Monday, November 29, 2010

18.11.10 அன்று பெருநாள்! 17.11.10 குர்பானி ! தக்லீத் ஜமாத்தின் தனி வழி!

அண்ணல் நபி வழியை விட்டு அண்ணனின் தனி வழியில் பயணிக்கும் த.த.ஜ.வினர் தறி கெட்டு, நெறி கெட்டு ,தங்கள் அமல்களை பாழ் படுத்துவதோடு , மக்களின் மார்க்க கடமைகளையும் கேலிக்கூதாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது! !

உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய் மூன்றாம் நாள் பெருநாள் கொண்டாடிய த,த,ஜ,வினர் முதல் இரண்டு நாள் பெருநாள் கொண்டாடியவர்கள் , வழி கெட்டு விட்டனர் என்றும் அது ஹராம் என்றும் கூறிவிட்டு , வாங்கி கட்டியதை ஏற்கனவே கண்டோம் ! ஹராமாக கொடுக்கப்பட்டகுர்பானி தோல்களை மட்டும் ,வீடு வீடாக சென்று வசூல் செய்ததை ,'ஆடு பகை! குட்டி உறவா? என்பது போல் குர்பானி ஹராம் தோல் ஹலாலா? என்று கேடடு மக்கள் கேட்டனர்.

ஆனால் தற்போது அதை விட மோசமான ஒரு நிகழ்வு காஞ்சி மாவட்டத்தில் நடந்துள்ளது! த.த.ஜ.வினரிடம் கூட்டு குர்பானியில் பங்கு சேர்ந்த சிலர் ' நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெருநாள் கொண்டாடுங்கள்! எங்களுக்கு 17.11.௧௦ அன்று கறி வேண்டும் எனக்கூற ' ஒரு மாட்டை மட்டும் 17.11.10 அன்று யாருக்கும் தெரியாமல் அறுத்து விநியோகித்துள்ளனர். இந்த விஷயம் வெளியாகி கேள்வி எழ சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி ' மாடு இறக்கும் தருவாயில் இருந்ததால் அறுத்தோம்' என பொய் சொல்லி சமாளிக்க, சரி அப்படி என்றால் அந்த கறியை ஏன் பங்கு தாரர்களுக்கு கொடுத்தீர்கள் ? என கேள்வி எழுப்ப பதில் இல்லை! 18.11.10 அன்று பெருநாள்! 17.11.10 குர்பானி என்ற கேலிக்கூத்து காஞ்சி மாவட்டத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது!

ஏற்கனவே இந்த வருட பித்ரா தொகையை , பெருநாள் கடந்த பின்னும் விநியோகிக்காமல் , வேறு வகையில் அதை வரவு வைத்து மக்களின் மார்க்க கடமையில் விளையாடியது போல் , தற்போது குர்பானியிலும் விளையாடி உள்ளனர். இவர்களை நம்பி தங்களின் குர்பானி ,பித்ராவை ஒப்படைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்! குறிப்பாக வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் நீங்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுக்க வேண்டிய பித்ராவும், பெருநாளுக்கு பின் கொடுக்க வேண்டிய குர்பானியும் சரியான நாளில் கொடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்! இல்லையேல் உங்கள் அமல்கள் பாழ் பட்டு மறுமையில் கைசேதப்படுவீர்கள்.

அல்லாஹ் நம் அமல்களை சீர் செய்யட்டும் !அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்!


-ஆலந்தூர் முபாரக்

0 comments:

Post a Comment