Tuesday, November 23, 2010

உரிய பருவத்தில்...


தி
"ருமணம் எனது வழிமுறை, அதைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவனல்ல!% என நபிகள் நாயகம் (ஸல்) சொல்கிறார்கள். திருமணம் தான் ஒரு மனிதனின் வாழ்வை முழுமைப்படுத்துகிறது என்பார்கள். துறவறம் கூடாது என்று சொல்லும் இஸ்லாம், தனி மனித விருப்பம் என்று விட்டுவிடாமல் திருமணத்தை வலியுறுத்துகிறது. எந்த அளவிற்கு வலியுறுத்துகிறது என்றால்,

""உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன். அறிந்தவன்%% (அல்குர்ஆன் 24:32)

இவ்வசனத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று உங்களில் வாழ்க்கைத் துணையற்றோருக்கு திருமணம் செய்து வையுங்கள் என்பது. இது திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதில் நமக்கென்ன என்று கவனக்குறைவாக இருந்தால், சிலர் பாதை தவறக் கூடிய வாய்ப்பிருப்பதையும் அறிய முடிகிறது.

அடுத்தது, அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களை தன்னிறைவு பெற்றவராக ஆக்குவான் என அல்லாஹ் திருமறையில் கூறுவதை கவனிக்க வேண்டும். இன்று திருமணத்தைத் தள்ளிப் போடுபவர்கள் சொல்லும் வார்த்தை ""இன்னும் லைஃப்ல செட்டில் ஆகல%% என்பது. ஏழ்மை நிலையில் இருக்கும் ஒருவர் திருமணத்திற்கு தகுதியான வயதை அடைந்ததும்,, இன்னும் சொல்லப் போனால் அந்த வயதை கடந்த பின்பும் வருமானத்தைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். இதேபோல, வசதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி பெண்கள் முதிர் கன்னிகளாக பல குடும்பங்களில் தேங்கி இருப்பதையும் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. ஆனால் ஏழ்மை நிலையில் இருந்தாலும் திருமணத்தின் மூலம் அல்லாஹ் அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவேன் என வாக்களிக்கிறான்.

திருமணம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகும் எனக் கருதுவதுதான் இதற்குக் காரணம். இஸ்லாம் மிக எளிமையாகவே திருமணத்தை வைத்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இரும்பு மோதிரத்தை மஹராகக் கொடுத்து திருமணம் முடித்த சஹாபிகளைப் பார்க்கிறோம். குர்ஆன் வசனத்தை சொல்லிக் கொடுத்து அதையே மஹராக கருதி நடைபெற்ற திருமணங்களும் உண்டு.

தேவையில்லாத ஆடம்பரத்தை நாமே உருவாக்கிக் கொண்டு - திருமணத்தைத் தள்ளிப் போட காரணம் தேடுகிறோம். நாம் ஒரு கணக்குப் போட நமது உடல் கூறுகள் வேறு கணக்குப் போடுவது பலருக்குத் தெரியாது.

மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள் இதற்கென தனியாக வயது வரம்பை நிர்ணயித்துக் கொள்வதில்லை. அவை அதற்கேற்ற பருவத்தை அடையும் போது இயற்கையாகவே பாலியல் தேவைகளின் பால் உந்தப்பட்டு தனது துணையைத் தேடிக் கொள்கின்றன. மனிதர்களைப் போன்ற பொருளாதாரக் காரணங்கள் அவைகளுக்கு இல்லை.
ஆனால், மனிதன் பொருளாதாரத்தைப் போதுமான அளவிற்கு தேடிக் கொண்டு திருமணம் முடிக்க நினைக்கும்போது அவனது உடற்கூறு மாற்றங்களினால் பல பாக்கியங்களை இழக்கிறான் என விஞ்ஞானம் கூறுகிறது.

அண்மையில் இங்கிலாந்துள்ள லண்டன் ஷெபில்ட் பல்கலைக் கழகம் பெண்களைக் குறித்த ஆராய்ச்சியைச் செய்து அதன் முடிவை அறிவித்திருக்கிறது. அதன்படி, திருமணத்தைத் தள்ளிப் போடுவதாலும், திருமணம் செய்துகொண்டு குழந்தை பாக்கியத்தை தள்ளிப் போடுவதாலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்லிக் கொண்டு படித்து முடித்து வேலையில் சேரும்போது குறைந்தபட்சம் 25 வயது கடந்து விடுகிறது. முப்பது வயதுக்கு மேல் தான் திருமணத்தைப் பற்றியே நினைக்கிறார்கள். இதனால் உடலியல் மாற்றங்கள், உடல் பாதிப்புகள் ஏற்படுவதை இவர்கள் உணருவதில்லை. இளம் பருவத்தில் மனித உடலில் வலுவாக இருக்கும் மரபணுக்கள், ஹார்மோன் சுரப்பிகளின் தன்மை போன்றவை வயது ஆக ஆக வலுவற்றதாக ஆகிவிடுவதால் மலட்டுத்தன்மை இரு பாலருக்கும் ஏற்படுவதோடு, ஆரோக்கியமாக பிள்ளைகள் பிறக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய் விடுகிறது என்கிற அதிர்ச்சித் தகவலை ஷெபில்ட் பல்கலைக் கழக ஆய்வறிக்கை கூறுகிறது.

பருவ வயதை அடைந்தவர்கள் திருமணம் செய்து வைக்கும்படி நபி{ஸல்)
கடளையிட்டுள்ளனர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.
மனிதனைப் படைத்த இறைவனே அவனது வாழ்வியலைத் தீர்மானிக்க முடியும். அதைத்தான் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் போதிக்கின்றன. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இஸ்லாமிய நெறிமுறைகளை பாராட்டுவதற்குக் காரணம் அது அறிவுக்கும், விஞ்ஞானத்துக்கும் முரணில்லை என்பதால்தான்.
ஆகவே, உரிய காலத்தில் திருமணம் செய்து குழந்தைச் செல்வம் உட்பட எல்லா பாக்கியங்களையும் பெற இனிமேலாவது சிந்திப்போமே!
======= நன்றி தவ்ஹீத் மாத இதழ் . சந்தா தொடர்புக்கு:9444822331

0 comments:

Post a Comment