Sunday, November 21, 2010

திரையைக் கிழித்து...

ன்பிற்குரிய இணையத்தள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலம் பல சூழட்டுமாக...

அன்பிற்கினிய சகோதரர்களே... இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை வம்புக்கிழுப்பதும், இந்த அமைப்பின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இல்லாத அவதூறுகளைப் பரப்புவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வழக்கமாக செய்து வருகின்றனர். ததஜ என்பதை விட சகோதரர் பீ.ஜை அவர்களே அவர்களை இயக்கி வருகிறார். ஒரு மார்க்க அறிஞருக்குரிய பண்புகள் அவரிடத்திலிருந்து எடுபட்டுப் போய் விட்டது. இரு தரப்பும் ஒருவரையொருவர் அறிக்கை போர் போல பதிலுக்கு பதில் என்று பதிலளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் உண்மை நிலை என்ன என்பதை அவ்வப்போது இந்த இணையத் தளத்தின் மூலம் உங்கள் பார்வைக்கு வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். உண்மையான குழப்பவாதி யார்? திரைக்குப் பின்னால் இருந்து இயக்குபவர் யார்? என்பதை வெளிப்படுத்துவதற்காகத் தான் இப்பகுதிக்கு திரையைக் கிழித்து என்று பெயரிட்டுள்ளோம்.

ததஜவினர் ஒரு பொய்யை, அவதூறை மீண்டும், மீண்டும் அறிந்து கொண்டே அதனை பூதாகரப்படுத்தி வருவதை முதலில் உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன். சிலை திறப்பு நிகழ்ச்சியில் சகோ. பாக்கரும், இதஜ நிர்வாகிகளும் கலந்து கொண்டதாக சொல்லி, அதனை மையப்படுத்தி தவ்ஹீதை விட்டு இவர்கள் வெளியேறி விட்டதாக சொல்கிறார்கள். இது பச்சையான அவதூறு என்று அவர்களுக்கே தெரியும். இதில், ""சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் - யாதவ மகா சபை தலைவர் தேவநாதன் தொலைபேசி மூலம் அழைத்த பின்னர் தான், இடஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் சகோ. பாக்கரும், ஏனைய நிர்வாகிகளும் கலந்து கொண்டுனர் என்பதும், அந்த மேடையிலேயே சிலை வைப்பதைக் கண்டித்தும், சிலைகளால் ஒரு பயனும் இல்லை என்ற அறிவுப்பூர்வமான உண்மையையும் பாக்கர் வெளிப்படுத்தினார் என்பதையும் இவர்கள் இணைய தளத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சகோ. தேவநாதன் கையில் வைத்திருப்பது வாக்கி டாக்கி தான் - சிலையை திறக்கக் கூடிய ரிமோட் அல்ல என்பதையும் ததஜவினர் நன்கு அறிவார்கள். ஆயினும் "சிலை திறக்கும் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டார்கள்' என்று சொன்னால் தான் பாக்கரின் இமேஜை உடைக்க முடியும் என்ற நோக்கம்தான் இந்தப் அவதூறு பிரச்சாரத்தின் மையக் கரு என்பதை உங்களின் கவனத்திற்குத் தருகிறேன். ததஜவினர் பாணியில் பதில் சொல்வதென்றால் அவர்கள் சொன்ன விளக்கதையே பதிலாகத் தருகிறேன்.

ததஜவினரிடத்தில் இலங்கையைச் சேர்ந்த சில சகோதரர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வந்தபோது, ""பாக்கர் தான் எங்களை இந்தியாவிற்கு வரச் சொல்லி, உதவி செய்வதாகச் சொல்லி ஏமாற்றி விட்டார் என்று கேமரான முன்பு சொல்லுங்கள்'' என்று ததஜ பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது சொன்னார் என்று இந்தச் சம்பவத்தை (இதன் முழு விபரம் இணைய தளத்திலேயே பார்த்துக் கொள்ளலாம். இங்கே சுருக்கமாக சுட்டிக் காட்டுகிறேன்) சகோ. செங்கிஸ்கான் எழுதிய போது ததஜவினர் அளித்த விளக்கம்.

ஒரு விஷயம் குறித்து விளக்கம் அளித்த பின்னரும் மீண்டும், மீண்டும் அந்தப் பிரச்சினையைக் கிளப்புவர் மனோ நோயாளியாகத்தான் இருப்பார்'' என்ற ரீதியில் அமைந்திருந்தது.

ஆக, சிலை திறப்பு விஷயத்திலும் அவர்களது விளக்கத்தையே அவர்களுக்கான பதிலாகச் சொல்வோம். இனியும் அவர்கள் சிலை திறப்பு விஷயத்தை பரப்பினால் அவர்கள் "மன நோயாளிகள்' என்று முடிவு செய்வோம். அதோடு அவதூறுக்கான கூலியை இறைவனிடத்தில் பெற்றுக் கொள்ளட்டும்.

இப்போது சமீபத்திய பிரச்சினைக்கு வருவோம்.
ததஜவினரின் அதிகாரப்பூர்வ மூன்றாவது இணைய தளத்தில் (ஆன்லைன்ஐஎன்டிஜே.இன்) சகோதரர் பீஜே துவங்கியிருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டிருக்கும் சகோ. நேச்சுரல் ஜாஃபார் செங்கிஸ்கான் மீது வெறியோடு பாய்ந்து சில கேள்விகளைக் úகெட்டிருக்கிறார். பாவர் அவர் அம்புதான். அவரை எய்தவர் சகோ. பீஜே என்பது எல்லோருக்கும் தெரியும்.

சகோ. ஜாஃபரை நாம் அறிவோம். அவர் நல்ல மனிதர்தான். அழகான முறையில் நட்பு பாராட்டுபவர். அவர் அந்த இணைய தளத்தில் பல அண்டுகளாக சமுதாயப் பிரச்சினைகளில் பங்கு கொண்டவர்தான். அதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. அவர் சொல்வதைப் போல சகோ. செங்கிஸ்கானுக்கு முன்பிருந்தே சகோ. பாக்கரிடத்தில் அவருக்கு பரிச்சயம் உண்டு. இதனை மறுக்க முடியாதுதான். ஆனால் செங்கிஸ்கான் மீது, அவர் பாய்வதற்கு நியாயம் இல்லை என்பதுதான் நம்முடைய வாதம்.எப்படி?

சகோ. பீஜே துவங்கியிருக்கும் புதிய சங்கத்திற்கு இவர் பொறுப்பாளர் இல்லை. ஆனால், பீஜேவே இவரை வலிய வந்து பொறுப்பாளராக்கி இருக்கிறார் என்பதையும் , தான் அதிகாரப்பூர்வ பொறுப்பாளர் இல்லை என்பதையம் சகோ. ஜாஃபர் மறைக்கிறார்.

சகோ.பீஜேவின் புதிய சங்கத்தின் சட்டப்படியான நிர்வாகிகள் பின்வரும் நபர்கள்தான்.
ஜெ. முஹம்மது (பீஜேவின் மூத்த மகன்) - தலைவர்
ஒய். சகுபர் நவாஸ் ( பீஜேவின் சகலை) - துணைத் தலைவர்
எச். ஹிதாயத்துல்லாஹ் (பீஜேவின் மைத்துனர்) - பொதுச் செயலாளர்
ஜே. யாசிர் (பீஜேவின் இளைய மகன்) - துணைப் பொதுச் செயலாளர்
எச். சம்சுல்ஹுதா (பீஜேவின் மைத்துனர்)- பொருளாளர்
ஒய். அஸ்லம் (பீஜேவின் சகலையின் மகன்) - நிர்வாக உறுப்பினர்
ஜே. ஜாபிர் (பீஜேவின் கடைசி மகன்) - நிர்வாக உறுப்பினர்
எச். சாதிக் (பீஜேவின் மைத்துனர்) - நிர்வாக உறுப்பினர்
இந்த அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் பட்டியலில் சகோ. ஜாபரின் பெயர் இருக்கிறதா? ஆக, ஜாஃபர் இந்த சங்கத்தில் பொறுப்பாளர் இல்லை.

இன்னொருபுறம்,இவர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவராக என்றால் அதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால்... சகோ. ஜாஃபர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே தன்னை இன்ன அடிப்படையில்தான் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சகோ. செங்கிஸ்கானுக்கு பதில் சொல்லி இருப்பார்.
(இனி நிர்வாகக் குழுதான் தன்னை தேர்ந்தெடுத்தது என்று ஜாபர் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி அறிவித்தால் அது பொய் என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். நாம் எடுத்துக் காட்டிய பின் அறிவிப்பது பொய்தானே!)

இதனை ஏன் எழுதுகிறோம் என்றால், சகோ. பீஜேவின் நோக்கம், நடத்தை, பண்பு, செயல்பாடு மார்க்கத்திற்கு விரோதகமாக இருக்கிறது என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்டத்தான்.எப்படி?

சகோ. ஜாஃபருக்கும் செங்கிஸ்கானுக்கும் எவ்வித பிரச்சினையோ, தகராறோ, பகையோ கிடையாது. இன்றுவரை ஒருவரையொருவர் சந்தித்தால் "ஸலாம்' சொல்லி நட்புடன் பேசிக் கொள்ளும் நிலைதான் நிலவுகிறது. இந்தச் சூழலில் சகோ. செங்கிஸ்கானின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் யார் சொல்ல வேண்டும்? நாம் மேலே சுட்டிக் காட்டியிருக்கும் அதிகாரப்பூர்வ நிர்வாகிகளில் ஒருவர் அல்லவா பதில் சொல்ல வேண்டும்? அல்லது சொல்ல வைக்கப்பட்டிருக்க வேண்டும்? அது தானே சரியாக இருக்கும்? அதை விட்டு விட்டு நட்பாக இருக்கும் இருவருக்கிடையில் பகைமையை ஏற்படுத்திவிட்ட பாவத்தை சகோ. பீஜே செய்திருக்கிறாரா இல்லையா?

இரண்டு சகோதரர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள் என்று அல்லாஹ் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் வாயிலாக அறிவுறுத்தியிருக்கும் போது இணக்கமாக உள்ள இருவரை பகையாளி ஆக்குவேன் என்பது ஷைத்தானின் செயல் அல்லவா?

தன்னுடைய மகனக்கோ, மைத்துனருக்கோ அல்லது ஏனைய உறவினருக்கோ எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது. அவர்களது வியாபாரம் பாதித்து விடக் கூடாது என்கிற சுயநலம்தானே. ஜாஃபரை களத்தில் இறக்கியதற்கு நோக்கமாக இருக்க முடியும்?
சகோ. ஜாஃபரும் நேச்சுரல் எம்போரியம் என்கிற துணிக் கடையை நடத்தி வருகிறாரே அவருக்கு பிரச்சினை ஏற்படலாமா?இது என்ன பண்பு? மார்க்கம் இதை அனுமதிக்கிறதா? இது தவ்ஹீத்வாதியின் அதுவும் தமிழகத்தில் பலரை இணை வைப்பிலிருந்து மீட்டெடுத்ததில், தமிழகம் முழுவதும் தவ்ஹீத் சிந்தனையை பரப்பியதில் பெரும் பங்கு வகித்த மூத்த தலைவரின் பண்பாக இருக்க முடியுமா?

குறிப்பு - இந்த உண்மைகளை எழுதும் நம்மை தறுதலை, பொய்யன், முகவரியற்ற புறம்போக்கு என்றெல்லாம் அடைமொழி இட்டு நம் மீதும் ததஜவினர் பாய்வார்கள் என்பது நமக்குத் தெரியும். அதை நாம் பொருட்படுத்த மாட்டோம்.
நாம் யார் என்று வாசகர்களின் உள்ளத்தில் கேள்வி எழும். நாம் யார் என்பதை விட நாம் சொல்வது நியாயமா? இல்லையா? என்பதை மட்டும் பார்க்குமாறு நாம் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.அவ்வப்போது உங்களைச் சந்தித்து இன்ஷா அல்லாஹ் உண்மை நிலையை மட்டுமே உணர்த்துவோம். "உங்களோடு நான்' என்றே என்னை அடையாளம் காணுங்கள். இறைவன் போதுமானவன்.
- உங்களோடு நான்

0 comments:

Post a Comment