பொருளை அவருக்கென்று ஆள் சேர்க்கவில்லை” என்று அவர் கூறினால் அதற்குப் பொருளை அவருக்கென்று ஆள் சேர்க்கிறார் என்பதாகும். இப்படி அவர் சொல்லுவதற்கு, எழுதுவதற்கு நேர் முரணான பொருளை நீங்கள் எடுத்தால் நான் அவர் சொன்னதை, எழுதியதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஆவீர்கள். இல்லை என்றால் ஏமாற்றாதீர்கள்.

ஆக இப்படி அவருக்கென்று ஒரு அகராதி உண்டாக்கி, தனக்கென்று ஒரு கூட்டத்தை உண்டாக்கி வைத்துள்ளனர். உண்மையில், அவர்கள் அவரின் ரசிகர்களே, சுயசிந்தனையாளர்கள் அல்ல. அதற்கும் ஆதாரம் தருகிறோம். 87, பிப். 14,15 மாநாடு முடிந்த அடுத்த நாள் அவர்களின் அவதூறுகள் காரணமாக எமது பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து விசாரணைக்கு அட்ஹாக் கமிட்டி அமைக்க வழிவிட்டோம். அன்றிரவு நடந்த அட்ஹாக் கமிட்டிக் கூட்டத்தில் எமது பொறுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதற்காக நாம் வருந்தவில்லை. நிர்வாக பிரச்சினைகளுக்குப் பின் ஆசிரியர், ஆசிரியர் குழு பிரச்சினை எழுந்தது. ஆசிரியர் P.J. என்று உடன் முடிவாகிவிட்டது. ஆசிரியர் குழு என்றவுடன் மெளனம் நிலவியது. சகோதரர் S.M.S. வழமைபோல் P.J. S.K. சையது முஹம்மது மதனி, அபூ அப்துல்லாஹ் போன்றோர் இருக்கட்டுமே என்று கூறினார். உடனெ சையது முஹம்மது மதனி ஆசிரியர் குழுவில் இடம் பெற அளவுகோல் என்ன? என்று கேட்க உடனே S.கமாலுத்தீன் மதனி அரபி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைப் போட்டார். இது பற்றிய விவாதம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தும் முடிவுக்கு வராததால் நாம் வெளி நடப்புச் செய்ய முயன்றோம். அதன் பின்பே அவர்கள் வழிக்கு வந்து அட்ஹாக் கமிட்டி உறுப்பினர்கள் 9 பேரும் ஆசிரியர் குழுவில் இடம் பெறுவது என்று முடிவு செய்தனர். அந்த மவ்லவிகள் எம்மீது கொண்டிருந்த பொறாமை இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

இதில் பெரிய வேடிக்கை இந்த விவாதம் நடந்த ஒரு மணி நேரமும் P.J. கட்டிலில் சுவரோடு சாய்ந்து கொண்டு கால்களை மடக்கிவைத்துக் கொண்ட முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு ஆடாது அசையாது வீற்றிருந்தார். வாயே திறக்கவில்லை. இது அவர் மீது நமக்கு ஓரளவு நம்பிக்கையை உண்டாக்கியது. அன்று இரவு முழுதும், நம்முடைய முயற்சி தோல்வியுற்று மீண்டும் நஜாத்தும் புரோகிதர்களின் கையில் போய் சிக்கப்போகிறதே என்ற கவலை.

பஜ்ர் தொழுதுவிட்டு, சகோதரர் BHEL ஷாஹுல்ஹமீதுடன் கலந்தோம். இந்த இக்கட்டான கட்டத்தை எப்படித் தாண்டுவது வேண்டுமென்றால் நஜாத்தை P.J. வசமே ஒப்படைத்து விடுவோம். அவரே நடத்தட்டும். ஆயினும் நஜாத்தின் ஆரம்பக் கொள்கையில் எந்த மாறுதலும் இருக்கக் கூடாது என்ற அவரிடம் உத்திரவாதம் வாங்கிக் கொள்வோம் என்று முடிவு செய்து கொண்டு P.J.யை போய் எழுப்பிப் பேசினோம்.

அவரும் எம்மைக் கண்டவுடன் தடுமாறினார். காரணம் அதற்கு முன் தொடர்ந்து 15 நாட்களாக எம்மைப் பற்றிய பெரும் பெரும் அவதூறுகளை பரப்ப விட்டிருந்தார். எடக்குமுடக்கான பேச்சுகளைப் பேசி இருந்தார். இந்த நிலையில் நாம் அவரைப் போய் பார்த்ததை எதிர்பார்க்கவில்லை. நாம் அவரது தடுமாற்றத்தைப் போக்கி ‘P.J. சில விபரங்களைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவே நான் வந்திருக்கிறேன். அதாவது நமக்குள் இப்போது ஏற்பட்டுள்ள இந்த கசப்பு வெறும் பணம் காசு, நிர்வாகம் மற்றும் உலக காரியங்களில் மட்டும் ஏற்பட்டதா? அல்லது கொள்கை அடிப்படையிலேயெ நீங்கள் என்னிலிருந்து வேறுபடுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு P.J. “கொள்கையில் மாறுபட்ட கருத்து இல்லை. நிர்வாகப் பிரச்சினைதான்” என்று சொன்னார். “அப்படியானால் நேற்று இரவு சையது முஹம்மது மதனி, S.K. பேசிய பேச்சில் உங்களுக்கு உடன்பாடில்லையா? என்ற கேட்டேன். அதற்கு அவர் ‘அதில் எனக்கு உடன்பாடில்லை” என்று சொன்னார். உடன் நான் ‘அப்படியானால் நிர்வாகத்தை நீங்கள் விரும்புகிறபடி எப்படி வேண்டுமானாலும் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அதில் நான் மறுப்புத் தெரிவிக்கவில்லை. நமது கொள்கையில் மட்டும் வேறுபாடு இருக்கக் கூடாது. P.J. உங்களுக்கும் அல்லாஹ் சில திறமைகளைக் கொடுத்திருக்கிறான். உங்களாலும் ஒரு பத்திரிகை நடத்த முடியும். எனக்கும் அல்லாஹ் சில திறமைகளைக் கொடுத்திருக்கிறான்; என்னாலும் ஒரு பத்திரிகை நடத்த முடியும். ஆனால் P.J. நாமிருவரும் இணைந்து செயல்படுவதால் இந்தச் சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சியைக் கெடுத்துவிடாதீர்கள்” என்று சொல்லும்போது உணர்ச்சி வசப்பட்டு, பிரிவினால் ஏற்படும் பாராதூரமான நஷ்டத்தை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். அவரும் கண்கலங்கத்தான் செய்தார். ‘ஏதோ நமக்குள் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்” என்ற அன்று ஆறுதல் வார்த்தை கூறியவர்.

29.7.87 தேதியிட்டு விழுப்புரம் பள்ளி இமாம் நூருல் அமீன் மற்றும் இளைஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் அவர் மீது நான் சுமத்தியது உண்மை. அவர் என்னிடம் அழுது கண்ணீர் விட்டு எந்தப் பிரச்சனையையும் கிளப்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதும் உண்மை. அதன்பிறகு பழைய குப்பைகளை நான் கிளறியதில்லை’ என்று எழுதி இருக்கிறார் என்றால் அவர் எந்த அளவு வஞ்சக உள்ளம் படைத்தவராக இருக்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இந்தக் கடிதம் அவரது ரஸிகர்கள் அனைவரும் சிராக்ஸ் எடுத்து அனுப்பப்பட்டது. அவரின் ரஸிகர்கள் என்று நாம் எழுதுவதாக ஆத்திரப்படுகிறவர்கள் சிறிது நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

அந்நஜாத் P.J.யின் சொத்தல்ல, அல்லது P.J.யின் அப்பன் சொத்தல்ல, அல்லது P.J.யின் பாட்டன் சொத்தல்ல. அவர் எந்தப் பிரச்சினையையும் கிளப்பாமல் விட்டுவிடுவதற்கு, அந்நஜாத் பொது சொத்து, மக்கள் சொத்து, குற்றங்களைக் கண்டுபிடித்த பின் அவர் எவ்வாறு விட்டு விடலாம்? அவருக்கு அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஒருவன் குற்றம் செய்கிறான்; சம்பந்தப்பட்ட அதிகாரி பிடித்து விடுகிறார். இப்போது குற்றவாளி அழுது கண்ணீர் விட்டால், அல்லது லஞ்சம் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு அந்த அதிகாரி குற்றவாளியை விட்டு விட்டால், இப்போது முதல் குற்றவாளி யார்? அந்த அதிகாரியா? இல்லையா? அதேபோல் நாம் குற்றம் செய்து அவர் கண்டிருந்தால், நாம் அழுது கண்ணீர் விட்ட காரணத்திற்காக அவர் எப்படி விட்டு விடலாம்? அப்படியானால் அவர் தானே முதல் குற்றவாளி?

இதை அவரது ரஸிகர்கள் சுய சிந்தனையோடு கேட்டிருந்தால் அவர் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கூற முடியுமா? கேட்பவர்கள் சிந்தனையற்ற முகல்லிதுகளாக இருக்கப் போய்தானே அவரால் இப்படி எல்லாம் அவதூறு கூற முடிகிறது.

“எந்த அல்லாஹ்வின் கையில் எனது உயிர் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். அன்று நாம் அழுததற்கு ஒன்றுபட்டு செயல்படுவதால் சமுதாயத்தில் எற்பட்டு வரும் மறுமலர்ச்சி, பிரிவால் நாசமாகிவிடுமோ என்ற அளவு கடந்த வேதனையே காரணமாகும். அவர் கூறுவதுபோல் வேறு எந்தக் காரணமும் இல்லை” மூடி மறைத்த அந்த குற்றங்களை P.J. அக்கடிதத்தில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு விளக்கம் கொடுத்த நாமும் எழதியிருக்கிறோம். இரண்டுமே இடம் பெற்றிருக்கின்றன. பார்த்து பச்சை அயோக்கியன் யார்? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அந்தக் கடிதம் வரை நாம் P.J. மீது கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது அபிமானம் வைத்துத்தான் இருந்தோம். அந்தக் கடித்தைப் பார்த்த பின்பு P.J. பச்சை பொய்யர். பச்சை அயோக்கியர், தனது மவ்லவி வர்க்கத்தை காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு பெரிய கொடிய குற்றத்தையும் செய்யத் தயங்காதவர் என்ற எண்ணம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்கள்.

இந்த எமது குற்றச்சாட்டுகளை எங்கு வேண்டுமானாலும் நாம் நிரூபிக்கத்தயாராக இருக்கிறோம். அவர் உண்மையாளரானால் அதை நிலைநாட்ட முன்வரட்டும். அதேபோல் நஜாத்தை எமது சொந்தமாக்கி அதன் மூலம் லட்சம் லட்சமாக பொருள் திரட்ட திட்டமிட்டிருப்பதாக துபைக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதை நம்பக்கூடியவர்களை அவரது ரஸிகர்கள் என்று எண்ணாமல் சுயசிந்தனையாளர்கள் என்று எப்படிக் கருத முடியும்? முஸ்லிம் பத்திரிகை நடத்தி, அதிலும் குர்ஆன், ஹதீஸை மட்டும் எழுதி, விளம்பரமேயில்லாமல் லட்சம் லட்சமாக பொருளீட்ட முடியுமா? கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று? இப்படிப்பட்டவர்களை நாம் P.J. ரஸிகர்கள் என்று சொல்லுவதில் தவறு இருக்க முடியுமா? அந்த மவ்லவிகளுக்குப் பின்னால் செல்கிறவர்கள் இன்றும் முகல்லிதுகளாகத்தான் இருக்கிறார்கள். அன்று ஷாபி, ஹனபியை தக்லீது செய்தவர்கள் இன்று P.J.யை தக்லீது செய்கிறார்கள் என்றுதான் நினைக்க முடியும். அவர்கள் உண்மையிலேயே சுய சிந்தனையாளர்களாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் பின்னால் செல்ல முடியாது.

புரோகிதர் P.J.யின் இன்னொரு நரித் தந்திரத்தையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர் நம்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை “எங்குவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார்” என்று எழுதிக் கொண்டிருந்ததும், கேட்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்ததும் அவரது அகராதிப்படி அதற்கு மாற்றமாகப்பொருள் கொள்ள வேண்டியவையாகும். இதோ அதோ என்று எத்தனை காலத்திற்குத்தான் மக்களை அவரால் ஏமாற்றிக் கொண்டு அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளை வந்து நிரூபியுங்கள் என்று நெருக்கினால், இது அல்லாத வேறு பேச்சு இருந்தால் பேசுங்கள் என்று நழுவ ஆரம்பித்துள்ளார். ஒரு சபையைக் கூட்டி அவர் நம்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களுடன் அலசினால் அவர் பச்சைப் பொய்யர். அவதூறு பரப்ப அணுவளவும் தயங்காத அயோக்கியர் என்பது நிச்சயமாக நிரூபணமாகும்.

யார் வேண்டுமானாலும் ஒரு பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். “புரோகிதர் P.J. ஒரு பச்சை பொய்யர். அல்லாஹ்மீது ஆணையிட்டு பொய் சத்தியம் செய்பவர் அவதூறுகள் பரப்ப சிறிதும் அஞ்சாத அயோக்கியர்” என்பதைப் பட்டவர்த்தனமாக நிரூபித்துக் காட்ட நாம் தயாராக இருக்கிறோம். அப்படி நிரூபிக்க நாம் தவறினால் எம்மீது எவ்வளவு பெரிய கடும் நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.

0 comments:

Post a Comment