Friday, November 19, 2010

அண்ணாச்சி! அண்ணாச்சி!! பீஜே அண்ணாச்சி!! பதில் எங்கே அண்ணாச்சி..???

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பா
க்கர் அமைப்பின் பெயரை ஆக்கிரமித்த பீஜேயை நோக்கி நாம் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், 'பதிலளிக்க வேண்டிய கேள்விகள்' என்ற பெயரில் 17 கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். அவரது கேள்விக்கு கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் பதிலளிப்போம்.

அதற்கு முன்பாக, சமீப காலத்தில் அவரை நோக்கி நாம் வைத்த கேள்விகளையும், நம் சகோதரர்கள் வைத்த கேள்விகளையும் பட்டியலிடுவோம். அதற்கு முன்பாக மார்க்க விஷயமாக அவரை நோக்கி நாம் வைத்த கேள்விகளையும் பட்டியலிடுவோம். அதற்கு அவர் பதிலளிக்கட்டும். பின்னர்தான் அவரது எந்த கேள்விக்கும் நாம் பதிலளிப்போம்.

1.பீஜேயின் அநீதியை கண்டித்து, பாக்கர் தலைமையில் நாம் இணைந்தபோது, முகவைஅப்பாஸ் புதிய வரவல்ல. அவர் ஏற்கனவே பாக்கரோடு இருந்தவர் என்றும், அதற்கு சான்று அவர் சம்மந்தப்பட்ட விளம்பரம் தொலைக்கட்சியில் வருகிறது என்றார் பீஜே. அதற்கு நாம், விளம்பரத்தில் வருகிறது. இதுதான் நான் இத்ஜவில் இருந்தேன் என்பதற்கான ஆதாரம் என்றால், சகோதரர் அப்துல்லாஹ்[பெரியார்] மற்றும் தேவநாதன் ஆகியோரும் குர்ஆண் வழங்கினார்களே! அவர்களும் இதஜவை சேர்ந்தவர்களா? அவ்வளவு ஏன்? ததஜ மேடையில் எவரையும் ஏற்றமாட்டோம் என்ற கொள்கையை[!] குப்பையில் தள்ளி, பிரதமரை சந்திக்க இவர் உதவி தேவை என்ற காரணத்தால், ஜே.எம்.ஹாரூனின் நெஞ்சில் உங்கள் 'பேட்ச்' குத்தி பேசவைத்தீர்களே! அப்படியாயின் ஹாரூன் எம்.பி. உங்கள் அமைப்பில் இருந்தார் என்று சொல்வீர்களா?
என்று கேட்டோம் பதில் எங்கே?


2.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று தொடங்குவதற்கு முன் இந்த பெயரில் யாரவது பதிவு செய்துள்ளார்களா என்று கவனிக்கத் தவறிவிட்டார் பாக்கர் என்று கூறி,பாக்கர் அமைப்பை தொடங்குவதற்கு முன்பே நாங்கள் பதிவு செய்துவிட்டோம் என்ற கருத்தை வெளிப்படுத்தினார் பீஜே. அதற்கு நாம், முன்பே பதிவு செய்துவிட்டோம் என்று சொல்லும் இந்த பொய்யர்கள் வெளியிட்டுள்ள சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காலம் மார்ச் 2010 என்று உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா? என்று கேட்டவுடன் பல்டியடித்து 8 மாதம் முன்புதான் பதிவு செய்தோம் என்று ஒப்புக்கொண்டு அசடு வழிந்தார் பீஜே.

3.கடந்த 2 வருடமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கி வந்த ஒரு அமைப்பை கள்ளத்தனமாக அபகரிப்பது தவறு என பிஜெயை ததஜ தட்டிக்கேட்க ததஜ நிர்வாகம் முன்வராதது ஏன்? பீஜேயின் இந்த அபகரிப்பை ததஜ நிர்வாகம் ஆதரிக்கிறதா? தெளிவான மோசடி என்று தெரிந்த பின்னும் ஆதரிப்பதுதான் ததஜவின் குர்ஆண்-ஹதீஸ் வழிமுறையா? என்று நாம் கேட்டோம். பதில் எங்கே?

4.மவ்லவி இப்ராஹீம் காசிமியை மாநிலப் பேச்சாளர் என்று அடையாளம் காட்டி பீஜே பொய்யர் என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது ததஜ வலைத்தளம். அதை அச்சுப்பிழை என்று நச்சுக்கருத்தை சொன்னார் பீஜே. அப்படியாயின் பீஜே, மாநில நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையாக இணையதளத்திலும், உணர்விலும் அறிவிப்பு செய்த மாநிலப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிடத் தயாரா? அப்படி வெளியிட்டு அந்த பட்டியலில் இப்ராஹீம் காஸிமி இல்லை என்று நிரூபிக்கத் தயாரா? என்று கேட்டோம் பதில் எங்கே?

5.உணர்வு, பீஜே தலைவராக இருந்த போது தான் அவர் உணர்வின் அனைத்து கட்டுரைகளையும் பார்த்து வந்தார், இப்போது உணர்வில் வரும் அனைத்தும் பீஜேயின் பார்வைக்கு வருவது கிடையாது.என்றார். அதற்கு நாம், பீஜே தலைவர் பதவியிலிருந்து இறங்கிய பிறகும் அவரது பார்வைக்கு சென்ற பின்தான் அச்சுக்கு செல்லும் என்பதை பொறுப்பாசிரியர் வாக்குமூலம் வாயிலாக நிரூபித்தோம். பதில் எங்கே?

6.சகோதரர் அப்துர்ரஹ்மான் தாவத்தி அவர்களை மாநிலப் பேச்சாளர் இல்லை என்று கூறுகிறார். அப்படியாயின் பல ஆண்டுகளாக அவருக்கு சம்பளம் வழங்குவது எதற்காக? ஒருவரை மாநில அளவில் பிரச்சாரத்திற்கு தலைமை பயன்படுத்தி, அதற்காக அவருக்கு தலைமை மூலம் மாத ஊதியம் வழங்கப்பட்டால் அவருக்கு பெயர் என்ன? என்று கேட்டோம். பதில் எங்கே?

7.07 -11 -2010 வரை மாநிலப் பேச்சாளராக அங்கீகாரம் பெறவில்லை பீஜெயால் குறிப்பிடப்படும் அப்துர்ரஹ்மான் தாவத்தி பற்றி, மாநிலப் பேச்சாளர் என்று இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள உணர்வின் பக்கங்களை எடுத்துக்காட்டினால் பீஜேயின் நிலை என்ன? என்று கேட்டோம். பதில் எங்கே?

8.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிக்கைகள் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் வெளியாகிறது என்று ரீல் விட்டார். அப்போது நாம்,இவர் கள்ளத்தனமாக பதிவு செய்து பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அறிக்கை ஷேக்பரீத் என்பவர் பெயரில் வெளியிடுகிறார். அது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில்தான் வெளியாகியுள்ளது என்று கூறினோம். பதில் எங்கே?

9.''சிலை திறப்பு விழாவில் தவ்ஹீத் ஜமாஅத் மானிலத் தலைவர் கலந்து கொண்டார் என்று செய்தி பத்திரிக்கையில் வெளியானது என்று துணிந்து பொய் சொன்னார். அப்போது நாம், சம்மந்தப்பட்ட செய்தித்தாள்களில் இடம்பெற்ற செய்தியை வெளியிட்டு, பத்திரிக்கை செய்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் என்றுதான் உள்ளதே தவிர, பொய்யர் பீஜே புலம்புவது போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்று இல்லவே இல்லை என்று நிரூபித்தோம். பதில் எங்கே?

10.மார்க்க அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றை சொந்தம் கொண்டாடுவது என்றால் அதற்கான முறையில் தான் சொந்தம் கொண்டாட வேண்டும். என்றார் பீஜே. அப்போது நாம், இந்திய தவ்ஹீத் ஜமாத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு ஆதாரமாக உள்ள குர்ஆண் வசனங்களையும்- ஹதீசுகளையும் முதலில் வைக்கவேண்டும். பின்னர் பாக்கர் சொந்தம் கொண்டாடுவது குறித்த மார்க்க ஆதாரத்தை நாங்கள் வைக்கிறோம் என்றோம். பதில் எங்கே?

11.''ஒரு சொத்து வாங்கினால் அதற்கான பணத்தைச் செலுத்தி பத்திரத்தில் எழுதி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் யாரும் பயன் படுத்தாத இட்த்தில் குடிசை போடுவது தவறாகும் என்றார் பீஜே. அப்போது நாம், இதன் மூலம் யாரும் பயன்படுத்தாத இடத்தில்தான் பாக்கர் குடிசை போட்டார் என்று ஒப்புகொண்டு, பாக்கர் எதையும் அபகரிக்கவில்லை. ஆனால் நான்தான் பாக்கர் போட்ட குடிசையின் நடுமனையில் அமர்ந்து கொண்டு சட்டம் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டுவிட்டார் பீஜே என்றோம். பதில் எங்கே?

12.கள்ளத்தனமாக பாக்கர் அமைப்பு பெயரை பதிவு செய்ததன் மூலம் , பெரியாரை விட, கருணாநிதியைவிட, முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்களை விட தன்னை மட்டமானவராக பீஜே காட்டிவிட்டார் என்று குற்றம் சாட்டினோம்.. பதில் எங்கே?

13.தமுமுக என்றாலே எட்டடி தள்ளி நிற்கும் பீஜே, அந்த தமுமுகவிற்கு பொருளுதவி செய்தவரும், தமுமுக தலைமையின் தொழுகைத் தளம் முழுவதையும் பராமரித்து வருபவருமான ஒருவரை பீஜே முன்னிலைப் படுத்துவதும், பாக்கரின் அமைப்பு பெயரை பீஜே அநியாயமாக அபகரித்ததை தமுமுக இதுவரை கண்டிக்காததும் எங்கோ இடிக்கிறதே! என்று கேட்டோம். பதில் எங்கே?

14.ததஜ மவ்லவிகள்- பேச்சாளர்கள்- மாநில நிர்வாகிகள் அனைவரும் அனைத்து மசாயில்களிலும் நூல் பிடித்தது போன்று ஒத்த கருத்தில் இருக்கிறோம் என்று பீஜே அறிவிக்கத்தயாரா? என்று கேட்டோம் பதில் எங்கே?

15.பாக்கரின் அமைப்பு பெயரை பதிவு செய்யும்போது நிர்வாகிகளாக அடையாளம் காட்டினாரே! அந்த தனது இளவல்கள்- மைத்துனர்கள். இவர்கள் தவ்ஹீதிற்காக, தவ்ஹீத் ஜமாஅத்திற்காக, தமிழகத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை பட்டியலிடத் தயாரா? கள்ளத்தனமாக பதிவு செய்யும்போது பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக அறிவிக்கும் திராணி பீஜெயிக்கு உண்டா? என்று கேட்டோம். பதில் எங்கே?

16.”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

இந்த ஹதீஸை வைத்து மாநிலப் பிறை முடிவெடுக்கும் இவர்கள், இந்தியப் பிறை என தீர்மானிக்க இந்த ஹதீஸில் என்ன தடை என விளக்கத் தயாரா? என்று கேட்டோம். பதில் எங்கே?

17.உங்கள் வாதப்படி நபிவழிக்கு மாற்றமாக 17 ம் தேதி பெருநாள் கொண்டாடி, குர்பானி கொடுத்தவர்களிடம் உங்கள் அமைப்பினர் குர்பானித் தோலை கீழக்கரையில் வசூலித்த கதை தெரியுமா? அது எப்படின்னே அவங்க கொண்டாடுன பெருநாள் மட்டும் தப்பு. அவங்க குடுத்த குர்பானி மட்டும் சரியா? இது நபிவழிப்படி சரியா? கொஞ்சம் சொல்லுங்கண்ணே! என்று கேட்டோம். பதில் எங்கே?

பட்டியல் ஏராளம் உண்டு. தொடரும் இன்ஷா அல்லாஹ்.-
-முகவைஅப்பாஸ்.

0 comments:

Post a Comment